*1 CHRONICLES : 15 - 16*
(1நாளாகமம் : 15-16)
💐💐💐💐💐💐
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி:
*நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாள முதலிய கீத வாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி சந்தோஷம் உண்டாகப் பாடும் படி நிறுத்த வேண்டும்* என்று சொன்னான் என்று 1நாளா: 15:16 ல் வாசிக்கிறோம்.
★ பாடல்களை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாடி நாம் கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.
★கடமைக்காக இசைக்கருவிகளை இசைக்காமல் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் ஆராதிப்பதைக் கர்த்தர் விரும்புகிறார்.
(உபாகமம்: 6:5)
*மகிழ்ச்சியோடு* வச: 25
*கெம்பீரத்தோடு* வச: 28
*ஆடிப்பாடி* வச: 29
கர்த்தருடைய பெட்டியைக்கொண்டு வந்தார்கள்.
▪️ உண்மையான பக்தியில்லாமல், சுயபெருமைக்காக, தன்னை பிரகடனப்படுத்த வேண்டி பாடும் பாடல்கள் கர்த்தருக்கு பிரியமல்ல. உன் பாட்டுக்களின் இரைச்சலை என்னை விட்டு அகற்று என்று கர்த்தர் கூறிவிடுவார்.
★ வாழ்க்கையில் மகிழ்ச்சியான வேளைகளில் உற்சாகமாக நாம் பாடல்கள் பாடுவது உண்டு. ஆனால் வாழ்வின் வேதனை வேளைகளில் பாடல்களின் பொருளுணர்ந்து பாடும் போது கிருபை பெருகும்.
★ பாடல்கள் பல வேளைகளில் ஜெப விண்ணப்பங்களாக அமைகிறது. நம் இருதயத்தில் விசாரங்கள் வேதனைகள் பெருகும் போது நாம் கண்ணீர் விட்டு பாடல்கள் பாடும் போது, விடுதலை கிடைப்பதை நாம் பலவேளைகளிலும் உணர்ந்திருக்கலாம்.
★ பாடல்கள் மூலம் இன்பத்திலும் துன்பத்திலும் தேவனோடு நெருங்கி வாழும் வாழ்க்கை வாழ்வோமாக.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil
(Admin: Group No. 2068)
[16/08, 07:39] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣4️⃣
1 Chronicles 15,16
*WHAT A GOD WE SERVE* ❗️
*God will not allow anyone to touch u* ‼️
💥 He permitted no man to do them wrong; yes, He rebuked kings for their sakes, Saying, “ Do not touch My anointed ones, And do My prophets no harm.” (1Chron 16:21,22
💥 Lord made a hedge around him, around his household, and around all that he has on every side (Job 1:10)
💥 Whoever touch the inheritance which I have caused My people to inherit—I will pluck them out (Jer 12:14)
🙏🙏 *Whoever touches you touches the apple of His eye* (Zach 2:8)
Usha
[16/08, 07:39] (W) Arun Selva Kumar: 🌈 *David had to learn from experience. Contrary to popular belief, experience is not the best teacher; evaluated experience is the best teacher.*
⛹️♂️ *Application* : I Chr.15:2- *David’s previous failure in his attempt to move the ark was not meant to frustrate him, but rather to motivate him to search the Scriptures. This verse tells us David did just that.* Evidently, he spent three months studying and finally he found the passage that said the Levites were the ones who were to carry the ark. Have we failed recently in some area? God is not trying to frustrate us, but to motivate us to spend time in His Word as we seek Him more diligently. *A second reason is that David had to learn from experience. Contrary to popular belief, experience is not the best teacher; evaluated experience is the best teacher.* The old cliché is accurate: hindsight is better than foresight.
📖I Chr.16:4- We need to get so involved in the Word of God that we become enthusiastic. *Anyone who is enthusiastic and excited about a football game is called a fan, but a person who feels that way about religion is called a fanatic! Well, we don’t need fanatics, but we do need believers who get involved in the Word of God to the extent that they feel like thanking and praising the Lord God!*
⚠️I Chr.16:18-22- God had His protecting hand on the patriarchs as they moved about. This has primary reference, no doubt, to Abraham, Isaac, and Jacob, but it has application for us as well. *We need to be very careful about laying a hand or a tongue on God’s anointed. Before we criticize our pastor, let us ask ourself if we are hurting or helping the work of God.*
Jaya Pradeep-Kodaikanal.
[16/08, 07:39] (W) Arun Selva Kumar: *நினைவு கூருங்கள்*
~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 16: 13 - 16.
இங்கு தாவீது எதையெல்லாம் நாம் நினைவு கூர வேண்டும் என சங்கீதமாக பாடுகிறார். அவற்றை நாம் தியானிப்போம்.
1. *அவர் செய்த அதிசயங்களை நினைவுகூருங்கள்.*
2. *அவருடைய அற்புதங்களை நினைவுகூருங்கள்.*
3. *அவருடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளை நினைவு கூருங்கள்.*
ஆம், *கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதே* என கர்த்தர் நமக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் அல்லவா? அப்படியானால், *நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த அதிசயங்களையும், அற்புதங்களையும் நாம் நினைவு கூர வேண்டும்*
4. *அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்* அவருடைய நியாயதீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். அப்படியானால் நம் தேவன் எவ்வளவு பெரியவர், சர்வ வல்லவர் என்பதை நினைத்து அவரை மகிமைப்படுத்துவோம்.
5. *ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் இட்ட வாக்கை நினைவு கூருங்கள்*
ஆம், அவர் வாக்கு தத்தங்கள் எவ்வளவு மேன்மையானவை, மாறாதவை. இவற்றை நாம் நினைவுகூர வேண்டும்.
6.*ஆபிரகாமுக்கு அவர் பண்ணின உடன்படிக்கையை நினைவு கூருங்கள்.*
ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையையை என்றென்றைக்கும் நினைவு கூருங்கள்.
ஆம், இது யாக்கோபுக்கு பிரமாணம். இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கை. கானான் தேசம் நமக்கு சுதந்திர பாகம். ஆம், இந்த ஆசீர்வாதங்களை நாம் நினைக்க வேண்டும். இதற்காக க ர்த்தரை துதிக்க வேண்டும். மகிமைப்படுத்த வேண்டும். ஆம், நம்மோடிருந்து, ஆசீர்வதிக்கிற நம் தேவனை எப்போதும் நாம் நினைக்க வேண்டும். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[16/08, 07:39] (W) Arun Selva Kumar: *16.08.2023*
🤍 *அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்* 🤍
⚡ *“பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்.”* (1 நாளாகமம் 16:23-24).
🔸 இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின தாவீது, உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது *கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி ஒரு விசேஷ சங்கீதத்தை* எழுதினான் (1 நாளாகமம் 16:7-36). இந்த சங்கீதத்தில், மேலேயுள்ள வார்த்தைகளை நாம் காணலாம்.
🔸 சங்கீதக்காரன் கூறுகிறான்: *“கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;* உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்" (சங்கீதம் 89:1). அவருடைய *நிபந்தனையற்ற அன்பு,* நம் வாழ்வில் அனுபவித்த அவருடைய தயவையும் கிருபையையும் குறித்துப் பாடுவதற்கு ஒரு காரணமாகிறது.
🔸 இரட்சிப்பின் சுவிசேஷம் இஸ்ரவேலரை விட நமக்கு முக்கியமானது. யுத்தத்தில் வெற்றி பெறுவது அல்லது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவது கூட இஸ்ரவேலரால் இரட்சிப்பாக கருதப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை, இரட்சிப்பு என்பது ஆழமானது: *ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றி பெறுவது, மற்றும் பாவங்களிலிருந்து மன்னிப்பும் விடுதலையும் பெறுவது.* நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும்கூட, *தேவன் நம்மீது வைத்திருக்கும் அதீத அன்பின் காரணமாக நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.* இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவன் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
🔸 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைக் கிறிஸ்துவை பூமிக்குக் கொண்டுவருவதற்காகத் தேவன் தேர்ந்தெடுத்தார். தாவீதுக்கு அவனுடைய சந்ததி என்றென்றும் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்ற வாக்குறுதியை அருளினார். இது கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. நமது *இரட்சிப்பு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே* சாத்தியமாகும். கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மேன்மை என்னவென்றால், இரட்சிப்பின் பாடல் நம் வாழ்நாள் முழுவதும் நீடித்துக்கொண்டே இருக்கும். *“நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்."* (சங்கீதம் 104:33).
🔸 தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாருக்கும் (தேவனுடைய மகத்துவத்தையும், மற்ற தேவர்களை விட அவர் மேன்மையானவர்* என்பதையும் அறிவித்து, அவருடைய *மகிமையை சகல ஜனங்களுக்குள்ளும்* விவரித்துச் சொல்ல வேண்டும். நமது கர்த்தராகிய *இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பு* அளிக்கப்படுகிறது என்பதே பூமியிலுள்ள *சகல ஜனங்களுக்கும் சுவிசேஷமாகும்.*
🔸 இயேசு பிறந்தபோது *தேவதூதர்களால் நற்செய்தி* முதலில் அறிவிக்கப்பட்டது. லூக்கா பதிவு செய்கிறான்: “தேவதூதன் அவர்களை நோக்கி: *பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."* (லூக்கா 2:10-11).
🔸 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரமேறிச் சென்றபிறகு, *அவருடைய சீஷர்கள்* சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். "சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, *சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்."* (அப்போஸ்தலர் 5:42).
🔸 உலகத்தின் முடிவுக்கு முன், பூலோகமெங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும். இயேசுவின் வார்த்தைகள்: *“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”* (மத்தேயு 24:14). இப்போது உலகித்தின் பல பகுதிகளில் சுவிசேஷம் சென்றடைந்துள்ளது. இன்னும் *சுவிசேஷம் சென்றடையாத இடங்களுக்கு சுவிசேஷம் சென்றடையச் செய்வது* ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும்.
🔹 *நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் அருளப்படும் ரட்சிப்பைச் சுவிசேஷமாய் எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு, நம் வாழ்வில் அனுபவித்த அவருடைய தயவையும் கிருபையையும் குறித்துப் பாடவைக்கிறது.*
2️⃣ *கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மேன்மை என்னவென்றால், இரட்சிப்பின் பாடல் நம் வாழ்நாள் முழுவதும் நீடித்துக்கொண்டே இருக்கும்.*
3️⃣ *நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்புண்டு என்பதே பூமியிலுள்ள சகல ஜனங்களுக்கும் சுவிசேஷமாகும்.*
4️⃣ *சுவிசேஷம் சென்றடையாத இடங்களுக்கு சுவிசேஷம் சென்றடையச் செய்வது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[16/08, 07:39] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *சரியான முறை* 🍂
கர்த்தருடைய பெட்டி ஓபேத்-ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. தாவீது இந்த நேரத்தை காரியங்களை தயார் செய்ய பயன்படுத்தினான். *முதல் முறை ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை அறிய முற்பட்டான்.* பிறகு தன் முந்தைய தவறை சரி செய்து கொண்டான். தேவன் கொடுத்த விதிமுறையின்படி பேழையை எருசலேமுக்கு கொண்டு வர முயன்றான்.
📖 *முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான் (1 நாளா 15:13).*
இந்த விஷயத்தில் தாவீதிடம் இருந்து இரண்டு அருமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். முதலில், *தன் தோல்விக்கான காரணத்தை* ஆராய்ந்தான். மேலும் தோல்வியைக் கண்டு மனம் தளரவில்லை. இரண்டாவதாக, *தன் தவறைத் திருத்திக்கொண்டு, கர்த்தருடைய எதிர்பார்ப்பின்படி திரும்பவும் முயற்சி செய்தான்.*
நாம் அனைவரும் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கிறோம். ஆனால் தோல்வி என்பது முடிவல்ல. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிக்கவும், பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். எளிதில் விட்டுவிடாதீர்கள். மேலும் மிக முக்கியமாக, *கர்த்தருடைய வேலை அவர் எதிர்பார்க்கும் வழியில் செய்யப்பட வேண்டும்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 16, 2023_
[16/08, 07:39] (W) Arun Selva Kumar: *🥁🕺THE JOY OF THE LORD🥁💃*
[DAY - 124] 1 Chronicles Ch. 15 & 16
☄️After years of neglect and separation, King David sought to bring the Ark back to its rightful place in Jerusalem.
1️⃣ *THE DESIRE TO RESTORE THE ARK* (1 Chronicles 15:1-3):
🔹David desired to restore the Ark to Jerusalem, acknowledging the need for spiritual revival and the centrality of God in the life of the nation.
🔹David's heart burned with a passion to bring the Ark back, and he prepared himself for the task ahead.
2️⃣ *THE PROPER PREPARATIONS* (1 Chronicles 15:4-15):
🔸David gathered the Levites, the priests, and the leaders of Israel to carry the Ark in God's prescribed method.
🔸David emphasized the importance of sanctification and holiness, instructing the priests to consecrate themselves and purify the instruments of worship.
3️⃣ *THE JOYOUS PROCESSION* (1 Chronicles 15:16-29):
▫️The Levites carried the Ark on their shoulders, accompanied by skilled musicians and singers.
▫️The atmosphere was filled with jubilant praise and worship, as David himself danced before the Lord with all his might.
▫️This joyful celebration demonstrated the nation's gratitude and reverence for God's presence returning to their midst.
4️⃣ * THE OFFERING OF PRAISE* (1 Chronicles 16:1-7):
🔺David appointed certain Levites to minister before the Ark, offering sacrifices and burnt offerings to God.
🔺He designated individuals to lead in continuous praise and thanksgiving, ensuring that worship would be central to the nation's life.
🔺The people responded with heartfelt devotion, joining their voices in songs of praise and adoration.
5️⃣ *THE PSALM OF THANKSGIVING* (1 Chronicles 16:8-36):
▪️David composed a psalm of thanksgiving, which is recorded in these verses.
▪️This psalm recounts God's faithfulness, His mighty acts, and His covenant promises to Israel.
▪️It serves as a reminder of the nation's history and God's steadfast love.
▪️The psalm concludes with a call to worship, urging all creation to join in the praise of the Lord.
♥️ *LIFE LESSONS*
💥We should be inspired by David's example to pursue God with passion, to prepare ourselves diligently, and to offer Him wholehearted praise and thanksgiving.
💥The restoration of the Ark serves as a reminder of the importance of God's presence in our lives and the transformation it brings.
*‼️LET US DILIGENTLY SEEK THE RESTORATION OF GOD’S PRESENCE IN OUR HEARTS‼️*
[16/08, 07:40] (W) Arun Selva Kumar: 💢DAY 124. 1 CHRONICLES 15-16.
♦️CHAP15:1-15.DAVID'S DIRECTION FOR BRINGING THE ARK.
♦️(vs1)David prepared a tabernacle for the ark of God in Jerusalem.
♦️(vs2)David was very particular about the Levites to carry the ark,no one else should do that. The making of new cart to carry the ark, the death of Uzzah ,all these must have taught them a lesson.
♦️(vs3)David gathered all Israel together at Jerusalem to bring the ark of God to the place that David had built for it.
♦️(vs4-11)862 Priests and Levites were consecrated and were asked to sanctify themselves and were set apart for holy use
♦️(vs13)God has always required that proper instruction must be followed in seeking Him,worshipping Him,Praying to Him andcarrying out every part of His Programme.
We don't have any right to do anything contrary to His word.
♦️(vs15) It took the death of a man in order to bring obedience in the matter of carrying the ark upon their shoulders. Unless the Levites are sanctified ceremonially,they could have been destroyed.
💥Are we sanctified to do God's work?
Are we particular about doing things for God according to the direction given in His word?
Lydia Benjamin. Coimbatore.
[16/08, 07:40] (W) Arun Selva Kumar: Valsa Tharien
Ch 15, 16
David made all arrangements in detail.... for the ark to be brought to Jerusalem. He appointed musicians, gate keepers, priests....wrote a psalm of praise.... All done well....
Ch 16: verse43 - then all the people left, each for their own home, and *David Returned home to bless his family*.
*Ponder- how am I a blessing to my family? Blessing to my spouse, children, grand children..*
When we are a blessing to our family, we will in turn be a blessing to our neighborhood, our community & nation.
[16/08, 04:57] +91 99431 72360: *நினைவு கூருங்கள்*
~~~~~~~~~~~~~~
1 நாளாகமம் 16: 13 - 16.
இங்கு தாவீது எதையெல்லாம் நாம் நினைவு கூர வேண்டும் என சங்கீதமாக பாடுகிறார். அவற்றை நாம் தியானிப்போம்.
1. *அவர் செய்த அதிசயங்களை நினைவுகூருங்கள்.*
2. *அவருடைய அற்புதங்களை நினைவுகூருங்கள்.*
3. *அவருடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளை நினைவு கூருங்கள்.*
ஆம், *கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதே* என கர்த்தர் நமக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் அல்லவா? அப்படியானால், *நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த அதிசயங்களையும், அற்புதங்களையும் நாம் நினைவு கூர வேண்டும்*
4. *அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்* அவருடைய நியாயதீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். அப்படியானால் நம் தேவன் எவ்வளவு பெரியவர், சர்வ வல்லவர் என்பதை நினைத்து அவரை மகிமைப்படுத்துவோம்.
5. *ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் இட்ட வாக்கை நினைவு கூருங்கள்*
ஆம், அவர் வாக்கு தத்தங்கள் எவ்வளவு மேன்மையானவை, மாறாதவை. இவற்றை நாம் நினைவுகூர வேண்டும்.
6.*ஆபிரகாமுக்கு அவர் பண்ணின உடன்படிக்கையை நினைவு கூருங்கள்.*
ஈசாக்குக்கு அவர் இட்ட ஆணையையை என்றென்றைக்கும் நினைவு கூருங்கள்.
ஆம், இது யாக்கோபுக்கு பிரமாணம். இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கை. கானான் தேசம் நமக்கு சுதந்திர பாகம். ஆம், இந்த ஆசீர்வாதங்களை நாம் நினைக்க வேண்டும். இதற்காக க ர்த்தரை துதிக்க வேண்டும். மகிமைப்படுத்த வேண்டும். ஆம், நம்மோடிருந்து, ஆசீர்வதிக்கிற நம் தேவனை எப்போதும் நாம் நினைக்க வேண்டும். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[16/08, 04:57] +91 99431 72360: *நாள் 124 / 365 *
*1நாளாகமம் 15 -16*
*தேவனுடைய* *வார்த்தைகளுக்குக்*
*கீழ்ப்படிவோம்*..
தாவீது ..தாவீதின் நகரத்திலே, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி.. அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான். (1 நாளா.15 :1)
*தாவீது ,லேவியர் ஒழிய வேறொருவரும்* *தேவனுடைய பெட்டியை* *எடுக்கலாகாது*..*தேவனுடைய*
*பெட்டியை எடுக்கவும்*..
*என்றைக்கும் அவருக்குப்* *பணிவிடை செய்யவும்*..
*அவர்களையே கர்த்தர்* *தெரிந்துகொண்டார் என்றான்*..
(1நாளா .15 : 2)
தாவீது முதலாவதே ஏன் இதைச் செய்யவில்லை..
ஒரு துக்கமான அனுபவத்தைக் கடந்து சென்றுதான்.. இதைக் கற்றுக்கொள்ள வேண்டுமா என்று.. நம்மில் அநேகர் நினைக்கலாம்.
ஆனால் நம்மில் பலரும் இவ்விதம்தான்..
கால தாமதமாகவே கர்த்தருடைய வழிகளிலே காரியங்களைச் செய்ய கற்றுக் கொள்கிறோம் அல்லவா..?
*நாம்*.. *நம்முடைய தேவனாகிய* *கர்த்தரை*.. *நியாயமானபடியே* *தேடாதே போனபடியினாலும்* *அவர் நமக்குள்ளே அடி விழப்* *பண்ணினார் என்று தாவீது அந்த* *துக்கமான சம்பவத்தைக்* *குறித்துக் கூறினான்*..
( 1 நாளா.15 :13 )
கர்த்தரைத் தேடும்போதும்.. அவரை ஆராதிக்கும்போதும்..
அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணும்போதும்..அவருடைய சித்தத்தை செயல்படுத்தும் போதும்.. அவர் வகுத்த நியதிகளை ..நாம் நிச்சயமாய்ப் பின்பற்றவேண்டும்.
தாவீதைப் போல மிகப் பெரிய ராஜாவாகயிருந்தாலும்..
கர்த்தருடைய நியதிகளுக்கு
முரண்பாடாகச் செயல்பட்டால் கர்த்தர் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்..
எந்த ஒரு தனி மனிதனுடைய சுயபெருமைக்காக..
சுயலாபத்திற்காக..கர்த்தர் தம்முடைய பிரமாணத்தை மாற்றிப்போடமாட்டார்
தேவனுடைய பிள்ளைகள்.. தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிம்போது மட்டுமே.. அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்..
தங்கள் சொந்த வழிகளில் நடந்தால்..
கர்த்தரின் தண்டனையையே பெறுவார்கள்..
தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத..இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், ராஜ்யபாரத்தை இழந்தான்..
உசியா ராஜா.. தன் மரண நாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்தான்..
*தேவனுடைய பெட்டி* *கூடாரத்தின் நடுவே* *வைக்கப்பட்டது*..
(1 நாளா. 16 : 1 )
கூடாரம் என்பது ஏழைகளின் வாசஸ்தலம்.. தேவனுடைய பெட்டிக்கு மாளிகை கட்டப்படவில்லை..
சாலொமோன், கர்த்தருக்கு ஆலயம் கட்டும்வரையிலும்.. தேவனுடைய பெட்டி..
இந்தக் கூடாரத்திலேயே வைக்கப்பட்டிருந்தது..
தாவீது, தேவனுடைய பெட்டியைக் கூடாரத்திலே வைத்தாலும்..
அவன் தன் மரணநாள்வரை..
கர்த்தரை முழு இருதயத்தோடு நேசித்தான். ஜீவனைப் பார்க்கிலும்.. உமது கிருபை நல்லது என்றான். உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்..
உம்முடைய வலது
பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு என்றான்..
சாலொமோன் கர்த்தருக்கு ஆலயம் கட்டினான் ..
ஆனாலும் தன்னுடைய கடைசி காலத்தில்..கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவி கொடுக்காமல்.. தன்னுடைய அந்நியஜாதி மனைவிகளுக்குச் செவி கொடுத்து.. விக்கிரங்களுக்கு மேடைகளைக் கட்டினான்..
*ஆலயம் அழகாய் இருக்கிறதா* *அல்லது உயர்ந்து கம்பீரமாக* *இருக்கிறதா என்பது* *முக்கியமல்ல*..
*ஆலயம் பரிசுத்தமாக* *இருக்கிறதா என்பதே* *முக்கியம்*..
*பரிசுத்தமான இடங்களில்* *மட்டுமே கர்த்தர்*
*வாசம்பண்ணுகிறார்*..
*சபை ,எளிமையாக இருக்கும்* *காலமே..அது* *பரிசுத்தமாகயிருக்கும் காலம்*.. *சபையில், அழகும்*.. *ஆடம்பரமும்..அலங்காரமும்*.. *பிரவேசிக்கும்போது*..
*சபையின் பரிசுத்தம் ..ஐக்கியம் குறைந்து* *போகிறது*..
*இன்று நாம்தான் ஜீவனுள்ள* *தேவனுடைய ஆலயம் ..தேவன்* *விரும்பி தங்கும் வாசஸ்தலமாக* *நாம் இருக்கிறோமா*..?
*நாம்,புறம்பான அலங்காரத்திற்கு*
*முக்கியத்துவம்* *கொடுக்கிறோமா*..?
*உள்ளான பரிசுத்தத்திற்கு*
*முக்கியத்துவம்* *கொடுக்கிறோமா*..?
*சிந்தியுங்கள்*..
மாலா டேவிட்
[16/08, 04:57] +91 99431 72360: *16.08.2023*
🤍 *அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்* 🤍
⚡ *“பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள்ளும் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்.”* (1 நாளாகமம் 16:23-24).
🔸 இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின தாவீது, உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது *கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி ஒரு விசேஷ சங்கீதத்தை* எழுதினான் (1 நாளாகமம் 16:7-36). இந்த சங்கீதத்தில், மேலேயுள்ள வார்த்தைகளை நாம் காணலாம்.
🔸 சங்கீதக்காரன் கூறுகிறான்: *“கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;* உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்" (சங்கீதம் 89:1). அவருடைய *நிபந்தனையற்ற அன்பு,* நம் வாழ்வில் அனுபவித்த அவருடைய தயவையும் கிருபையையும் குறித்துப் பாடுவதற்கு ஒரு காரணமாகிறது.
🔸 இரட்சிப்பின் சுவிசேஷம் இஸ்ரவேலரை விட நமக்கு முக்கியமானது. யுத்தத்தில் வெற்றி பெறுவது அல்லது இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவது கூட இஸ்ரவேலரால் இரட்சிப்பாக கருதப்பட்டது. நம்மைப் பொறுத்தவரை, இரட்சிப்பு என்பது ஆழமானது: *ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றி பெறுவது, மற்றும் பாவங்களிலிருந்து மன்னிப்பும் விடுதலையும் பெறுவது.* நாம் தகுதியற்றவர்களாக இருந்தாலும்கூட, *தேவன் நம்மீது வைத்திருக்கும் அதீத அன்பின் காரணமாக நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.* இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தேவன் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
🔸 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைக் கிறிஸ்துவை பூமிக்குக் கொண்டுவருவதற்காகத் தேவன் தேர்ந்தெடுத்தார். தாவீதுக்கு அவனுடைய சந்ததி என்றென்றும் சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்ற வாக்குறுதியை அருளினார். இது கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. நமது *இரட்சிப்பு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே* சாத்தியமாகும். கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மேன்மை என்னவென்றால், இரட்சிப்பின் பாடல் நம் வாழ்நாள் முழுவதும் நீடித்துக்கொண்டே இருக்கும். *“நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்."* (சங்கீதம் 104:33).
🔸 தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாருக்கும் (தேவனுடைய மகத்துவத்தையும், மற்ற தேவர்களை விட அவர் மேன்மையானவர்* என்பதையும் அறிவித்து, அவருடைய *மகிமையை சகல ஜனங்களுக்குள்ளும்* விவரித்துச் சொல்ல வேண்டும். நமது கர்த்தராகிய *இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்பு* அளிக்கப்படுகிறது என்பதே பூமியிலுள்ள *சகல ஜனங்களுக்கும் சுவிசேஷமாகும்.*
🔸 இயேசு பிறந்தபோது *தேவதூதர்களால் நற்செய்தி* முதலில் அறிவிக்கப்பட்டது. லூக்கா பதிவு செய்கிறான்: “தேவதூதன் அவர்களை நோக்கி: *பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."* (லூக்கா 2:10-11).
🔸 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரமேறிச் சென்றபிறகு, *அவருடைய சீஷர்கள்* சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். "சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, *சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்."* (அப்போஸ்தலர் 5:42).
🔸 உலகத்தின் முடிவுக்கு முன், பூலோகமெங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும். இயேசுவின் வார்த்தைகள்: *“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”* (மத்தேயு 24:14). இப்போது உலகித்தின் பல பகுதிகளில் சுவிசேஷம் சென்றடைந்துள்ளது. இன்னும் *சுவிசேஷம் சென்றடையாத இடங்களுக்கு சுவிசேஷம் சென்றடையச் செய்வது* ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும்.
🔹 *நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் அருளப்படும் ரட்சிப்பைச் சுவிசேஷமாய் எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்கிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*
1️⃣ *தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு, நம் வாழ்வில் அனுபவித்த அவருடைய தயவையும் கிருபையையும் குறித்துப் பாடவைக்கிறது.*
2️⃣ *கிறிஸ்துவை அறிந்துகொள்வதன் மேன்மை என்னவென்றால், இரட்சிப்பின் பாடல் நம் வாழ்நாள் முழுவதும் நீடித்துக்கொண்டே இருக்கும்.*
3️⃣ *நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிப்புண்டு என்பதே பூமியிலுள்ள சகல ஜனங்களுக்கும் சுவிசேஷமாகும்.*
4️⃣ *சுவிசேஷம் சென்றடையாத இடங்களுக்கு சுவிசேஷம் சென்றடையச் செய்வது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[16/08, 04:57] +91 99431 72360: Mrs. Merin Gnanaraj
Covai.
Day : 123.
Date: 15.8.23.
🎯தலைப்பு:
📍அதுல்லாம் குகை.
1 நாளா :11:15.
🎯தியானம்:
📍அதுல்லாம் கன்மலை கெபி :
🔸கன்மலை என்று சொல்வதை விட அதை "கல்மலை" என்று சொல்லலாம்.
🔸ஏனெனில் மற்ற மலைகளை போலில்லாமல் ,
அது ஒரு நிலத்தடி நகரமாக திகழ்ந்தது.
🔸அடியில் முழுவதும் இயற்கையாகவே குகைகள் இருந்தது.
🔸சில குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை
(அதாவது வழிகள் இருக்கும்)
🔸சில குகைகளில் சுமார் 1000 பேர் வரை தங்கலாமாம்.
இங்கு தான்,
🔸தாவீது சவுலுக்கு பயந்து ஒளிந்து இருந்தார்
🔸முதலில் தனியாக தான் சென்றார்.
🔸பின் அவருடன் அவரது பெற்றோரும் சகோதரரும் சேர்ந்துகொண்டார்கள்.
🔸அதற்கு பின்,
ஒடுக்கப்பட்டவர்கள்,
கடன்பட்டவர்கள்
முறுமுறுக்கிறவர்கள்
🔸என 400 பேர் அவருடன் தங்கினர்.
1 சாமு 22:1-3.
🔸அங்கே தான் அநேக பராக்கிரமசாலிகளும் அவரோடு சேர்ந்தார்கள்.
1 நாளா 11
🔸இது தாவீது தலைவனான இடம்.
🔸12 சீடர்களை வைத்து ஆலோசனை செய்தார்.
🔸பாராளுமன்ற கெபியாக திகழ்ந்தது.
🎯சிந்தனைக்கு,
🔸தாவீது தனியாகத் தான் சென்றார்.
🔸ஆனால் வெளியே வரும் போது ஒரு தலைவனாக, ராஜாவாக, தைரியமாக, ஒரு படையோடு வந்தார்.
🔸கர்த்தர், தாவீதை சாமுவேலால் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.
🔸ராஜாவாக அபிஷேகம் பண்ணிய பின்பு தான் அவரை கெபிக்குள் கொண்டு வந்தார்.
🔸கெபி அனுபவங்கள் அவரை தைரியமானவராக உருவாக்கியது.
🎈நம் வாழ்க்கையிலும் கர்த்தர் அதுல்லாமை (தனிமையை, பயத்தை) அனுமதித்திருக்கிறாரா❓.
🎈அப்படியென்றால்,
தேவன் நம்மை உருவாக்குகிறார் என்று அர்த்தம்.
🎈ஒன்றுமில்லாமல் போன தாவீதை கர்த்தர் ராஜாவாக அநேகரோடு வெளியே கொண்டு வந்தார்.
அதே போல்,
🎈இப்போதைய நம் வாழ்க்கை அதுல்லாம் போலிருக்கிறதே என கவலை படுகிறோமா❓ 🎈கர்த்தருக்குள் நம்மை உருவாக்குகிறார் என மகிழ்வோம்...
🎈நம் வாழ்க்கையின் வெறுமையை ,
மகிழ்ச்சியாக வெற்றியாக மாற்றுவார் என்று விசுவாசிப்போம்.
ஆமென்🙏.
[16/08, 04:57] +91 99431 72360: 🔥🔥🔥🔥🔥🔥🔥Mrs.Jasmine Samuel
Chennai.
வேத பகுதி
1நாளா 14
அதிகாரம்
💧 *தியான துளிகள்*.
💧 *பாகால் பிராசீம்*
1நாளா 14:11.
💧தண்ணீர்கள் உடைந்து ஓடுகிறது போல தாவீதின் சத்துருக்கள் உடைந்து ஓடினார்கள்.
💧தாவீது சத்துருக்கு ( பெலிஸ்தியருக்கு) விரோதமாக போகலாமா என்று *தேவனைக் கேட்டான்* (14:10).
💧கர்த்தர் போ அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார் 👍..
💧அப்படியே தாவீதினிடத்தில் சத்துருக்களை ஒப்புக்கொடுத்தார்.
💧 *பெலிஸ்தியர் மறுபடியும் வந்தார்கள்*( 14:13).
💧மறுபடியும் தாவீது தேவனிடத்தில் கேட்டான்.
(14:14).
💧 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளில் செல்லுகிற இரைச்சல் சத்தம் கேட்கும் போது போ என்றார்.(14:15).
💧 அப்படியே தாவீது கீழ்ப்படிந்தான்..
.💧 *தேவன் தாவீதுக்கு முன்னே புறப்பட்டார்* (14:15)
💧 சத்துருக்களை முறியடித்தான்
🧏🏻♂️ சிந்தனைக்கு
தாவீது ஒவ்வொரு காரியத்தையும் தேவனிடத்தில் கேட்டான்.
தேவன் சொன்னபடி கீழ்படிந்தான்.
நாமும் எல்லா காரியங்களையும் தேவனிடம் கேட்டு , பதிலுக்கு காத்திருந்து செயல்பட வேண்டும்.
நமக்கு முன் இருக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள் , எல்லாம் *தண்ணீர் உடைந்தோடுவது போல ஓடிப் போகும்* ..... அல்லேலூயா🙋🏻♂️🙋🏻♂️
[16/08, 04:57] +91 99431 72360: *🥁🕺THE JOY OF THE LORD🥁💃*
*🥁🕺கர்த்தருடைய மகிழ்ச்சி🥁💃*
[DAY - 124]
1 நாளாகமம் 15 & 16
☄️பல வருட புறக்கணிப்பு மற்றும் பிரிவுக்குப் பிறகு, தாவீது ராஜா எருசலேமில் பெட்டியை அதன் சரியான இடத்திற்கு கொண்டு வர முயன்றார்.
1️⃣ *பெட்டியை மீட்டெடுக்க விருப்பம்* (1 நாளாகமம் 15:1-3):
🔹ஆவிக்குரிய மறுமலர்ச்சியின் அவசியத்தையும், தேசத்தின் வாழ்க்கையில் தேவனுடைய மையத்தன்மையையும் ஒப்புக்கொண்டு, பெட்டியை எருசலேமுக்கு மீட்டெடுக்க தாவீது விரும்பினார்.
🔹தாவீதின் இதயம் பெட்டியைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற பேரார்வத்தால் எரிந்தது, மேலும் அவர் வரப் போகும் பணிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.
2️⃣ *சரியான ஆயத்தங்கள்* (1 நாளாகமம் 15:4-15):
🔸தாவீது லேவியர்களையும், ஆசாரியர்களையும், இஸ்ரவேலின் தலைவர்களையும் தேவன் நியமித்த முறைப்படி பெட்டியை சுமக்கச் செய்தார்.
🔸தாவீது சுத்திகரிப்பு மற்றும் பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், ஆசாரியர்கள் தங்களை அர்ப்பணிக்கவும் ஆராதனைக் கருவிகளை சுத்திகரிக்கவும் அறிவுறுத்தினார்.
3️⃣ *மகிழ்ச்சியான ஊர்வலம்* (1 நாளாகமம் 15:16-29):
▫️திறமையான இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் சேர்ந்து, லேவியர்கள் பெட்டியை தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு வந்தனர்.
▫️தாவீது தாமே தன் முழு வல்லமையோடு கர்த்தருக்கு முன்பாக நடனமாடியதால், அந்தச் சூழல் மகிழ்ச்சி நிறைந்த துதிகளாலும் ஆராதனையாலும் நிறைந்திருந்தது.
▫️இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டம், தேவனுடைய பிரசன்னம் அவர்கள் மத்தியில் திரும்பியதற்கு தேசத்தின் நன்றியையும் பயபக்தியையும் வெளிப்படுத்தியது.
4️⃣ *துதியின் காணிக்கை* (1 நாளாகமம் 16:1-7):
🔺தாவீது சில லேவியர்களை பெட்டிக்கு முன்பாக தேவனுக்கு பலிகளையும் தகனபலிகளையும் செலுத்தி, ஊழியம் செய்ய நியமித்தார்.
🔺தேசத்தின் வாழ்வில் ஆராதனை மையமாக இருப்பதை உறுதிசெய்ய, தொடர்ச்சியான துதியிலும் நன்றியுணர்விலும் வழிநடத்த தனி நபர்களை அவர் நியமித்தார்.
🔺துதி மற்றும் வந்தனப் பாடல்களில் தங்கள் குரலில் இணைந்து, மக்கள் இதயப்பூர்வமான பக்தியுடன் பதிலளித்தனர்.
5️⃣ *நன்றியறிதலின் சங்கீதம்* (1 நாளாகமம் 16:8-36):
▪️தாவீது ஒரு நன்றியறிதலின் சங்கீதத்தை இயற்றினார், இது இந்த வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
▪️இந்த சங்கீதம் தேவனுடைய உண்மைத்தன்மையையும், அவருடைய வல்லமைமிக்க செயல்களையும், இஸ்ரவேலருக்கு அவருடைய உடன்படிக்கை வாக்குறுதிகளையும் விவரிக்கிறது.
▪️இது தேசத்தின் வரலாற்றையும் தேவனுடைய உறுதியான அன்பையும் நினைவூட்டுகிறது.
▪️ஆராதனைக்கான அழைப்போடு சங்கீதம் முடிவடைகிறது, அனைத்து படைப்புகளும் இறைவனின் துதியில் சேர வலியுறுத்துகிறது.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥தேவனை ஆர்வத்துடன் பின்தொடரவும், விடாமுயற்சியுடன் நம்மைத் தயார்படுத்தவும், அவருக்கு முழு மனதுடன் துதியும் நன்றியும் செலுத்தவும் தாவீதின் முன்மாதிரியால் நாம் ஈர்க்கப்பட வேண்டும்.
💥பெட்டியின் மறுசீரமைப்பு நம் வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தின் முக்கியத்துவத்தையும் அது கொண்டு வரும் மாற்றத்தையும் நினைவூட்டுகிறது.
*‼️தேவனுடைய பிரசன்னத்தை நம் இதயங்களில் மீட்டெடுப்பதை விடாமுயற்சியுடன் தேடுவோம்‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[16/08, 04:57] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 124*
*16.08.2023*
*புதன் கிழமை*
*1 நாளாகமம் 15 - 16*
*அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும் , எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் , தம்புருக்களையும் , சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டு வந்தார்கள். 1 நாளா 15 : 28*
கர்த்தருடைய பெட்டி , ஓபேத் ஏதோம் வீட்டில் இருந்த நாட்களில் , கர்த்தர் ஓபேத் ஏதோமையும் , அவன் வீட்டாரையும் ஆசீர்வதித்தார் ; இதைக் கேள்விப்பட்ட தாவீது ராஜா , தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்து வைப்பதற்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி , அதில் ஒரு கூடாரத்தையும் போட்டார். இந்த முறை தேவனுடையப் பெட்டியை , அதனுடைய முறைப்படி , தாவீது ராஜா எடுத்து வந்தார்.
ஆரோன் புத்திரர் , லேவி கோத்திரத்தார் 862 பேர் , பாடகற்குழு உட்பட அனைவரும் சேர்ந்து , ஜனங்கள் ஒரு பெருந்திரளாகக் கூடி , மகிழ்ச்சியுடன் தேவனுடைய பெட்டியைக் கொண்டு வந்தனர் ; அவர்கள் அனைவரும் தாவீது உட்பட யாவரும் ஏபோத்தை தரித்து , ஒரு பரிசுத்த ஆராதனைப் பவனியாக அதனைக் கொண்டுவந்தனர். அப்பொழுது தாவீது மேசியாவின் நிழலுருவாக , ஒரு ராஜரீக ஆசாரியராக நடந்து வந்தார். அந்த பவனி எத்தனை அழகும் , தேவமகிமையும் நிறைந்திருந்திருக்கும் , பிரியமானவர்களே ! !
முன்செல்லும் பாடகர்களும் , அதற்குபின் வரும் இசைக்கருவி இசைப்போரும் , நடனத்துடன் கன்னியர்கள் சூழ்ந்திருக்க , அப்பவனி மிகவும் நேர்த்தியானதாகவும் , தேவமகிமையாலும் , தேவபிரசன்னத்தினாலும் நிறைந்திருந்ததுடன் , தேவன் அகமகிழுகிற ஒரு பவனியாகவும் இருந்திருக்கும் என்று சொன்னால் , அது மிகையாகாது, பிரியமாவரகளே.
அப்பொழுது பாடப்பட்ட சங்கீதமாக , 68 ம் சங்கீதத்தைக் கருதுகின்றனர்.
*தேவனே உம்முடைய நடைகளைக் கண்டார்கள் ; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். முன்னாக பாடுகிறவர்களும் , பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும் , சுற்றிலும் தம்புருவாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். சங் 68 : 24 , 25*
எவ்வளவு மேன்மையான அனுபவத்தை தாவீது பெற்று அனுபவித்திருந்திருப்பார் ! ! ஏனெனில் தேவபிரசன்னமாகிய தேவனுடைய பெட்டி , அவர்கள் முன்னே சென்றதனால் , பரலோக மகிமையையே , இந்த பூலோகில் பெற்றனுபவித்திருந்திருப்பார் என்றால் அது மிகையாகாது , அல்லவா ?....
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai .
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
[16/08, 04:57] +91 99431 72360: *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👨👧👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*1 நாளாகமம் 16:24, 29*
*THE GLORY OF THE LORD 🌈*
*கர்த்தருடைய மகிமை* 🌈
📝' *"கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்துங்கள்... "*
கர்த்தரின் மகிமையை ஏன் ஆராய்ந்து பார்க்க வேண்டும் ❓
💫 *"எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள், "* (ரோமர் 3:23) என்பதை இது காட்டுகிறது.
💫 மிக முக்கியமானது எது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது -- *கர்த்தருடைய சொந்த மகிமை* (ஏசாயா 42:8)
💫 இது ஒரே உண்மையான தேவனான -- *மகிமையின் தேவன்* (அப்போஸ்தலர் 7:2) பற்றிய அறிமுகத்தை அளிக்கிறது.
💫 அதை நாம் புரிந்துகொண்டு நம் இருதயத்திலிருந்து உறுதிசெய்தால், அது *வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருக்கும்* :
📌 இது நமது ஆராதனை உணர்வை மாற்றும் ( *ஏசா 6:1-4*)
📌 அது நம்மை தாழ்த்திவிடும் ( *Is 6:5a*)
📌 அது நம்மை கீழ்ப்படிதலுக்கு இட்டுச் செல்லும் ( *ஏசா 6:6-8*)
📌 இது நம் வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு - *"எல்லாவற்றிலும் தேவனின் மகிமையைக் காண* உதவி செய்யும்.(1கொரி 10:31)
🙋♂️🙋♀️ அன்பான திருச்சபையே, தேவனுடைய மகிமையே அவருடைய குணாதிசயங்கள்:
1️⃣ *கர்த்தர் சிருஷ்டிகர், மீட்பர், இரட்சகர் மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர்*.
2️⃣ *கர்த்தர் பரிசுத்தமானவர், இரக்கமுள்ளவர், நித்தியமானவர், உண்மையுள்ளவர் மற்றும் நீதியுள்ளவர்*.
🙋♂️🙋♀️ நாம்:
🗣️ *ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கே அதைச் செலுத்துவோம்*.
🗣️ *கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துவோம்*.
🗣️ *கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்துவோம்* :
📌 *அவருடைய இரட்சிப்பை அறிவிப்போம்* (வ. 23)
📌 *அவருடைய மகிமையையும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுவோம்* (வ. 24)
📌 *கர்த்தரைத் தொழுதுகொள்வோம்* (வ. 29)
📌 *பயபக்தி மற்றும் நன்றி செலுத்தும் காணிக்கையைக் கொண்டு வருவோம்* (வ. 29)
📌 *கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம்* (வ. 34)
📌 *கர்த்தருக்குள் நமக்குச் செய்யப்பட்ட சகல உபகாரங்களுக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.* சங்கீதம் 103:2
*தேவனுக்கே மகிமை* 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[16/08, 18:05] +91 99431 72360: 15.8.23
1 நாளாகமம்
👓👓👓👓👓👓
Sist. எஸ்தர். R.
💟💟💟💟💟💟
தாவீது இஸ்ரேவேலில் ராஜாவாக மணப்பூர்வமாக ஏற்று கொண்ட பின்பு முதலில் எபூசின் குடிகளை வென்று அதை தாவீதின் நகரமாக மாற்றினான்.
நாளுக்கு நாள் விருந்தியடைந்தான். கர்த்தர் அவனுடன் கூட இருந்தார்.
📝யாருடைய செயல் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறதோ அவர்கள் மேலே கர்த்தர் பிரியம் வைத்து காப்பாற்றுகிறார்.
அநேக பராக்கிரமசாலிகள் கிடைக்க பெற்றான்.
12. 17&18 பென்யமீன் யூதா புத்திரர்கள் சிலர் தாவீதினிடத்தில் வந்த பொழுது, தாவீது தானே எதிர் கொண்டு போய்
என் கையில் கொடுமை இல்லை..
உண்மையிலே நீங்கள் சமாதானத்துடன் வந்தால் நானும் உங்களோடு இசைந்திருப்பேன். ஆனால் என்னை என் சத்துருக்களிடம் காட்டி கொடுக்க வந்தீர்களானால்...
*நம் பிதாக்களின் தேவன் அதை பார்த்து கண்டிப்பார் என்று சொன்ன* வார்த்தையை படிக்கும் பொழுது, தாவீது கர்த்தர் தனக்காக எப்படி இறங்கி கிரியை செய்கிறார் என்பதில் எவ்வளவு உறுதியாக இருப்பதை பார்க்கலாம்.
📝மேலும்தான் ஒரு ராஜாவாக இருந்தும், நான் உங்களை தண்டிப்பேன் என்றோ, உங்கள் மேல் யுத்தம் செய்வேன் என்றோ தன்னை முன் நிறுத்த வில்லை.
தன் பெருமையை பேசிக்கொண்டிருக்க வில்லை.
🙏தேவ ஜனங்களுக்கு விரோதமாக எதிரிகள் எழும்பும் பொழுது நாம் கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டுமே அல்லாமல் நமக்கு நாமே கிரியை செய்ய கூடாது. கர்த்தர் தண்டிக்க இடம் கொடுத்து, நாம் காத்திருக்க வேண்டும்.
📝மணிப்பூரில் நடக்கும் எதிரிகளின் செயல் பாடுகளுக்கு கர்த்தர் பார்த்து கொள்ள ஜெபிப்போம்.
தாவீதின் பக்கம் நாளுக்கு நாள் மனுஷர் சேர்ந்து கொண்டு தேவ சேனையை போல மகா சேனையானார்கள்.
ஒரு தலைவன் நல்லவன் என்று புரிந்து கொண்டால், அவனுக்கு ஏராளமான தொண்டர்கள் வந்து சேருவார்கள்.
அந்த தலைவன்
*நமக்குள்ளே உள்ள அந்த நற்பொருளை காத்து கொள்ள வேண்டும்..*
1 தீமோ 1-7 ல் தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியு முள்ள ஆவியை கொடுத்திருக்கிற படியால், நாம் எந்த சூழ்நிலையிலும் நீதி தவறாமல், ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை கை கொண்டு வாழ வேண்டும். என்று வாசிக்கிறோம்
தாவீது இப்பேற்பட்ட மகா சேனையுடன் அரசாட்சியை நடத்த இஸ்ரேவேலில் மகிழ்ச்சி உண்டாயிற்று.
சவுலின் நாட்களில் தேட படாத தேவனுடைய பெட்டியை கொண்டு வர பிராயசப்பட்டு அதை ரதத்தில் ஏற்றி கொண்டு வந்த பொழுது, மாடுகள் இடற, ஊசா கையை நீட்டி பெட்டியை தொட்ட பொழுது கர்த்தர் அடித்து அங்கே அவன் செத்தான்..
தாவீதுக்கு இருந்த உச்ச கட்ட மகிழ்ச்சி இப்பொழுது போய் விசனபட்டான்..
*கர்த்தருடைய காரியங்களில் ஒரு முள் முனை மாறாமல் செய்ய வேண்டும்.
மோசேயுடன் பேசி கொண்டு வந்த கர்த்தர், ஒரு இடத்தில் அங்கே அவனை கொல்ல பார்த்தார் என்று வாசிக்கிறோம். காரணம் அவன் அதுவரை விருத்தசேதனம் செய்யாமல் இருந்தான்..
எனவே கர்த்தர் நம்முடன் இருக்கும் பொழுது இன்னும் அதிக கவனமாகவும், அவர் கற்பனைகளை கை கொள்ளுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
கர்த்தர் கண்டு கொள்ள மாட்டார் என்று நினைத்து, லேசாக இருந்து விட கூடாது.
கர்த்தர் நீதி உள்ளவர்..
கர்த்தர் சொல்லுவதற்கு விரோதமாக நடந்தால் அதற்கு தண்டனை தருவார்.
நாம் செய்கின்ற நீதியை நம்பி ஒரு அநீதி செய்தால், செய்ய பட்ட நீதிகள் நினைக்க படாது.
கர்த்தர் நீதியின் மேல் பிரியப்படுகிறதேவனே
யாராக இருந்தாலும், கர்த்தர் தண்டிப்பதில் தவற மாட்டார்.
எனவே தாவீது பெட்டியை கொண்டு வர பயந்தான்.
அந்த பயம் தான் ஆசீர்வாதம்.
பயத்துடன் நம்மை சீர் படுத்தி கொள்ள வேண்டும். கர்த்தர் நாம் விளங்கி கொள்ள சந்தர்ப்பங்களை கொடுக்கிறார்..
மீண்டும், தெரிந்தே கர்த்தருக்கு விரோதமான செயல்களில் ஈடு படாமல், சரியான வழியில் எதையும் செய்யவும், ஒப்பு கொடுக்கவும்
மனம் திருந்தவும் வேண்டும்
அப்படி செய்வதே கர்த்தருக்கு பிரியமான பலி.
நமக்கு ஒரு ராஜா, எஜமான் இருக்கிறார் என்று அறிந்து... நீதியும் செவ்வையு மானதை செய்யுங்கள் என்று கொலோ செயர் 4:1 ல் எழுதப்பட்டுள்ளது.
👓👓👓👓👓👓
[16/08, 18:05] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
*ஆகஸ்ட் 16, 2023 நாள் 124*
*1 நாளாகமம் 15, 16*
*🪇🥁🎷🎺கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுள்ளது.* (1 நாளா 16:34).
🪇கர்த்தருக்கு நன்றி செலுத்துவது என்றால் வெறுமனே *ஸ்தோத்திரம்* என்று சொன்னால் மட்டும் போதாது. கர்த்தருக்கு எப்படி நன்றி செலுத்த வேண்டும் என்பதை தாவீதின் இந்த துதிப்பாடல் கற்றுத்தருகிறது.
*🥁நினைவுகூறுதல்:* -
"அவர் செய்த *அதிசயங்களையும் அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும்* நினைவுகூருங்கள்". (16:13).
*🥁மற்றவர்களிடம் சொல்லுதல்:* - "ஜாதிகளுக்குள் *அவருடைய மகிமையையும்,* சகல ஜனங்களுக்குள்ளும் *அவருடைய அதிசயங்களையும்* விவரித்துச்சொல்லுங்கள்." (16:24).
*🥁காணிக்கை கொடுத்தல்:* கர்த்தருக்கு நம்மையும், நம் நேரத்தையும், தாலந்துகளையும், காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். (16:29).
*🥁கர்த்தரை அறிந்து அறிக்கையிடல்:* கர்த்தர் யார் என்பதை அறிந்து, அவருடைய குணாதிசயத்தையும், வல்லமையையும், அறிக்கை செய்வது, உண்மையான நன்றி செலுத்துதல் ஆகும். "சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; *கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்."* (16:25-27)
*🎷கர்த்தரைத் துதிக்கும் போது,* நம்முடைய இருதயம் பிரச்சனைகளையும், தேவைகளையும் நோக்காமல், அதிலிருந்து விடுபட்டு, *கர்த்தருடைய வல்லமை, இரக்கம், கம்பீரம், அன்பு* ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. *என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.*
பிரேமா ராஜசிங்
Group Coordinator
[16/08, 18:05] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *சரியான முறை* 🍂
கர்த்தருடைய பெட்டி ஓபேத்-ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. தாவீது இந்த நேரத்தை காரியங்களை தயார் செய்ய பயன்படுத்தினான். *முதல் முறை ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை அறிய முற்பட்டான்.* பிறகு தன் முந்தைய தவறை சரி செய்து கொண்டான். தேவன் கொடுத்த விதிமுறையின்படி பேழையை எருசலேமுக்கு கொண்டு வர முயன்றான்.
📖 *முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான் (1 நாளா 15:13).*
இந்த விஷயத்தில் தாவீதிடம் இருந்து இரண்டு அருமையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். முதலில், *தன் தோல்விக்கான காரணத்தை* ஆராய்ந்தான். மேலும் தோல்வியைக் கண்டு மனம் தளரவில்லை. இரண்டாவதாக, *தன் தவறைத் திருத்திக்கொண்டு, கர்த்தருடைய எதிர்பார்ப்பின்படி திரும்பவும் முயற்சி செய்தான்.*
நாம் அனைவரும் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கிறோம். ஆனால் தோல்வி என்பது முடிவல்ல. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிக்கவும், பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். எளிதில் விட்டுவிடாதீர்கள். மேலும் மிக முக்கியமாக, *கர்த்தருடைய வேலை அவர் எதிர்பார்க்கும் வழியில் செய்யப்பட வேண்டும்.*
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 16, 2023_
[16/08, 18:05] +91 99431 72360: *My testimony regarding 365 days bible reading program*_*
*Tamil translation of the Testimony of sister Kemi Adeyeomo, Nigeria*
*365 நாட்கள் பைபிள் வாசிப்பு நிகழ்ச்சி பற்றிய எனது சாட்சியம்**
நான் இந்த திட்டத்தில் பல வருடங்களாக அறிமுகமாகி, அலுவலக வேலைகளில் பிஸியாக இருக்கும் போது கூட நான் பைபிளை வாசிப்பதில் உறுதியாக இருந்தேன்.
*நான் ஏன் சாட்சி சொல்கிறேன்?*
தேவவார்த்தையைப் படிப்பதும், நுண்ணறிவுகளை இடுகையிடுவதும் என்னை தேவனிடம் நெருக்கமாக்கியது.
நான் வருடா வருடம் படிக்கும்போது அது எனக்குப் புதிதாகத் தோன்றுவதுடன் சில சமயங்களில் அதே வாசிப்புகளுக்கு சில சமயங்களில் புதிய அர்த்தங்களைப் பெறுகிறேன்
நான் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு மகிமையைச் செலுத்துகிறேன், மேலும் என்னை ஊக்குவித்த நிகழ்ச்சியின் தலைமை ஊழியர் ரெவ். ஆபிரகாம் மற்றும் டாக்டர் தயோ ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
.அவர்களின் வாழ்க்கை மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்._
பைபிளில் உள்ள ஒரு பத்தியை யாராவது மேற்கோள் காட்டினால், அந்த பத்தியில் உள்ள அறிக்கையை நான் தானாகவே முடிக்க முடியும், ஆனால் அத்தியாயத்தை சரியாக மேற்கோள் காட்ட முடியாமல் போகலாம், ஆனால் அதைச் சொன்ன ஆசிரியரைக் குறிப்பிடவும் அவர் எப்பொழுது அதைக் கூறினார், எது அந்த உரையாடலுக்கு வழிவகுத்தது என்பதை அறிய இந்த திட்டம் எனக்கு மிகவும் உதவியது.
எவ்வளவு பெரிய பலன்.
இந்த திட்டம் இல்லாமல் யாராலும் இதை செய்ய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உண்மையில், பைபிள் வாசிப்பு திட்டத்தில் சேருவது ஒரு அற்புதமான அனுபவம்.
இந்த சாட்சியத்தை வாசிக்கும் அனைவரும் நிர்வாகிகளாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும்,
இருபது முதல் நூறு குழுக்கள் வரை கட்டுப்படுத்தும் மெகா ஒருங்கிணைப்பாளர்களாகவும் தங்கள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இந்த பைபிள் வாசிப்பு திட்டத்தின் மூலம் நம் எஜமானின் வேலையை ( பிரதான கட்டளையை) அமைதியாக செய்வது ஒரு பாக்கியம்.
மற்றொரு நன்மை என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஊழியம் செய்வார். ஒவ்வொரு நிமிடமும் கர்த்தர் உங்கள் அருகில் இருக்கிறார் என்ற உணர்வில் நீங்கள் வாழ்வீர்கள்.
நான் எப்போதும் வாசிப்புகளில் பின்தங்கிவிடாமல் இருக்க முயற்சித்தேன்.
எல்லா புகழும் தேவனுக்கே உண்டாவதாக.
மத்திய ஆபிரிக்காவில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன். ஆனால் அவர்களில் பலரிடமிருந்து எந்த பதிலும் இல்லை அல்லது நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக இந்த நிமிடம் வரை அதை அடைய முடியவில்லை.
.
நான் இன்னும் ஒரு நாள் விரைவில் அந்த குழுவில் சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
நீங்கள் உங்களைப் பயன்படுத்திக் கொண்டால் இன்னும் அதிகமாகப் பயனடையலாம். உலகின் பதினைந்து நாடுகளைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் (3,000) உறுப்பினர்களுடன் சுமார் நூறு குழுக்களை நான் ஒருங்கிணைக்கிறேன்.
365 நாட்கள் திட்டம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் முடிவதற்குள் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் இணைய வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனைகள்.
நுண்ணறிவு ஹவுசா, இக்போ, பிரெஞ்சு மற்றும் யோருபா ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கோரினால், நுண்ணறிவுகளை உலகின் எந்த மொழியிலும் எழுதலாம்.
நீதிமான்களின் எதிர்பார்ப்புகள் தாழ்த்தப்படவோ அல்லது அழிக்கப்படவோ கூடாது என்று பைபிள் சொல்கிறது.
நம்முடைய நீதி கிறிஸ்து இயேசுவினுடையது. நமது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் இயேசுவின் பெயரில் விரைவாக வரும்.
எனவே நீங்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதன் மூலம் நான் உங்களுக்கு குழு அல்லது குழுக்களை ஒதுக்க முடியும், இதன் மூலம் நீங்கள் அதிகமான உறுப்பினர்கள், உங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் சக நண்பர்களை அழைக்கலாம் அல்லது சேர்க்கலாம்.
தேவன் ஒருவரே மகிமையைப் பெறுவாராக.
கர்த்தர் உங்கள் அனைவரையும் இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிப்பாராக.ஆமென் 🙏
*கெமி அடியேமோ நைஜீரியா* 🇳🇬
🛐தேவனுக்கே மகிமை
[16/08, 22:07] +91 99431 72360: 16.08.2023
*🍇சிப்பிக்குள் முத்து🍇*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 15, 16*
*🔰முத்துச்சிதறல் : 124*
🍧💠🍧💠🍧💠
தாவீது *சணல் நூல் ஏபோத்தை* தரித்திருந்தான்.
*(1 நாளா - 15 : 27 பி)*
💠🍧💠🍧💠🍧
✍️சமஸ்த இஸ்ரவேலின் மேல் தாவீது அரசனாக ஏற்படுத்தப்பட்ட பின்...
*அவருடைய கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி....* தாவீதுக்கு பயப்படுகிற பயத்தை *கர்த்தர் சகல ஜாதிகள் மேலும் வர பண்ணினார்.*
(1 நாளா - 14 : 17)
🍒இதற்கு பின்பு தேசமானது யுத்தம் இல்லாமல் ஓர் சமாதானமாக காணப்படவும்...
தாவீது தனக்காக தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி...
தேவனுடைய பெட்டியாகிய பேழைக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி....
அதற்கென்று ஒரு கூடாரத்தை போட்டு....
ஒபேத்ஏதோமின் வீட்டில் இருந்து...
தாவீதின் நகரத்திற்கு அதை ஆடல் பாடலோடு கொண்டு வந்தான்.
🌿தேவனுடைய பெட்டி ஒபேத்ஏதோமின் வீட்டுக்கு சென்றதில் இருந்து அவன் வீடு மற்றும் அவனுக்கு உண்டான யாவும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதை தாவீது கேள்வியுற்று...
*தான் அந்த ஆசீர்வாதத்திற்கு சுதந்திரவாளியாகி விட ஆசித்து....*
அதை முறைப்படி....
கொண்டு வர தீர்மானித்து..
ஜாக்கிரதை யோடு செயல்பட்டார்.
🌻ஆசாரியர், லேவியர் அனைவரும் தங்களை பரிசுத்தம் பண்ணி கொண்டனர்.
லேவி புத்திரர் கர்த்தரின் பெட்டியை தண்டுகளில் பாய்ச்சு தங்கள் தோள் மீது சுமந்து வந்தனர்.
*🍀சந்தோஷம் உண்டாகும் படியான பாடல்கள் பாட அரசன் உத்தரவிட்டான்.*
பஞ்ச லோக கைதாளங்கள்,
தம்புருகள்,
சூரமண்டலங்கள்,
பூரிகைகளை ஊதி
ஓபேத்ஏதோமின் வீட்டில் இருந்து....
*மகிழ்ச்சியோடு கொண்டு வருகையில்....*
கர்த்தருக்கு பலியிட்டனர்.
*🫛தாவீது சணல் நூல் ஏபோத்தை தரித்திருந்தாராம்.*
தம்புரோடும் நடனத்தோடும் அவர்கள் பெட்டியை தாவீதின் நாகரத்தினுள் கொண்டு வந்தனர்.
*தாவீது கர்த்தருக்கு முன்பாக மகிழ்ச்சியினால் நிறைந்தார்.*
இது ஓர் மார்க்கவழிபாடு சம்பந்த பட்ட மகிழ்ச்சி யாகும்.
*கர்த்தரின் சமூகத்தில் ஆனந்தம் உண்டு, பேரானந்தமும் உண்டு.*
கர்த்தரை பாடி துதிக்கையில் *உணர்ச்சி வசத்தினால் பொங்கிய தாவீது தனது இராஜ உடையை கழற்றி விட்டு...*
சணல் நூல் ஏபோத்தில் இருந்த நிலையில் ஆடி பாடி நடனமாடினார்.
அப்பொழுது பல கன்னியர்களும் அந்த கூட்டத்தில் இருந்தனர்.
அவர்கள் முன் அரசன் இப்படி தனது இராஜ உடையை கழற்றி விட்டது....
*சவுலின் குமாரத்தியும், தாவீதின் மனைவியுமாகிய மீகாளுக்கு எரிச்சல் உண்டாகியது.*
அவள் தாவீதை
*தன் மனதில் அவமதித்தாள்.*
🪶தாவீது சணல் நூல் ஏபோத்தை தரித்தது....
அவர் ஓர் ஆசாரியனாக இறைவனுக்கு முன் தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.
பொதுவாக... ஆசாரியர்கள் தான் சணல் நூல் ஏபோத்தை ஆசாரிய பணி செய்கையில் தரித்து கொண்டு பணிவிடை ஆற்றுவது உண்டு.
இல்லை,
சாதாரணமாக கூட அது ஆசாரியர்களின் உடையாக இருந்தது.
*(1 சாமு - 22 : 18)*
📌இங்கு தாவீது இறை மனதை குளிர்ச்சி ஆக்க வேண்டி....
*தன்னை அவர் முன் தாழ்த்தி கொண்டார்.*
கன்னியர்கள் தன்னை ரசிக்க வேண்டி தாவீது தன் மனதில் ஏதும் எண்ணம் கொண்டவராக இவ்வாறு இராஜ வஸ்திரத்தை களையவில்லை.
*மீகாளோ தாவீதை அந்த கண்ணோட்டத்தில் தவறாக எடை போட்டு விட்டாள்.*
🎈கர்த்தருக்கு முன்பாக தாழ்மையுடன் நடந்து கொள்ளும் எந்த ஆத்துமாவையும் அவர் உயர்த்துகிறவர் என்ற அறிவை தாவீது பெற்று இருந்தது போல அவர் மனைவி மீகாள் பெற்றதாக தெரியவில்லை.
*🎊இங்கு ஆவிக்குரிய கணவர் சிந்தைக்கும் மாம்சீக மனைவி சிந்தைக்கும் ஓர் மோதல் ஏற்படுகிறது.*
*💊இந்த சணல் நூல் ஏபோத்து என்பது....*
பொன்னினால், இள நீல நூலால், இரத்தாம்பரநூலால், சிகப்பு நூலால், திரித்த மெல்லிய பஞ்சு நூல் போன்றவற்றால் விசித்திரமான வேலை பாடுகளால் செய்யப்படும் ஓர் வஸ்திரமாக்கும்.
*(யாத் - 28 : 6 - 14)*
இதை தான் தாவீதரசன் உடுத்தி இருந்தார்.
ஆனால் அவர் மனைவி மீகாளோ, அவர் உள்ளத்தை, கர்த்தர் முன் நிற்கிற அவரின் உணர்ச்சி மிக்க மகிழ்வை காண தவறி,
*அவர் இராஜ உடை அணியாததை குறித்து மனதில் குராய்ந்து,*
அவரை தன் மனதில் அவமதித்தது மாத்திரமல்ல, *எல்லோருக்கும் முன்பாக அவரை தர குறைவாக பேசினாள்.*
*❣️உண்மையில் பார்த்தால்...தாவீது ஓர் உயர் தரமான, பிரத்யேக வஸ்திரத்தை, ஆராதனைக்குறிய வஸ்திரத்தை தான் உடுத்தி இருந்தார்.*
🍏ஒரு காலத்தில் ஏலி என்னும் ஆசாரியன் முன் நிற்கயில் சாமுவேலும் இப்படி சணல் நூல் ஏபோத்தை தான் தரித்து கொண்டு...
கர்த்தருக்கு பணிவிடை ஆற்றி நின்றார்.
*(1 சாமு - 2 : 18)*
🥏பிரதான ஆசாரியன் உடுத்தி கொள்ளும் ஓர் வஸ்திரம் இது.
இதை எப்படி, என்ன அடிப்படையில் அன்று தாவீதரசர் உடுத்தி இருந்தார் என்பதை நாம் அறியோம்.
🪂விசேஷித்தவிதமாக ஆசாரியன் உடுத்தி கொள்ள கூடிய வஸ்திரத்தை குறித்து மீகாள் எள்ளி நகையாடியதின் விளைவு....
அவள் மரண நாள் பரியந்தம் பிள்ளையற்ற மலடியாகி நின்றாள்.
*தாவீது தன்னை சுத்திகரித்து கொண்டவராக, ஆயத்ததோடு, பரிசுத்தத்தோடு அந்நாளில் இருந்தார். கர்த்தரின் வார்த்தையை சரியாக கேட்பதற்க்காக கூட தாவீதரசன் இதனை அன்று உடுத்தி இருந்திருக்க வாய்ப்பு உண்டு.*
🦀மீகாள் தன் கணவனின் தெய்வீக ஆராதனையில் பங்கு கொள்ளாத ஸ்திரியாகி நிற்கிறாள்.
🥎மீகாள் பெயரளவில் கணவனோடு வாழ்ந்து, உண்மையில் அவரை ஓர் அரசனாகவோ, ஓர் ஆன்மீக தலைவனாகவோ ஏற்று கொள்ளாமல் இருந்தவள்.
🫧அநேக ஜனங்கள் கலந்து கொண்டு கர்த்தரை மகிழ்ச்சியோடு துதித்து பாடி ஆராதித்த அந்த *ஆராதனையில் மீகாள் கலந்து கொள்ளாமல்...தன் வீட்டின் பலகணி வழியாக ஆராதனையை வேடிக்கை பார்த்த ஸ்திரியாகி நிற்கிறாள்.*
*🍎இன்றும் அநேக ஊழியக்காரர் மனைவிகள்* ஆராதனைக்கு பாடல் வேளை எல்லாம் முடிந்த பின் வந்து....
வெளியே அமர்ந்து கதை அளந்து கொண்டு இருக்கும் ஸ்திரிகளாக மீகாளை போல காணப்படுகின்றனர்.
*🧐கணவனை விமர்சனம் செய்த ஓர் பெண்மணி மீகாள்.*
😩சவுலரசனின் மகளாக பிறந்து, தாவீதரசனுக்கு வாழ்க்கை பட்டு இருந்தும் ஓர் அரச பிள்ளையை (அரச சந்ததிக்கு தாயாக ) பெற்று எடுக்க முடியாத படி கர்த்தரால் சிட்சிக்க பட்டவள் இவள்.
ஓர் *ஆசாரியனுக்குரிய வஸ்திரத்தை இந்த மனைவி விரும்பாமல்....* அரசனுக்குரிய வஸ்திரம் தான் தன் கணவன் உடுத்தி கொள்ள வேண்டும் என்னும்
*கவுரவ மனப்பான்மைக்கு இங்கு அடியாகி நின்றவள் மீகாள்.*
☔️இறைவனுக்கு முன் தகுதியான வஸ்திரம் எதுவென ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் தங்களை சீர்தூக்கி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியப்படுகிறது.
*✍️ Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad*
Thanks for using my website. Post your comments on this