Type Here to Get Search Results !

1 Chronicles 6-7 Old Testament Bible Study in Tamil | 1 நாளாகமம் வேத ஆராய்ச்சி | Daily Bible Devotions | Jesus Sam

[13/08, 07:37] (W) Arun Selva Kumar: 🌈 *The most effective songs of praise and worship aren’t worked out mechanically or musically, but are pressed into the heart of a person through difficulty.*

💪🏼I Chr. 6:33- *If we think it is easy to be involved in a praise ministry, let us check out Psalm 88, where we see one of the songs Heman wrote…Psalms are often born of great difficulty. The most effective songs of praise and worship aren’t worked out mechanically or musically, but are pressed into the heart of a person through difficulty.* Psalmists anointed by God and inspired by the Spirit were men who spent time dealing in spiritual warfare. They were men who came into deep understandings because of the depths they walked personally. So when we go through trials and struggles, let us know that a song is being birthed and praise will pour forth in due time. Heman wrote other songs—songs of victory, joy, and praise. But this song was preserved to show us he went through some heavy-duty experiences in order to come out on the other side as a man of praise.

⛹️‍♂️ *Application* : I Chr.6:1, 2-Three families are mentioned. The Gershomites carried the Tabernacle. The Kohathites bore the furniture of the Tabernacle. The Merarites carried the boards of the tabernacle. Each one of these family groups had a specific and job and function. *Everyone serving the Lord had a specific assignment to carry out, which enabled God’s people as a whole to move efficiently in their wilderness wanderings. Let us ask the Lord show us what our job is in this pilgrimage we’re on together. It is a good goal for every brother and sister to be able state clearly exactly what their ministry is, to be able say,” This is what I’m called to do”.*

Jaya Pradeep-Kodaikanal.

[13/08, 07:37] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*

*DAY 121, 13/08/2023 SUNDAY*

*1 CHRONICLES : 06 - 07*

*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇‍♂️
[13/08, 07:37] (W) Arun Selva Kumar: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 121*
*13.08.2023*
*ஞாயிற்றுக் கிழமை*
*1 நாளாகமம் 6 - 7*

*யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். அந்த பட்டணத்தின் வயல்களையும் , அதின் பட்டிகளையும் , எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 1 நாளா 6 : 55 , 56*
காலேப் விசுவாசத்தால் வல்லவராக இருந்து , தன்னுடைய சதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவரது ஆழமான விசுவாசத்தை அவருடைய வயது முதுமை மேற்கொள்ளமுடியவில்லை.
*யோசுவா எபபுன்னேயின் குமாரனை ஆசீர்வதித்து , எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். ...... காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியினால் , இந்நாள்மட்டும்இருக்கிறபடி , எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.யோசு 14 : 13 , 14*
பிரியமானவர்களே , காலேபின் விசுவாசம் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறதாக இருக்கிறதல்லவா ?
காலேப் தனது எண்பத்தைந்து வயதில் யோசுவாவைப் பார்த்துக் கூறுகிறார் ; *கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும் ; ....... கர்த்தர் என்னோடிருப்பாரானால் , கர்த்தர் சொன்னபடி , அவர்களைத்(ஏனாக்கியரைத்) துரத்திவடுவேன் என்றான். யோசு 14 : 12*
அதாவது காலேப்பும் , யோசுவாவும் கானான் தேசத்தை வேவு பார்த்து வந்து , நற்செய்தி கூறியபடியால் , கர்த்தர் மோசேயின் மூலம் காலேப்பின் நாற்பதாவது வயதில் , அவருக்கு மலைநாட்டைத் தருவதாக வாக்கருளியிருந்தார்.
அதன்பின்பு காலேப் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் , கர்த்தரின் வாக்குத்தத்தத்தை அவருக்கு நினைவுபடுத்தி , எனக்கு நாற்பது வயதில் இருந்த அதே பெலன் இப்பொழுதும் உள்ளது ; எனவே நான் ஏனாக்கியரைத் துரத்தி மலைநாட்டை சுதந்தரித்துக்கொள்வேன் என்று சொன்னார்.
எனவே பிரியமானவர்களே , காலேப்புக்கு இருந்த விசுவாசத்தையும் , இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலத்தையும் பார்த்தீர்களா ?தேவன் நமக்கும் இப்படிப்பட்ட விசுவாசத்தை மட்டுமல்ல , பெலத்தையும் தந்து ஆசீர்வதிப்பாராக.
*ஆமென் ! அல்லேலூயா ! !*

Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[13/08, 07:37] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣1️⃣
1 Chronicles 6,7
*WHAT A GOD WE SERVE* ❗️

*Effect of one fervent prayer* ‼️

Moses and Aaron fell on their faces, and said, “O God, the God of the spirits of all flesh, shall one man sin, and You be angry with all the congregation?”(Num 16:22).This was when Korah and others rebelled.

*Human mind cannot comprehend what a fervent prayer can do* ‼️

💥 However children of Korah did not die (Num 26:11)

💥 Samuel, the prophet came in the tribe of Korah (1Chr 6:33)

💥 Heman, grandson of Samuel was a singer and he wrote Psalm 88 (1Chr 6:22)

💥 Heman became King David's seer (1 Chr 25:5)

💥 Sons of Heman were musicians in the house of the Lord (1 Chr 25:5)

💥 Sons of Korah wrote 11 Psalms : 42,44-49,84,85,87,88

💥 Descendants of Korah were gatekeepers in the tabernacle (1Chr 9:19)

💥 Descendants of Korah were expert warriors in the army of David (1Chr 12:6)

🙏🙏 *The effective, fervent prayer of a righteous man avails much* (Jam 5:16)

Usha

[13/08, 07:37] (W) Arun Selva Kumar: *13.08.2023*

⚡ *தேவனுக்கான சங்கீத சேவை* ⚡

❇️ *கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும், சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்* (1 நாளாகமம் 6:31-32).

🔹 உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தியரால் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் அபினதாபின் வீட்டில் வைக்கப்பட்டு, சாமுவேலின் நியாயாதிபதியின் காலத்திலும், சவுலின் ஆட்சியின் காலத்திலும் தாவீதின் ஆட்சியின் காலத்திலும் அது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் அங்கேயே இருந்தது. பின்பு ஓபேத்-ஏதோமின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அதை தாவீது கொண்டுவந்து எருசலேமில் வைத்தான். *தாவீது லேவியர்களில் சிலரை கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சங்கீதசேவை செய்ய நியமித்தான்.* அவர்கள் ஆராதனையை வழிநடத்தி, கர்த்தருக்கு நன்றி செலுத்தி, துதித்துக்கொண்டிருந்தார்கள்.

🔹 இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாயாய்ப் பாடின தாவீது, பாடல்களால் கர்த்தரை ஆராதிப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தான். *சங்கீத சேவை செய்ய லேவியின் எல்லாக் குமாரர்களின் குடும்பங்களிலிருந்தும் மனுஷரைத் தேர்ந்தெடுத்தான்:* கோகாத்தின் குடும்பத்திலிருந்து ஏமானையும், கெர்சோமின் குடும்பத்திலிருந்து ஆசாப்பையும், மெராரியின் குடும்பத்திலிருந்து ஏதானையும் தேர்ந்தெடுத்தான். *அனைவரும் தேவனுடைய ஊழியங்களில் பொருத்தமான வழிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.*

🔹 ஏமான் சாமுவேல் தீர்க்கதரிசியின் பேரன். சாமுவேலின் குமாரன் யோவேலின் குமாரன் ஏமான். யோவேல் சாமுவேலின் வழிகளில் நடக்கவில்லை என்று வேதம் கூறுகிறது (1 சாமுவேல் 8:2-3). *சாமுவேலின் குமாரன் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்றாலும், அவனுடைய பேரன் கீழ்ப்படிந்து நடந்தான்.* உத்தமர்களின் ஆசீர்வாதங்கள் அவர்களின் சந்ததியினருக்கு வெவ்வேறு விதங்களில் கிடைக்கிறது; சில சந்ததியினருக்கு அவை கிடைக்காமலும் போகலாம்.

🔹 பாடல் சேவையை நடத்துவதற்காக தாவீது இவர்களை நியமித்தான் என்பது *தேவனுக்கு சங்கீத சேவையை முறைப்படி செய்வதன் முக்கியத்துவம், சிறப்பு மற்றும் அவசியத்தை நிரூபிக்கிறது.*

🔹 *“கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.”* (சங்கீதம் 147:7). நம்முடைய துதிப்பாடல்கள் நன்றியுள்ள இருதயத்திலிருந்து வர வேண்டும்.

🔹 *“அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.”* (சங்கீதம் 105:2). தேவனுடைய அதிசயங்களையெல்லாம் பாடல்களுடன் அறிவிப்பதற்கு நாம் பாக்கியம் பெற்றுள்ளோம்.

💥 *கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *அனைவரும் தேவனுடைய ஊழியங்களில் பொருத்தமான வழிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.*
2️⃣ *பாடல் சேவையை நடத்துவதற்காக தாவீது லேவியரை நியமித்தது தேவனுக்கு சங்கீத சேவையை முறைப்படி செய்வதன் முக்கியத்துவம், சிறப்பு மற்றும் அவசியத்தை நிரூபிக்கிறது.*
3️⃣ *பாடல்களுடன் கூடிய ஆராதனை நன்றியுள்ள இருதயத்திலிருந்து வர வேண்டும்; தேவனுடைய அதிசயங்களையெல்லாம் அறிவிக்க வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[13/08, 07:37] (W) Arun Selva Kumar: *ஆலயத்தில் சங்கீத சேவை*
~~~~~~~~~~~~~~~~~~~~~

1 நாளாகமம் 6: 31. *ஆசரிப்பு கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக மட்டுமல்ல ஆலயத்திலும் சங்கீத சேவை செய்ய ஆட்களை ஸ்தாபித்தார்கள்.*

1. பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே ஆலயத்தில் பாடல்கள் பாடப்பட்டன. *மோசே, மிரியாம், தெபோராள், தாவீது, சாலொமோன், மரியாள்* ஆகியோருடைய பாடல்கள் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

2. *எவைகளை குறித்து பாடல்கள் பாடப்பட்டன?*

*கர்த்தருடைய அதிசயங்களை, இரட்சிப்பை, வல்லமையை, நீதியை, கிருபைகளை பாட வேண்டும்*

*புது பாடல்களை கர்த்தரை போற்றி பாட வேண்டும். கருத்துடனே பாட வேண்டும். கெம்பீரமாய் பாட வேண்டும். மட்டுமல்ல, க ர்த்தரை பாடி கொண்டாட வேண்டும்.* நம் இருதயத்திலிருந்து பக்தியாய் பாட வேண்டும்.

3. *பவுலும், சீலாவும் நடு இரவில் பாடி கர்த்தரை மகிமைப் படுத்தும் போது, சிறைசாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது. கதவுகள் திறந்தது. கட்டுகள் கழன்றன* .அப்போஸ்தலர் 16: 26.

4. *பரலோகத்திலே எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஐக்களும், ஆசாரியருமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாடலை பாடினார்கள்* . வெளிப்படுத்தல் 5: 10. மட்டுமல்ல *பரலோகத்தில் மோசேயின் பாட்டும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலும் பாடப்பட்டது.* வெளிப்படுத்தல் 15:3
ஆம், *நீதிமானோ பாடி மகிழுகிறான். அவரை துதிக்கும் புதுப்பாட்டு எப்போதும் நம் வாயிலிருப்பதாக*. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Selvyn*

[13/08, 07:37] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *அம்ராம்* 🍂

வம்சவளி பட்டியலின் நடுவில் பெயர் பதிக்கப்பட்ட ஒரு நபர் இருக்கிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்கள் அனைவரும் ஊழியத்தில் இருந்தனர். *இது ஒரு அரிய, குறிப்பிடத்தக்க சம்பவம்*. இந்த மனிதனின் பெயர் அம்ராம். *அவன் வேதாகமத்தில் அதிகம் அறியப்படாத மனிதர்களைச் சேர்ந்தவன்.*

அம்ராம் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவனது மூன்று பிள்ளைகளான ஆரோன், மிரியாம் மற்றும் மோசே ஆகியோரை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். *இந்த மூவரும் தேவனாகிய கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டனர்.* ஒருவேளை இவனுடைய பக்தியின் நிமித்தம் ஆண்டவர் அவனுடைய மூன்று பிள்ளைகளையும் ஊழியத்தில் எடுத்து பயன்படுத்தினாரோ?

அம்ராம் பிரபலமானவரல்ல. *அவன் எகிப்தில் வாழ்ந்த தேவ பயமுள்ள ஒரு சாதாரண மனிதன்.* ஒரு அரசியல் நெருக்கடியின் போது அவனுடைய மகன் மோசே பிறந்தான். அப்போது அம்ராம் விசுவாசத்துடன் செயல்பட்டு புதிதாகப் பிறந்த மகனை மூன்று மாதங்களுக்கு மறைத்து வைத்தான்.

அம்ராம் எகிப்து ராஜாவுக்கு அஞ்சவில்லை. *ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்து தனது மகனைக் காப்பாற்றினான்.* கர்த்தர் அவனுடைய விசுவாசத்தை மதித்தார், மேலும் அம்ராம் *எபிரேய புத்தகத்தின் விசுவாச அத்தியாயத்தில் பட்டியலிடப்பட்டுள்ளான்.*

📖 *மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள் (எபி 11:23).*

தேவனாகிய கர்த்தர் *சாதாரண ஜனங்கள் அசாதாரணமான பணிகளைச் செய்ய பயன்படுத்துகிறார்.* அதன் மூலம் அவருடைய திட்டங்களும் நோக்கங்களும் நிறைவேறுகின்றன. ஆண்டவரால் பயன் படுத்தப்படுவதற்கு நாம் பிரபலமாக இருக்க வேண்டியதில்லை. *தேவனாகிய கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அவர் மீதுள்ள எளிய விசுவாசம் மட்டுமே.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 13, 2023_
[13/08, 07:37] (W) Arun Selva Kumar: *நாள் 121(ஞாயிறு) 13-8-23*
*1 நாளாகமம் அத்தியாயங்கள் 6-7*

*அத்தியாயம் 6*
அத்தியாயம் 6, பரிசுத்த கோத்திரமான லேவியின் வம்சாவளியை பட்டியலிடுகிறது. லேவியர்கள் தேவனுடைய வீட்டின் பரிசுத்தத்தையும் அவருடைய கட்டளைகளையும் நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்டவர்கள்.
1. லேவி கோத்திரம் தேவனை சேவிப்பதற்காக பிரித்தெடுக்கப்பட்டவர், ஆரோன் இஸ்ரவேலின் முதல் பிரதான ஆசாரியரானார். தேவனுடைய திட்டத்திற்கு மிக முக்கியமான 2 கோத்திரங்கள் யூதா- தாவீதின் கோத்திரம் மற்றும் லேவியர்கள் - இஸ்ரவேலர்களை ஆராதனையில் வழிநடத்தும் பொறுப்பைக் கொண்டிருந்தனர்.
2. குறிப்பிடப்பட்ட அனைத்து மக்களும் தேவனுடைய விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் முக்கிய அங்கமாக இருந்தனர். அவர்கள் தேவனுடைய அழைப்புக்கு அடிபணிந்தவுடன், அவர்களின் பின்னணி மற்றும் தோல்விகள் அதிகம் பொருட்படுத்தப்படவில்லை. கொலைகாரன், மோசே தேவனால் தலைவராக ஆக்கப்பட்டான், இஸ்ரவேலர்கள் பேரழிவின் விளிம்பில் இருந்த போது சாமுவேல் தலைவரானர்... இன்றைய திருச்சபைக்கு இப்படிப்பட்டவர்கள் தேவை.
3. இசையுடன் ஊழியம் செய்வது கர்த்தருக்கு முன்பாகப் பரிசுத்தமான சேவையாகும். ஒவ்வொரு வகையான சேவையும் கர்த்தருக்கு முக்கியமானது மற்றும் விலையேறப்பெற்றது. லேவி கோத்திரத்தார் சங்கீதங்கள், பாடல்கள் மற்றும் ஆவிக்குரிய மேம்பாட்டிற்கான பாடல்களைப் பாடி சேவை செய்தார்கள். இது தேவனுக்கு ஒரு வகையான துதி. ஆராதனை ஊழியத்தில் பாடகர்களின் பங்கு பற்றிய கேள்விக்கு இது பதிலளிக்கிறது.
4. (வசனங்கள்: 54-81) 48 நகரங்கள் லேவியர்களுக்கு ஒதுக்கப்பட்டன, இது யூத தேசம் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஆசாரியத்துவத்தையும் எதிர்காலத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவனுடைய நோக்கத்தைக் குறிக்கிறது. லேவிய குடும்பங்கள் 48 பட்டணங்களில் குடியிருந்தனர். லேவியரின் குடியிருப்புக்கள் பாதுகாப்புக்காக வலுப்படுத்தப்படவில்லை, ஆனால் அவர்கள் தங்களுடைய தேவைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கர்த்தரை சார்ந்திருந்தார்கள். அவர்களுடைய சுதந்தரம் கர்த்தர் தாமே மற்றும் தேவனுடைய ஜனங்கள் அவர்களுக்குக் கொண்டு வந்த தசமபாகமும் ஆகும்.

*அத்தியாயம் 7*

அத்தியாயம் 7 இஸ்ரவேலின் வடக்கு கோத்திரத்திரத்தாராகிய இசக்கார், பென்யமீன், நப்தலி, மனாசே, எப்பிராயீம் மற்றும் ஆசேர் ஆகியோரின் வம்சாவளியை உள்ளடக்கியது.
1. (வசனங்கள்:3-5) ஒரு குடும்பத்தில் வெவ்வேறு பொருப்புகளை ஏற்க வேண்டும். நாம் பலசாலிகளாக இல்லாமல் இருக்கலாம், பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆண்டவரிடமிருந்து பலத்தைப் பெறுகிறோம்.
2. ஒரு நபர் யார் என்பதைப் பற்றி குடும்ப வரலாறு நமக்குச் சொல்லும். அது உங்களை உருவாக்குவதில் தார்மீக ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். நம் பெற்றோர் சுய தியாகம், பிறரிடம் அன்பு செலுத்துதல், பொறுமை மற்றும் தேவன் மீதுள்ள உறுதியான நம்பிக்கை போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்தால், இவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பலனளிக்கும் மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்லலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம். வம்சாவளியை நாம் ஆராயும்போது எதிர்மாறானதும் உண்மையாகத் தெரிகிறது.
3. பெயர்கள் அர்த்தத்தை குறிக்கின்றன. நீங்கள் யார் என்பது உங்கள் பெயரில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இசக்கார் என்றால் *திரும்பச் செலுத்துதல்*. பின்னர் இந்த அத்தியாயத்தில், அவருடைய சந்ததியினர் 36,000 பேர்கள் (வசனம்:4) அவர்களோடிருந்தனர் என்று காண்கிறோம். ஏலோஹிம் ( தேவன்) தெளிவாக திருப்பிச் செலுத்தினார். ஆசேர் என்ற பெயருக்கு வலிமையானவர் என்று பொருள். (வசனம்: 40) அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், வல்லமை மிக்கவர்கள்.. நம்முடைய பெயர்களும் நம் வாழ்க்கையும் தேவனின் மகிமைக்காகப் பயன்படுத்தப்படும் விருப்பமான கருவிகளாக அவருடைய கரங்களில் இருக்க வேண்டும்.

*பேராசிரியை ரமணி ஜார்ஜ்*
*திருவல்லா கேரளா*
⏮⏮⏮⏮⏮⏮⏮⏮⏮⏮⏮

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[13/08, 07:37] (W) Arun Selva Kumar: *🛐THE PRIESTLY LINEAGE🛐*

[DAY - 121] 1 Chronicles Chapters 6 & 7

☄️These chapters sheds light on the importance of maintaining the priestly heritage and the division of land among the tribes of Israel.

1️⃣ *THE PRIESTLY LINEAGE* (1 Chronicles 6:1-81)

🔹 By preserving the priestly line, the Levites' responsibility as mediators between God and the people is stressed.
🔹The genealogy of the high priestly line maintained the purity and continuity of the priesthood.
🔹It traces the lineage from Aaron to the exile in Babylon and demonstrates the faithfulness of God in preserving the priestly line.

2️⃣ *THE TRIBAL ALLOTMENTS* (1 Chronicles 7:1-40)

🔸The connection between the people and the Promised Land shows the importance of land allotment, and the economic and agricultural significance of land ownership in ancient Israel.
🔸The distribution of land among the tribes highlights the inheritance of each tribe and the faithfulness of God in fulfilling His promises.

3️⃣ *VALUE OF HERITAGE*

🔺Valuing heritage and maintaining spiritual lineage recognizes the importance of passing down faith and traditions.
🔺It Nurtures a sense of identity and purpose in future generations.
🔺Appreciating the blessings of land and resources makes us good stewards of the resources given to us by God.
🔸It helps us recognize God's provision and faithfulness in our lives.

♥️ *LIFE LESSONS*

💥These chapters remind us of the importance of preserving our spiritual heritage and passing down our faith to future generations.
💥They also emphasize the blessings of land and resources, reminding us to be good stewards of what God has provided.

*‼️LET US STRIVE TO HONOUR OUR SPIRITUAL LINEAGE AND BE GOOD STEWARDS‼️*

Princess Hudson
[13/08, 07:37] (W) Arun Selva Kumar: Shalom 🙏
Blessed to be a Blessing to the Blessed People 👨‍👩‍👦‍👦

🙋‍♂️🙋‍♀️ We are in *1Chronicles 6*

*THE FAMILY OF LEVI*

📝 Today's reading passage is devoted to the tribe of Levi. Let us explore the division of this passage with special reference to some prominent characters :

1️⃣ *High Priestly Lineage from Levi* ( v 1-15 )
🙋‍♂️ It begins with *Levi* ( v 1 ) through *Aaron* ( v 3 ), through *Eleazar* ( v 3-4 ), and through *Phinehas* ( v 4 ) with whom God covenanted for a perpetual PRIESTHOOD ( *Num 25:11-13* )
🙋‍♂️ When Abiathar sided with Adonijah rather than Solomon, *Zadok* became the Ruling High Priest ( *1Kings 2:26-27* )
🙋‍♂️ *Hilkiah* the high priest rediscovered the Book of Law in Josiah's reign ( *2Kings 22:8-13* )
🙋‍♂️ *Seraiah* was executed by the Babylonians after the conquest of Jerusalem ( *2Kings 25:18-21* )

2️⃣ *Sons of Levi and their families* ( v 16-30 ) :
📍 This section is repeated from *Exo 6:16-19 ; Num 3:17-20 ; 26:57-61* )
📍This section is another example of *Genealogical Fluidity*
✅ Linked with the tribe of Judah :
( A ) *Amminadab* v 22 : In ths lineage of David ( *Ruth 4:18-22 ; Mat 1:4 ; Lk 3:33* )
( B ) *Aaron's Marriage* to the daughter of Amminadab ( *Ex 6:23 ; 1Chron 2:10* )
✅ Linked with the Ephramite : *Samuel* v 26-28
🙋‍♂️ His lineage is given in *1Sam 1:1*
🙋‍♂️ His involvement in the tabernacle ( *1Sam 3* )
🙋‍♂️ *Samuel* offered priestly sacrifices ( *1Sam 7:9 ; 10:8 ; 11:14-15* )

3️⃣ *The Levitical Musicians* ( v 31-47 )
🙋‍♂️ *Heman* from the family of Kohath
🙋‍♂️ *Asaph* from Gershon
🙋‍♂️ *Ethan* from Merari

4️⃣ *Separate Duties of Priests and Levites* ( v 48-53 )
🙋‍♂️ To legitimize the line of Zadok.
🙋‍♂️ This repeated genealogy could possibly point to the *Zadokian High Priesthood* for the temple in the Millennium ( *Ezk 40:46 ; 43:19 ; 44:15 ; 48:11* )

5️⃣ *The Levitical Possessions* ( v 54-81 )
🙋‍♂️ This list is taken from *Jos 21*.
🙋‍♂️ This signals God's intention for the Jewish nation to have a Priesthood and Future in the land first given to Abraham ( *Gen 12:1-3* )

THE GOD OF THE BIBLE IS THE GOD OF THE ORDER AND ACCESS.

Glory to God 🙌
✍️ *Mark Boje*
Arunachal Pradesh, India 🇮🇳

*தேவனுக்கான சங்கீத சேவை* ⚡

❇️ *கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும், சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்* (1 நாளாகமம் 6:31-32).

🔹 உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தியரால் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் அபினதாபின் வீட்டில் வைக்கப்பட்டு, சாமுவேலின் நியாயாதிபதியின் காலத்திலும், சவுலின் ஆட்சியின் காலத்திலும் தாவீதின் ஆட்சியின் காலத்திலும் அது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் அங்கேயே இருந்தது. பின்பு ஓபேத்-ஏதோமின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அதை தாவீது கொண்டுவந்து எருசலேமில் வைத்தான். *தாவீது லேவியர்களில் சிலரை கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சங்கீதசேவை செய்ய நியமித்தான்.* அவர்கள் ஆராதனையை வழிநடத்தி, கர்த்தருக்கு நன்றி செலுத்தி, துதித்துக்கொண்டிருந்தார்கள்.

🔹 இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாயாய்ப் பாடின தாவீது, பாடல்களால் கர்த்தரை ஆராதிப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தான். *சங்கீத சேவை செய்ய லேவியின் எல்லாக் குமாரர்களின் குடும்பங்களிலிருந்தும் மனுஷரைத் தேர்ந்தெடுத்தான்:* கோகாத்தின் குடும்பத்திலிருந்து ஏமானையும், கெர்சோமின் குடும்பத்திலிருந்து ஆசாப்பையும், மெராரியின் குடும்பத்திலிருந்து ஏதானையும் தேர்ந்தெடுத்தான். *அனைவரும் தேவனுடைய ஊழியங்களில் பொருத்தமான வழிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.*

🔹 ஏமான் சாமுவேல் தீர்க்கதரிசியின் பேரன். சாமுவேலின் குமாரன் யோவேலின் குமாரன் ஏமான். யோவேல் சாமுவேலின் வழிகளில் நடக்கவில்லை என்று வேதம் கூறுகிறது (1 சாமுவேல் 8:2-3). *சாமுவேலின் குமாரன் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்றாலும், அவனுடைய பேரன் கீழ்ப்படிந்து நடந்தான்.* உத்தமர்களின் ஆசீர்வாதங்கள் அவர்களின் சந்ததியினருக்கு வெவ்வேறு விதங்களில் கிடைக்கிறது; சில சந்ததியினருக்கு அவை கிடைக்காமலும் போகலாம்.

🔹 பாடல் சேவையை நடத்துவதற்காக தாவீது இவர்களை நியமித்தான் என்பது *தேவனுக்கு சங்கீத சேவையை முறைப்படி செய்வதன் முக்கியத்துவம், சிறப்பு மற்றும் அவசியத்தை நிரூபிக்கிறது.*

🔹 *“கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.”* (சங்கீதம் 147:7). நம்முடைய துதிப்பாடல்கள் நன்றியுள்ள இருதயத்திலிருந்து வர வேண்டும்.

🔹 *“அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.”* (சங்கீதம் 105:2). தேவனுடைய அதிசயங்களையெல்லாம் பாடல்களுடன் அறிவிப்பதற்கு நாம் பாக்கியம் பெற்றுள்ளோம்.

💥 *கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *அனைவரும் தேவனுடைய ஊழியங்களில் பொருத்தமான வழிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.*
2️⃣ *பாடல் சேவையை நடத்துவதற்காக தாவீது லேவியரை நியமித்தது தேவனுக்கு சங்கீத சேவையை முறைப்படி செய்வதன் முக்கியத்துவம், சிறப்பு மற்றும் அவசியத்தை நிரூபிக்கிறது.*
3️⃣ *பாடல்களுடன் கூடிய ஆராதனை நன்றியுள்ள இருதயத்திலிருந்து வர வேண்டும்; தேவனுடைய அதிசயங்களையெல்லாம் அறிவிக்க வேண்டும்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[13/08, 06:11] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 121*
*13.08.2023*
*ஞாயிற்றுக் கிழமை*
*1 நாளாகமம் 6 - 7*

*யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். அந்த பட்டணத்தின் வயல்களையும் , அதின் பட்டிகளையும் , எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 1 நாளா 6 : 55 , 56*
காலேப் விசுவாசத்தால் வல்லவராக இருந்து , தன்னுடைய சதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவரது ஆழமான விசுவாசத்தை அவருடைய வயது முதுமை மேற்கொள்ளமுடியவில்லை.
*யோசுவா எபபுன்னேயின் குமாரனை ஆசீர்வதித்து , எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். ...... காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியினால் , இந்நாள்மட்டும்இருக்கிறபடி , எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.யோசு 14 : 13 , 14*
பிரியமானவர்களே , காலேபின் விசுவாசம் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறதாக இருக்கிறதல்லவா ?
காலேப் தனது எண்பத்தைந்து வயதில் யோசுவாவைப் பார்த்துக் கூறுகிறார் ; *கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும் ; ....... கர்த்தர் என்னோடிருப்பாரானால் , கர்த்தர் சொன்னபடி , அவர்களைத்(ஏனாக்கியரைத்) துரத்திவடுவேன் என்றான். யோசு 14 : 12*
அதாவது காலேப்பும் , யோசுவாவும் கானான் தேசத்தை வேவு பார்த்து வந்து , நற்செய்தி கூறியபடியால் , கர்த்தர் மோசேயின் மூலம் காலேப்பின் நாற்பதாவது வயதில் , அவருக்கு மலைநாட்டைத் தருவதாக வாக்கருளியிருந்தார்.
அதன்பின்பு காலேப் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் , கர்த்தரின் வாக்குத்தத்தத்தை அவருக்கு நினைவுபடுத்தி , எனக்கு நாற்பது வயதில் இருந்த அதே பெலன் இப்பொழுதும் உள்ளது ; எனவே நான் ஏனாக்கியரைத் துரத்தி மலைநாட்டை சுதந்தரித்துக்கொள்வேன் என்று சொன்னார்.
எனவே பிரியமானவர்களே , காலேப்புக்கு இருந்த விசுவாசத்தையும் , இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலத்தையும் பார்த்தீர்களா ?தேவன் நமக்கும் இப்படிப்பட்ட விசுவாசத்தை மட்டுமல்ல , பெலத்தையும் தந்து ஆசீர்வதிப்பாராக.
*ஆமென் ! அல்லேலூயா ! !*

Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[13/08, 06:11] +91 99431 72360: *1 நாளாகமம் 6,7ல் இருந்து நுண்ணறிவு:*

*Music Ministry*

*இசை ஊழியம்*
இறைவனுக்கான சேவையின் ஒரு பகுதியாக, ஒரு முக்கியமான ஊழியமாக இருந்தது.

பரலோகத்தில் தூதர்களின் இசைக்கலைஞர்களைக் கொண்ட ஒரு பெரிய துறை உள்ளது, நித்தியம் முதல் நித்தியம் வரை கர்த்தரை ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பரிசுத்த இசை வளிமண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது, ​​கர்த்தருடைய ஆவியானவர் தீர்க்கதரிசன வார்த்தைகள், சுகம் மற்றும் விடுதலைகளை வலிமையுடன் கொடுக்கிறார். சோர்வடைந்தவர்களை புத்துணர்ச்சியடையச் செய்கிறார், மகிழ்ச்சியின் எண்ணெயால் நம்மை அபிஷேகம் செய்கிறார், மேலும் தேவனுடன் நம்மை இன்னும் ஆழமாக அழைத்துச் செல்கிறார்.

தாவீது ராஜா கர்த்தருக்கு ஊழியம் செய்ய இசைக்கலைஞர்களை ஏற்படுத்தினார்.

இசை ஊழியம், ஆராதனை ஊழியம் என்பது ஆராதனை குழுவுடன் மட்டுப்படுவதல்ல.

நாம் நம் ஆண்டவரை நாம் எடுக்கும் ஒவ்வொரு மூச்சிலும் ஆராதிக்க வேண்டும். ஏனென்றால் நம் இறைவன் துதிக்குப் பாத்திரமானவர். நம் இறைவனால் அவருக்கு இன்பம் தருவதற்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டோம், துன்பம் கொடுப்பதற்காக அல்ல.

நாம் ஆராதனையை நமது வாழ்க்கைமுறையாக ஆக்கும்போது, ​​கர்த்தராகிய இயேசு நமது சிறந்த நண்பராகிறார், மேலும் தினமும் அற்புதங்களைச் சாட்சியாகச் சொல்வோம்.

*ஆராதிப்பதை நமது வாழ்க்கை முறையாக்குவோம்*

*தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.*

*சகோதரி அனிதா தும்மா*

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[13/08, 06:11] +91 99431 72360: *நாள் 121 / 365*
*1 நாளாகமம் 4 - 6*

*தேவன் அன்புள்ளவர்*..

*தாவீது,ஓர் இசைக் கலைஞன்...* *ஒரு பாடகன் ..அவன், சவுலின்* *அரண்மனைக்குச் செல்வதற்கு* *முதலாவது காரணம்*..
*அவனது இசைத் திறமைதான்*. *ஆண்டவரை ஆராதிப்பதில்* *இசைக்கு முக்கியத்துவம்* *உண்டு*.

தாவீது, உடன்படிக்கைப் பெட்டியை.. எருசலேமிலே கொண்டு வைத்தான்.
சங்கீத சேவையை நடத்துபவர்களையும் அங்கே ஸ்தாபித்தான்..
அவர்களது வம்ச வரலாற்றை
1 நாளா.6: 31 - 47 இல் பார்க்கிறோம்.

தேவாலயப் பாடகர் குழுவிற்குத் தலைவன்.. சாமுவேலின் பேரன் ஏமான்.
ஆவியானவர், இந்த ஏமான் யார் என்பதை..வம்ச வரலாறுடன் தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளார்.
( 1 நாளா.6:33-38)

சாமுவேலுடைய குமாரர்.. பொருளாசைக்குச் சாய்ந்து ,
பரிதானம் வாங்கி.. நியாயத்தைப் புரட்டினார்கள் என்று1 சாமு. 8:3ல் பார்க்கிறோம்.
சாமுவேலின் வம்சம் அத்தோடு முடிந்துவிட்டதோ? ..இல்லை.
இங்கே அவனுடைய மகனாகிய யோவேலின் குமாரன், ஏமான்.. தேவாலய பாடகர் குழுவிலே முதன்மையானவனாக நிற்கிறான்.
(1 நாளா.6:33)

மட்டுமல்ல.. இவன் ,சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும், கைத்தாளங்களாலும்..
தீர்க்கதரிசனம் சொல்லுகிற மூவரில் ஒருவனாகும் என்றும்
கூறப்பட்டுள்ளது..
(1நாளாகமம் 25:1).

ஆசரிப்புக்கூடாரத்திலே வளர்ந்து ..ஆண்டவரின் சத்தம் கேட்டு.. அவர் சித்தத்தை மாத்திரம் செய்து ..சாமுவேல், கர்த்தருடைய தீர்க்கதரிசிதான்
என்று இஸ்ரவேலர் கண்டுகொண்ட..
(1 சாமு. 3 : 20 )
சாமுவேலின் சந்ததியும்,
ஆசரிப்புக்கூடாரத்திலே, ஆலயத்திலே..தேவனுக்கு மகிமையைச் செலுத்துவது ஆண்டவரின் அளவில்லா கிருபையே.

*இன்று உங்களுக்குப் பின்*.. *உங்கள் சந்ததியினரைக்* *குறித்துக்* *கவலைப்படுகிறீர்களா*?
*தேவன் உண்மையுள்ளவர்*,
*அவர் வாக்குமாறாதவர்.. உங்கள்* *கிரியையும்.. அவரது* *நாமத்திற்காக.. நீங்கள்* *காண்பிக்கும் அன்பின்* *பிரயாசத்தையும்*..
*மறந்துவிடுகிறதற்கு்.. அவர்* *அநீதியுள்ள தேவனல்ல*..
*அவர் அன்புள்ளவர்*..
*அவர் கிருபையுள்ளவர்..அவர் தம்முடைய குமாரனையே*
*நமக்காகக் கொடுத்தவர்*..
*மற்ற எல்லாவற்றையும்* *கொடுக்காமலிருப்பாரா*..?
*கர்த்தரை நம்புங்கள்*..

*நம் கர்த்தர்..அவர் தலைமுறைகளின் தேவன்..ஆமென் *..🙏

மாலா டேவிட்
[13/08, 06:11] +91 99431 72360: *ஆலயத்தில் சங்கீத சேவை*
~~~~~~~~~~~~~~~~~~~~~

1 நாளாகமம் 6: 31. *ஆசரிப்பு கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக மட்டுமல்ல ஆலயத்திலும் சங்கீத சேவை செய்ய ஆட்களை ஸ்தாபித்தார்கள்.*

1. பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே ஆலயத்தில் பாடல்கள் பாடப்பட்டன. *மோசே, மிரியாம், தெபோராள், தாவீது, சாலொமோன், மரியாள்* ஆகியோருடைய பாடல்கள் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

2. *எவைகளை குறித்து பாடல்கள் பாடப்பட்டன?*

*கர்த்தருடைய அதிசயங்களை, இரட்சிப்பை, வல்லமையை, நீதியை, கிருபைகளை பாட வேண்டும்*

*புது பாடல்களை கர்த்தரை போற்றி பாட வேண்டும். கருத்துடனே பாட வேண்டும். கெம்பீரமாய் பாட வேண்டும். மட்டுமல்ல, க ர்த்தரை பாடி கொண்டாட வேண்டும்.* நம் இருதயத்திலிருந்து பக்தியாய் பாட வேண்டும்.

3. *பவுலும், சீலாவும் நடு இரவில் பாடி கர்த்தரை மகிமைப் படுத்தும் போது, சிறைசாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது. கதவுகள் திறந்தது. கட்டுகள் கழன்றன* .அப்போஸ்தலர் 16: 26.

4. *பரலோகத்திலே எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஐக்களும், ஆசாரியருமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாடலை பாடினார்கள்* . வெளிப்படுத்தல் 5: 10. மட்டுமல்ல *பரலோகத்தில் மோசேயின் பாட்டும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலும் பாடப்பட்டது.* வெளிப்படுத்தல் 15:3
ஆம், *நீதிமானோ பாடி மகிழுகிறான். அவரை துதிக்கும் புதுப்பாட்டு எப்போதும் நம் வாயிலிருப்பதாக*. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Selvyn*

[13/08, 06:11] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *அம்ராம்* 🍂

வம்சவளி பட்டியலின் நடுவில் பெயர் பதிக்கப்பட்ட ஒரு நபர் இருக்கிறார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்கள் அனைவரும் ஊழியத்தில் இருந்தனர். *இது ஒரு அரிய, குறிப்பிடத்தக்க சம்பவம்*. இந்த மனிதனின் பெயர் அம்ராம். *அவன் வேதாகமத்தில் அதிகம் அறியப்படாத மனிதர்களைச் சேர்ந்தவன்.*

அம்ராம் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவனது மூன்று பிள்ளைகளான ஆரோன், மிரியாம் மற்றும் மோசே ஆகியோரை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். *இந்த மூவரும் தேவனாகிய கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டனர்.* ஒருவேளை இவனுடைய பக்தியின் நிமித்தம் ஆண்டவர் அவனுடைய மூன்று பிள்ளைகளையும் ஊழியத்தில் எடுத்து பயன்படுத்தினாரோ?

அம்ராம் பிரபலமானவரல்ல. *அவன் எகிப்தில் வாழ்ந்த தேவ பயமுள்ள ஒரு சாதாரண மனிதன்.* ஒரு அரசியல் நெருக்கடியின் போது அவனுடைய மகன் மோசே பிறந்தான். அப்போது அம்ராம் விசுவாசத்துடன் செயல்பட்டு புதிதாகப் பிறந்த மகனை மூன்று மாதங்களுக்கு மறைத்து வைத்தான்.

அம்ராம் எகிப்து ராஜாவுக்கு அஞ்சவில்லை. *ஒரு துணிச்சலான நடவடிக்கையை எடுத்து தனது மகனைக் காப்பாற்றினான்.* கர்த்தர் அவனுடைய விசுவாசத்தை மதித்தார், மேலும் அம்ராம் *எபிரேய புத்தகத்தின் விசுவாச அத்தியாயத்தில் பட்டியலிடப்பட்டுள்ளான்.*

📖 *மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள் (எபி 11:23).*

தேவனாகிய கர்த்தர் *சாதாரண ஜனங்கள் அசாதாரணமான பணிகளைச் செய்ய பயன்படுத்துகிறார்.* அதன் மூலம் அவருடைய திட்டங்களும் நோக்கங்களும் நிறைவேறுகின்றன. ஆண்டவரால் பயன் படுத்தப்படுவதற்கு நாம் பிரபலமாக இருக்க வேண்டியதில்லை. *தேவனாகிய கர்த்தர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அவர் மீதுள்ள எளிய விசுவாசம் மட்டுமே.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 13, 2023_
[13/08, 07:03] +91 99431 72360: 13.08.2023

*🍧சிப்பிக்குள் முத்து🍧*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 6, 7*

*🍀முத்துச்சிதறல் : 121*

🎀🎀🎀🎀
*✍️தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்க்கு ஸ்தாபித்தவர்களும், சாலமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தை கட்டி தீருமட்டும் ஆசரிப்பு கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாக சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள் :*
(6 : 31, 32)
🎀🎀🎀🎀

*💦கர்த்தருடைய பெட்டியை கூடாரத்தில் கொண்டு வைத்த பின்பு தாவீதரசர் "சங்கீத சேர்வைக்காரர்களை" நியமித்து, இந்த சங்கீத குழுவுக்கு தலைவர்களையும், "கூட்டிசை வாசிகளையும்," "கோஷ்டி கானம் பாடுவோரையும்" ஏற்படுத்தினார்.*

நியாய பிரமாணத்தில் இப்படி செய்யப்பட வேண்டும் என்று எந்த விதமான கட்டளைகளும் இல்லை.
தாவீது கர்த்தருடைய இதயத்திற்கு ஏற்ற விதமான ஆவிக்குரிய பாடல்களை அமைத்து கொடுத்து, மேற்கண்டோருடன் சேர்ந்து இசை அமைத்து, அதனை பாடும் விதத்தினை முறைப்படுத்தியிருந்தார்.
*அதனை சாலமோன் பின்பற்றி தொடர் செயல் ஆற்றினார்.*

இந்த மேற்கண்ட எமது வாசிப்பு பகுதியில், அதாவது
*1 நாளா - 6 : 31, 32 ல்*.....
வம்ச அட்டவணையில் முதலாவது குறிப்பிடப்படும் *ஏமான் தான்* பாடகர் குழுவுக்கு தலைவராக நியமிக்க பட்டவர்.
*இந்த ஏமான் சாமுவேல் தீர்க்கதாரிசியின் பேரன்.*
இவர் இசை வம்சத்தினராகிய கோகாத்தியர் குடும்ப வம்சத்தில் பிறந்தவர். *இந்த கோகாத் என்பவர் யாக்கோபின் குமாரனாகிய லேவியின் மூன்று குமாரரில் ஒருவர்.* மற்ற இருவர் பெயர் கெர்சோம், மேராரி என்பதாம்.
*சாமுவேல் தீர்க்கதரிசி வழி மரபினருக்கு இந்த அரிய கொடையாகிய இசை ஞானம் உண்டாகியது.*
அது கர்த்தரின் *கிருபை வரம்.*

*🔥தாவீதும் அவர் குமாரன் சாலமோனும் பாடல்களை எழுதுவதில், இஸ்ரவேலில் எழுந்த பெரும் பாடலாசிரியர்கள். (சங்கீதங்கள்,*
*1 இராஜா - 4 : 32)*
இவர்களை அல்லாமல் மற்ற பாடகர்களும் உண்டு, ஆகிலும் தாவீதுக்கோ, அவர் குமாரன் சாலமோனுக்கோ இவர்கள் இணையில்லை எனலாம்.

🍒🌻🍒🌻🍒🌻

*✒️வேதாகமத்தில் பாடல்கள் பலரால், பலவிதங்களில் இயற்றப்படுவதாக குறிப்புகளை காணலாம் :*

*🍉1. மூடர்களின் பாடல்கள்.*
மூடர்கள் கூடபாடல் இயற்றி பாடலாம். அவர்கள் பாடும் எந்த பாடல்களும் கர்த்தரின் பார்வையில், அவர் செவிகளில், மூடத்தனமாக இருக்குமாம்.
*பிர - 7 : 5*

*🍉2. ஆவிக்குரிய பாடல்கள்.*
ஆவிக்குரியோர் பக்தி பாடல்களை இயற்றுவார்கள், பாடுவார்கள். ஆவிக்குரியோர் பாடும் எந்த பாடலும் இறைவன் செவிகளில் தேனாய் இருக்கும்.
*அதில் போதனை மற்றும் புத்தி சொல்லுதலும் இருக்கும்.*
எபே - 5 : 19

*🍉3. புதிய பாடல்கள்.*
அவ்வப்பொழுது புதிய புதிய பாடல்கள், தேவனுக்கு மகிமையையும் கனத்தையும் கொடுக்கும் விதமாக இயற்றப்பட்டு வெளிவரவேண்டும்.
*வெளி - 5 : 9*

*🍉4. தனித்துவ மிக்க பாடல்*
எவரும் உடனியாக கற்றுக்கொள்ளவோ, இல்லை புரிந்து கொள்ளவோ முடியாதபடி இயற்றப்படும் பாடல்களான *இறையியல் பாடல்கள்* தான் தனித்துவ மிக்க பாடல்கள்.
*வெளி - 14 : 3*

🍉🫛🍉🫛🍉🫛🍉

இந்த பாடகர் குழு தலைவர் *ஏமான் நடுவில் நிற்க,* அவருக்கு *வலது புறமாக ஆசாப் நிற்பாராம்.* மெராரியின் புத்திரர் சிலர் *(சங்கீத சேவையில் நியமிக்க பட்டவர்கள் மாத்திரம்)* இந்த *ஏமானுக்கு இடது புறத்தில்* நிற்பார்களாம்.

*இது தாவீதரசர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சங்கீத சேர்வைக்காரருக்கான ஒழுங்கு முறைமை.* அவருக்கு பின் *சாலமோனும் இவ்விதமே ஆலயத்திற்கு வெளியே நின்று சதா சங்கீதம் பாடி கர்த்தரை போற்றிக்கொண்டே இருக்கும் ஒரு சங்கீத வித்வான்களின் கூட்டத்தினரை, குழுவினரை ஒழுங்குப்படுத்தினார்.*

*🍇நயங்காட்டி சுண்டியிழுக்கும் இசைகள்🍇*

*🍒 ஒரு மனிதனை நல்வழிக்கு நேராகவோ, அல்லது தீயவழிக்கு நேராகவோ நடத்தும் சக்தி இசைக்கு இருக்கிறது.*
இசை என்பது அதன் ஆன்மீக தரத்தை பொறுத்தே நன்மை பயப்பதோ இல்லை தீமை பயப்பதாகவோ இருப்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
*இசை துறையில் சாத்தான் ஆதியில் இருந்தே வித்துவானாக இருப்பதினால்,* விசேஷமாக இத்துறையை பயன்படுத்தி வாலிபர் மற்றும் சகோதிரிகளை இழுக்க விளைந்து வெற்றியும் பெற்று விடுகிறான்.

🍇 *நவீன இசைகளை குறித்து அறிந்தவன்,*
அதன் அபாயத்தையும் அறிய வாய்ப்புகள் உண்டு.
*சில ராகங்கள் தேவ பயமற்ற மனிதர்களால் ஒரு பாடலுக்கு இயற்ற படும்போது அங்கு அந்தகார சக்திகள் தங்களது வல்லமைகளை இறக்குவதாக முற்கால தெய்வ பயமிக்க மனிதர்கள் கண்டுணர்ந்து,* சினிமா பின்னணி பாடகர்கள் பாடிய கிறிஸ்தவ பாடல்களை கூட கேட்க விடாமல் மக்களை தடுத்த காலங்கள் உண்டு. *எமக்கு அது காதிற்கு இனிய ரசனையை கொடுப்பினும்,* அப்படிப்பட்டோர் பணத்திற்காக கிறிஸ்தவ பாடல்களையும் பாடுவார்கள், அந்நிய தெய்வங்களின் பாடல்களையும் பாடுவார்கள் என்பதால்,
*அப்படி பட்டோரை தவிர்க்க அறிவுரை கொடுப்பார்கள்.*

இரட்சிக்க பட்ட ஒரு தேவ பிள்ளை பாடுவதற்கும், அதற்கு இசை அமைக்கவும் ஒரு இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளை கைகொடுக்கும் போது அது.... *"தெய்வீக பாடலாக உருவெடுத்து,* அநேகரை இரட்சிப்புக்கு நேரே வழிநடத்தும் ஒரு கருவியாக மாறிவிடுகிறது.

🎼 *கர்த்தருக்கு புது பாட்டை பாடி, அவரது மகத்துவமான கிரியைகளை துதியாக பிரசித்த படுத்தவே நாம் முயல வேண்டும்.*

நம் சந்ததிகளும் *"கர்த்தருடைய கிருபை என்றுமாய் நம்மை தாங்கியதை நினைவுகூரும் அடையாளமாக, சத்திய வார்த்தைகள் பொதிய பட்டுள்ள பக்தி பாடல்களை மாத்திரம் கேட்கவும், இயற்றவும், அதற்கு இசைக்கவும் தக்கதாக நாம் போதித்து புத்தி சொல்லுவோராக இருக்க வேண்டும்.* மட்டுமல்ல.....
*தங்களது கீத வாத்தியங்களை கர்த்தருக்காக மட்டும் இசைக்க ஒப்புக்கொடுத்து*
(2நாளா -7:6), அதாவது தாவீதரசன் *"கர்த்தரின் கீத வாத்யங்கள் என்று பிரயத்தியேக வாத்திய கருவிகளை தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்து ",*
அதனை கொண்டு அவரை மாத்திரம் சேவித்து நிற்க *தனது ஆளுமையின் கீழ் இருந்த இசைக்கலைஞர்ளை வழிநடத்தி இருந்தது வியக்கத்தக்க காரியமாகும்.*

அப்படியே நாமும், நமது சந்ததியும் தகுதி அடைந்து, தேவ ஆவியினால் நிறைந்தோராகி, விழுந்து போனவனுடைய இசையையோ, ராகத்தினையோ ரசிக்காமல், அவனது பாடல்களை பாடாமலும், அதிலே மயங்கி விடாமல் இருக்கவும் முன்வரவேண்டும்.

🥦 *வேதாகம பாடகர்கள் சிலர் கர்த்தரை மகிமைப்படுத்தி, உயர்த்தி யுத்த களத்தில் பாடிய போது பாருங்கள், அவர்களது சத்துருக்கள் படு தோல்வியடைந்தார்களாம்.*
இவர்களோ மாபெரும் வெற்றியை அடைந்து சந்தோஷமாக வீடு திரும்பினார்களாம். *(2நாளா -20:22)*

🤔 *சில கூட்டத்தார் வாத்திய கருவிகளே பயன்படுத்த கூடாது என்கின்றனர்.* நாமோ தேவனுடைய முழு ஆலோசனையும் முழு வேதாகமத்தில் இருப்பதாக உறுதியாக நம்பி, பக்தனாகிய தாவீதரசன் போலவே கீத வாத்தியங்கள் எவையெல்லாம் இக்காலத்தில் இருக்கிறதோ, அதிலே தேறினவர்கள் மூலம் அவைகளை இசைத்து *கர்த்தருக்கு பண் பாடுவோம். அதிலே அவர் பிரியப்படுகிறார்.* ஏன் என்றால், அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். (சங்-150:3-5:, 147:769:30, 31:, 149:1, 3, 7, 9:, 150:6)

🍉 *தங்கள் சுயத்தை முன்னிறுத்தியும், சுயபரிதாபத்தை அவர்கள் மேல் பிறர் கொள்ளும்படியும், தங்களை தாங்களே தேற்றிக்கொள்ளும் விதமாகவும் இயற்றப்படும் எப்பாடலிலும், தேவனுக்கு ஏதாகிலும் மகிமை உண்டாகுமோ❓️ வென்றும் சற்றேனும் யோசிப்பவர்கள், எல்லா பாடல்களையும் அங்கீகரிக்க முடிவதில்லை.*

👍 *சத்துருவின் வல்லமையைக்கூட இசையை கொண்டு முறியடிக்கலாம் என்று வேதம் வழிக்காட்டுகிறது.* ஆகையால் இன்னிசை முழங்க தேவனை, அவரது பரிசுத்தம், வல்லமை, மீட்ப்பு, குறித்து உவந்து பாடி சத்துருவை வெட்கப்படுத்த எல்லோரும் கற்றுக்கொள்ளுவோம்.

🍀🌿🍀🌿🍀🌿

*🎊நவீன காலத்து இசையால் மயங்கி நிற்கும் வாலிபர்கள் பலவிதமான இசைகளினால் கவரப்படுகின்றனர்.*
ஆனால் தெய்வ மக்கள் எவரும் *"சீயோனை மையப்படுத்தி", கிறிஸ்துவை, அவரது மீட்பை, வேத வசனங்களின் ஆழமான இறையியல் கருத்துக்களை தான்* பாடல்களாக இயற்றவோ, பாடவோ, இல்லை கேட்கவோ வேண்டும். *(சங் - 137 : 3)*
இல்லை என்றால்.... *பாடல் இயற்றினவரோ, இல்லை பாடலை பாடுபவரோ, இல்லை பாடலை ரசித்து கேட்பவரோ, இவர்களை பார்த்து, அல்லது இவர்களிடம் கர்த்தர் கூறுவது ஆமோஸ் - 5 : 23 ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்.*

*🌹இசையாலே இறைவனை முறையாக மகிமை படுத்த இத்தலைமுறையினர் சரியாக வழிநடத்தப்பட வேண்டும்.*
எமது இசை ஞானம் இறைவனுக்கு மாத்திரம் புகழ் சேர்ப்பிக்க வேண்டுமே தவிர, அந்த மகிமை எமக்கு வந்து விடாதபடி இசை ஞானிகள் கவனம் காப்பதும், அவசியப்படுகிறது.

*📌பாடல் வேளையில் கூச்சல் போட்டு பாடுவதை தவிர்த்து, ஆவியோடும், கருத்தோடும், உணர்வு பூர்வமாக பாடி, பயத்துடனே கர்த்தரை சேவிப்பது என்றால் என்ன❓️ எப்படி❓️ என்பதினை இந்த தாவீதரசர் ஒழுங்கு படுத்தி, முறைப்படுத்தி பாடகர்களை பாட வைத்த முறைமையை இனியாகிலும் புரிந்தோராக இறைவனை புகழ்ந்து, அவ்வுலகமாகிய "சீயோனின் பாடல்களை" பாடுவோம்.*
ஏன் என்றால்....
*இவ்வுலக வாழ்வல்ல, மாறாக அவ்வுலக வாழ்வே எமது வாழ்வின் முடிவு என்பதை மறவாதிருப்போம். ஆமென் !*

*Sis. Martha Lazar✍️*
NJC, KodaiRoad.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.