Type Here to Get Search Results !

1 Chronicles 25-27 Tamil Christian Message | Bible Study | 1 நாளாகமம் செய்தி குறிப்புகள் | Jesus Sam

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: 🌈 *God selected a leader with a compass in his head and a magnet in his heart. David had mastered the three ‘P’s’ of organization: Planning, Preparation, and Personnel.*

💡Chr.26:1-27:34-Towards the end of I Chronicles we see David’s flow chart of army divisions, tribal officers, treasurers and royal overseers. *God selected a leader with a compass in his head and a magnet in his heart. David had mastered the three ‘P’s’ of organization: Planning, Preparation, and Personnel.*

⛹️‍♂️ *Application:I* Chr. 25:1-From 1 Corinthians chapters 12–14, we know that prophecy was a spiritual manifestation that functioned in the NT church. Prophecy is for the purpose of edification, exhortation, and comfort. *We find it intriguing that Asaph, Heman, and Jeduthun prophesied with the harp. One of the best ways prophecy can be ministered is through music. If we are a musician, we are encouraged to pray that the Lord would give us songs that correlate with what He is doing specifically in our own fellowship of believers.*

Jaya Pradeep-Kodaikanal.

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*

*DAY 127, 19/08/2023 SATURDAY*

*1 CHRONICLES : 25 - 27*

*PRAY READ STUDY SHARE*

🙏 📖 ✍️ 🙇‍♂️

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: நாள் : 127

19.08.2023

சனிக்கிழமை.

(1 நாளாகமம் : 25-27)

💐💐💐💐💐💐💐

*கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார்*.

(1 நாளா: 26-29)

*மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்*.

*தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்*.

★கர்த்தருடைய ஆலயத்தின் கட்டுமானப்பணிக்காக மனப்பூர்வமாகவும் உற்சாகமாகவும் தாவீது ராஜாவும் ஜனங்களும் கொடுத்ததைப்பற்றி வாசிக்கிறோம்.

★ கர்த்தரின் பணிக்கு உற்சாகமாக நாம் கொடுக்க வேண்டும்.

★ உற்சாகமாகக் கொடுக்கிறவர்களிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

★ உண்மையான இறைப்பணி, ஊழியம் எது என்று பார்த்து மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும்.

★ஆடம்பர வாழ்க்கைக்காக அப்பாவி ஏழை மக்களிடம் காணிக்கை என்ற பெயரில் வசூல் செய்யும் போலி ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

★ நம்முடைய வருமானங்களில் *தசமபாக காணிக்கை* செலுத்துவதில் வஞ்சனை செய்யாமல் இருத்தல் வேண்டும்.

★ ஐசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது. கர்த்தருடைய கரத்தில் வாங்கி கர்த்தருக்குக் கொடுக்கிறோம் என்பதை உணர்ந்து ஊழியங்களையும் கர்த்தருடைய பணிகளையும் தாங்குகிறவர்களாக செயல் படுவோமாக.

★தாராளமாக காணிக்கை கொடுப்பதினால் மட்டும் பரிசுத்தவான்களாக விளங்க முடியாது.

★நம்முடைய *இருதயத்தைக் கர்த்தருக்குக் காணிக்கையாக அர்ப்பணித்து* கர்த்தர் விரும்பும் வாழ்க்கை வாழ்வதையே கர்த்தர் விரும்புகிறார். அத்தகைய வாழ்க்கை வாழ்வோமாக.🙏

*ஆமென்*.

💐💐💐💐💐💐💐

✍️ Bhavani Jeeja Devaraj,

Nagercoil

Admin: Group No. 2068

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: *பொருட்களுக்கு விசாரிப்புகாரர்.*

~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 நாளாகமம் 27: 25 - 31. *தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புகாரர்கள் இருந்தார்கள்*

1. ஆம், தாவீது ராஜா தன்னுடைய பொக்கிஷங்கள் மேல், நிலத்தின் வருமான பண்டகசாலைகள் மேல், வயல் வெளியில் வேலை செய்கிறவர்கள் மேல், திராட்சை தோட்டங்களின் மேல், திராட்சை ரசம் வைக்கும் இடங்களின் மேல், ஒலிவ மரங்கள் மேல், முசுக்கட்டை விருட்சங்கள் மேல், எண்ணெய் கிடங்குகளின் மேல், சாரோனில் மேய்கிற மாடுகள் மேல், பள்ளதாக்குகளில் மேயும் மாடுகள் மேல், ஒட்டகங்கள் மேல், கழுதைகள் மேல், ஆடுகள் மேல் *அதாவது எல்லா பொருட்களின் மேலும் விசாரிப்புகாரரை வைத்தார்.*

2. விசாரிப்புகாரர் என்றால் யார்? இவர்கள் *தாவீது சம்பாதித்த சகல ஆசீர்வாதங்களையும், விசாரித்து , சேதமடையாதபடி பாதுகாத்து, திருடன் திருடாத படி சேமித்து வைப்பவர்கள்.*

3. மட்டுமல்ல, கர்த்தருடைய ஆலயம் கட்டப்படும் படியாய் *இவர்கள் சவதரித்த எல்லா பொருட்களுக்காகவும் நன்றி கூறினார்கள். இந்த பொருட்கள் எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி, உமக்கு கொடுத்தோம். எல்லாம் உம்முடையது* என தாவீது கூறினார். 1 நாளாகமம் 29: 14, 16.

4.அப்படியானால் *கர்த்தருடைய ஆலயத்தை கட்டி எழுப்ப , கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்களை, பொருட்களை எவ்வளவு கவனமாய் பாதுகாத்து சேமித்து வைத்தார்* என்பதை நாம் உணருகிறோம் அல்லவா?

நம்முடைய வாழ்க்கையிலும் *நம்மை அவருடைய பரிசுத்த ஆலயமாக கட்டி எழுப்ப, அநேக ஆசீர்வாதங்களை, பொக்கிஷங்களை, ஆஸ்தி ஐசுவரியங்களை, பொருட்களை, கர்த்தர் நமக்கு தந்திருக்கிறார். இதை நாம் அறிந்து அவருக்கு நன்றி கூறுகிறோமா? அவற்றை பாது காக்கிறோமா? நம்மை விசாரிக்கும் இயேசுவிடம், பரிசுத்த ஆவியானவரின் காவலுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?* நம்மை நாமே ஆராய்வோம் .

5. ஆம், இதற்காகவே *எஸ்றா உபவாசத்தை கூறினார். நாங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை தாழ்த்துவதற்கும், எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும், எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியில் நடத்துவதற்காகவும் எஸ்றா உபவாசத்தை கூறினார்*. எஸ்றா 8: 21.

ஆம், நம்முடைய சகல பொருட்களாகிய *கர்த்தர் தந்த ஆஸ்தி, ஐசுவரியம், வீடு, வாகனம் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக நாம் ஜெபிக்க, உபவாசிக்க தவறியதால் சத்துருவாகிய பிசாசு அநேக மனிதர்களால், துன்மார்க்கரால் கர்த்தர் நமக்கு ஆசீர்வாதமாக தந்த பணம், சொத்து, பொருட்களை கொள்ளையடித்து, சூறையாடி விட்டான் அல்லவா?*

ஆம்,*இந்த குறைகளை அறிக்கையிட்டு கர்த்தர் தந்த ஆசீர்வாதங்களை நம்மை விசாரிக்கும் நம் கர்த்தருடைய, ஆவியானவருடைய கரத்தில் ஒப்புவித்து நம்முடைய பொருட்களின் பாதுகாப்புக்காகவும் ஜெபிப்போம். உபவாசிப்போம். தாவீது சிக்லாகிலே இழந்து போனவைகளை திரும்ப பெற்றுக் கொண்டான்.* அதை போலவே நம்முடைய வாழ்க்கையிலும் நாம் இழந்து போனவைகளை கர்த்தர் மீட்டு தருவார். பாது காப்பார். ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: *19.08.2023*

▶️ *ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்* ◀️

☄️ *"மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்."* (1 நாளாகமம் 25:1).

💥 ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களைப் போலவே, சங்கீதக்காரர்களும் 24 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டனர், ஒவ்வொரு வகுப்பும் 15 நாட்களுக்குச் சேவை செய்தனர். *சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்.* தேவாலயச் சேனைகளின் பிரபுக்கள் சங்கீதக்காரர்களை தெரிந்தெடுப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் தாவீதுக்கு உதவி செய்தனர். ஏனெனில் தாவீது சங்கீத ஊழியத்திற்கும் காவல் ஊழியத்திற்கும் இடையிலான ஒற்றுமையை உணர்ந்திருந்தான். *ஆராதனை மற்றும் துதி சேவை ஆகியவை இராணுவ சேவையைப் போலவே நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.*

💥 இந்த இசை ஊழியத்தின் முக்கிய நோக்கம், *தேவனை உயர்த்துவதும் மகிமைப்படுத்துவதும்* ஆகும். பாடகர்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்தவும் துதிக்கவும் நியமிக்கப்பட்டனர்.

💥 விசுவாசிகளுக்கு பவுலின் அறிவுரை: *“ஆவியினால் நிறைந்து, சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.”* (எபேசியர் 5:18-20). இப்போதும் தேவாலய வழிபாட்டில் இசையோடு பாடுவது என்பது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இது பயபக்தியோடு மிகவும் *ஒழுங்கும் கிராமமுமாக* செய்யப்பட்ட வேண்டியதொன்றாகும்.

💥 தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் *கர்த்தரைப் புகழ்ந்து பாடும் இந்த சேவைக்காக குறிப்பிட்ட சிலரைப் பி பிரித்தெடுத்தார்கள்.* இவர்கள் இந்த சேவைக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டனர்.

🔺 *தேவன் தம்முடைய ஜனங்களை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பிரித்தெடுக்கிறார்.* வேதத்தின் மூலம் "பிரித்தெடுப்பதன் முக்கியத்துவத்தை* ஆராய்வோம்.

⚡ *“உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.”* (லேவியராகமம் 20:24). தேவன் இஸ்ரவேலை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தார். ஏன் என்று வேதம் விளக்குகிறது: *“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.”* (உபாகமம் 7:6). அவர் இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாக ஒரு சிறப்புப் பொக்கிஷமாகத் தெரிந்தெடுத்தார். அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்ய அவர் அவர்களைத் தெரிந்தெடுத்தார்; அதன்படி அவர்கள் அவருடைய கற்பனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பதிலுக்கு, அவர் அவர்களை மிகவும் ஆசீர்வதிப்பார்; அவர்களை வழிநடத்துவார்.

⚡ *“இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.”* (எண்ணாகமம் 8:14). மற்ற இஸ்ரவேலர்களில் இருந்து லேவியர்களை தேவன் தம்முடையவர்களாயிருக்கப் பிரித்தெடுத்தார். வேதம் இந்த நோக்கத்தை விளக்குகிறது: *"அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்."* (உபாகமம் 10:8). லேவியர்கள் பரிசுத்த ஊழியத்துக்காகப் பிரித்தெடுக்கப்பட்டனர். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதிலும், வாசஸ்தலத்திலும், பின்னர் ஆலயத்திலும் கர்த்தருக்குப் பணிவிடை செய்வதிலும், அவருடைய நாமத்தில் ஆசீர்வதிப்பதிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

⚡ தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், பூமியில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் *நாம் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளோம்;* அதனால் நாம் அவருடன் என்றென்றும் இருக்க தகுதியுடையவர்களாக மாற்றப்படுவோம். பவுல் கூறுகிறான்: *“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்."*(ரோமர் 12:2). (ரோமர் 12:2). இந்த உலகத்தின் முறைமை சாத்தானுக்கு சொந்தமானது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த முறைமையிலிருந்தும், அந்த சிந்தனை மற்றும் செயல்பாட்டிலிருந்தும் இரட்சிக்கப்பட்டிருக்கிறான். *நமது புதுப்பிக்கப்பட்ட ஆவி பரலோகத்தின் முறைமைகளோடு இசைந்துபோகிறது.* நமது மாம்சம். நமக்குள் இப்போது இருக்கும் பரிசுத்த ஆவியுடன் இசைந்துபோக, *நம் மனம் புதுப்பிக்கப்பட வேண்டும்.* இயேசு திரும்பிவரும்வரை இந்த செயல்முறை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாமும் அவரைப் போலாவோம்.

🔹 *தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், பூமியில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் நாம் உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*

1️⃣ *ஆராதனை மற்றும் துதி சேவை ஆகியவை இராணுவ சேவையைப் போலவே நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.*

2️⃣ *தேவன் தமக்கென்று ஒரு விசேஷ பொக்கிஷமாக இருக்க இஸ்ரவேலை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தார்.*

3️⃣ *தேவன் மற்ற இஸ்ரவேல் புத்திரரிலிருந்து லேவியரை பரிசுத்த ஊழியத்துக்காகப் பிரித்தெடுத்தார்.*

4️⃣ *தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், பூமியில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் உலகத்திலிருந்து தேவன் நம்மைப் பிரித்தெடுத்துள்ளார்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: 1. நாளாகமம் 27

☘️☘️☘️☘️☘️☘️.

"கோத்திர தலைவர்கள் மற்றும் மாநில அதிகாரிகள்"

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

கோத்திர தலைவர்கள் ஆசாரியர்கள் அல்லது இராணுவத் தலைவர்கள் அல்ல, ஆனால் இஸ்ரேல் ராஜ்யத்தின் சிவில் சேவையில் நிர்வாகிகள்ஆவர்.

தாவீது அரசனாக இருந்த காலத்தின் மகத்துவம் அவனது அமைதியான நிர்வாகத்தின் செயல்களில் வெளிப்பட்டது.

.பழைய ஏற்பாட்டின் மிகவும் சிக்கலான அதிகாரிகளில் யோவாப் ஒருவனாவான்.

அவன் தாவீதுக்கு உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனால் அவன் முழுமையாகக் கீழ்ப்படியவில்லை.

தாவீதின் நலன் கருதி அவன் தாவீதுக்கு கீழ்ப்படியவில்லை.

மேலும் அவன் தந்திரமானவன்.

.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: *Insights from 1 Chronicles 25 - 27*

Chapter 25:

1. We understand about the ministry of prophecy.

2. Various groups with leaders were assigned the tasks of prophesying. These groups were mostly led by their fathers, sons being the group.

3. We understand the power and the impact of a father upon children. Example: Father was a prophetic minister, and trained the children the same way.

4. We understand that a leader, needs a seer, who sees in the Spirit to guide the leader, in decision making.

We need to pray that we serve the Lord faithfully in the capacity God gives us. We need to pray that every head /Father in every family leads, and trains the family in God's ways.

We should pray that our leaders will appoint seers to carry out God's plan in the land.

Chapter 26 and 27:

We read about how meticulously every detail was planned, organized and managed. This is more organized than another corporate in this world, without usage of any software.

These chapters reveal to us the importance of staying organized, the importance of every job from priests to the gatekeepers, the importance of having an attitude of heart to serve the Lord in any capacity, any role.

May we understand and implement what we read.

*God bless you*

*Sis.Anita Thumma*

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *மீண்டும் மோசே* 🍂

நாளாகமம் புத்தகத்தில் திடீரென்று மோசேயின் சந்ததி தோன்றுகிறது. மோசேக்கு *கெர்சோம் மற்றும் எலியேசர்* என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். *செபுவேல்* கெர்சோமின் மகன் மற்றும் மோசேயின் பேரன்.

எலியேசருக்கு ரெகபியா என்ற ஒரே ஒரு மகன் இருந்தான். ஆனால் ரெகபியாவுக்கு பல மகன்கள் இருந்தனர். எலியேசர் மூலம் மோசேயின் பேரன்களில் ஒருவரான *செலோமித்* (1 நாளா 26:25). தாவீதின் ஆட்சியின் போது *செபுவேலும் செலோமித்தும்* ஒரு முக்கியமான பதவியை வகித்தனர்.

📖 *மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான் (1 நாளா 26:24).*

📖 *கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள் (1 நாளா 26:27).*

நாளாகமம் புத்தகத்தில் இரண்டு கருவூலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று *தேவனுடைய ஆலயத்தின் கருவூலம்*. மற்றொன்று *அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் கருவூலம்.* மோசேயின் பேரன் *செபுவேல்* பொக்கிஷ பிரதானியாய் இருந்தான்.

அர்ப்பணிக்கப்பட்ட பொருட்களின் கருவூலங்கள் அனைத்தையும் செலோமித்தும் அவருடைய சகோதரர்களும் கவனித்து வந்தனர். *தேவனாகிய கர்த்தர் குறிப்பிட்ட திறமைகளைக் கொடுத்து, அவர்களின் வம்சவளியைப் பொருட்படுத்தாமல் அதற்கேற்ப குறிப்பிட்ட நபர்களைப் பயன்படுத்துகிறார்.*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

_ஆகஸ்ட் 19, 2023_

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: *🎹🎶MUSICAL WORSHIP🎶🎹*

[DAY - 127] 1 Chronicles- Ch. 25

☄️In 1 Chronicles chapter 25, we gain insight into the remarkable role that music played in King David's court.

1️⃣ *THE WORSHIPFUL NATURE OF MUSIC*

🔹The musicians appointed in David's court were tasked with leading the congregation in offering praise and thanksgiving to God.

🔹Their melodies and harmonies became a mode of worship, creating an atmosphere of reverence and awe.

🔹Through their musical offerings, the people were able to express their love, adoration, and gratitude to the Almighty.

2️⃣ *INSPIRATION AND PROPHECY*

🔸Musicians prophesied with harps, lyres, and cymbals.

🔸This suggests that their music had the power to evoke deep emotions, stir the spirit, and even communicate divine messages.

🔹The melodies composed and performed by these skilled musicians had the ability to touch the hearts of the listeners, bringing revelations and spiritual insights.

3️⃣ *PROMOTING UNITY AND ORDER*

🔺He organized the musicians into specific divisions, ensuring that each group had a defined role and responsibility.

🔺These divisions were established based on the skill and training of the musicians, allowing for a harmonious blend of voices and instruments.

🔺By structuring the music ministry in this way, David created a sense of unity and purpose among his court musicians, fostering a cohesive and well-orchestrated worship experience.

4️⃣ *TRAINING AND LEGACY*

▪️David's court musicians were not only gifted individuals but were also committed to passing down their musical knowledge and skills to future generations.

▪️The number of trained musicians was 288, indicating an emphasis on education and mentorship.

▪️The musical heritage of David's court would continue, ensuring that future generations would be equipped to serve in worship.

♥️ *LIFE LESSONS*

💥The role of music in David's court, was multi-faceted and profound.

💥Music served as a powerful channel for worship, inspiration, prophecy, unity, and the preservation of a rich musical legacy.

💥Through the dedication and skill of the court musicians, the kingdom of David experienced the transformative power of music, enabling them to draw closer to God and to one another.

*‼️LET US EMBRACE MUSIC AS A MEANS TO WORSHIP‼️*

Princess Hudson

[19/08, 07:36] (W) Arun Selva Kumar: ✝️ *TO HAVE THE SPIRIT OF PROPHESY* ✝️ 1 Chron 25-27✝️

🔹Sons of Asaph, Jeduthun and Heman had ministry of music for worship in the house of the Lord under their fathers. Asaph, Jeduthun and Heman themselves were under the king. There was *prophesy under the order of the king*. There was *prophecy with the harp to give thanks and to praise the Lord*. 25:1-6. *The Spirit of prophesy and the ministry of worship and thanks giving was inseparable*. *They heard* from God, *wrote* psalms as they *received* from God. What about us and our times? *Do we receive or hear from God?* Or do we copy from google only?

🔹We can study in a prophetic school to get certificate after certificate to show everyone and never give a single word of prophesy in our church or fellowship. We can attend courses or schools and colleges to learn for years ‘to learn to worship God and sing unto the Lord’ without giving a single word of prophesy. If we think we can be with God and Jesus and sing and praise Him without the help of the Holy Spirit, we are terribly mistaken. *There is no ministry of God that can be done without the help of the Holy Spirit*. Are we singing and worshiping Sunday after Sunday and never hearing anyone prophesying? Then we are….. *having a form of godliness but denying its power*.…. 2 Tim 3:4-5.

🔹The Spirit moved when David used to play harp. Whenever Saul was tormented by an evil spirit, David would play the harp. Then relief would come to Saul; he would feel better and the evil spirit would leave him. 1 Sam 16:23. There is deliverance in music worship.

I have been to fellowships where Spirit is eagerly waiting for the worshippers to start singing. He moves in such mighty ways when they sing and praise the King of Kings, not just prophecies, but healings and deliverances also happen. If we are happy reading about it only in the Bible but at the same time, hope, desire and pray for our material benefits and better living standards in this life as we praise and thank God, then we are of all people most to be pitied. 1 Cor 15:19.

🔹Why is prophesy shunned by Christians? Do we hate the Holy Spirit so much that we want nothing to do with Him? Or is it because we do not want to hear from God? Do we have testimony of Jesus? ..*For the testimony of Jesus is spirit of prophesy*. Rev 19:10. For where there is testimony of Jesus, there will be spirit of prophesy! Do we have the spirit of prophesy?

🔹🔸🔹🔸🔹🔸🔹

God bless!🙂

Dr. Sangeeta Thomas.

▶️ *ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்* ◀️

☄️ *"மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்."* (1 நாளாகமம் 25:1).

💥 ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களைப் போலவே, சங்கீதக்காரர்களும் 24 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டனர், ஒவ்வொரு வகுப்பும் 15 நாட்களுக்குச் சேவை செய்தனர். *சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்.* தேவாலயச் சேனைகளின் பிரபுக்கள் சங்கீதக்காரர்களை தெரிந்தெடுப்பதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் தாவீதுக்கு உதவி செய்தனர். ஏனெனில் தாவீது சங்கீத ஊழியத்திற்கும் காவல் ஊழியத்திற்கும் இடையிலான ஒற்றுமையை உணர்ந்திருந்தான். *ஆராதனை மற்றும் துதி சேவை ஆகியவை இராணுவ சேவையைப் போலவே நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.*

💥 இந்த இசை ஊழியத்தின் முக்கிய நோக்கம், *தேவனை உயர்த்துவதும் மகிமைப்படுத்துவதும்* ஆகும். பாடகர்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்தவும் துதிக்கவும் நியமிக்கப்பட்டனர்.

💥 விசுவாசிகளுக்கு பவுலின் அறிவுரை: *“ஆவியினால் நிறைந்து, சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.”* (எபேசியர் 5:18-20). இப்போதும் தேவாலய வழிபாட்டில் இசையோடு பாடுவது என்பது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இது பயபக்தியோடு மிகவும் *ஒழுங்கும் கிராமமுமாக* செய்யப்பட்ட வேண்டியதொன்றாகும்.

💥 தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் *கர்த்தரைப் புகழ்ந்து பாடும் இந்த சேவைக்காக குறிப்பிட்ட சிலரைப் பி பிரித்தெடுத்தார்கள்.* இவர்கள் இந்த சேவைக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டனர்.

🔺 *தேவன் தம்முடைய ஜனங்களை குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பிரித்தெடுக்கிறார்.* வேதத்தின் மூலம் "பிரித்தெடுப்பதன் முக்கியத்துவத்தை* ஆராய்வோம்.

⚡ *“உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.”* (லேவியராகமம் 20:24). தேவன் இஸ்ரவேலை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தார். ஏன் என்று வேதம் விளக்குகிறது: *“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.”* (உபாகமம் 7:6). அவர் இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாக ஒரு சிறப்புப் பொக்கிஷமாகத் தெரிந்தெடுத்தார். அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்ய அவர் அவர்களைத் தெரிந்தெடுத்தார்; அதன்படி அவர்கள் அவருடைய கற்பனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பதிலுக்கு, அவர் அவர்களை மிகவும் ஆசீர்வதிப்பார்; அவர்களை வழிநடத்துவார்.

⚡ *“இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.”* (எண்ணாகமம் 8:14). மற்ற இஸ்ரவேலர்களில் இருந்து லேவியர்களை தேவன் தம்முடையவர்களாயிருக்கப் பிரித்தெடுத்தார். வேதம் இந்த நோக்கத்தை விளக்குகிறது: *"அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்."* (உபாகமம் 10:8). லேவியர்கள் பரிசுத்த ஊழியத்துக்காகப் பிரித்தெடுக்கப்பட்டனர். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதிலும், வாசஸ்தலத்திலும், பின்னர் ஆலயத்திலும் கர்த்தருக்குப் பணிவிடை செய்வதிலும், அவருடைய நாமத்தில் ஆசீர்வதிப்பதிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

⚡ தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், பூமியில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் *நாம் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளோம்;* அதனால் நாம் அவருடன் என்றென்றும் இருக்க தகுதியுடையவர்களாக மாற்றப்படுவோம். பவுல் கூறுகிறான்: *“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்."*(ரோமர் 12:2). (ரோமர் 12:2). இந்த உலகத்தின் முறைமை சாத்தானுக்கு சொந்தமானது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த முறைமையிலிருந்தும், அந்த சிந்தனை மற்றும் செயல்பாட்டிலிருந்தும் இரட்சிக்கப்பட்டிருக்கிறான். *நமது புதுப்பிக்கப்பட்ட ஆவி பரலோகத்தின் முறைமைகளோடு இசைந்துபோகிறது.* நமது மாம்சம். நமக்குள் இப்போது இருக்கும் பரிசுத்த ஆவியுடன் இசைந்துபோக, *நம் மனம் புதுப்பிக்கப்பட வேண்டும்.* இயேசு திரும்பிவரும்வரை இந்த செயல்முறை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாமும் அவரைப் போலாவோம்.

🔹 *தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், பூமியில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் நாம் உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நம்மால் சாட்சி சொல்ல முடியுமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்:*

1️⃣ *ஆராதனை மற்றும் துதி சேவை ஆகியவை இராணுவ சேவையைப் போலவே நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.*

2️⃣ *தேவன் தமக்கென்று ஒரு விசேஷ பொக்கிஷமாக இருக்க இஸ்ரவேலை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தார்.*

3️⃣ *தேவன் மற்ற இஸ்ரவேல் புத்திரரிலிருந்து லேவியரை பரிசுத்த ஊழியத்துக்காகப் பிரித்தெடுத்தார்.*

4️⃣ *தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும், பூமியில் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கும் உலகத்திலிருந்து தேவன் நம்மைப் பிரித்தெடுத்துள்ளார்.*

Dr. எஸ். செல்வன்

சென்னை

[19/08, 04:59] +91 99431 72360: நாள் : 127

19.08.2023

சனிக்கிழமை.

(1 நாளாகமம் : 25-27)

💐💐💐💐💐💐💐

*கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார்*.

(1 நாளா: 26-29)

*மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்*.

*தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்*.

★கர்த்தருடைய ஆலயத்தின் கட்டுமானப்பணிக்காக மனப்பூர்வமாகவும் உற்சாகமாகவும் தாவீது ராஜாவும் ஜனங்களும் கொடுத்ததைப்பற்றி வாசிக்கிறோம்.

★ கர்த்தரின் பணிக்கு உற்சாகமாக நாம் கொடுக்க வேண்டும்.

★ உற்சாகமாகக் கொடுக்கிறவர்களிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

★ உண்மையான இறைப்பணி, ஊழியம் எது என்று பார்த்து மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும்.

★ஆடம்பர வாழ்க்கைக்காக அப்பாவி ஏழை மக்களிடம் காணிக்கை என்ற பெயரில் வசூல் செய்யும் போலி ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

★ நம்முடைய வருமானங்களில் *தசமபாக காணிக்கை* செலுத்துவதில் வஞ்சனை செய்யாமல் இருத்தல் வேண்டும்.

★ ஐசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது. கர்த்தருடைய கரத்தில் வாங்கி கர்த்தருக்குக் கொடுக்கிறோம் என்பதை உணர்ந்து ஊழியங்களையும் கர்த்தருடைய பணிகளையும் தாங்குகிறவர்களாக செயல் படுவோமாக.

★தாராளமாக காணிக்கை கொடுப்பதினால் மட்டும் பரிசுத்தவான்களாக விளங்க முடியாது.

★நம்முடைய *இருதயத்தைக் கர்த்தருக்குக் காணிக்கையாக அர்ப்பணித்து* கர்த்தர் விரும்பும் வாழ்க்கை வாழ்வதையே கர்த்தர் விரும்புகிறார். அத்தகைய வாழ்க்கை வாழ்வோமாக.🙏

*ஆமென்*.

💐💐💐💐💐💐💐

✍️ Bhavani Jeeja Devaraj,

Nagercoil
Admin: Group No. 2068

[19/08, 04:59] +91 99431 72360: *பொருட்களுக்கு விசாரிப்புகாரர்.*

~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 நாளாகமம் 27: 25 - 31. *தாவீது ராஜாவின் பொருட்களுக்கு விசாரிப்புகாரர்கள் இருந்தார்கள்*

1. ஆம், தாவீது ராஜா தன்னுடைய பொக்கிஷங்கள் மேல், நிலத்தின் வருமான பண்டகசாலைகள் மேல், வயல் வெளியில் வேலை செய்கிறவர்கள் மேல், திராட்சை தோட்டங்களின் மேல், திராட்சை ரசம் வைக்கும் இடங்களின் மேல், ஒலிவ மரங்கள் மேல், முசுக்கட்டை விருட்சங்கள் மேல், எண்ணெய் கிடங்குகளின் மேல், சாரோனில் மேய்கிற மாடுகள் மேல், பள்ளதாக்குகளில் மேயும் மாடுகள் மேல், ஒட்டகங்கள் மேல், கழுதைகள் மேல், ஆடுகள் மேல் *அதாவது எல்லா பொருட்களின் மேலும் விசாரிப்புகாரரை வைத்தார்.*

2. விசாரிப்புகாரர் என்றால் யார்? இவர்கள் *தாவீது சம்பாதித்த சகல ஆசீர்வாதங்களையும், விசாரித்து , சேதமடையாதபடி பாதுகாத்து, திருடன் திருடாத படி சேமித்து வைப்பவர்கள்.*

3. மட்டுமல்ல, கர்த்தருடைய ஆலயம் கட்டப்படும் படியாய் *இவர்கள் சவதரித்த எல்லா பொருட்களுக்காகவும் நன்றி கூறினார்கள். இந்த பொருட்கள் எல்லாம் உம்மால் உண்டானது. உமது கரத்திலே வாங்கி, உமக்கு கொடுத்தோம். எல்லாம் உம்முடையது* என தாவீது கூறினார். 1 நாளாகமம் 29: 14, 16.

4.அப்படியானால் *கர்த்தருடைய ஆலயத்தை கட்டி எழுப்ப , கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதங்களை, பொருட்களை எவ்வளவு கவனமாய் பாதுகாத்து சேமித்து வைத்தார்* என்பதை நாம் உணருகிறோம் அல்லவா?

நம்முடைய வாழ்க்கையிலும் *நம்மை அவருடைய பரிசுத்த ஆலயமாக கட்டி எழுப்ப, அநேக ஆசீர்வாதங்களை, பொக்கிஷங்களை, ஆஸ்தி ஐசுவரியங்களை, பொருட்களை, கர்த்தர் நமக்கு தந்திருக்கிறார். இதை நாம் அறிந்து அவருக்கு நன்றி கூறுகிறோமா? அவற்றை பாது காக்கிறோமா? நம்மை விசாரிக்கும் இயேசுவிடம், பரிசுத்த ஆவியானவரின் காவலுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறோமா?* நம்மை நாமே ஆராய்வோம் .

5. ஆம், இதற்காகவே *எஸ்றா உபவாசத்தை கூறினார். நாங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை தாழ்த்துவதற்கும், எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும், எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியில் நடத்துவதற்காகவும் எஸ்றா உபவாசத்தை கூறினார்*. எஸ்றா 8: 21.

ஆம், நம்முடைய சகல பொருட்களாகிய *கர்த்தர் தந்த ஆஸ்தி, ஐசுவரியம், வீடு, வாகனம் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக நாம் ஜெபிக்க, உபவாசிக்க தவறியதால் சத்துருவாகிய பிசாசு அநேக மனிதர்களால், துன்மார்க்கரால் கர்த்தர் நமக்கு ஆசீர்வாதமாக தந்த பணம், சொத்து, பொருட்களை கொள்ளையடித்து, சூறையாடி விட்டான் அல்லவா?*

ஆம்,*இந்த குறைகளை அறிக்கையிட்டு கர்த்தர் தந்த ஆசீர்வாதங்களை நம்மை விசாரிக்கும் நம் கர்த்தருடைய, ஆவியானவருடைய கரத்தில் ஒப்புவித்து நம்முடைய பொருட்களின் பாதுகாப்புக்காகவும் ஜெபிப்போம். உபவாசிப்போம். தாவீது சிக்லாகிலே இழந்து போனவைகளை திரும்ப பெற்றுக் கொண்டான்.* அதை போலவே நம்முடைய வாழ்க்கையிலும் நாம் இழந்து போனவைகளை கர்த்தர் மீட்டு தருவார். பாது காப்பார். ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

[19/08, 04:59] +91 99431 72360: *நாள் 127 / 365*

*1 நாளாகமம் 25 -27*

*தேவனைப் பாடித் துதிப்போம்*..

எருசலேம் தேவாலயம்.. இந்த உலகத்திற்கு ஒரு சாட்சியாக இருக்கப் போகிறது என்பதை எதிர்நோக்கித் தாவீது செயல்பட்டான்.

அதனால்தான்.. எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம்..

ராஜாக்கள் உமக்குக் காணிக்கைக் கொண்டு வருவார்கள் என்று பாடினான்.

(சங் .68: 29)

*தேவனை ஆராதிக்கும் போது..*

*தேவனை மகிமைப்படுத்துவது* *மட்டுமல்ல ..அது தேசத்திற்கே* *ஆசீர்வாதமாக இருக்கும்* *என்பதைத் தாவீது நம்பினான்*.. *அதனால் தேவாலயம்* *கட்டப்படும் முன்னே.. தேவாலயப்* *பாடகர் குழுவைத் திட்டம்* *பண்ணினான்*. (1 நாளா25:1).

*அந்தப் பாடகர் குழு..* *எருசலேமிலே கூடிக் கர்த்தரைத்* *துதித்தார்கள்*.

அவர்களும் தாவீதைப் போல.. தேவ ஆவியைப் பெற்றவர்கள்.. இசைக்கருவி மீட்டுபவர்கள்.. சங்கீதம் பாடுபவர்கள்..

அவர்கள்.. *ஆசாப்*, *ஏமான்*, *எதித்தூன்* என்பவர்களின் குமாரரில் சிலராகும்.

வேதத்தில்,ஆசாபின் 12 சங்கீதங்கள்.. ( சங்கீதம் 50,73-83)..

ஏமானின் ஒரு சங்கீதம்..

( சங்கீதம் 88 ) இடம் பெற்றுள்ளது.

அவர்கள் சுரமண்டலங்களாலும், தம்புருகளாலும்,

கைத்தாளங்களாலும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்கள் என்று கூறப்பட்டிருப்பது..

அவர்கள் எதிர்காலத்தைக் குறித்த வெளிப்பாடுகளை கூறுபவர்கள் என்பதுமட்டும் பொருளல்ல..தேவனுடைய ஆவியினால் நிறைந்து.. பாடித் துதித்து..கர்த்தரை மகிமைப்படுத்துபவர்கள் என்பதும் பொருளாகும்..

தேவனை ஆராதிக்கும்போது..

பாடல்களைப் பாடுவது, மாபெரும் சந்தோஷங்களில் ஒன்றாகும்.

இதிலே தேவனும்

பிரியப்படுகிறார்.

பாடல்கள் பாடி ஆராதிக்கும் வேளையில் மட்டும்தான்.. அதில் பங்குபெறுவோர் அனைவரும்.. ஆவிக்குள்ளாக ஒன்றிணைய முடியும்.

பாடலின் வார்த்தைகளை உணர்ந்து ..இருதயத்தின் ஆழத்திலிருந்து பாடலைப் பாடி ஆவியோடும் கருத்தோடும் ஆராதிக்கும்போது.. *ஆண்டவரின் பிரசன்னம் அங்கே* *வெளிப்படும்*.

*அது உலகக் காரியங்களை* *மறக்கச் செய்யும்*.

*ஆவிக்குரிய உற்சாகத்தைக்* *கொடுக்கும்*.

*ஆத்துமாவிலே, பக்தி* *விருத்தியை உண்டாக்கும்*. *தேவனுடைய வார்த்தைகளை* *ஏற்றுக்கொள்ள.. மனதை * *ஆயத்தப்படுத்தும்*.

இயேசு கிறிஸ்துவும்.. சீஷர்களும், பாடல் பாடினார்கள்.. (மத் .26:30) பவுல் அப்போஸ்தலன், பாடல் பாடும்படி ஆலோசனை கொடுக்கிறான்..

( எபே .5 :19 , கொலோ. 3: 16)

தாவீது ,சவுலுக்குத் தப்பியோடின வேளையிலும், என் இருதயம் ஆயத்தமாய் இருக்கிறது..தேவனே என் இருதயம் ஆயத்தமாக இருக்கிறது..

நான் பாடிக்கீர்த்தனம் பண்ணுவேன் என்று பாடினான்.

(சங் .57:7)

*தேவன் நம்மை அவரைத்* *துதிப்பதற்காகவே* *சிருஷ்டித்திருக்கிறார்..*( ஏசா.43 : 21)

*நாம் இசைக்கருவி மீட்ட* *வேண்டியதில்லை*..

*ஆனால் நம் இருகரம் தட்டி*.. *பாடல்களைப் பாடி..அனுதினமும் தேவனைத்*

*துதிக்கலாமல்லவா*....

மாலா டேவிட்

[19/08, 04:59] +91 99431 72360: 17.8.23

1 நாளாகமம்

17-21

👓👓👓👓👓

Sist. எஸ்தர் ராஜசேகரன்

💟💟💟💟💟💟

*தலையில் க்ரீடம்*

*மனதில் தலைகனம்* :

📝 தாவீது தன் சத்துருக்களை எல்லாம் தோற்கடித்து, தேவனுடைய பெட்டியை கொண்டு வந்து வைத்து, ஆராதனை செய்து கர்த்தரை தொழுது கொண்டு, ஜனங்களை ஆசீர்வதித்து.

நான் கேதுரு மரத்தால் செய்ய ப்பட்ட வீட்டிலே வாசம் பண்ணுகிறேன். கர்த்தருடைய பெட்டிக்கு ஏற்ற இடம் இல்லையே என்று நாத்தனுடன் பேசிய பொழுது,

உம் இருதயத்தில் உள்ளபடி செய்யும், தேவன் உம்மோடு இருக்கிறார் என்று சொல்லுவதை கேட்ட கர்த்தர் உடனே அந்த ராத்திரியிலே தாவீதிடம் சொல்ல சொன்ன வார்த்தை :

ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ராஜாவாக்கினேன். நான் வாசமயிருக்க *நீ எனக்கு ஆலயத்தை கட்ட வேண்டாம் என்று திட்ட* வட்டமாக கூறி அனுப்பினார்.

இதை கேட்ட *தாவீது சோர்ந்து போக வில்லை.*

இம்மட்டும், இப்படியாக என்னை நடத்தி கொண்டு வந்ததிற்கு நான் எம்மாத்திரம்...

உம்முடைய வார்த்தையின் படியே செய்தருளும்.. என்று *தாழ்மையுடன் ஏற்று கொண்டான்.*

*மோசே கூட நீ இந்த கானான் தேசத்த்தில் பிரவேசிபதில்லை* *என்று கர்த்தர் சொன்ன பொழுது, வேறு பதில் சொல்ல வில்லை என்று நாம் வாசித்தோம் அல்லவா?*

*தேவ மனிதர்கள் கர்த்தர் சித்தமே என் விருப்பம் என்று வாழ்ந்ததை பார்க்க முடிகிறது.*

📝நமக்கு ஒரு சுய விருப்பம் இருந்தாலும், ஆனால் கர்த்தர் அங்கீகரிக்க வில்லை என்று அறிந்தால் அதை விட்டு விட வேண்டும். என்ற பாடத்தை கற்று கொள்ள முடிகிறது.

*அப்படி எத்துணை பேர் தேவ சித்தத்தை ஏற்று கொண்டு வாழ முடிகிறது.*

📝அவர்களுக்கு அப்படி நடக்கிறது, எனக்கு அப்படி ஏன் நடக்க வில்லை என்று எண்ணம்.. ஒவ்வொருவருக்கும் கர்த்தர் ஒரு திட்டம், வழி உண்டு..

📝கர்த்தர் சொன்ன காரியத்தை குறித்து பின்பு தாவீது ஏற்று கொண்டு, எதிரிகளை எல்லாம் தோற்கடித்தான்.

*தாவீது போன இடத்தில் எல்லாம் கர்த்தர் அவனை காப்பாற்றினார்* .

20.2. அம்மோன் புத்திரரை முறியடித்து, அவர்கள் ராஜாவின் *இரத்தின க்ரீடத்தை எடுத்து கொண்டான்* . அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது..

📝பின்பு எருசலேமுக்கு திரும்பின

*தாவீதை சாத்தான் இஸ்ரேவேலை தொகை யிட ஏவி விட்டது 21.1*

ஆம் *பூமிக்குரிய க்ரீடம் தலையில் ஏறின உடனே, அந்த உலக பெருமையும், மேன்மையும் உள்ள நுழைந்தது* ..

📝ஆம் ஒரு சில வெற்றிகள் கண்டஉடனே சிலர் தலை கால் தெரியாமல் நடப்ப்பார்கள்..

செல்வமும், செழிப்பும், புகழும் வந்து விட்டால், மனிதர்களை கையில் பிடிக்க முடியாது... 🙂

📝ஆனால் அவை அல்ல உண்மையான வெற்றியும் அல்ல ; நிரந்தரமும் அல்ல.

தோல்வி வரும்பொழுது துவலாமலும், வெற்றி வரும் பொழுது துள்ளமாலும், எல்லாவற்றையும் சரியான நிதானத்துடன், கையாளும் பக்குவம் தேவை..

*ஒருவனை உயர்த்துவதும், தாழ்த்துவதும் அவரே..*

எனவே எல்லா நிலையிலும் அவரை கன படுத்த வேண்டும், அவரையே சார்ந்திருக்க வேண்டும்.

V 7 இந்த காரியம் கர்த்தருடைய பார்வைக்கு ஆகாத படியினால் அவர் இஸ்ரேவேலை வாதித்தார்.

இதற்கும் முன் எல்லாவற்றையும் கர்த்தரிடம் கேட்டு, கேட்டு செயல் பட்ட தாவீது *இப்பொழுது, பெருமையின் க்ரீடத்தினால் மதி மயங்கி, தன் சுய விருப்பத்தை அரங்கேற்றினான்*

📝யார் சொல்லியும் கேட்காமல் தீவிரமாக, ஜனத்தை இலக்கம் பார்த்த முடித்த உடனே

அதன் பலன், கர்த்தரிடம் இருந்து வந்தது: தண்டனை...

📝மூன்று தண்டனைகளை கொடுத்து, அதில் ஒன்றை தெரிந்தெடுக்க வைத்தார்.:

3 வருடம் பஞ்சம்,

3 மாதம் சங்காரம்,

3 நாட்கள் கொள்ள நோய் என்று...

📝 கொள்ளை நோயை ஏற்று கொண்ட பொழுது, ஒன்றும் அறியா ஜனத்தில் 70,000 பேர், மடிந்தார்கள்...

இதை கண்ட ராஜா மனம் உடைந்து,

*நான் தானே பாவம் செய்தேன், இந்த ஆடுகள் என்ன செய்தது,* உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கு விரோதமாக, என் தகப்பன் வீட்டிற்கு விரோதமாக இருப்பதாக என்று, *ஜனங்கள் சாவதை காண முடியாமல் தவித்தான்..*

இது தான் ஒரு நல்ல தலைவனின் குணமாக இருக்க வேண்டும்..

தவறு செய்தவனுக்கே தண்டனை என்பது தான் சத்தியம்..

📝 *ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் எல்லோர் மேலும் இருந்த பாவ தண்டனையை தன் மேல் ஏற்றி கொண்டு, பாவமில்லாத* **அவர்*

*நமக்காக பாவமாகி தண்டனையை *சிலுவையின் மேல் ஏற்று கொண்டார்.*

*மரணத்தை ஜெயமாக விழுங்கினார்.*

📝ஒர்னான் களத்தில் தேவதூதன் வந்து நின்று அங்கே பலி பீடம் கட்ட கர்த்தர் கட்டளையிட அந்த நிலைத்தை 600 சேக்கல் பொன் கொடுத்து வாங்கி, அங்கே பலி பீடம் கட்டி சர்வாங்க தகனபலிகளை செலுத்தினான்.

📝 *ஒரு காரியம் இறுதியில் தேவ திட்டங்களை நிறைவேற்ற கூடியதாக மாரும்பொழுது அதில், தேவ கிருபை இருப்பதை அறிய முடிகிறது..*

📝சத்துரு சோதிக்க வரும்பொழுது அவன் பொல்லாங்கினால் சோதிக்கிறவன் என்று நாம் அறிவோம். ஆனால் *அந்த தீமையை கர்த்தர் நன்மையாக மாற்றி முடிப்பார்.*

நாம் சாதாரனமனிதர்களாக நம்மை சத்துருவின் சோதனையில் விழ நேர்ந்தாலும், கர்த்தர், நமக்கு நன்மையாக மாற்றி ஆசீர் வதிப்பார்... கர்த்தர் கை விட மாட்டார்..

கர்த்தர் சோதனையிலிருந்து நாம் தப்பித்து கொள்ளும் ஞானத்தையும் தருவார். *அவர் ஒருக்காலும் பொல்லாங்கினால் சோதிக்கிற தேவன் அல்ல.. 👓👓👓👓👓👓*

[19/08, 04:59] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*

*நாள் 127*

*19.08.2023*

*சனிக் கிழமை*

*1 நாளாகமம் 25 - 27*

*அகிதோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக் காரனாயிருந்தான் ; அற்கியனாகிய ஊசாயி ராஜாவின் தோழனாயிருந்தான். 1 நாளா 27 : 33*

இங்கு கூறப்பட்ட , தாவீது ராஜாவின் தோழனாகிய அற்கியனாகிய ஊசாயி என்பவன் உயிர் காக்கும் தோழனாக இருந்தார் ; தாவீது ராஜா தனது குமாரனாகிய அப்சலோமால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட போது , தன் தலையை மூடிக்கொண்டு , வெறுங்காலுடன் நடந்து ஒலிவ மலையின் மேல் ஏறிச்செல்கிறார்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட தாவீதின் உத்தம தோழனாகிய ஊசாயி , தாவீது ராஜாமலையுச்சியில் தேவனைப் பணிந்து கொண்ட போது , அவரண்டையில் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டும் தலையின் மேல் புழுதியைப் போட்டுக்கொண்டும் , வந்து நின்றான். இந்த துக்கமான நேரத்தில் தாவீது ராஜாவை உடனிருந்து தேற்றும் படி வந்தான்.

ஆனால் தாவீது ராஜா அவனைப் பார்த்து : நீ என்னோடு நடந்து வர வேண்டாம் ; வந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய் ; ஆனால் நீ அப்சலோமிடம் சென்று , அங்கு எனக்கு விரோதமாக அகித்தோப்பேல் அப்சலோமிற்குக் கொடுக்கும் ஆலோசனையை , எனக்காக அபத்தமாக்கி போடுவாயாக என்றார்.

இதைக் கேட்ட ஊசாயி உடனே தாவீது ராஜாவின் சொற்படி , அப்சலோமிடம் கடந்து சென்று , அப்படியேச் செய்தான் ; தாவீது ராஜாவும் காப்பாற்றப்பட்டு , மீண்டும் அரியணை ஏறினார்.

ஊசாயி அகிதோப்பேலைப் போலல்லாது , தாவீது ராஜாவின் உத்தம தோழன் என்பதை தனது செயலின் மூலம் நிரூபித்து விட்டார். *உயிர்காப்பான் தோழன்* என்ற பழமொழிக் கேற்ப தாவீது ராஜாவின் உயிரைக் காப்பாற்றி , மீண்டும் அவர் ராஜாவாக முடிசூடக் காரணமாயிருந்தவர் இந்த ஊசாயி என்றால் மிகையாகாதல்லவா ?

எனவே பிரியமானவர்களே , நாமும் நம்மோடு பழகும் நமது நண்பர்களுக்கும் , மற்றும் அயலகத்தாருக்கும் இப்படிப்பட்ட உத்தம அன்பை விளங்கச்செய்வோமாக ! அப்படிப்பட்டக் கிருபையை தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தந்தருள்வாராக.

*ஆமென் ! அல்லேலூயா ! !*

Rajam Theogaraj , Palayamkottai .

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.