*1நாளாகமம்: 11-14*
💐💐💐💐💐💐💐
*தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடே கூட இருந்தார்*.
(1நாளா: 11:9)
▪️சேனைகளின் கர்த்தர் தாவீதோடு இருந்தார் என்றால் தாவீதும் சேனைகளின் கர்த்தரோடு இருந்தார் என்பதை நாம் அறிவோம்.
▪️தாவீதின் வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்கள், நிந்தைகள் அவமானங்கள் வந்த போதிலும் அவர் தேவனை மட்டும் பற்றிப் பிடித்து வாழ்ந்தார்.
*என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்*.
(சங்கீதம்:7:1)
*எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்கிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்*.
(சங்கீதம்: 57:1)
▪️ தாவீது பத்சேபாளிடம் பாவம் செய்த சம்பவத்திலும் கர்த்தரிடம் மிகவும் கதறி தன் பாவங்களை மன்னிக்க வேண்டினார்.
*தேவனே உமது கிருபையின் படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின் படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரிக்கும்*.
*என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரிக்கும்*.
(சங்கீதம்: 51:1,2)
▪️ பெற்ற மகன் அப்சலோமினால் வேதனைகள், நெருக்கங்கள் அனுபவித்த வேளைகளிலும் கர்த்தரிடம் தன் மனக்கவலைகளைச் சொல்லி ஆறுதல் அடைந்தார்.
*நாமும் கர்த்தரை நேசித்து, அவரைத் தேடி, குறைகள் குற்றங்களை மனப்பூர்வமாக அறிக்கையிட்டு, உண்மையாக நடந்தால் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருப்பார். நாமும் நாளுக்கு நாள் சிறப்படைவோம்*.
*ஆமென்*
✍️பவானி ஜீஜா தேவராஜ்,
நாகர்கோவில்
(குழு எண்: 2068)
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: 🌈 *There are no lone Ranger leaders. A leader’s potential is determined by those closest to him.*
⛹️♂️ *Application* : I Chr.11:10-12:40- *A leader’s potential is determined by those closest to him. There are no lone Ranger leaders. If we are alone, we are not leading anybody. Think of any highly effective leader, and we will find someone surrounded by a strong inner circle.* If those people are strong, then the leader can make a huge impact. If they are weak, he can’t. When God wants a leader to do something of value for Him, He provides that leader with the individuals to get the job done. That was true for David, and it will be true for you and me as well.
🏋️♀️I Chr.11:15-19- *Notice how David’s men responded when he merely expressed a wish—he would never have given such a command. Yet our Lord has commanded us to take the Water of Life to the whole world. And what have we done with it? Are we obeying His orders?* Notice what David did with the water that was brought to him at such tremendous risk. David was unselfish—no wonder his men loved him. They were willing to suffer for him because he was willing to suffer with them. He wouldn’t take that drink because his men didn’t have water, and he chose to take his place with them.
💡I Chr.13:6- *Of course, God did not live in the ark, nor between the cherubims, but that is the place He designated as His meeting place with the people of Israel.* His presence was there. Now they will make their big mistake. As someone has put it, this is doing a right thing in a wrong way. *It was right to bring the ark up to Jerusalem, but the method of doing it was wrong.*
Jaya Pradeep-Kodaikanal.
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*
*DAY 123, 15/08/2023 TUESDAY*
*1 CHRONICLES : 11 - 14*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: *15.08.2023*
💠 *உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார்* 💠
🔹 *அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்* (1 நாளாகமம் 12:18).
💥 தாவீது சிக்லாகில் சவுலுக்கு மறைவாக இருந்தபோது, *பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும்* சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள். தாவீது புறப்பட்டு, *அவர்களுக்கு எதிர்கொண்டு போனான்.* இது தாவீதின் மனத்தாழ்மையையும் தேவன்மீது அவன் கொண்டிருந்த அதீத நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர்கள் *அவனுக்கு உதவி செய்ய வந்திருந்தால், தம்முடன் சேர்ந்துகொள்ள அவர்களை வரவேற்பதாகவும்* ஆனால் சவுலின் கைகளில் *அவனைக் காட்டிக்கொடுக்க வந்திருந்தால், தேவன் அவர்களைத் தண்டிப்பார்* என்றும் அவர்களிடம் தைரியமாக அறிவித்தான்.
💥 தாவீது ஏற்கனவே தன் வாழ்க்கையில் தேவனுடைய பாதுகாப்பை அனுபவித்திருந்தான். தேவன்மீது அவனுக்கு இருந்த அதீத நம்பிக்கை அவனை இவ்வாறு எழுத வைத்தது: *“நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.”* (சங்கீதம் 37:39-40).
💥 அதிபதிகளுக்குத் தலைவனான *அமாசாயின்மேல்* (2 சாமுவேல் 17:25) *ஆவி இறங்கினதினால்* அவன் ஞானத்தையும் உறுதியையும் பெற்று, *அவர்கள் எல்லாரும் தாவீதினுடையவர்கள்* என்றும் அவர்கள் *அவனுடைய பட்சமாகத்தான் இருப்பார்களென்றும்* பதிலளித்தான்.* தேவன் தாவீதின் பட்சமாயிருப்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால் அவர்கள் தாவீதின் பட்சமாக மட்டுமே இருக்க முடியும், இல்லையெனில் அவர்கள் *தேவனை எதிர்ப்பவர்களாய் காணப்படுவார்கள்.* பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: *"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"* (ரோமர் 8:31). *நாம் தேவனின் பக்கமாய் இருப்பவர்களுக்கும், தேவனை தங்கள் பக்கமாய் கொண்டிருப்பவர்களுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்.*
💥 அமாசாய் *தாவீதுக்கு சமாதானம் உண்டாகவேண்டுமென்றும், அவனுக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம் உண்டாகவேண்டுமென்றும்* வேண்டி வாழ்த்தினான். தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து அவருடைய சித்தத்தைச் செய்பவர்கள் அனைவரும் *பூரண சமாதானத்தையும் ஜெயத்தையும் பெறுவார்கள்.* ஏசாயாவின் வார்த்தைகள்: *"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்."* ( ஏசாயா 26:3). தாவீது தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவனாக இருந்தபடியால், தேவன் அவனுக்கு சமாதானமும், அமரிக்கையும் சுகமும் அருளி ஆசீர்வதிப்பார். வேதம் கூறுகிறது: *"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்."* (ஏசாயா 32:17).
💥 இந்த ஆசீர்வாதங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள இரகசியம் *'தாவீதுனுடைய தேவன் தாவீதுக்குத் துணை நிற்கிறார்'* என்பதை அமாசாய் தனது பதிலில் வெளிப்படுத்தினான். வேதம் கூறுகிறது: *“அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.”* (எபிரெயர் 13:6). ஒவ்வொரு விசுவாசிக்கும், *தேவை நேரத்திலும் ஆபத்து நேரத்திலும் தேவன் உறுதுணையாக இருப்பார்.*
💥 கர்த்தராகிய இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள அன்பிற்கும் விசுவாசத்திற்கும் *சாட்சியாயிருக்க அமாசாயின் வார்த்தைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்:*
▪️ முழு இருதயத்தோடும் உறுதியோடும் நாம் *அவருடையவர்களாக* இருக்க வேண்டும்.
▪️ நாம் எல்லா வகையிலும் *அவருடைய பட்சமாய்* இருக்க வேண்டும்.
▪️ நாம் *அவருடைய நற்செய்தியின் மேலும் அவருடைய ராஜ்யத்தின் மேலும் வாஞ்சையுள்ளவர்களாக* இருக்க வேண்டும்.
▪️ அவரிடமிருந்து நாம் தொடர்ந்து பெறும் நன்மைகளுக்காகவும் கிருபைகளுக்காகவும் நாம் *நன்றியுள்ள சாட்சிகளாக* இருக்க வேண்டும்.
🔹 *நம்முடைய தேவன் எப்பொழுதும் நமக்குத் துணை நிற்கிறார் என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நாம் தேவனின் பக்கமாய் இருப்பவர்களுக்கும், தேவனை தங்கள் பக்கமாய் கொண்டிருப்பவர்களுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்.*
2️⃣ *தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து அவருடைய சித்தத்தைச் செய்பவர்கள் அனைவரும் பூரண சமாதானத்தையும் ஜெயத்தையும் பெறுவார்கள்.*
3️⃣ *ஒவ்வொரு விசுவாசிக்கும், தேவை நேரத்திலும் ஆபத்து நேரத்திலும் தேவன் உறுதுணையாக இருப்பார்.*
4️⃣ *கர்த்தராகிய இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள அன்பிற்கும் விசுவாசத்திற்கும் சாட்சியாயிருக்க அமாசாயின் வார்த்தைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣3️⃣
1 Chronicles 11-14
*WHAT A GOD WE SERVE* ❗️
*God gives great victory if you take your stand* ‼️
💥 The people fled from the Philistines. But they stationed themselves in the middle of that field, defended it, and killed the Philistines. So the Lord brought about a great victory. (1Chron 11:13,14)
*TAKE YOUR STAND AGAINST THE ENEMY ..DO NOT FEAR.. DON'T RUN AWAY.. BUT TAKE YOUR STAND.. YOU WILL ENJOY A GREAT VICTORY.*
💥 Submit to God. Resist the devil and he will flee from you.(Jam 4:7)
💥 Resist him, steadfast in the faith (1 Pet 5:9)
💥 Put on the whole armor of God, that you may be able to stand against the wiles of the devil.(Eph 6:11)
🙏 🙏 *Thanks be to God who always leads us in triumph in Christ* (2 Cori 2:14)
Usha
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: *நாங்கள் உம்முடைய எலும்பும், மாம்சமுமானவர்கள்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 11: 1 - 3.
1. இங்கு சவுலின் மரணத்திற்கு பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதிடம் வந்து *நாங்கள் உம்முடைய எலும்பும், மாம்சமுமானவர்கள்* என கூறினார்கள். தாவீது அவர்களோடு உடன்படிக்கை பண்ணின பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.
2. *எலும்பும், மாம்சமுமானவர்கள் என்றால் அவ்வளவு நெருக்கமான உறவுடையவர்கள், அன்புடையவர்கள், ஒருவரிலிருந்து ஒருவரை பிரிக்க முடியாமல் ஒன்றாய், ஐக்கியமாய் இருப்பவர்கள்* என அர்த்தம். எலும்பிலிருந்து மாம்சத்தை நாம் பிரிக்கும் போது அங்கு ஜீவன் இல்லை,
மரணம் ஏற்படும்.
3. *கர்த்தர் ஆதாமின் விலா எலும்பிலிருந்து, மனுஷியை, ஏவாளை சிருஷ்டித்து. அவளை ஆதாமிடத்தில் கொண்டு வருகிறார். அப்போது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சமுமாய் இருக்கிறாள்* என்றான்.அப்படியானால் ஆதாம் தன் மனைவியை எவ்வளவாய் நேசித்தான், அன்பு செலுத்தினான் என்பதை நாம் அறியலாம். அதுமட்டுமல்ல அவர்கள் ஒன்றாகவே, ஐக்கியமாகவே வாழ்ந்தார்கள்.
ஆனால் அவர்கள் பாவம் செய்த போதோ ஒருவரை ஒருவர் குறை கூறுகிறார்கள். ஆம், *இன்று குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் இந்த அன்பு, ஐக்கியம் இருக்கிறதா?* நம்மை நாமே ஆராய்வோம்.
4.மட்டுமல்ல, *சபையிலே நாம் கிறிஸ்துவின் எலும்புகளுக்கும், மாம்சத்திற்கும் உரியவர்களாயிருக்கிறோம்.* ஆகவே தான் மனுஷன் தன் தகப்பனையும், தாயையும் பிரிந்து, மனைவியுடன் இசைந்து, ஒரே மாம்சமாயிருப்பார்கள் என ஆவியானவர் கூறினார்
இந்த *மேலான இரகசியத்தை* நாம் அறிந்திருக்கிறோமா? மனைவியோடு இசைந்து, அன்பு கூர்ந்து வாழ்கிறோமா? நம்முடைய குடும்ப வாழ்க்கையை இவ்வித அன்போடு, ஒருவரில் ஒருவர் அன்புடன் வாழ்வோமாக.
மட்டுமல்ல, *சபையில் மணவாளனாகிய கிறிஸ்துவோடு, மணவாட்டிகளாகிய நாமும் இசைந்து, ஒருவரோடு ஒருவர் அன்புகூர்ந்து வாழ கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக*. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *ஓபேத்-ஏதோம்* 🍂
ஓபேத்-ஏதோம் இஸ்ரவேல் தேசத்தை சேர்ந்தவன் அல்ல. அவன் பெலிஸ்தியாவில் உள்ள காத் நகரத்தைச் சேர்ந்தவன். *பரிசுத்த வேதாகமத்தில் அதிகம் அறியப்படாத மற்றொரு மனிதர் ஓபேத்-ஏதோம்.*
கர்த்தருடைய பெட்டி எருசலேமுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உசா பேழையைப் பிடிக்க தன் கையை நீட்ட முயன்றதால், கர்த்தர் அவனை அடித்தார். இதை கண்ட தாவீதும் இஸ்ரவேல் ஜனங்களும் பயந்தார்கள். *ஆகவே, ஓபேத்-ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பெட்டி தற்காலிகமாக வைக்கப்பட்டது.*
📖 *தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் (1 நாளா 13:14).*
ஓபேத்-ஏதோமின் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் ஏதோ ஒன்று நடந்தது. அவரது முழு குடும்ப உறுப்பினர்களும் ஒருமனதாக உடன்படிக்கை பெட்டியை பயபக்தியுடன் காத்துக் கொண்டனர். *அவர்கள் தங்கள் வீட்டைப் உடன்படிக்கைப் பெட்டிக்குத் திறந்தார்கள்.*
*அதோடு கூட கர்த்தருடைய வார்த்தைக்கு தங்கள் இருதயத்தைத் திறந்தார்கள்.* அவர்கள் தேவ பயத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள். *தேவ பயத்திற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள நாம் தயாரா?*
ஓபேத்-ஏதோமும் அவனது குடும்பமும் *தனித்துவமான, அரிதான முறையில் ஆசீர்வதிக்கப்பட்டனர்.* ஓபேத்-ஏதோமுக்கு எட்டு மகன்கள் இருந்தனர். அவருடைய பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட மொத்த அங்கத்தினர்கள் 62. அவர்கள் அனைவரும் பலசாலிகள்.
*அவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தில் வாசல் காவலர்களாக நியமிக்கப்பட்டார்கள்.* கர்த்தருடைய பெட்டி மூன்று மாதங்களில் அவர்களை முழுவதுமாக மாற்றியது. *வேத வசனமாகிய கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்க்கையை மாற்ற அனுமதிக்கிறோமா?*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 15, 2023_
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: 1. நாளாகமம்.14.
🌺🌺🌺🌺🌺🌺
"எருசலேமில் தாவீதின் சிம்மாசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பக்கத்து அரசர்கள் தாவீதைக் கௌரவிக்கின்றனர்.
அவருக்கு ஒரு அரண்மனை கட்ட சிறந்த கைவினைஞர்கள் மற்றும் மரங்கள் கொடுத்து உதவினர்
தீருவின் ராஜாவான ஈராமுடனான இந்த உறவு, தாவீது ஒரு போர்வீரனை விட மேலானவர் என்பதைக் காட்டுகிறது.
தாவீது தனது ஆட்சியை சிறப்பாக்கிய இரண்டு விஷயங்களை அறிந்திருந்தார்.
ஒவ்வொரு தெய்வீகத் தலைவரும் இந்த இரண்டு விஷயங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தேவன் தன்னை அழைத்து இஸ்ரவேலின்மேல் இராஜாவாக வைத்திருந்தார் என்பதை தாவீது அறிந்திருந்தார்.
கடவுள் தம் மக்களை ஆசீர்வதிக்க தன்னை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புகிறார் என்பதை தாவீது
அறிந்திருந்தார்.
தாவீது அதிக மனைவிகளை வைத்திருந்தார் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஆனால் அது ஆத்துமாவுக்கு ஒரு தோல்வியாக இருந்தது.
தாவீது வெற்றியை விட சோதனைகளை சிறப்பாக கையாண்டார்.
தாவீதின் வாழ்க்கையில் கடவுள் வல்லமையுடன் செயல்பட்டதால், பிசாசும் வேலை செய்து தாவீதுக்கு எதிராக எதிர்ப்பைக் கொண்டு வந்தான்.
தாவீது கடவுளைத் தேடி, வழிநடத்துதலுக்காக அவரைப் பார்த்தபோது அவர் ஆசீர்வதிக்கப்பட்டார்.
தாவீது கர்த்தரை சார்ந்திருப்பதை கர்த்தர் கனம்பண்ணி, அவருக்கு வெற்றி வாகையைக் கொடுத்தார்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196.
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: *👑FROM SHEPHERD TO SOVEREIGN👑*
*👑ஆட்டிடையனிலிருந்து ஆட்சியாளர் வரை👑*
[DAY - 123]
1 நாளாகமம் 11-14
☄️1 நாளாகமம் அத்தியாயங்கள் 11-14: இந்தக் காலகட்டம் தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்து இஸ்ரவேலின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவராக உயர்ந்ததைக் காட்டுகிறது.
1️⃣ *தாவீதின் தாழ்மையான ஆரம்பம்*
🔹 உலகத்தின் பார்வையில், தாவீது ஒரு ராஜாவுக்கு வாய்ப்பில்லாத நபராகத் தோன்றினார்.
🔹இருப்பினும், தேவன் ஒரு ஆட்டிடைய சிறுவனின் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி அவனை இஸ்ரவேலின் வருங்கால ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தார்.
🔹சாமுவேல் தீர்க்கதரிசியினால் செய்யப்பட்ட தாவீதின் அபிஷேகம் அவரது அசாதாரண பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ஆனால் தேவன்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் அவரை வேறுபடுத்தியது.
2️⃣ *கோலியாத்தை தோற்கடித்தல்*
🔸தாவீதின் வாழ்க்கையின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று, மாபெரும் பெலிஸ்திய வீரரான கோலியாத்தை அவர் எதிர்க்கொண்டது.
🔸 இஸ்ரவேலின் முழு இராணுவமும் பயத்தில் திகைத்து நிற்கையில், தாவீது, தேவன்மீது கொண்ட நம்பிக்கையால் தூண்டிவிடப்பட்டு, வலிமைமிக்க எதிரியை எதிர்கொள்ள தைரியமாக முன்னேறினார்.
🔸ஒரு கவண் மற்றும் ஐந்து கூழான் கற்களால் கோலியாத்தின் மீது அவர் பெற்ற வெற்றி, மக்களின் இதயங்களில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது.
3️⃣ *எருசலேமை தலைநகராக ஸ்தாபித்தல்*
🔺சவுலின் மரணத்திற்குப் பிறகு, தாவீதின் அரியணை ஏறுதல் பல சவால்களை எதிர்கொண்டது, ஆனால் அவர் தேவன்மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.
🔺ராஜாவாக அவர் செய்த முதல் செயல்களில் ஒன்று எருசலேமை இஸ்ரவேலின் தலைநகராக நிறுவியது.
🔺மூலோபாய வெற்றிகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மூலம், தாவீது இஸ்ரவேலின் எல்லையை விரிவுபடுத்தினார்.
4️⃣ *தேவனுடைய வழிகாட்டுதலைத் நாடுதல்*
▪️தாவீதின் ஆட்சிக்காலம் முழுவதும், எல்லா விஷயங்களிலும் கர்த்தருடைய வழிகாட்டுதலை அவர் தொடர்ந்து நாடினார்.
▪️போர்களுக்கு முன் தெய்வீக வழிநடத்துதலை நாடினாலும் சரி அல்லது முக்கிய முடிவுகளைப் பற்றி இறைவனிடம் விசாரிப்பதாக இருந்தாலும் சரி, தாவீது தேவனுடைய இறையாண்மையை ஒப்புக்கொண்ட ஒரு தலைவரை முன்மாதிரியாகக் காட்டினார்.
▪️அவரது மனத்தாழ்மையும், தேவனுடைய ஞானத்தின் மீதான நம்பிக்கையும், அவரை சரியான முடிவுகளை எடுக்கவும், தேசத்தை நேர்மையுடன் வழிநடத்தவும் அனுமதித்தது.
5️⃣ *உடன்படிக்கைப் பெட்டியின் மீட்டெடுப்பு*
▫️தாவீது பெலிஸ்தியர்களிடமிருந்து உடன்படிக்கைப் பெட்டியை மீட்டார்.
▫️பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவர தாவீதின் தீர்மானம், தேவன்மீது அவர் கொண்டிருந்த ஆழமான அன்பை வெளிப்படுத்தியது.
▫️பெரும் கொண்டாட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் பெட்டி நகருக்குள் கொண்டு வரப்பட்டபோது, தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழுப் பலத்தோடு நடனமாடினான்.
▫️அவரது கட்டுக்கடங்காத ஆராதனையும் உண்மையான அபிமானமும் தேவனுடனான அவரது ஆழமான தொடர்பையும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனை கனப்படுத்த வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்தியது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥1 நாளாகமம் 11-14 அதிகாரங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள தாவீதின் அரியணை ஏறுதல் மற்றும் அவனது வலிமையான செயல்கள், தேவனுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை வெளிப்படுத்துகின்றன.
💥 விருப்பமுள்ள பாத்திரத்தின் மூலம் செயல்படும் தேவனுடைய வல்லமைக்கு ஒரு சான்றாக, அவரது வாழ்க்கை, விளங்குகிறது.
*‼️தாவீதைப் போல நாமும் தேவனுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற, ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[15/08, 07:57] (W) Arun Selva Kumar: ✝️ *TO BECOME A MIGHTY WARRIOR FOR THE LORD* ✝️ 1 Chron 11-15✝️
🔹David was anointed king over Israel after he had reigned in Hebron for 7 and 1/2 years. After that, he conquered Jerusalem from the Jebusites and moved from Hebron to Jerusalem. *He became more and more powerful because the Lord Almighty was with him*. 11: 4-9.
Day after day men came to help David, until he had a great army, *like the army of God*. Great numbers of men armed for battle who came to David at Hebron to turn Saul’s kingdom over to him numbered to 33, 7100! 12:22-38.
🔹David’s wars and victories did not start with these many soldiers. He had his training period alone with God, as the *Holy Spirit empowered him to kill the lion and the bear single handedly* when no one was watching. This gave him confidence in the Lord to fight Goliath alone while two armies watched from both sides.
🔹The mighty men did not come to David after he became the king. They were with him while he was hiding from Saul. They were not born warriors. All those who were in distress or in debt or discontented gathered around him, and he became their commander. ... 1 Sam 22:2. Thirty of them turned out to be David’s mighty men. May we not despise the day of small things. God trains us for our battles during our adverse times that with God’s help we can advance against a troop and scale the wall. Ps 18:29. He turns those in distress, debt or discontentment into mighty warriors. God does not look at our inabilities and ridicule us for our timidity. He looks at the finished product and calls us mighty warriors as He called Gideon.
🔹*God armed David with strength for battle* and *subdued nations* under him. Ps 18. God trained his hands for war and his fingers for battle. He *subdued people* under him. Ps 144:1-2.
The disciples of Jesus did not have it all together before meeting Him nor after walking with Him for three and a half years. But Jesus was not seeing them as they saw themselves. The baptism of the *Holy Spirit turned them all into mighty warriors*. They *changed and became as bold as lions before the people who tried to subdue them*.
🔷 *For the Spirit God gave us does not make us timid, but gives us power, love and self-discipline*. 2 Tim 1:7.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*🙂
Dr. Sangeeta Thomas.
*1 நாளாகமம் 11 - 14*
*கர்த்தருக்குக்* *காத்திருக்கிறவர்கள்* *பாக்கியவான்கள்*..
தாவீது ,இஸ்ரவேலின் சிங்காசனத்தில் திடீரென்று
அமர்ந்து ராஜ்யபாரம்பண்ணவில்லை..
தாவீதின் ராஜ்யம் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கவேண்டும்..
அதன் அஸ்திபாரமும் பலமாயிருக்கவேண்டும்..
அதனால்,கர்த்தர் தாவீதைக் கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்தினார்..
தாவீது ராஜாவானவுடன்.. சீயோன் கோட்டையை
எபூசியரிடமிருந்து பிடித்து, அதைத் தேசத்தின் தலைநகரமாக்கினான்.
( 1 நாளா.11 : 1- 7 )
*அதுதான் எருசலேம்*..
(சங் .48 :2) .
அதுல்லாம் குகையில், தாவீதோடு சேர்ந்து கொண்டவர்கள்..
(1 சாமு. 22:2 ) பராக்கிரமசாலிகளாக உருவாகியிருந்தார்கள்.
தாவீதின் பராக்கிரமசாலிகளில்..
ஒருவன்..சேலாக், அவன் அம்மோனியன்..
மற்றொருவன், இத்மா..
அவன் மோவாபியன்..
( 1 நாளா. 11 : 39,46 )
*தாவீதின் பராக்கிரமசாலிகளில்*
*புறஜாதியார் இருப்பது*..
*தாவீதின் குமாரனாகிய இயேசு* *கிறிஸ்துவின் ராஜ்யத்திலே*..
*புறஜாதியாரும்* *இடம்பெறுவார்கள் என்பதற்கு*
*அடையாளமாகும்*..
கர்த்தர், தாவீதோடுகூட இருந்தார்..( 1 நாளா.11 : 9 )
தாவீதின் பராக்கிரமசாலிகள்..
தாவீதோடுகூட இருந்தாலும்.. .
கர்த்தரே ,தாவீதிற்காக யுத்தம்பண்ணினார்..
தாவீதின் வாழ்விலும்.. இஸ்ரவேலரின் வாழ்விலும் பொற்காலம் ஆரம்பமானது. ஆனால்,இத்தகைய நிலையை அவன் அடைய.. 20 ஆண்டு காலம் ..அவன் பொறுமையோடு காத்திருந்தான்.
சாமுவேல் வரத் தாமதமானபோது..
சவுல் அவசரப்பட்டுத் தானே பலி செலுத்தினான்.
ஆனால், சவுலைக் கொலை செய்து.. ராஜாங்கத்தைச் சுதந்தரிக்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும்..
தாவீது பாவம் செய்யவில்லை...
தாவீது காலங்கடந்து செல்வதைப் பார்க்கவில்லை.. கர்த்தருடைய வேளைக்காகவே காத்திருந்தான்.
*இன்று, நீங்களும் நீண்டகாலம்* *காத்திருக்கும் அனுபவத்திற்குள்* *கடந்துசெல்கிறீர்களா*..?
*கர்த்தர் வாக்குமாறாதவர்*.. *உண்மையுள்ளவர்*.
*நீங்கள் காத்திருக்கும் இந்த* *வேளையிலே.. கர்த்தரும்* *உங்களுக்கு இரங்கும்படி*
*காத்திருக்கிறார்*..
( ஏசா . 30 : 18 )
*கர்த்தரை நம்பி*..
*பொறுமையோடு* *காத்திருங்கள்*.. *ஏற்றவேளையிலே..* *எல்லாவற்றையும்*
*சுதந்தரித்துக்கொள்ளுவீர்கள்*..
“*அவன்* ,(*ஆபிரகாம்*)
*பொறுமையாய்க் காத்திருந்து..*
*வாக்குத்தத்தம்* *பண்ணப்பட்டதைப் பெற்றான்*..”( எபி. 6 :15 )
மாலா டேவிட்
[15/08, 04:56] +91 99431 72360: *15.08.2023*
💠 *உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார்* 💠
🔹 *அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்* (1 நாளாகமம் 12:18).
💥 தாவீது சிக்லாகில் சவுலுக்கு மறைவாக இருந்தபோது, *பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும்* சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள். தாவீது புறப்பட்டு, *அவர்களுக்கு எதிர்கொண்டு போனான்.* இது தாவீதின் மனத்தாழ்மையையும் தேவன்மீது அவன் கொண்டிருந்த அதீத நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர்கள் *அவனுக்கு உதவி செய்ய வந்திருந்தால், தம்முடன் சேர்ந்துகொள்ள அவர்களை வரவேற்பதாகவும்* ஆனால் சவுலின் கைகளில் *அவனைக் காட்டிக்கொடுக்க வந்திருந்தால், தேவன் அவர்களைத் தண்டிப்பார்* என்றும் அவர்களிடம் தைரியமாக அறிவித்தான்.
💥 தாவீது ஏற்கனவே தன் வாழ்க்கையில் தேவனுடைய பாதுகாப்பை அனுபவித்திருந்தான். தேவன்மீது அவனுக்கு இருந்த அதீத நம்பிக்கை அவனை இவ்வாறு எழுத வைத்தது: *“நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.”* (சங்கீதம் 37:39-40).
💥 அதிபதிகளுக்குத் தலைவனான *அமாசாயின்மேல்* (2 சாமுவேல் 17:25) *ஆவி இறங்கினதினால்* அவன் ஞானத்தையும் உறுதியையும் பெற்று, *அவர்கள் எல்லாரும் தாவீதினுடையவர்கள்* என்றும் அவர்கள் *அவனுடைய பட்சமாகத்தான் இருப்பார்களென்றும்* பதிலளித்தான்.* தேவன் தாவீதின் பட்சமாயிருப்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால் அவர்கள் தாவீதின் பட்சமாக மட்டுமே இருக்க முடியும், இல்லையெனில் அவர்கள் *தேவனை எதிர்ப்பவர்களாய் காணப்படுவார்கள்.* பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: *"தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"* (ரோமர் 8:31). *நாம் தேவனின் பக்கமாய் இருப்பவர்களுக்கும், தேவனை தங்கள் பக்கமாய் கொண்டிருப்பவர்களுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்.*
💥 அமாசாய் *தாவீதுக்கு சமாதானம் உண்டாகவேண்டுமென்றும், அவனுக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம் உண்டாகவேண்டுமென்றும்* வேண்டி வாழ்த்தினான். தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து அவருடைய சித்தத்தைச் செய்பவர்கள் அனைவரும் *பூரண சமாதானத்தையும் ஜெயத்தையும் பெறுவார்கள்.* ஏசாயாவின் வார்த்தைகள்: *"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்."* ( ஏசாயா 26:3). தாவீது தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவனாக இருந்தபடியால், தேவன் அவனுக்கு சமாதானமும், அமரிக்கையும் சுகமும் அருளி ஆசீர்வதிப்பார். வேதம் கூறுகிறது: *"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்."* (ஏசாயா 32:17).
💥 இந்த ஆசீர்வாதங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள இரகசியம் *'தாவீதுனுடைய தேவன் தாவீதுக்குத் துணை நிற்கிறார்'* என்பதை அமாசாய் தனது பதிலில் வெளிப்படுத்தினான். வேதம் கூறுகிறது: *“அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.”* (எபிரெயர் 13:6). ஒவ்வொரு விசுவாசிக்கும், *தேவை நேரத்திலும் ஆபத்து நேரத்திலும் தேவன் உறுதுணையாக இருப்பார்.*
💥 கர்த்தராகிய இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள அன்பிற்கும் விசுவாசத்திற்கும் *சாட்சியாயிருக்க அமாசாயின் வார்த்தைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்:*
▪️ முழு இருதயத்தோடும் உறுதியோடும் நாம் *அவருடையவர்களாக* இருக்க வேண்டும்.
▪️ நாம் எல்லா வகையிலும் *அவருடைய பட்சமாய்* இருக்க வேண்டும்.
▪️ நாம் *அவருடைய நற்செய்தியின் மேலும் அவருடைய ராஜ்யத்தின் மேலும் வாஞ்சையுள்ளவர்களாக* இருக்க வேண்டும்.
▪️ அவரிடமிருந்து நாம் தொடர்ந்து பெறும் நன்மைகளுக்காகவும் கிருபைகளுக்காகவும் நாம் *நன்றியுள்ள சாட்சிகளாக* இருக்க வேண்டும்.
🔹 *நம்முடைய தேவன் எப்பொழுதும் நமக்குத் துணை நிற்கிறார் என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *நாம் தேவனின் பக்கமாய் இருப்பவர்களுக்கும், தேவனை தங்கள் பக்கமாய் கொண்டிருப்பவர்களுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்.*
2️⃣ *தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து அவருடைய சித்தத்தைச் செய்பவர்கள் அனைவரும் பூரண சமாதானத்தையும் ஜெயத்தையும் பெறுவார்கள்.*
3️⃣ *ஒவ்வொரு விசுவாசிக்கும், தேவை நேரத்திலும் ஆபத்து நேரத்திலும் தேவன் உறுதுணையாக இருப்பார்.*
4️⃣ *கர்த்தராகிய இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள அன்பிற்கும் விசுவாசத்திற்கும் சாட்சியாயிருக்க அமாசாயின் வார்த்தைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[15/08, 04:56] +91 99431 72360: நாள்: 123
15.08.2023
செவ்வாய்கிழமை.
*1நாளாகமம்: 11-14*
💐💐💐💐💐💐💐
*தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடே கூட இருந்தார்*.
(1நாளா: 11:9)
▪️சேனைகளின் கர்த்தர் தாவீதோடு இருந்தார் என்றால் தாவீதும் சேனைகளின் கர்த்தரோடு இருந்தார் என்பதை நாம் அறிவோம்.
▪️தாவீதின் வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்கள், நிந்தைகள் அவமானங்கள் வந்த போதிலும் அவர் தேவனை மட்டும் பற்றிப் பிடித்து வாழ்ந்தார்.
*என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்*.
(சங்கீதம்:7:1)
*எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்கிறது; விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்*.
(சங்கீதம்: 57:1)
▪️ தாவீது பத்சேபாளிடம் பாவம் செய்த சம்பவத்திலும் கர்த்தரிடம் மிகவும் கதறி தன் பாவங்களை மன்னிக்க வேண்டினார்.
*தேவனே உமது கிருபையின் படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின் படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரிக்கும்*.
*என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரிக்கும்*.
(சங்கீதம்: 51:1,2)
▪️ பெற்ற மகன் அப்சலோமினால் வேதனைகள், நெருக்கங்கள் அனுபவித்த வேளைகளிலும் கர்த்தரிடம் தன் மனக்கவலைகளைச் சொல்லி ஆறுதல் அடைந்தார்.
*நாமும் கர்த்தரை நேசித்து, அவரைத் தேடி, குறைகள் குற்றங்களை மனப்பூர்வமாக அறிக்கையிட்டு, உண்மையாக நடந்தால் சேனைகளின் கர்த்தர் நம்மோடிருப்பார். நாமும் நாளுக்கு நாள் சிறப்படைவோம்*.
*ஆமென்*
✍️பவானி ஜீஜா தேவராஜ்,
நாகர்கோவில்
(குழு எண்: 2068)
[15/08, 04:56] +91 99431 72360: 1. நாளாகமம்.14.
🌺🌺🌺🌺🌺🌺
"எருசலேமில் தாவீதின் சிம்மாசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது."
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
பக்கத்து அரசர்கள் தாவீதைக் கௌரவிக்கின்றனர்.
அவருக்கு ஒரு அரண்மனை கட்ட சிறந்த கைவினைஞர்கள் மற்றும் மரங்கள் கொடுத்து உதவினர்
தீருவின் ராஜாவான ஈராமுடனான இந்த உறவு, தாவீது ஒரு போர்வீரனை விட மேலானவர் என்பதைக் காட்டுகிறது.
தாவீது தனது ஆட்சியை சிறப்பாக்கிய இரண்டு விஷயங்களை அறிந்திருந்தார்.
ஒவ்வொரு தெய்வீகத் தலைவரும் இந்த இரண்டு விஷயங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தேவன் தன்னை அழைத்து இஸ்ரவேலின்மேல் இராஜாவாக வைத்திருந்தார் என்பதை தாவீது அறிந்திருந்தார்.
கடவுள் தம் மக்களை ஆசீர்வதிக்க தன்னை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புகிறார் என்பதை தாவீது
அறிந்திருந்தார்.
தாவீது அதிக மனைவிகளை வைத்திருந்தார் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஆனால் அது ஆத்துமாவுக்கு ஒரு தோல்வியாக இருந்தது.
தாவீது வெற்றியை விட சோதனைகளை சிறப்பாக கையாண்டார்.
தாவீதின் வாழ்க்கையில் கடவுள் வல்லமையுடன் செயல்பட்டதால், பிசாசும் வேலை செய்து தாவீதுக்கு எதிராக எதிர்ப்பைக் கொண்டு வந்தான்.
தாவீது கடவுளைத் தேடி, வழிநடத்துதலுக்காக அவரைப் பார்த்தபோது அவர் ஆசீர்வதிக்கப்பட்டார்.
தாவீது கர்த்தரை சார்ந்திருப்பதை கர்த்தர் கனம்பண்ணி, அவருக்கு வெற்றி வாகையைக் கொடுத்தார்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196.
[15/08, 04:56] +91 99431 72360: *👑FROM SHEPHERD TO SOVEREIGN👑*
*👑ஆட்டிடையனிலிருந்து ஆட்சியாளர் வரை👑*
[DAY - 123]
1 நாளாகமம் 11-14
☄️1 நாளாகமம் அத்தியாயங்கள் 11-14: இந்தக் காலகட்டம் தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்து இஸ்ரவேலின் தலைசிறந்த மன்னர்களில் ஒருவராக உயர்ந்ததைக் காட்டுகிறது.
1️⃣ *தாவீதின் தாழ்மையான ஆரம்பம்*
🔹 உலகத்தின் பார்வையில், தாவீது ஒரு ராஜாவுக்கு வாய்ப்பில்லாத நபராகத் தோன்றினார்.
🔹இருப்பினும், தேவன் ஒரு ஆட்டிடைய சிறுவனின் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி அவனை இஸ்ரவேலின் வருங்கால ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தார்.
🔹சாமுவேல் தீர்க்கதரிசியினால் செய்யப்பட்ட தாவீதின் அபிஷேகம் அவரது அசாதாரண பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ஆனால் தேவன்மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் அவரை வேறுபடுத்தியது.
2️⃣ *கோலியாத்தை தோற்கடித்தல்*
🔸தாவீதின் வாழ்க்கையின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று, மாபெரும் பெலிஸ்திய வீரரான கோலியாத்தை அவர் எதிர்க்கொண்டது.
🔸 இஸ்ரவேலின் முழு இராணுவமும் பயத்தில் திகைத்து நிற்கையில், தாவீது, தேவன்மீது கொண்ட நம்பிக்கையால் தூண்டிவிடப்பட்டு, வலிமைமிக்க எதிரியை எதிர்கொள்ள தைரியமாக முன்னேறினார்.
🔸ஒரு கவண் மற்றும் ஐந்து கூழான் கற்களால் கோலியாத்தின் மீது அவர் பெற்ற வெற்றி, மக்களின் இதயங்களில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது.
3️⃣ *எருசலேமை தலைநகராக ஸ்தாபித்தல்*
🔺சவுலின் மரணத்திற்குப் பிறகு, தாவீதின் அரியணை ஏறுதல் பல சவால்களை எதிர்கொண்டது, ஆனால் அவர் தேவன்மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.
🔺ராஜாவாக அவர் செய்த முதல் செயல்களில் ஒன்று எருசலேமை இஸ்ரவேலின் தலைநகராக நிறுவியது.
🔺மூலோபாய வெற்றிகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மூலம், தாவீது இஸ்ரவேலின் எல்லையை விரிவுபடுத்தினார்.
4️⃣ *தேவனுடைய வழிகாட்டுதலைத் நாடுதல்*
▪️தாவீதின் ஆட்சிக்காலம் முழுவதும், எல்லா விஷயங்களிலும் கர்த்தருடைய வழிகாட்டுதலை அவர் தொடர்ந்து நாடினார்.
▪️போர்களுக்கு முன் தெய்வீக வழிநடத்துதலை நாடினாலும் சரி அல்லது முக்கிய முடிவுகளைப் பற்றி இறைவனிடம் விசாரிப்பதாக இருந்தாலும் சரி, தாவீது தேவனுடைய இறையாண்மையை ஒப்புக்கொண்ட ஒரு தலைவரை முன்மாதிரியாகக் காட்டினார்.
▪️அவரது மனத்தாழ்மையும், தேவனுடைய ஞானத்தின் மீதான நம்பிக்கையும், அவரை சரியான முடிவுகளை எடுக்கவும், தேசத்தை நேர்மையுடன் வழிநடத்தவும் அனுமதித்தது.
5️⃣ *உடன்படிக்கைப் பெட்டியின் மீட்டெடுப்பு*
▫️தாவீது பெலிஸ்தியர்களிடமிருந்து உடன்படிக்கைப் பெட்டியை மீட்டார்.
▫️பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவர தாவீதின் தீர்மானம், தேவன்மீது அவர் கொண்டிருந்த ஆழமான அன்பை வெளிப்படுத்தியது.
▫️பெரும் கொண்டாட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் பெட்டி நகருக்குள் கொண்டு வரப்பட்டபோது, தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழுப் பலத்தோடு நடனமாடினான்.
▫️அவரது கட்டுக்கடங்காத ஆராதனையும் உண்மையான அபிமானமும் தேவனுடனான அவரது ஆழமான தொடர்பையும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனை கனப்படுத்த வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்தியது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥1 நாளாகமம் 11-14 அதிகாரங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள தாவீதின் அரியணை ஏறுதல் மற்றும் அவனது வலிமையான செயல்கள், தேவனுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை வெளிப்படுத்துகின்றன.
💥 விருப்பமுள்ள பாத்திரத்தின் மூலம் செயல்படும் தேவனுடைய வல்லமைக்கு ஒரு சான்றாக, அவரது வாழ்க்கை, விளங்குகிறது.
*‼️தாவீதைப் போல நாமும் தேவனுடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற, ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்போம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[15/08, 04:56] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 123*
*15.08.2023*
*செவ்வாய் கிழமை*
*1 நாளாகமம் 11 - 14*
*பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா , அவர்களை என்கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது , கர்த்தர் : போ , அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 1 நாளா 14 : 10*
தாவீது சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக உயர்த்தப்பட்டதைக் கேள்விப்பட்ட பெலிஸ்தர்கள் , தாவீதோடு யுத்தம் செய்ய வந்தனர்.
தாவீது ராஜா தன்னுடைய சொந்த அனுபவத்தை , தன்னுடைய சொந்தபுத்தியைச் சார்நது யுத்தத்திற்குச் செல்லாமல் , கர்த்தரிடத்தில் ஆலோசனைக் கேட்கிறார்.
தாவீதுடைய இந்தச் செயல் விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளது ; நாம் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்முன் , ஜெபத்தில் தேவனிடத்தில் விசாரிக்கிறோமா ? அல்லது எனக்கு எல்லாம் தெரியும் ; எனக்கு முன் அனுபவம் இருக்கிறது என்று தனது சுய ஞானத்தை , அறிவைச் சார்ந்து கொண்டு அந்த செயலைச் செய்கிறோமா ? பிரியமானவர்களே.
தாவீது கர்த்தரிடத்தில் ஆலோசனைக்கேட்டபடியினால் கர்த்தர் : நீ போ , பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்து , அதன்படியே அதை நிறைவேற்றவும் செய்கிறார்.
பெலிஸ்தர் எப்படி முறிந்தோடினார்கள் என்றால் , அணை உடைந்தால் தண்ணீர் எவ்வளவு வேகமாக ஓடுமோ , அப்படியே கர்த்தர் அவர்களை உடைந்தோடப் பண்ணினார் என்று தாவீது கூறுவதைப் பார்க்கிறோம். (1 நாளா 14 :11)
இப்படித்தான் பிரியமானவர்களே , நமது ஆண்டவர் ஆலோசனகத் தருபவராக மட்டுமல்லாமல் , அதன்படி வழிநடத்துகிறவராகவும் இருக்கிறார் ; மேலும் அவர் வாக்குத்தத்தத்தின் தேவன் ; கொடுத்த வாக்குறுதியை , நிறைவேற்றுகிறவராகவும் இருக்கிறார். *நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் , உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.ஆதி 28 : 15*
எனவே நாமும் தாவீதைப் போல , ஒவ்வொரு காரியத்திலும் , சிறிதோ பெரிதோ கர்த்தரிடம் விசாரித்துச் செய்வோம் ; அதன்மூலம் வெற்றியைச் சுதந்தரித்துக் கொள்வோம்.
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[15/08, 04:56] +91 99431 72360: *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ நாம் *1 நாளாகமம் 13** இல் இருக்கிறோம்
*THE ARK OF GOD*
*தேவனுடைய பெட்டி*
📝 *1 நாளாகமம் 13 : 3* இல் தாவீது இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி, *"நம்முடைய தேவனுடைய பெட்டியை நம்மிடம் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டு வருவோமாக.."* என்றார்.
💫 பெட்டி என்பது வனாந்தரத்திலும் முந்தைய யுத்தங்களிலும் ஜனங்களை வழிநடத்திய தேவனுடைய பிரசன்னத்தின் அடையாளமாக இருந்தது ( *யாத்திராகமம் 33:14-15; எண் 10:33; யோசு 6:2-5*)
📝 பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலருடன் தேசத்தின் தொடர்பாக தொடர்ந்து போரிட்டு வந்தனர், மேலும் இஸ்ரவேலின் சில பகுதிகளை பல ஆண்டுகளாக ஆண்டனர் (நியாதி 3;13:1)
📍 *1சாமு 4,5,6* இல், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுக்கு எதிராகப் யுத்தத்திற்கு புறப்பட்டுச் சென்று தோற்கடிக்கப்பட்டனர் என்று படித்திருக்கிறோம்; *தேவனுடைய பெட்டி* கைப்பற்றப்பட்டு தாகோன் கோவிலில் வைக்கப்பட்டது. கதையைச் சுருக்கமாகச் சொல்வதானால், பெலிஸ்தியர்கள் வியப்படைந்தனர், ஏனெனில் அவர்கள் தேவனுடைய பெட்டியின் முன் தங்கள் தேவனாகிய தாகோன் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்ததை கண்டார்கள். பெலிஸ்தியர்களின் கடவுளை முறியடித்த கர்த்தர் இப்போது கடுமையான மூலவியாதியினால் மக்களை வாதித்தார். ( *..பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது ..* 1சாமு 5:11)
💫 இஸ்ரவேலர்கள் தங்கள் தேவன் தோற்கடிக்கப்பட்டு பிடிபட்டார் என்று நினைத்தார்கள், ஆனால் *கர்த்தர் தனது ஒப்பற்ற ஆற்றலைக் காட்ட அந்த தோல்வியைப் பயன்படுத்திக் கொண்டார்*.
📝 ஏழு மாதங்களுக்குப் பிறகு *பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைத் திருப்பிக் கொடுத்தனர்.* பெட்டியைக் கண்டு இஸ்ரவேலர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் கொண்டாட்டம் விரைவில் துக்கமாக மாறுகிறது. கர்த்தர் *ஐம்பதினாயிரத்து எழுபது பேரைக் கொன்றார், ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய பெட்டியைப் பார்த்தார்கள்* (1சாமு 6:19)
🗣️ பெத்ஷிமேஷிலிருந்து வரும் செய்தி *"கர்த்தர் பரிசுத்தர்"*.
💫 தாவீது பயந்தார், எனவே கீரியாத்யாரீமில் உள்ள அபினதாபின் வீட்டில் பெட்டி வைக்கப்பட்டது.
1️⃣ *தாவீதின் முதல் முயற்சி* :
பெட்டியைக் கொண்டு வருவதற்கு தாவீது ஒரு பெரிய குழுவை வழிநடத்தினார், ஆனால் அது ஒரு மோசமான தொடக்கமாக இருந்தது. தாவீதும் அவருடைய ஜனங்களும் கர்த்தர் கொடுத்த அறிவுரைகளைப் பின்பற்றவில்லை (யாத். 25:13-15; எண் 4:5-6). *அவருடைய பயயபக்தியற்ற செயலின் காரணமாக* (2சாமு 6:7; 1 நாளா 13:9-10) ஊசாவை கர்த்தர் அடித்தார் என்று பதிவுகள் கூறுகின்றன.
🗣️ இந்த சம்பவத்திலிருந்து வரும் செய்தி என்னவென்றால், *கர்த்தருக்குரியதை தவறாகக் கையாளாதபடிக்கு நாம் பயபக்தியுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்*.
*📌கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமுண்டது* - அவனது துணிவின்
(பயபக்தியற்ற) செயல் (2சாமு 6:7)
*அனனியா மற்றும் சப்பீராள்* - தேவனுடைய பணத்தை தவறாக நிர்வகித்தார்கள். (அப்போஸ்தலர் 5:1-11)
*சீமோன்* - தேவனுடைய கிரியையை தவறாக விளக்கினான் (அப்போஸ்தலர் 8:9-24)
2️⃣ *தாவீதின் இரண்டாவது முயற்சி* :
இது நியாயப்பிரமாணத்தில் உள்ள பரிந்துரையின்படி கண்டிப்பாக மேற்கொள்ளப்பட்டது ( *1 நாளா 15: 14-15*)
📌 ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களை சுத்தம் பண்ணிக்கொண்டார்கள் .
📌 தாவீது இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் லேவியரின் பிரபுக்களின் பொறுப்பின் கீழ் ஏற்பாடு செய்கிறார்.
📌 அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
📌 தாவீது ஒரு ஆசாரிய சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தார்.
🙋♂️ தாவீது ஒரு ராஜாவாக மக்களை மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் வழிநடத்துகிறார், மேலும் பெட்டியை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வந்தார்.
🙋♀️ சவுலின் மகளான *மீகாள்*, தாவீது அடிமைப் பெண்கள் முன் குதித்து நடனமாடுவதைப் பார்த்து, அவரை அவமதித்தாள்.
🙋♂️ *தாவீது* பதிலளித்தார், "தேவனை துதிப்பதற்கு, அவர் பணிவுடன் மற்றும் கண்ணியமற்ற முறையில் செயல்பட வேண்டும் என்றால், அப்படியே ஆகட்டும். மனிதனின் சரியான கருத்துகளால் அவர் தடுக்கப்பட மாட்டார்".
*தாவீது தன் இருதயத்தில் அவரை ஆராதித்து, தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்* (2சாமு 6:14)
🗣️ இந்தச் சம்பவத்திலிருந்து வரும் செய்தி, *ஆராதிப்பவரின் மனப்பான்மை* :
🔖 ஆராதனை முறைகள் வித்தியாசமாக இருப்பதால் சக சகோதரர்களை ஒருபோதும் நியாயந்தீர்க்காதீர்கள்.
🔖 நமது ஆராதனை முறைகள் மற்றவர்களை விட உயர்ந்தது என்று ஒருபோதும் கருத வேண்டாம்.
🔖 *தேவனை உண்மையோடும் ஆவியோடும் தொழுது கொள்ள வேண்டும்* .
💕 பிரியமான திருச்சபையே, ஒரு பாரசீக பழமொழி கூறுகிறது, *"அதிக கனிகளைத் தரும் கிளை நன்றியுடன் தரையை நோக்கி வளைகிறது"*. கிளை அதை வளர்த்த மண்ணுக்கு நன்றியை வெளிப்படுத்துவது போல, தாவீது தனது ஆற்றல்களை, பலனளித்த தேவனை ஆராதிப்பதற்கு தனது முழுபலத்தையும் கொடுக்கிறார்.
தேவனுக்கே மகிமை 🙏
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[15/08, 11:53] +91 99431 72360: 15.08.2023
*🥥சிப்பிக்குள் முத்து 🥥*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1நாளா : 11 - 14*
*🪢முத்துச்சிதறல் : 123*
🎈🎈🎈🎈
*🍃அப்பொழுது அதிபதிகளுக்கு தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால்..... (12 : 18)*
🎈🎈🎈🎈
🍃🍃🍃
*தாவீதின் அரசாட்சியை சமஸ்த இஸ்ரவேலுக்குமாக ஏற்படுத்தும் பணி இறைவனால் எப்படியெல்லாம் நிகழ்த்தப்பட்டது என்பதை தான் 1நாளா : 11 - 14 அதிகாரங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.* இஸ்ரவேலரில் ஏற்படுத்தப்பட்டிருந்த பெரும்பான்மையான தலைவர்கள் எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்து, *"நாங்கள் உம்முடையை எலும்பும், உம்முடைய மாம்சமுமானவர்கள் ",*
அதாவது நாம் அனைவரும் ஒரே தகப்பன் யாக்கோபின் புதல்வர்கள், என்று சொல்லி தாவீதுக்கு அருளப்பட்டிருந்த தேவ வாக்கை நினைவு கூர்ந்து நின்றனர்.
*(11:1,2)*
அப்பொழுது தாவீது தன்னிடம் கர்த்தரால்.... அவரது உந்துதலால் வழிநடத்தப்பட்டு வந்து சேருகிற யாவரோடும் உடன்படிக்கை செய்து கொண்ட பின் அவர்கள் யாவரும் சேர்ந்து தாவீதை *"இஸ்ரவேலின் மேல்" இராஜாவாக அபிஷேகம் செய்தனர்.*
பின்பு தாவீது போய் எபூசாகிய எருசலேமை யுத்தம் செய்து பிடித்து அதை *"தாவீதின் நகரம்"* என்று அழைப்பிக்க ஏதுவுண்டாகும்படி அதில் வாசம் செய்தார்.
*அது சீயோன் கோட்டை என்றும் அழைக்கப்பட்டது.* (11:1-9)
அதை தாவீது யோவாபை கொண்டு பிடித்து, தன் ஆட்சியின் கீழாக்கி கொண்டார்.
இதை பிடிக்க விடாதபடி பட்டிணவாசிகளான கானானியர் அதை பல விதத்தில் காத்து வந்தனர். கோட்டையை பிடிக்கும் முயற்சியில்
*🎀கர்த்தர் தாவீதோடே இருந்தார்.*
அது பிற்காலத்தில் *தாவீதின் நகரம் என்றழைக்கபட்டது.*
*அவர்*(தாவீதரசன்) *நாளுக்கு நாள் விருத்தி அடைந்தார்.* அதாவது....
*நாளுக்கு நாள் பலர், பல தரப்பட்டோர் தாவீதோடே வந்து கூடி கொண்டே , சேர்ந்து கொண்டே இருந்ததை இப்பதம் விவரிக்கிறது.* அவரோடு சேர்ந்து நின்று, தேவனுக்காக செயலாற்றும்படி தாவீதின் பட்சத்தில் நின்ற பராக்கிரமசாலிகளை குறித்ததுமான விவரணங்களை நாம் அடுத்து காண்கிறோம்.
*இந்த பராக்கிரமசாலிகள் அத்தனை பேரும் ஏற்கனவே தாவீது சவுலுக்கு தப்பி ஓடி ஒளிந்த ஆராம்ப காலகட்டத்தில் இருந்தே அவரோடு நின்று "வலது கரங்களாக, தோழமை வீரர்களாக" இருந்தோர்.*
இதில் ஏத்தியனாகிய உரியா ஏற்கனவே, தாவீதால் சூழ்ச்சியோடு மடுவிக்கப்பட்டு, அவர் பூமியில் இல்லாமல் போன பிற்பாடும், தாவீதுக்காக, இறை நாட்டிற்காக அந்நியனாக இருந்தும் உத்தமமான சேவை புரிந்த அந்த
*"உத்தம சேனாபதி உரியா என்னும் உத்தம வீரனின் பெயரை"*
கர்த்தர் மறைக்காமல் குறிப்பிடும்படி எழுத்தாளரை நடத்தியது ஆச்சர்யங்களில் ஒன்று.
ஆம், உத்தம வீரர்களின் பெயர்கள் இறை சந்நிதியில் என்றென்றும் நிலைபெற்று நிற்கிறது என்பதும், பூமியில் அவர்கள் பெயர்கள் சந்ததி சந்ததியாக குறிப்பிடப்பட்டுக்கொண்டு வருவதையும் இது காண்பிக்கிறது.
🍒🌿🍒🌿🍒🌿
*✍️சவுலுக்கு பயந்து தாவீது வனாந்திரத்தில் ஒளிந்துக்கொண்டு இருந்த நாட்களில் சவுலின் கோத்திரத்தார் (பென்யமீனர்கள்) சிலரும் கூட அவரோடு வந்து இணைந்து இருந்தனராம்.* (12:1,2)
முழு இஸ்ரவேலரும் தாவீதின் பக்கமாக ஏகமாக வந்து சேர்வதற்கு முன்னமே, கடினமான காலகட்டத்தில் கூட பலர் வந்து அவரோடு எப்படியெல்லாம் இணைந்தனர் என்கிறதை தான் *1நாளா - 12ம் அதிகாரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.*
*🌻"சவுல் செய்வது சரியல்ல" என்பதை இவர்கள் உணர்ந்துக்கொண்டிருந்தோர்.*
இந்த புரிந்துக்கொள்ளுதல் பரிசுத்த ஆவியானவரால் தான் அவர்களுக்கு உண்டாகி இருந்தது. ஆகையால்
🌻துணிவோடு சவுலை/ அவரது நடக்கையை ஆதரியாமல்,
🌻தாவீதோடு வனாந்திரங்களில் வசிக்கவும்,
🌻பாடுகளை சகிக்கவும்,
🌻கர்த்தரின் நாட்டுக்காக யுத்தம் செய்யவும்....
தங்களை ஒப்புவித்து வந்தோர் இவர்கள்.
*சுகமான வாழ்வினை இவர்கள் உதறி தள்ளும்படி ஓர் நிலை இவர்களுக்குள்ளாகவே துளிர் விட்டமையால் தான் இப்படி வந்து சேர்ந்து இருந்தனர்.*
இங்கு இவர்கள் சவுலின் மாம்சீக பிரகாரமான உறவினர், ஆகிலும் மாம்ச பிரகாரமாக நடப்போராக அல்லாமல் , தேவனின் சித்தமும் திட்டமும் குறித்த தெளிவுடையொராகி நின்ற கூட்டத்தார்கள் இவர்கள்.
சொல்லப்போனால் *"சொந்தக்காரனே, சொந்தக்காரனுக்கு எதிர் திசையில் பயணித்த பயணம் இது".*
🍇🫛🍇🫛🍇🫛
*🔥இந்த சிக்லாக் என்னும் ஸ்தலத்திலும்*
(12:1-22) *எபிரோனிலும்* (12:23-40)
தாவீதின் ஆளுகை எவ்விதம் நிகழ்ந்து கொண்டு இருந்தது என்பதும், ஏற்கனவே அவருக்காக வைராக்கியம் காண்பித்தோரின் பட்டியலும் பதிவிடப்பட்டுள்ளது.
அப்படியென்றால் *1சாமு -27ம் அதிகாரத்தில் இருந்து 2சாமு - 5ம் அதிகாரம் வரையில் நடைபெற்றதாக சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு* முன்பதாகவே நடைபெற்றதைத்தான் இங்கு....
*1 நாளா - 12 : 1 - 40 வரையில்* உள்ளவைகள் விவரிக்கின்றன.
*✒️தாவீதோடுக்கூட....*
*✅️பென்யமீன் புத்திரர்* (12:2,3,16,18),
*✅️காத் புத்திரர்* (12:8-15)
*✅️யூதா புத்திரர்* (12:16-18),
*✅️மனாசே புத்திரர்*
(12:19-22) போன்றோர்....
தாவீது யோர்தானின் இரு பக்கங்களையும் கைப்பற்ற உதவியாக செயலாற்றியவர்கள்.
*💊சிக்லாக் ஏதோமின் எல்லை பகுதி.*
ஆனால் பெலிஸ்தியர் அதை ஆண்டு வந்தனர். பின்பு தாவீது அதை ஆளுகை செய்ய அவரை அவர்கள் (பெலிஸதியர்கள்) அங்கு இராஜனாக நியமித்து இருந்தனர். *(1சாமு - 27:6,7)* இவையெல்லாம் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் தாவீது அரசாட்சி செய்யும் முன் நிகழ்ந்த நிகழ்வுகள்.
*(12:38).*
📌🪶📌🪶📌🪶
🔰தன்னிடம் பலர் வந்து சேர்ந்துக்கொண்டு இருந்த பொழுது சிலர் மீது தாவீதுக்கே ஒரு
*"சந்தேக பார்வை"* உள்ளத்தில் தோன்றியது.
அது யார் என்றால் சவுலின் சொந்தக்காரர்கள், மற்றும் தனது சொந்தக்காரர்கள் மீது தான்.
*(1நாளா - 12:16)* இவர்கள் பென்யமின் புத்திரர், மற்றும் யூதா புத்திரர் ஆவர்கள். உடனே தாவீது தனது *"மன எண்ண ஓட்டங்களை அவர்களோடு வெளிப்படையாக கலந்துரையாடினார்".*
(1நாளா - 12 : 17)
அப்பொழுது *தாவீதுக்கு மறுமொழி கொடுக்க இந்த யூதா, பென்யமின் புத்திரர் வாய் திறப்பதற்க்கு முன்னமே,*
*"கர்த்தரின் ஆவி",*
தாவீதின் அதிபதிகளுக்கு தலைவனான... *ஆமாசாயின் மேல் இறங்கினார்.*
ஆவியானவர் இறங்கி,
*"அவர்கள் சார்பான பதிலை, அவர்கள் பேசுவது போல, மறுமொழி கொடுப்பதை போல, அவர்களது உள்ளத்தின் நிலையை, இவர் மூலம்" பேசினார்.* ஆம், கர்த்தருடைய ஆவியானவர் அமாசாயை முழுமையாக ஆட்கொண்டார். *அதை தாவீது கண்டுக்கொள்ளும்படி கர்த்தர் உதவினார்.* ஆகையால் தாவீது அவர்களை சேர்த்துக்கொண்டு, அவர்களை தனது இராணுவ படைக்கு தலைவர்களாக ஆக்கிக்கொண்டார்.
🍀கர்த்தரின் ஆவியானவர் இங்கு தாவீதோடு இவ்வகையில் பேசினார்.
*🍅தாவீது ஒரு தேவ மனுஷனாக இருந்தாலும், அவருக்கும் சந்தேக பார்வை சிலர் மேல் ஏற்பட்டது.*
ஆனால் சரியான நேரத்தில் கர்த்தர் இடைப்பட்டு, தாவீதின் சந்தேகம் தீரும்படி மனுஷர்கள் மூலம் பேசி அவருக்கு உதவினார்.
*"தூய ஆவியானவரால் யாதோருவர் நிறையப்பட்டு பேசுவதை தலைவர்கள் கண்டுக்கொள்ளும்படி அவர்கள் இருதயம் தெளிவாக இருக்க வேண்டும்".* தலைவர்களுக்குள் இருக்கும் ஆவியானவரின் அசைவாட்டமே, மற்றொருக்கும் இருக்கும் பட்சத்தில் மாத்திரமே, பணிகள் பிரித்து வழங்கப்படணுமே தவிர, வந்தோர் போனோருக்கெல்லாம் அல்லவே என்பதை, இப்பகுதி எமக்கு அறிவுறுத்துகிறபடியால், தூய ஆவியானவரின் அசைவாட்டமின்றி *"தேவ சேனையாக"* யுத்தத்தில் முன் நிற்க எவராலும் இயலவே இயலாது.
*🥏நாம் உண்மையுள்ளோர் தான் என்பதை ஆவியானவர் அந்த தலைவருக்கு, தேவ ஆவியால் மாத்திரம் ஆட்கொள்ளப்பட்டு பேசும் வேறொருவரை ஆண்டவர் அடையாளங்காட்டும்படி விண்ணப்பிப்போம்.*
*🍧அப்பொழுதுதான் யுத்தம் கர்த்தருடையதாகி, சத்துருக்கள் யாவரும் முறியடிக்கப்படுவார்கள்".*
அதுதான் தாவீதின் வாழ்வில் நிகழ்ந்து, அவர் மகா பெரிய சக்ரவர்த்தியாக மாறினார்.
*🛍️மேசியாவின் அரசாட்சிக்கு இவர் ஆட்சி தான் முன்னோடியாக திகழ்கிறது என்பதை மறவாதிருப்போம்.*
*Sis. Martha Lazar✍️*
NJC, KodaiRoad.
Thanks for using my website. Post your comments on this