Type Here to Get Search Results !

1 Chronicles 28,29 - 2 Chronicles 1 Bible Study Tamil | நாளாகமம் ஆராய்ச்சிக் கட்டுரைகள் | Jesus Sam

[20/08, 08:05] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*

*DAY 128, 20/08/2023 SUNDAY*

*1 CHRONICLES : 28 - 29*
*2 CHRONICLES : 01*

*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇‍♂️
[20/08, 08:05] (W) Arun Selva Kumar: .
. *GIVING WILLINGLY.*

King David wanted to build the temple of the Lord.. *Palatial structure...for the Lord.* (1 Chronicles.29:1) He was a shepherd boy and was thankful to God who chose him as the King of Israel. He wanted to do the best possible for the LORD. He arranged huge quantities of gold, silver, bronze, iron, wood, marble...(1 Chro.29:2) *Besides, in my devotion to the temple of my God, I now give my personal treasures of gold and silver for the temple of my God..*(1 Chro.29:3).

*"Then the leaders of families, the officers of the tribes of Israel....GAVE WILLINGLY"* (1 Chro.29:6)

The giving of King David became a model for people that they also gave willingly, freely and whole-heartedly. David was able to give because of his understanding that, *"Everything comes from you, and we have given you only what comes from your hand".* (1 Chro. 29:14)

For constructing God's temple, gold, silver, bronze, Iron, wood, marble...everything was available in plenty and the wages and needs of all the workers were met because David and the people *gave willingly.*

What is the situation today? Millions of people never got a chance to hear the Gospel even today as there is nobody to go and share Gospel with them. *Who will take the Gospel to those needy areas, to those who never heard it?*

The Lord's work is affected in lots of places due to lack of resources. In many places, no proper salary or facilities for those who are serving.

God loves those people without proper food , shelter, clothing, medicine, education... *What could be our personal contribution in showing God's love to all those needy people?*

*How is our giving for the Lord's work? Is it willingly, freely, whole-heartedly, regularly and sacrificially?*
Rev.C.V.Abraham.

[20/08, 08:05] (W) Arun Selva Kumar: 🌈 *We have heard the motto that read: “Give till it hurts.” However, let us learn to “Give until it feels good.”*

⛹️‍♂️ *Application* : I Chr. 29:9- *We have heard the motto that read: “Give till it hurts.” That motto may be all right for the world, but it is not God’s motto. If it hurts you to give, don’t give! God wants us to give when it brings joy to our heart and life.* Give hilariously, Paul said. This is what the people are doing here, and it was a time of great rejoicing.

💡I Chr.29:11- *The Scriptural concept of the kingdom is both an eternal kingdom and a temporal kingdom. It is a universal kingdom and a local kingdom.* It is immediate, and it is mediated. *Generally speaking, it is the reign of heaven over the earth.*

💡II Chr. 1:3- *The Bible teaches that the Lord does not always hear prayers.* Listen to the words of Peter: “For the eyes of the Lord are over the righteous, and his ears are open unto their prayers: but the face of the Lord is against them that do evil” (1 Pet. 3:12). *God never said He would hear the prayers of those who do evil. The only prayer the sinner can pray to God is to go to Him and accept His mercy in Christ Jesus. If one wishes to approach God, you must approach Him through the cross.*

💡II Chr.1:4-5- The way to God is through the brazen altar. They couldn’t go to Him through the ark. In other words, you and I don’t come immediately to God. *The way of the cross leads home. There is no other way.*

⚠️II Chr.1:11-12- Notice, that the request was for wisdom to rule the people. *Solomon did not ask for spiritual discernment. We will see that Solomon lacked spiritual discernment in his own life. Although he was given divine wisdom to rule, he did not seem to have wisdom to order his personal life.*

Jaya Pradeep-Kodaikanal.
[20/08, 08:05] (W) Arun Selva Kumar: 2. நாளாகமம்.2.
🌹🌹🌹🌹🌹🌹
"ஆலயத்துக்கான பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள்."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சாலொமோனின் உறுதிப்பாடு பொருத்தமானதாக இருந்தது.
ஏனெனில் அவரது தந்தை தாவீது கட்டிடத்தைத் தயார்படுத்துவதற்கும், வேலையைச் செய்ய தாவீது அவருக்குக் கொடுத்த பொறுப்பின் காரணமாகவும் இருந்தது.
சாலமோனின் மிகப்பெரிய விஷயம் அவருடைய ஞானம், செல்வம், பழமொழிகள் ஆகும்.
சாலமோனின் மிக முக்கியமான விஷயம் அவர் கட்டிய ஆலயம்.
அவர் ஒரு அற்புதமான அரண்மனையையும் கட்டினார்.
ஆலயத்தைக் கட்ட எடுத்த ஏழு ஆண்டுகளில், அதில் பணிபுரிந்த ஒரு தொழிலாளி கூட இறக்கவில்லை.
ஒருவரும் நோய்வாய்ப்படவில்லை.
இதனால் பணிக்கு எந்த வித தடங்கலும் ஏற்படவில்லை.
சாலொமோன் பெயருக்காக ஒரு ஆலயத்தை கட்டவில்லை. மாறாக ஜீவனுள்ள தேவனுக்காக கட்டினார்.
கடவுள் நல்லவர்.
அவர் பெரியவர்.
அவர் நிரந்தரமானவர்
அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்,
அனைத்தையும் உள்ளடக்கியவர்.
அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார் மற்றும் ஒன்றும் அவரை அடக்க முடியாது. அவர் எதிலும் நிலைத்திருப்பார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196

[20/08, 08:05] (W) Arun Selva Kumar: நாள்: 128
20.08.2023
ஞாயிற்றுக்கிழமை.
*1நாளாகமம்: 28-29*
*2 நாளாகமம்: 1*
💐💐💐💐💐💐💐
*தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்* என்றார்.
(2நாளாகமம் 1:7)
★சாலொமோன் ஞானத்தையும் அறிவையும் கேட்டதை நாம் வாசிக்கிறோம்.
★இன்று கர்த்தர் நம்மைப் பார்த்து
*நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்*
என்று கேட்டால் நாம் என்னவெல்லாம் கேட்போம்...?
★சாலொமோன் கேட்டதை வாசித்து அதையே கேட்காமல், நம் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து நாம் விரும்புகிறதை கர்த்தரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்வோமாக.
*கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்*.
(மத்தேயு 7.7)
*நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை யெல்லாம் பெறுவீர்கள்*.(மத்தேயு: 21:22)
*நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்*.
(யோவான்: 15:7)
நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக் கொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத் தக்கதாக...( யோவான்: 15:16)
*கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்*
(யோவான்: 16:24)
*என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்*.
(யோவான்: 14: 13,14)
★இவ்வாக்குறுதிகளை நம்பி நாம் கேட்கிறவற்றைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
★நாம் கேட்பதைத் தருவேன் என்று வாக்குறுதிகளை கர்த்தர் நமக்கு அளித்துள்ளார்.
*ஆமென்*
✍️ Bhavani Jeeja Devaraj,
Nagercoil
Admin: Group No. 2068
[20/08, 08:05] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣2️⃣8️⃣
1 Chron 28 -2 Chron 1
*WHAT A GOD WE SERVE* ❗️

*God who enables us to finish the work assigned by the Lord* ‼️

💥“Be strong and of good courage, and do it; do not fear nor be dismayed, for the Lord God—my God—will be with you. He will not leave you nor forsake you, until you have finished all the work for the service of the house of the Lord (28:20)

💥 Be strong, all you people of the land,’ says the Lord, ‘and work; for I am with you,’ says the Lord of hosts (Hag 2:4)

*Be strong..The Lord will enable you to finish the work..He is with you to help you..So move forward* ‼️

Usha
[20/08, 08:05] (W) Arun Selva Kumar: *நம் தேவன் கூட்டி வழங்குகிற தேவன்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 1: 10 -12.

1. சாலொமோன் ஜனத்தை நியாயம் விசாரிக்க ஞானத்தையும், விவேகத்தையும் கேட்டான் . ஆனால், *கர்த்தரோ ஏராளமான ஜனத்தை நியாயம் விசாரிக்க ஞானத்தையும், விவேகத்தையும் கொடுத்ததுமல்லாமல், அவனுக்கு முன்னிருந்த ராஜாக்களுக்குமில்லாத, பின் வரும் ராஜாக்களுக்குமில்லாத ஐசுவரியத்தையும், சம்பத்தையும் , கனத்தையும் கொடுத்தார்.* ஆம், நம்முடைய தேவன் நாம் வேண்டிக் கொள்வதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்கிறவர்.

2. *தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண்கள் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்*. 1கொரிந்தியர் 2: 9, 10. ஆம், அவரில் அன்புகூருகிறவர்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?

3. *கர்த்தருக்கு பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக அவரை நம்புகிறவர்களுக்கும் அவர் உண்டு பண்ணி வைத்திருக்கிற அவருடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!* சங்கீதம் 31: 19.

4.மட்டுமல்ல, *தாழ்மைக்கும், கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்.* நீதிமொழிகள் 22: 4.

5. ஆம், *முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவர் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.* மத்தேயு 6: 33.

ஆம், *சாலொமோனுக்கு கேட்டதை விட கூட்டி வழங்கின தேவன், நமக்கும் நாம் வேண்டிகொள்வதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிப்பவர். ஆகவே முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுவோம். நிச்சயமாகவே நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய தேவைகளை கர்த்தர் கூட்டி வழங்குவார். அவருக்கே கனமும் மகிமையும் உ ண்டாவதாக*. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

[20/08, 08:05] (W) Arun Selva Kumar: *20.08.2023*

💥 *அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்* 💥

🔹 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: *“நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்.”* (1 நாளாகமம் 28:20).

🔸 தாவீது இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். கர்த்தருக்கு ஆலயம் கட்டும் அடுத்த ராஜாவாக *தேவன் தன்னுடைய குமாரனாகிய சாலொமோனைத் தேர்ந்தெடுத்தார்* என்று அவர்களுக்கு அறிவித்தான். *தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவிக்கும்படி சாலொமோனுக்கு அறிவுரை கூறினான்.* தாவீது சாலொமோனுக்கு ஆலயத்திற்கான மாதிரியையும் பொருட்களையும் கொடுத்தான்.

🔸 தாவீது சாலொமோனை நோக்கி *பலங்கொண்டு தைரியமாயிருக்கவும், பயப்படாமலும் கலங்காமலும் இருக்கவும் வேண்டும் என்று ஊக்குவித்தான்; கர்த்தர் அவனோடு இருப்பார் என்றும் அவனைவிட்டு விலகவுமாட்டார் என்றும் வலியுறுத்தினான்* (1 நாளாகமம் 28:20). ஆலயத்துக்கான எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துவதில் தாவீது மிகுந்த சிரமப்பட்டிருந்தான், ஆனால் சாலொமோன் அதை முடிக்காவிட்டால் தாவீதின் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும். *தாவீதினால் செய்ய முடியாத பணியை சாலொமோன் நிறைவேற்ற வேண்டியிருந்ததால்,* அத்தகைய ஊக்கம் இன்றியமையாததாக இருந்தது.

🔸 இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வாக்குத்தத்தத் தேசத்திற்கு அழைத்துச் செல்ல தேவன் மோசேயை அனுப்பியபோது, அவர் மோசேயிடம், *"நான் உன்னோடே இருப்பேன்."* (யாத்திராகமம் 3:12) என்று வாக்களித்தார். *மோசேக்குக் கொடுக்கப்பட்ட பணி மிகவும் மகத்தானதாக இருந்ததால் இப்படிப்பட்ட வாக்குறுதி கொடுக்கப்பட்டது.* மேரிபாவில் நிகழ்ந்த அவனது கீழ்ப்படியாமையின் காரணமாக, யோசுவாவே ஜனங்களை வாக்குத்தத்தத் தேசத்திற்கு அழைத்துச் செல்வான் என்று தேவன் அறிவித்தார்.

🔸 மோசே உயிருடன் இருந்தபோதே, கர்த்தர் யோசுவாவை *பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி* உற்சாகப்படுத்தினார் (உபாகமம் 31:23). மோசேயின் மரணத்திற்குப் பிறகு, கர்த்தர் யோசுவாவுக்குத் தம்முடைய வாக்குறுதியை *மீண்டும் உறுதிப்படுத்தினார்: “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு.”* (யோசுவா 1:5-6). ஏனென்றால் *மோசேயால் முடிக்க முடியாத பணியை யோசுவா முடிக்க வேண்டியிருந்ததால்,* இப்படிப்பட்ட வாக்குறுதி அவனுக்கு அளிக்கப்பட்டது.

🔸 இஸ்ரவேலரை வாக்குத்தத்தத் தேசத்திற்கு அழைத்துச் செல்லும் மகத்தான பணியை யோசுவா மேற்கொண்டபோது *‘தேவன் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.’* என்ற வாக்குறுதி அவனுக்கு வழங்கப்பட்டது. சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டும் அற்புதமான வேலையைச் செய்தபோது அவனுக்கும் அதே வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இப்போது இந்த வாக்குறுதியை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். வேதம் கூறுகிறது: *“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”* (எபிரெயர் 13:5).

🔸 *பரலோகத்தில் குடியுரிமை உள்ள நமக்காக* (பிலிப்பியர் 3:20), *தேவனுடைய ஆலயமாயிருக்கிற நமக்காக* (1 கொரிந்தியர் 3:16) இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நமக்கு முன்னுள்ள கேள்வி *தேவன்மீது நம்பிக்கை வைக்கிறோமா அல்லது உலகப்பொருளின்மீது நம்பிக்கை வைக்கிறோமா* என்பதே.

🔸 நாம் *இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்,* நமக்குக் கொடுக்கப்பட்டதை நாம் இழக்க மாட்டோம். ஆண்டவர் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு தேவையானதைக் கொடுக்கவும், நம்மை நேசிக்கவும் மறக்க மாட்டார். நமக்குத் தேவைப்படும்போது எல்லாம் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். ஐஸ்வரியத்தை நேசிப்பது *அவருடைய வாக்குறுதிகளில் நமக்கு நம்பிக்கையில்லை* என்பதற்கு அடையாளமாக இருக்கும்.

🔸 பணத்தின் மீது ஆசை இருப்பதற்கான தடயமே இல்லாமல் நம்முடைய ஆவிக்குரியப் பயணத்தைத் தொடங்கியிருக்கலாம்; ஆனால் பணஆசை எந்த நேரத்திலும் நமக்குள் ஊடுருவலாம். *பணத்தை அதிகமாக விரும்புகிறோம்* என்பதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள நாம் கற்றுக்கொண்டு அதை *அடக்கியாள* வேண்டும்.

🔸 *நமக்கு அவசியமானதெல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது* என்ற நம்பிக்கையுடனும், அதை அருளிய தேவனுக்கு நன்றி செலுத்தும் இருதயத்துடனும் இருந்தால் *போதுமென்ற எண்ணம்* நமக்கு உருவாகும். நாம் *பணத்தை ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும். பணம் நம்மை ஆளக்கூடாது.*

🔹 *தேவன் நம்மோடு இருக்கிறார் என்றும், நம் ஆவிக்குரியப் பயணத்தில் அவர் நம்மை விட்டு விலகவுமாட்டார், நம்மைக் கைவிடவுமாட்டார் என்றும் உறுதியாக நம்புகிறோமா?*
🔹 *இருக்கிறவைகள் போதுமென்ற எண்ணத்துடன் மகிமையில் ஐஸ்வரியத்தைப் பெற நமது ஆவிக்குரியப் பயணத்தைத் தொடர்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *தேவனுடைய சித்தத்தின்படி நாம் செய்யும் பணிகளின்போது, அவர் நம்முடன் இருப்பார்; அவர் நம்மைவிட்டு விலகவுமாட்டார், நம்மைக் கைவிடவுமாட்டார்.’*
2️⃣ *நமது ஆவிக்குரியப் பயணத்தின் போது சந்திக்கும் சவால்களில் முக்கியமானது: தேவன்மீது நம்பிக்கை வைக்கிறோமா அல்லது உலகப்பொருளின்மீது நம்பிக்கை வைக்கிறோமா என்பதே.*
3️⃣ *இருக்கிறவைகள் போதுமென்ற எண்ணத்துடன் மகிமையில் ஐஸ்வரியத்தைப் பெற நமது ஆவிக்குரியப் பயணத்தைத் தொடர்வோமாக.*

Dr. எஸ். செல்வன்
சென்னை

[20/08, 08:05] (W) Arun Selva Kumar: *🙏🤲A MODEL PRAYER🤲🙏*

*🙏🤲ஒரு மாதிரி ஜெபம்🤲🙏*

[DAY - 127]
1 நாளாகமம் - 29

☄️1 நாளாகமம் 29 ஆம் அத்தியாயத்தில், தாவீது ராஜாவின் ஜெபம் தாவீதின் குணத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகச் செயல்படுவதைக் காண்கிறோம்; அவருடைய பணிவு, நன்றியுணர்வு மற்றும் தேவன்மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டுகிறது.
☄️இது தேவனுடனான அவரது உறவைக் காட்டுகிறது மற்றும் அவருடனான நமது சொந்த தொடர்புக்கு ஒரு மாதிரியை வழங்குகிறது.

1️⃣ *தேவனுடைய இறையாண்மையை ஒப்புக்கொள்வதில் பணிவு*

🔹எல்லா வல்லமையும் அதிகாரமும் தேவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை தாவீது ஒப்புக்கொள்கிறார்.
(1 நாளாகமம் 29:11).
🔹தாவீதின் தாழ்மையான தோரணை, அவர் ராஜ்யத்தின் ஒரு காரியதரிசி மட்டுமே என்பதையும், எல்லாவற்றின் மீதும் இறுதிக் கட்டுப்பாட்டை வைத்திருப்பவர் தேவனே என்ற அவரது ஆழமான புரிதலை நிரூபிக்கிறது.

2️⃣ *தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றி*

🔸 தாவீது தன்னுடைய செல்வம், வளங்கள், அந்தஸ்து உட்பட தன்னிடம் உள்ள அனைத்தும் தேவனுடைய பரிசு என்று ஒப்புக்கொள்கிறார்.(1 நாளாகமம் 29:12).
🔸அவருடைய நன்றியுணர்வு, தேவனை எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமாக அங்கீகரிக்கும் இருதயத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் அவருடைய பராமரிப்பிற்கு நன்றி செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொள்கிறது.

3️⃣ *தேவனுடைய உண்மையில் நம்பிக்கை*

🔺தேவன் தம் மக்களை வழி நடத்துவதிலும், எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பதிலும் தேவனுடைய கடந்தகால உண்மைத்தன்மையை தாவீது மீண்டும் எண்ணுகிறார்.
🔺"இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? " என்று தாவீது சொல்கிறார்.
(1 நாளாகமம் 29:14).
🔺தேவன் ஏற்கனவே வழங்கியதைத் தான் தானும் அவனுடைய மக்களும் தேவனுக்குத் திரும்பக் கொடுக்க முடியும் என்பதை தாவீது ஒப்புக்கொள்கிறார்.
🔺தேவனுடைய உண்மையின் மீதான இந்த நம்பிக்கை, தாவீதை அவரிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்து, தேவனுடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்களில் தனது நம்பிக்கையை வைக்க உதவுகிறது.

4️⃣ *வருங்கால சந்ததியினரும் தொழுதிட வேண்டும் என்ற ஆசை*

▪️தாவீதின் ஜெபம், வருங்கால சந்ததியினரும் தேவனை உண்மையாக தொழுவதையும் சேவிப்பதையும் தொடர வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.
(1 நாளாகமம் 29:19).
▪️தாவீது, சாலொமோனுக்காக தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தேடும்போது, உண்மையான தொழுகை மற்றும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றிற்காக ஜெபிக்கும்போது, ​​அவனுடைய சொந்த ஆட்சிக்கு அப்பாற்பட்டும் கவனம் செலுத்துவதைக் காணலாம்.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥தாவீதின் ஜெபம், மனத்தாழ்மை, நன்றியுணர்வு மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் மிகச் சிறந்த மாதிரியை நமக்கு வழங்குகிறது.
💥தேவனுடைய இறையாண்மைக்கு அவருடைய அடிபணிதல், அவருடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றியுணர்வு, அவருடைய உண்மையில் நம்பிக்கை மற்றும் வருங்கால சந்ததியினருக்கான அக்கறை ஆகியவை அவருடைய நம்பிக்கையின் ஆழத்தை வெளிப்படுத்தி, நமக்கு ஒரு உத்வேகமாக அமைகிறது.

*‼️தாவீதின் தாழ்மையான மற்றும் நன்றியுள்ள இருதயத்தை பின்பற்றுவோம்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[20/08, 08:05] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *இருதயம் முக்கியம்* 🍂

தாவீது, தலைவர்கள், அதிகாரிகள், பிரபுக்கள் மற்றும் பிரதானிகள் அனைவரையும் கூட்டினான். பின்பு தாவீது எழுந்து நின்று அவர்களுக்குத் தன் இருதயத்தைத் திறந்து பேசினான் . *கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும், தேவன் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்பது அவனுடைய இருதயத்தின் வாஞ்சையாய் இருந்தது* (1 நாளா 28:1,2). உண்மையில் அவனுடைய *முழு இருதயமும் தேவனுக்காகவும் அவருடைய பிரசன்னத்திற்காகவும்* ஏங்கியது.

அடுத்து, தாவீது தன் மகன் சாலொமோனிடம் வெளிப்படையாகப் பேசினான். சாலொமோனுக்கு அவன் கொடுத்த முதல் அறிவுரை: *கர்த்தரை உத்தம இருதயத்துடன் சேவிக்க வேண்டும்*. இருதயத்தின் முக்கியத்துவத்தை தாவீது நன்கு அறிந்திருந்தான். அவன் எப்போதும் *தன் இருதயத்தின் நேர்மையில்* அக்கறை கொண்டிருந்தான். எனவே தனது சங்கீதத்தில் இவ்வாறு எழுதினான்: *நான் என் வீட்டிற்குள் உத்தம இருதயத்தோடு நடப்பேன்* (சங் 101:2).

தேவனாகிய கர்த்தர், தாவீதைப் பற்றி இவ்வாறு சாட்சி கொடுத்தார்: *'ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்கு சித்தமானவைகளயெல்லாம் அவன் செய்வான்' (அப் 13:22).* இப்போது நம்முடைய இருதயத்தின் உள்ளடக்கம் என்ன? நம் இருதயத்தின் நிலையைக் கண்டு தேவனாகிய கர்த்தர் மகிழ்ச்சியடைவாரா?

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_

[20/08, 04:44] +91 99431 72360: 2. நாளாகமம்.2.
🌹🌹🌹🌹🌹🌹
"ஆலயத்துக்கான பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள்."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சாலொமோனின் உறுதிப்பாடு பொருத்தமானதாக இருந்தது.
ஏனெனில் அவரது தந்தை தாவீது கட்டிடத்தைத் தயார்படுத்துவதற்கும், வேலையைச் செய்ய தாவீது அவருக்குக் கொடுத்த பொறுப்பின் காரணமாகவும் இருந்தது.
சாலமோனின் மிகப்பெரிய விஷயம் அவருடைய ஞானம், செல்வம், பழமொழிகள் ஆகும்.
சாலமோனின் மிக முக்கியமான விஷயம் அவர் கட்டிய ஆலயம்.
அவர் ஒரு அற்புதமான அரண்மனையையும் கட்டினார்.
ஆலயத்தைக் கட்ட எடுத்த ஏழு ஆண்டுகளில், அதில் பணிபுரிந்த ஒரு தொழிலாளி கூட இறக்கவில்லை.
ஒருவரும் நோய்வாய்ப்படவில்லை.
இதனால் பணிக்கு எந்த வித தடங்கலும் ஏற்படவில்லை.
சாலொமோன் பெயருக்காக ஒரு ஆலயத்தை கட்டவில்லை. மாறாக ஜீவனுள்ள தேவனுக்காக கட்டினார்.
கடவுள் நல்லவர்.
அவர் பெரியவர்.
அவர் நிரந்தரமானவர்
அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்,
அனைத்தையும் உள்ளடக்கியவர்.
அவர் எல்லாவற்றிலும் இருக்கிறார் மற்றும் ஒன்றும் அவரை அடக்க முடியாது. அவர் எதிலும் நிலைத்திருப்பார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196
[20/08, 04:44] +91 99431 72360: நாள்: 128
20.08.2023
ஞாயிற்றுக்கிழமை.
*1நாளாகமம்: 28-29*
*2 நாளாகமம்: 1*
💐💐💐💐💐💐💐
*தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்* என்றார்.
(2நாளாகமம் 1:7)
★சாலொமோன் ஞானத்தையும் அறிவையும் கேட்டதை நாம் வாசிக்கிறோம்.
★இன்று கர்த்தர் நம்மைப் பார்த்து
*நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்*
என்று கேட்டால் நாம் என்னவெல்லாம் கேட்போம்...?
★சாலொமோன் கேட்டதை வாசித்து அதையே கேட்காமல், நம் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து நாம் விரும்புகிறதை கர்த்தரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்வோமாக.
*கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்*.
(மத்தேயு 7.7)
*நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை யெல்லாம் பெறுவீர்கள்*.(மத்தேயு: 21:22)
*நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்*.
(யோவான்: 15:7)
நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக் கொள்வது எதுவோ அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத் தக்கதாக...( யோவான்: 15:16)
*கேளுங்கள் அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்*
(யோவான்: 16:24)
*என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்*.
(யோவான்: 14: 13,14)
★இவ்வாக்குறுதிகளை நம்பி நாம் கேட்கிறவற்றைக் கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
★நாம் கேட்பதைத் தருவேன் என்று வாக்குறுதிகளை கர்த்தர் நமக்கு அளித்துள்ளார்.
*ஆமென்*
✍️ Bhavani Jeeja Devaraj,
Nagercoil
Admin: Group No. 2068

[20/08, 04:44] +91 99431 72360: *நம் தேவன் கூட்டி வழங்குகிற தேவன்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 1: 10 -12.

1. சாலொமோன் ஜனத்தை நியாயம் விசாரிக்க ஞானத்தையும், விவேகத்தையும் கேட்டான் . ஆனால், *கர்த்தரோ ஏராளமான ஜனத்தை நியாயம் விசாரிக்க ஞானத்தையும், விவேகத்தையும் கொடுத்ததுமல்லாமல், அவனுக்கு முன்னிருந்த ராஜாக்களுக்குமில்லாத, பின் வரும் ராஜாக்களுக்குமில்லாத ஐசுவரியத்தையும், சம்பத்தையும் , கனத்தையும் கொடுத்தார்.* ஆம், நம்முடைய தேவன் நாம் வேண்டிக் கொள்வதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்கிறவர்.

2. *தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண்கள் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்*. 1கொரிந்தியர் 2: 9, 10. ஆம், அவரில் அன்புகூருகிறவர்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?

3. *கர்த்தருக்கு பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக அவரை நம்புகிறவர்களுக்கும் அவர் உண்டு பண்ணி வைத்திருக்கிற அவருடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!* சங்கீதம் 31: 19.

4.மட்டுமல்ல, *தாழ்மைக்கும், கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும், மகிமையும், ஜீவனுமாம்.* நீதிமொழிகள் 22: 4.

5. ஆம், *முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவர் நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்.* மத்தேயு 6: 33.

ஆம், *சாலொமோனுக்கு கேட்டதை விட கூட்டி வழங்கின தேவன், நமக்கும் நாம் வேண்டிகொள்வதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிப்பவர். ஆகவே முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுவோம். நிச்சயமாகவே நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய தேவைகளை கர்த்தர் கூட்டி வழங்குவார். அவருக்கே கனமும் மகிமையும் உ ண்டாவதாக*. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*
[20/08, 04:44] +91 99431 72360: *நாள் 128 / 365 *
*1 நாளாகமம் 28 -*
*2 நாளாகமம் 1*

*கர்த்தரைத் தேடுங்கள்*..

முதுமையடைந்த தாவீதிடமிருந்து.. இளைஞனான சாலொமோனிடம் ராஜ்யபாரம் மாறும் வேளை ...
அதனால் தாவீது.. இஸ்ரவேல் தேசத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரையும்.. எருசலேமிலே கூடிவரச் செய்தான்.
அவர்களுக்கு முன்பாக காலூன்றி நின்று.. தன்னுடைய கடைசிச் செய்தியை ....
கூறினான்.
( 1 நாளா. 28 : 1-2 )

இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய கற்பனையைக் கைக்கொண்டு.. புத்தியாய் நடக்கவேண்டும்.

சாலொமோன்.. கர்த்தரை அறிந்துகொள்ள வேண்டும் ...
உத்தம இருதயத்தோடும் ..
உற்சாகமான மனதோடும் அவரைச் சேவிக்கவேண்டும்..
என்ற ஆலோசனைச் செய்தியுடன்..
நீ அவரைத் தேடினால் ,
உனக்குத் தென்படுவார்..நீ அவரை விட்டுவிட்டால் ..
கர்த்தர் உன்னை என்றைக்கும்
கைவிடுவார்..( 1 நாளா. 28 : 9 )
என்ற எச்சரிப்பின் வார்த்தைகளையும்..தாவீது.. சாலொமோனுக்குக் கூறினான்..

அன்று சீனாய் மலையிலே.. மோசேயிடம், ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியைக் கொடுத்த கர்த்தர்..
இங்கு தாவீதிடம்.. ஆலயத்தின் மாதிரியைக் கொடுத்தார்.
“பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி ;..….அவர் உன்னை விட்டு விலகவுமாட்டார்.. உன்னைக் கைவிடவுமாட்டார்” என்று 1 நாளா.28:20ல்
தாவீது சாலொமோனுக்குச்
சொன்ன ஆலோசனை......
உபாகமம் 31:7,8ல் மோசே.. யோசுவாவிற்குக் கூறின வார்த்தைகளை.. நமக்கு நினைவுபடுத்துகிறது..

கர்த்தருடைய ஆலயம்..
கர்த்தரின் சித்தத்தின் பிரகாரமே கட்டப்படவேண்டும்..
அது பரிசுத்த ஸ்தலமாகக் கட்டப்படவேண்டும்..
சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டும்போது..
சாலொமோன் ..
மனுஷர்களையல்ல.
கர்த்தரையே நோக்கிக் பார்க்கவேண்டும்..
அவரையே தேடவேண்டும்
என்றும் தாவீது சொன்னான்..

தாவீதின் கரத்தில் பட்டயம் இருந்தது..அவன் யுத்தத்தை நடப்பித்தான்..
சாலொமோன்
இளைப்பாறுதலின் காலத்தில் இருந்தான்..அவன் ஆலயம் கட்டுகிற பணியிலிருந்தான்..

*நம் தேவன்*, *நம்* *ஒவ்வொருவரைக் குறித்தும்*..
*ஒரு திட்டம் வைத்திருக்கிறார்*..
*நம் வாழ்வைக் குறித்த* *வரைபடமும்*
*அவர் கரத்திலுள்ளது*..
*நாம் அவரைத் தேடி அவரோடு* *நெருங்கி ஜீவிக்கும்போது* ..
*நம்மைக் குறித்த தேவனுடைய* *திட்டத்தை நாம் அறிந்து* *கொள்ளமுடியும்* ...
*தேவனுடைய சித்தத்தை*..
*நிறைவேற்றமுடியும்*..

அநேக வேளைகளில்..
தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்ளாமல்..
நம்முடைய சுய திட்டத்தைச்
செயல்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம்..
விளைவு..நம்முடைய விசுவாச வாழ்விலே தடுமாற்றங்களும்..
பின்வாங்குதல்களும் உண்டாகின்றன..
எனவே ஒவ்வொரு நாளும்
ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு..நம்மை
அர்ப்பணிப்போம்..

*கர்த்தரைக் கண்டடையத்தக்க*
*சமயத்தில் அவரைத்* *தேடுங்கள்..அவர்* *சமீபமாயிருக்கையில்..அவரை* *நோக்கிக் கூப்பிடுங்கள்*..
( ஏசா. 55 : 6 )

*கர்த்தரைத்* *தேடுகிறவர்களுக்கோ*..
*ஒரு நன்மையும் குறைவுபடாது*..
(சங் .34 : 10 b)

மாலா டேவிட்
[20/08, 04:44] +91 99431 72360: *20.08.2023*

💥 *அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்* 💥

🔹 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: *“நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக்கைவிடவுமாட்டார்.”* (1 நாளாகமம் 28:20).

🔸 தாவீது இஸ்ரவேலின் தலைவர்கள் அனைவரையும் எருசலேமில் கூட்டினான். கர்த்தருக்கு ஆலயம் கட்டும் அடுத்த ராஜாவாக *தேவன் தன்னுடைய குமாரனாகிய சாலொமோனைத் தேர்ந்தெடுத்தார்* என்று அவர்களுக்கு அறிவித்தான். *தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவிக்கும்படி சாலொமோனுக்கு அறிவுரை கூறினான்.* தாவீது சாலொமோனுக்கு ஆலயத்திற்கான மாதிரியையும் பொருட்களையும் கொடுத்தான்.

🔸 தாவீது சாலொமோனை நோக்கி *பலங்கொண்டு தைரியமாயிருக்கவும், பயப்படாமலும் கலங்காமலும் இருக்கவும் வேண்டும் என்று ஊக்குவித்தான்; கர்த்தர் அவனோடு இருப்பார் என்றும் அவனைவிட்டு விலகவுமாட்டார் என்றும் வலியுறுத்தினான்* (1 நாளாகமம் 28:20). ஆலயத்துக்கான எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துவதில் தாவீது மிகுந்த சிரமப்பட்டிருந்தான், ஆனால் சாலொமோன் அதை முடிக்காவிட்டால் தாவீதின் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும். *தாவீதினால் செய்ய முடியாத பணியை சாலொமோன் நிறைவேற்ற வேண்டியிருந்ததால்,* அத்தகைய ஊக்கம் இன்றியமையாததாக இருந்தது.

🔸 இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வாக்குத்தத்தத் தேசத்திற்கு அழைத்துச் செல்ல தேவன் மோசேயை அனுப்பியபோது, அவர் மோசேயிடம், *"நான் உன்னோடே இருப்பேன்."* (யாத்திராகமம் 3:12) என்று வாக்களித்தார். *மோசேக்குக் கொடுக்கப்பட்ட பணி மிகவும் மகத்தானதாக இருந்ததால் இப்படிப்பட்ட வாக்குறுதி கொடுக்கப்பட்டது.* மேரிபாவில் நிகழ்ந்த அவனது கீழ்ப்படியாமையின் காரணமாக, யோசுவாவே ஜனங்களை வாக்குத்தத்தத் தேசத்திற்கு அழைத்துச் செல்வான் என்று தேவன் அறிவித்தார்.

🔸 மோசே உயிருடன் இருந்தபோதே, கர்த்தர் யோசுவாவை *பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி* உற்சாகப்படுத்தினார் (உபாகமம் 31:23). மோசேயின் மரணத்திற்குப் பிறகு, கர்த்தர் யோசுவாவுக்குத் தம்முடைய வாக்குறுதியை *மீண்டும் உறுதிப்படுத்தினார்: “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு.”* (யோசுவா 1:5-6). ஏனென்றால் *மோசேயால் முடிக்க முடியாத பணியை யோசுவா முடிக்க வேண்டியிருந்ததால்,* இப்படிப்பட்ட வாக்குறுதி அவனுக்கு அளிக்கப்பட்டது.

🔸 இஸ்ரவேலரை வாக்குத்தத்தத் தேசத்திற்கு அழைத்துச் செல்லும் மகத்தான பணியை யோசுவா மேற்கொண்டபோது *‘தேவன் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.’* என்ற வாக்குறுதி அவனுக்கு வழங்கப்பட்டது. சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டும் அற்புதமான வேலையைச் செய்தபோது அவனுக்கும் அதே வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இப்போது இந்த வாக்குறுதியை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். வேதம் கூறுகிறது: *“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”* (எபிரெயர் 13:5).

🔸 *பரலோகத்தில் குடியுரிமை உள்ள நமக்காக* (பிலிப்பியர் 3:20), *தேவனுடைய ஆலயமாயிருக்கிற நமக்காக* (1 கொரிந்தியர் 3:16) இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. நமக்கு முன்னுள்ள கேள்வி *தேவன்மீது நம்பிக்கை வைக்கிறோமா அல்லது உலகப்பொருளின்மீது நம்பிக்கை வைக்கிறோமா* என்பதே.

🔸 நாம் *இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்,* நமக்குக் கொடுக்கப்பட்டதை நாம் இழக்க மாட்டோம். ஆண்டவர் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு தேவையானதைக் கொடுக்கவும், நம்மை நேசிக்கவும் மறக்க மாட்டார். நமக்குத் தேவைப்படும்போது எல்லாம் அவர் எப்போதும் நம்முடன் இருப்பார். ஐஸ்வரியத்தை நேசிப்பது *அவருடைய வாக்குறுதிகளில் நமக்கு நம்பிக்கையில்லை* என்பதற்கு அடையாளமாக இருக்கும்.

🔸 பணத்தின் மீது ஆசை இருப்பதற்கான தடயமே இல்லாமல் நம்முடைய ஆவிக்குரியப் பயணத்தைத் தொடங்கியிருக்கலாம்; ஆனால் பணஆசை எந்த நேரத்திலும் நமக்குள் ஊடுருவலாம். *பணத்தை அதிகமாக விரும்புகிறோம்* என்பதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்ள நாம் கற்றுக்கொண்டு அதை *அடக்கியாள* வேண்டும்.

🔸 *நமக்கு அவசியமானதெல்லாம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது* என்ற நம்பிக்கையுடனும், அதை அருளிய தேவனுக்கு நன்றி செலுத்தும் இருதயத்துடனும் இருந்தால் *போதுமென்ற எண்ணம்* நமக்கு உருவாகும். நாம் *பணத்தை ஆளக் கற்றுக்கொள்ள வேண்டும். பணம் நம்மை ஆளக்கூடாது.*

🔹 *தேவன் நம்மோடு இருக்கிறார் என்றும், நம் ஆவிக்குரியப் பயணத்தில் அவர் நம்மை விட்டு விலகவுமாட்டார், நம்மைக் கைவிடவுமாட்டார் என்றும் உறுதியாக நம்புகிறோமா?*
🔹 *இருக்கிறவைகள் போதுமென்ற எண்ணத்துடன் மகிமையில் ஐஸ்வரியத்தைப் பெற நமது ஆவிக்குரியப் பயணத்தைத் தொடர்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *தேவனுடைய சித்தத்தின்படி நாம் செய்யும் பணிகளின்போது, அவர் நம்முடன் இருப்பார்; அவர் நம்மைவிட்டு விலகவுமாட்டார், நம்மைக் கைவிடவுமாட்டார்.’*
2️⃣ *நமது ஆவிக்குரியப் பயணத்தின் போது சந்திக்கும் சவால்களில் முக்கியமானது: தேவன்மீது நம்பிக்கை வைக்கிறோமா அல்லது உலகப்பொருளின்மீது நம்பிக்கை வைக்கிறோமா என்பதே.*
3️⃣ *இருக்கிறவைகள் போதுமென்ற எண்ணத்துடன் மகிமையில் ஐஸ்வரியத்தைப் பெற நமது ஆவிக்குரியப் பயணத்தைத் தொடர்வோமாக.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[20/08, 04:44] +91 99431 72360: *_God sees our Motives_*

*_தேவன் நம் நோக்கங்களைக் காண்கிறார்_*

*_1 நாளாகமம் : 28_*

❇️ _*தாவீது ராஜா* தனது மகன் *சாலமோனுக்கு* கொடுத்த அறிவுரையில், அவருக்கு *நமது சேவை* பற்றிய *தேவனுடைய பார்வையில்* ஒரு முக்கிய அம்சத்தை வெளிப்படுத்துகிறார். *"நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்;"*(v9)_ என்று அவர் தனது மகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

❇️ _மேலே உள்ள ஆலோசனையிலிருந்து பின்வருவனவற்றை நாம் புரிந்து கொள்ளலாம்._

_▪️தேவனுக்கு முழு மனதுடன் சேவை தேவை._

_▪️ஒருவர் தயக்கத்துடனல்ல, உற்சாக மனதுடன் தேவனுக்கு சேவை செய்ய வேண்டும்_

_▪️தேவன் நமது சேவையை வெளிப்புறமாகப் பார்ப்பதில்லை, மாறாக *நாம் செய்வதை ஏன் செய்கிறோம்* என்பதை அறிய நம் இருதயத்தைப் பார்க்கிறார்._

_▪️நம் சேவையின் பின்னால் உள்ள நமது எண்ணங்களையும் நோக்கங்களையும் அவர் மதிப்பிடுகிறார்_.

❇️ _தேவனுடைய இந்த அணுகுமுறையானது *MRI ஸ்கேன்* போன்ற *ஆக்கிரமிப்பற்ற நுட்பத்தை* விட சக்தி வாய்ந்தது. இங்கே தேவன் நம் எண்ணங்களைத் தாண்டி நம் எண்ணங்களுக்குப் பின்னால் உள்ள நமது நோக்கங்களின் அடுத்த நிலைக்குச் செல்கிறார்._

❇️ _*நம்முடைய சுயநல நோக்கங்கள் அவர் முன் அம்பலமாகிவிடுவதால்,* சில உள் நோக்கங்களுடன், தேவனுக்குச் சேவை செய்வதாகக் காட்டிக் கொண்டு, *தேவனை ஏமாற்ற முடியாது* என்பது நமக்குத் தெளிவாக்கப்படுகிறது._

❇️ _தேவனுடைய தனித்துவமான வழிமுறையின் வெளிச்சத்தில், நமது சேவையைத் தொடங்குவதற்கு முன், நமது *சிந்தனைகளுக்கு* பின்னால் உள்ள நமது *நோக்கங்களை* தெளிவுபடுத்த வேண்டும். நாம் சரியானதைச் செய்தால் மட்டும் போதாது, ஆனால் சரியான நோக்கத்துடன் அதைச் செய்யவேண்டும்_ .

❇️ _*நாம் செய்ய விரும்புகிறதை ஏன் செய்ய விரும்புகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் .* நமது சேவையின் பின்னணியில் நமது நோக்கங்கள் நம்மை மகிமைப்படுத்துவதன்றி *தேவனை மகிமைப்படுத்துவதாக* இருந்தாலோ அல்லது *நமது லாபத்திற்காக* அல்ல மக்களின் தேவையை நிறைவேற்றுவதாக இருந்தாலோ, தேவன் நம் சேவையை ஏற்றுக்கொண்டு அதை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம்._

❇️ _*தேவனுக்கு நாம் செய்யும் ஊழியத்தில் நமது எண்ணங்களுக்குப் பின்னால் உள்ள நமது நோக்கங்கள் சரியாக இருக்கட்டும்.*_

✅ *_கற்றறிந்த நுண்ணறிவு_*:

▪️ _நாம் என்ன செய்கிறோம் என்பதை விட ஏன் செய்கிறோம் என்பதே முக்கியம்._

▪️ _உள் நிகழ்ச்சி நிரல் (உள்நோக்கம்) இல்லாமல் தேவனுக்கு சேவை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்._

*_ecd_* 🙏🏼

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[20/08, 04:44] +91 99431 72360: *🙏🤲A MODEL PRAYER🤲🙏*

*🙏🤲ஒரு மாதிரி ஜெபம்🤲🙏*

[DAY - 127]
1 நாளாகமம் - 29

☄️1 நாளாகமம் 29 ஆம் அத்தியாயத்தில், தாவீது ராஜாவின் ஜெபம் தாவீதின் குணத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகச் செயல்படுவதைக் காண்கிறோம்; அவருடைய பணிவு, நன்றியுணர்வு மற்றும் தேவன்மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைக் காட்டுகிறது.
☄️இது தேவனுடனான அவரது உறவைக் காட்டுகிறது மற்றும் அவருடனான நமது சொந்த தொடர்புக்கு ஒரு மாதிரியை வழங்குகிறது.

1️⃣ *தேவனுடைய இறையாண்மையை ஒப்புக்கொள்வதில் பணிவு*

🔹எல்லா வல்லமையும் அதிகாரமும் தேவனுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை தாவீது ஒப்புக்கொள்கிறார்.
(1 நாளாகமம் 29:11).
🔹தாவீதின் தாழ்மையான தோரணை, அவர் ராஜ்யத்தின் ஒரு காரியதரிசி மட்டுமே என்பதையும், எல்லாவற்றின் மீதும் இறுதிக் கட்டுப்பாட்டை வைத்திருப்பவர் தேவனே என்ற அவரது ஆழமான புரிதலை நிரூபிக்கிறது.

2️⃣ *தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றி*

🔸 தாவீது தன்னுடைய செல்வம், வளங்கள், அந்தஸ்து உட்பட தன்னிடம் உள்ள அனைத்தும் தேவனுடைய பரிசு என்று ஒப்புக்கொள்கிறார்.(1 நாளாகமம் 29:12).
🔸அவருடைய நன்றியுணர்வு, தேவனை எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமாக அங்கீகரிக்கும் இருதயத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் அவருடைய பராமரிப்பிற்கு நன்றி செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொள்கிறது.

3️⃣ *தேவனுடைய உண்மையில் நம்பிக்கை*

🔺தேவன் தம் மக்களை வழி நடத்துவதிலும், எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பதிலும் தேவனுடைய கடந்தகால உண்மைத்தன்மையை தாவீது மீண்டும் எண்ணுகிறார்.
🔺"இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? " என்று தாவீது சொல்கிறார்.
(1 நாளாகமம் 29:14).
🔺தேவன் ஏற்கனவே வழங்கியதைத் தான் தானும் அவனுடைய மக்களும் தேவனுக்குத் திரும்பக் கொடுக்க முடியும் என்பதை தாவீது ஒப்புக்கொள்கிறார்.
🔺தேவனுடைய உண்மையின் மீதான இந்த நம்பிக்கை, தாவீதை அவரிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்து, தேவனுடைய திட்டங்கள் மற்றும் நோக்கங்களில் தனது நம்பிக்கையை வைக்க உதவுகிறது.

4️⃣ *வருங்கால சந்ததியினரும் தொழுதிட வேண்டும் என்ற ஆசை*

▪️தாவீதின் ஜெபம், வருங்கால சந்ததியினரும் தேவனை உண்மையாக தொழுவதையும் சேவிப்பதையும் தொடர வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.
(1 நாளாகமம் 29:19).
▪️தாவீது, சாலொமோனுக்காக தேவனுடைய ஆசீர்வாதங்களைத் தேடும்போது, உண்மையான தொழுகை மற்றும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றிற்காக ஜெபிக்கும்போது, ​​அவனுடைய சொந்த ஆட்சிக்கு அப்பாற்பட்டும் கவனம் செலுத்துவதைக் காணலாம்.

♥️ *வாழ்க்கை பாடங்கள்*

💥தாவீதின் ஜெபம், மனத்தாழ்மை, நன்றியுணர்வு மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் மிகச் சிறந்த மாதிரியை நமக்கு வழங்குகிறது.
💥தேவனுடைய இறையாண்மைக்கு அவருடைய அடிபணிதல், அவருடைய ஆசீர்வாதங்களுக்கு நன்றியுணர்வு, அவருடைய உண்மையில் நம்பிக்கை மற்றும் வருங்கால சந்ததியினருக்கான அக்கறை ஆகியவை அவருடைய நம்பிக்கையின் ஆழத்தை வெளிப்படுத்தி, நமக்கு ஒரு உத்வேகமாக அமைகிறது.

*‼️தாவீதின் தாழ்மையான மற்றும் நன்றியுள்ள இருதயத்தை பின்பற்றுவோம்‼️*

பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
[20/08, 04:44] +91 99431 72360: ✍🏾 📖📖 365 ✝ 365 📖📖 ✍🏾

🌈 *ஷாலோம்* 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦

📚 *1 நாளாகமம் 28 & 29*

*MAKE YOUR CALLING & ELECTION SURE*

*உங்கள் அழைப்பு மற்றும் தெரிந்துகொள்ளுதலை உறுதி செய்யுங்கள்*

📝 இன்றைய வாசகப் பகுதியில், தாவீது ராஜா இஸ்ரவேலின் அனைத்து அதிபதிகளையும் எருசலேமிலே கூடிவரச் செய்தார், அங்கு அவர் - *கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டிக்கு ஒரு ஆலயத்தை கட்டும்* ஒரு உன்னதமான திட்டத்தை அறிவித்தார். (28:1-2)

🙋‍♂️ தாவீது தனது அழைப்பில் உறுதியாக இருந்தார்:
📍 கர்த்தர் அவரை ராஜாவாக தேர்ந்தெடுத்தார்
📍 கர்த்தர் யூதாவை இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திலிருந்தும் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்
📍 தேவன் தன் குடும்பத்தை யூதா கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுத்தார்
📍 தேவன் இவரை அவருடைய சகோதரர்களுள் தேர்ந்தெடுத்தார்
📍 கர்த்தர் சாலமோனை மற்ற குமாரர்களின் மத்தியில் தேர்ந்தெடுத்தார்
📍 *சிங்காசனம் மற்றும் ஆலயம் கட்டுவதற்கு கர்த்தர் சாலொமோனைத் தேர்ந்தெடுத்தார் என்பதை தாவீது அறிந்திருந்தார்*.

🙋‍♂️ தாவீது சபைக்கு அறிவுறுத்துகிறார் ( 28: 8 ; 29:1)
📍 கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் கவனமாக இருங்கள்
📍 சாலமோனை ஆதரியுங்கள்
📍 *மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரண்மனை.* (29:1b)

🙋‍♂️ சாலொமோனுக்கு தாவீதின் அறிவுரை ( 28: 9--21 )
📍 தேவன் சாலொமோனை ஆலயத்தைக் கட்டத் தேர்ந்தெடுத்தார் என்றார் (வ. 10)
📍 கர்த்தரை தேடி, உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி என்றார். (வ 9)
📍 திடன்கொண்டு வேலையைச் செய்யுங்கள் (வ. 10, 20)
📍 *தேவன் அவனைக் கைவிட மாட்டார்* (வ. 20)
📍 ஆசாரியர்களும் லேவியர்களும் அவருக்கு உதவுவார்கள் (வ. 21)

🙋‍♂️ தாவீது திட்டப்பணி மாதிரியை கைமாற்றினார்.
📍அவர் ஆலயத்தின் மண்டபம், அதின் அறைகளும், அதின் பொக்கிஷ சாலைகள் மற்றும் பிற அறைகளின் வரைபடத்தை / திட்டங்களை சாலொமோனிடம் கொடுத்தார்.
📍 அனைத்து பொருட்களையும் சாலொமோனிடம் கொடுத்தார் (வ. 11-18)

🙋‍♂️ தாவீது இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறார்
📍 தாவீது தன்னுடைய எல்லா வளங்களையும் ( *தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், வெண்கற்பாளங்கள், கோமேதகம், காந்தியுள்ள கற்கள் மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்கள்*) தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்தார் (29:2--5)

🙋‍♂️ தாவீது சபைக்கு ஊக்கமளிக்கிறார்
📍அதேபோல் பங்களிக்குமாறு தாவீது சபைக்கு ஒரு சவாலை விடுத்தார்: *"இப்போதும் உங்களில் இன்றைய தினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளை செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் ? என்றார்."* வ5
📍தாவீதின் சவாலுக்கு கிடைத்த பதில் அமோகமானது. பெறப்பட்ட நன்கொடைகள் அவர் நன்கொடை அளித்ததை விட அதிகம் (வ 6--8)

🙋‍♂️🙋‍♀️ *ஆலயத் திட்டம் தாவீதினுடையது அல்லது சாலமோனுடையது அல்ல, ஆனால் இப்போது அது முழு சபைக்கும் சொந்தமானது*. மக்கள் மத்தியில் மகிழ்ச்சி இருந்தது (வ 9)

💕 அன்பான திருச்சபையே, இந்த கட்டிடத் திட்டத்திலிருந்து வரும் பாடம் என்னவென்றால், *" மனமுவந்து, உதாரத்துவம் மற்றும் முழு மனதுடன் கொடுக்கும்போது மகிழ்ச்சி வருகிறது "*. முறுமுறுப்புடன் கொடுப்பவர்கள் கர்த்தரையே அல்லது தங்களையோ மகிழ்விக்க மாட்டார்கள்.

*கொடுப்பதன் மகிழ்ச்சியை நாம் அனுபவித்திருக்கிறோமா* ?

🙋‍♂️ தாவீது இந்த நிகழ்வை நன்றி செலுத்தும் பிரார்த்தனையுடன் நிறைவு செய்தார் (வ 10--19)
📍 *கர்த்தரே எல்லாவற்றுக்கும் எஜமானர்*.
📍 *கர்த்தர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்*
📍 *கர்த்தர் போஷிப்பவர்*
📍 நம்மிடம் உள்ள அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இறுதியாக அவர் தனது மகன் சாலொமோனுக்காக (வ 19) தனது நேர்மையான வேண்டுகோளை முன்வைக்கிறார்.

🙋‍♂️🙋‍♀️ நம் அழைப்பைப் பற்றி தாவீதிடமிருந்து கற்றுக்கொள்வோம், மேலும் பலனளிப்போம். நம் விசுவாசம் செயல்படும்போது அது நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கும். *இந்த மருரூபமானது நமது அழைப்பு மற்றும் தெரிந்துகொள்ளுதலை உறுதி செய்கிறது* (2 பேதுரு 1:10)

தேவனுக்கே மகிமை 🙏
✍🏾 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[20/08, 04:44] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *இருதயம் முக்கியம்* 🍂

தாவீது, தலைவர்கள், அதிகாரிகள், பிரபுக்கள் மற்றும் பிரதானிகள் அனைவரையும் கூட்டினான். பின்பு தாவீது எழுந்து நின்று அவர்களுக்குத் தன் இருதயத்தைத் திறந்து பேசினான் . *கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும், தேவன் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்பது அவனுடைய இருதயத்தின் வாஞ்சையாய் இருந்தது* (1 நாளா 28:1,2). உண்மையில் அவனுடைய *முழு இருதயமும் தேவனுக்காகவும் அவருடைய பிரசன்னத்திற்காகவும்* ஏங்கியது.

அடுத்து, தாவீது தன் மகன் சாலொமோனிடம் வெளிப்படையாகப் பேசினான். சாலொமோனுக்கு அவன் கொடுத்த முதல் அறிவுரை: *கர்த்தரை உத்தம இருதயத்துடன் சேவிக்க வேண்டும்*. இருதயத்தின் முக்கியத்துவத்தை தாவீது நன்கு அறிந்திருந்தான். அவன் எப்போதும் *தன் இருதயத்தின் நேர்மையில்* அக்கறை கொண்டிருந்தான். எனவே தனது சங்கீதத்தில் இவ்வாறு எழுதினான்: *நான் என் வீட்டிற்குள் உத்தம இருதயத்தோடு நடப்பேன்* (சங் 101:2).

தேவனாகிய கர்த்தர், தாவீதைப் பற்றி இவ்வாறு சாட்சி கொடுத்தார்: *'ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன். எனக்கு சித்தமானவைகளயெல்லாம் அவன் செய்வான்' (அப் 13:22).* இப்போது நம்முடைய இருதயத்தின் உள்ளடக்கம் என்ன? நம் இருதயத்தின் நிலையைக் கண்டு தேவனாகிய கர்த்தர் மகிழ்ச்சியடைவாரா?

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼
_ஆகஸ்ட் 20, 2023_
[20/08, 18:25] +91 99431 72360: *The Choice of the Chosen*

*தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தேர்வு*

🪶1 நாளாகமம் 28:4-10 இல் "தேர்வு" மற்றும் "தேர்ந்தெடுக்கப்பட்ட" என்ற வார்த்தைகள் குறைந்தது 5 முறை வருகிறது. தேவனுடைய ராஜ்யத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராக இருப்பதன் முக்கியத்துவத்தை தாவீது அறிந்திருந்ததால் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
🌿ஆபிரகாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈசாக்கு தேர்வு செய்யப்பட்டார். யாக்கோபு தேர்வு செய்யப்பட்டார். இஸ்ரவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்... தாவீது தேர்ந்தெடுக்கப்பட்டார். ​சாலொமோனும் தேர்ந்தெடுக்கப்பட்டார். *பதிலுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தேர்வு என்னவாக இருக்கவேண்டும்?*
🔅3 எளிய விஷயங்கள்:
🪻அவர்கள் கர்த்தருடைய *எல்லா கட்டளைகளையும்* பின்பற்ற முற்பட வேண்டும்
🪻அப்படிச் செய்தால், அவர்கள் நல்ல இஸ்ரவேல் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
🪻அதை அவர்களின் குழந்தைகளுக்கு பரம்பரைச்சொத்தாக கொடுப்பார்கள்.

🪶தேவனைக் கைவிடத் தேர்ந்தெடுப்பதன் விளைவுகள் பயங்கரமானவை. அவர் தனது மக்களையும் கைவிடுவார் என்று அர்த்தம் (வ 9-10).
🌿 சாலொமோன் அவரைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தார், ஆனால் விரைவில், அவர் தனது சொந்த இதயத்தைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தார், மேலும் அவருடைய தேசம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
🔅இன்று, ஒரு ரோபோவைப் போல இயேசு நமக்காக பரிந்து பேசுவார் என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. *அவர் நம் இதயங்களை அறிந்திருக்கிறார். சாலொமோனைப் போல் நாம் நம்முடைய சொந்த இருதயங்களைப் பின்பற்றத் தீர்மானித்தால் அவர் நமக்காகப் பரிந்துபேச மாட்டார்.* மேலும், தேவனுடைய இருதயத்தை அறிந்த பிறகு, நம்முடைய இருதயங்களைப் பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை.

🪶1 நாளாகமம் முடிவடைந்து, இஸ்ரவேலின் தேவனுடனான பயணத்தின் 2வது பகுதியைத் தொடங்கும்போது, ​​சாலொமோனும் மக்களும் சரியாகத் தேர்ந்தெடுத்ததைக் காண்கிறோம். *ஆனால் அது நிலைக்கொண்டதா?* துரதிர்ஷ்டவசமாக, இல்லை, என்பதை 2 நாளாகமத்தின் முடிவில் நாம் பார்ப்போம்.
🌿தேவனைப் பின்பற்றுவதும், அவருடைய எல்லா கட்டளைகளையும் தேடுவதும் நம் வாழ்வில் தெளிவாகத் தெரிகிறதா? நம்முள் நிறைந்திருக்கும் எண்ணங்கள், சுய விழிப்புணர்வு பற்றியதா அல்லது தெய்வ-விழிப்புணர்வு பற்றியதா ?
🔅நம்முடைய உரிமைகளைத் துறந்து, அவருடைய உரிமைகளின்படி வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறோமா? நாம் ஆண்டவர் மீது நம்மிடமுள்ள எல்லாவற்றையும் கொண்டு அன்பு செலுத்துகிறோமா? நாம் இறுதியில், நம் அயலார் அடுத்தது, என்று விட்டுக் கொடுக்கிறோமா ? இன்று நீங்கள் இதைப் பற்றி சிந்திக்கும்போது ஆசீர்வதிக்கப்படுங்கள்.
அட்லின் ஆல்பர்ட்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

[20/08, 19:53] +91 99431 72360: 20.08.2023

*🍧சிப்பிக்குள் முத்து🍧*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*1 நாளா : 28, 29, & 2 நாளா : 1*

*🍉முத்துச்சிதறல் : 128*

🥕🥕🥕🥕
*🍒எல்லாம் உம்மால் உண்டானது :, உமது கரத்தில் வாங்கி உமக்கு கொடுத்தோம்.* (1நாளா - 29 : 14)
🥕🥕🥕🥕

*🎁இவ்வுலக வாழ்வினின்று தாம் விடு பட்டு, "என்றென்றும் ஜீவித்து இருப்பவரிடம் போய் இணைய போகும் நாட்கள் நெருங்கியதை" தாவீது ஏற்றுக்கொண்டு, 🫛காரியங்களை ஒழுங்கிப்படுத்தி கொடுத்து,*
*🫛தனது குமாரன் சாலமோனின் ஆட்சி அமைதலோடு நகரவேண்டும் என்று விரும்பி செயல்பட தொடங்கி,*
*🫛ஆலய கட்டுமான பணிக்காக நிறைய சேகரித்து,*
*🫛கர்த்தருக்காக மனப்பபூர்வமாக கொடுக்கும்படி,*
*🫛இப்பொழுது இறுதி கட்டத்தில் வந்து நின்று,*
*🫛முழு இஸ்ரவேலரும் தன்னை போலவே உற்சாகமாக கர்த்தருக்கு கொடுக்க கூடியவர்களாக இருக்க தக்கதான ஓர் நல்ல முன்னுதாரணத்தை தனது அரசாட்சியின் கீழ் இருக்கும் மக்கள் அறிவதற்க்கு ஏற்றவிதமாக செயலாற்றினார்.*

*🍒கர்த்தரின் ஆலயத்திற்க்காக,*

*🍁1)* பொன், வெள்ளி , வெண்கலம், இரும்பு, மரம், காந்தியுள்ள - பலவர்ண கற்கள், விலையேறப்பெற்ற வெண் கற்பாளங்கள், கோமேதகங்கள் போன்ற வற்றை சவதரித்து இருந்தார். அதை ஆலய கட்டுமான பணிக்காக உற்சாகமாக கொடுத்தார்.

*🍁2)* சொந்தமான பொன், வெள்ளி போன்றவற்றை கொடுத்தார்.

*🍁3)* ஒப்பீரின் தங்கம் 3,000 தாலந்து நிறையுள்ளவை,

*🍁4)* சுத்த வெள்ளி 7,000 தாலந்து நிறையுள்ளது
யாவும் தாவீதரசன் ஜனங்கள் முன் சொல்லி அதை கர்த்தரின் ஆலய வேலைக்காக *"நன்கொடையாக"* அருளினார்.

*🌻எல்லாம் கர்த்தர் தான் தனக்கு கொடுத்தது என்கிறார்.*

*🎀தான் மட்டுமல்ல, தனது நாட்டு மக்களும் கூட அப்படி கொடுக்க விரும்பினார்.*

கர்த்தருக்கு
*"தன் கை காணிக்கைகளை"* செலுத்த மனப்பபூர்வமானவர்கள் யார்❓️என்று கேட்டபோது, மனப்பபூர்வமாய் முன்வந்து கொடுத்தவர்கள் யாரெனில்

🌿வம்சங்களின் பிரபுக்கள்,

🌿கோத்திரங்களின் பிரபுக்கள் ,

🌿நூறு பேருக்கு அதிபதிகள்,

🌿இராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்கள் யாவரும் ஆலய பணிக்கென்று கொடுத்தார்கள்.

இவர்கள் ஜனங்களிடம் இருந்து வாங்கி, மற்றும் தங்களுடையவைகளையும் சேர்த்து கொடுத்திருப்பார்கள். அவைகள் யாவும் *"கெர்சொனியனான எகியேலின் கையில்"* கொடுத்தார்களாம். இவன் தான் இந்த எல்லா நன்கொடைகளையும் உத்தமமாக பாதுகாத்து நின்றவர். *(29 : 5 - 8)*

🥏🪂🥏🪂🥏🪂

*✍️இப்படி மனப்பபூர்வமாக....* ஆம் கர்த்தரின் பணிக்கென்று மனப்பபூர்வமாக கொடுத்ததற்க்காக ஜனங்களுக்கும், இராஜாவுக்கும் சந்தோஷம் உண்டாகியது.
உடனே தாவீதரசருக்கு கர்த்தரை துதிக்க மனம் பொங்கி எழுந்தது.
ஏராளம் நன்றிகளை அவர் இறைவனுக்கு புகழ் மாலையாக சூடி வர்ணித்து நிற்கிறார். *"இறைவனை குறித்து தான் என்ன அறிந்திருக்கிறார்" என்பதை தாவீதரசர் வெளிப்படையாய் தெரிவிக்கிறார்.*

🪢மாட்சிமை, வல்லமை, மகிமை, ஜெயம், மகத்துவம், யாவும் உம்முடையவைகள்.

🪢இராஜ்யம் உம்முடையது.

🪢தேவரீரே எல்லாவற்றிருக்கும் தலைவராய் உயர்ந்து இருக்கிறீர்.

🪢ஐசுவரியமும், கனமும் உம்மாலே வருகிறது.

🪢எல்லாவற்றையும் ஆளுகிறவரும் நீரே.

🪢சத்துவமும், வல்லமையும் உமது கரத்தில் தான் உண்டு.

*🪢எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.*

🔥எல்லாம் உம்மால் உண்டானது,

🔥உமது கரத்தில் வாங்கி உமக்கு கொடுத்தோம்.

*இன்னும் பல பல கூறியுள்ளார்,*
I நாளா 29 : 1 - 19 வரை வாசித்து அறியலாம்.

*🌈தன் சுய சம்பாத்தியத்தை குறித்தும், தனது ஆஸ்திகளை குறித்தும் அரசன் தாவீதுக்கு இருந்த மனப்பான்மை வியக்கத்தக்கதாகும்.*
இந்த உண்மை, அல்லது சத்தியத்தினை நாம் எல்லோரும் புரிந்து கொண்டோராக, அதை சுவீகரித்து கொண்டோராக எமது உலக வாழ்வு என்னும் ஓட்டத்தில் ஒடவேண்டும்.

*💐மனப்பபூர்வமாக கொடுக்க திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம், என் ஜனங்கள் எம்மாத்திரம் என்கிறார்.* அப்படியென்றால் *இந்த மனப்பபூர்வமாக கொடுத்தல் என்பது இறைவன் எமக்கு அருளும் ஒரு கொடை ஆகும்.* இப்படி பட்ட கிருபை / அருள் பெற்றோர் தரித்திர நிலையில் இருந்தாலும்...... கொடுப்பதை கைவிடமாட்டார்கள் / நிறுத்தி கொள்ள மாட்டார்கள்.
*(வாசிக்கவும் : 2கொரி - 8 : 1- 5)*

*🦀இந்த கிருபை / அருள் அற்றோர் இறைவனின் பணிக்கோ, இல்லை எவருக்குமோ ஏதோன்றும் கொடார்.* கொடுப்போரின் மனநிலையை குறித்தும் தாவீது கூறுகையில், *"எல்லாம் உம்மால் உண்டானது, உமது கரத்தில் வாங்கி உமக்கு கொடுத்தோம்"* என்கிறார்.
*நாம் அப்படி எண்ணுகிறோமா❓️* இல்லை,
*பிறரிடம் அப்படி ஏதும் இதுவரை சொல்லியுள்ளோமா❓️*

நாம் சொல்வதெல்லாம் *என் சம்பாத்தியம்,* *என் ஆஸ்தி,*
என்... என்.... என்.... தான்.
*அவருக்கு, (தேவனுக்கு) அங்கு இடமே கொடுப்பதில்லை.* அவரிடம் இருந்து தான் எல்லாம் நமக்கு வந்துள்ளது என்று எத்தனை பேர் ஒத்துக்கொள்வோம்❓️
நாம் சம்பாதிக்கதக்கதாக தேவையான நல்ல புத்தி சுயாதீனம், ஆரோக்கியம், சமாதான் வாழ்வு இல்லாந்திருந்தால் இவையெல்லாம் கிட்டி இருக்குமா❓️ என, ஒரு கணம் யோசித்து பார்த்து, தாவீதரசர் போல நாமும் கூட, ஆண்டவரின் பணிக்கோ, இல்லை ஏழை எளியோருக்கோ, ஏதேனும் கொடுத்திருந்தோமானால்,
*" எல்லாம் உம்மால் உண்டானது. இதில் பொருட்செல்வம், மற்றும் மனப்பபூர்வ, உற்சாக இதயம் இரண்டுமே அடங்கும்.*
(அதாவது மனங்கோணாமல் ஏதும் கொடுத்தவை, கொடுக்க தக்க இதயம் உண்டானது அவரால் தான் என்னும் உணர்வு) *உமது கரத்தில் வாங்கி தான் உமக்கு கொடுத்தோம்.*

அநேகர் பாருங்கள், பிறரிடம் இருந்து நன்கொடைகளை பெற்று தான் அடுத்தோறுக்கு நன்மை செய்கின்றனர். அவர்கள் சுய உழைப்பு என்று ஏதும் அங்கு இராது.

*🥏ஆனால் சேவலை போல கூவுவதெல்லாம்,....நான் ஏராளம் செய்திருக்கிறேன் என்பார்கள்.*
இதில் என்னுடையது என்று சொல்வதற்க்கு அங்கு எமக்கு ஒன்றுமில்லை.

*🌿ஏற்கனவே அவை இறைவனுடையதாக தான் இருந்தவை.*
பிறர் நமக்கு கொடுத்தனர். அவ்வற்றை தான் நாம் அவருக்கோ, + ஏழைகளுக்கோ திரும்ப கொடுத்தோம், கொடுத்துள்ளோம் என்று *அறிக்கையிட்டு..... அறிக்கையிட்டு..... எம்மை தாழ்த்துவோம்.*

அப்பொழுது *"கொடுத்தல் என்னும் தன்மையின் மனப்பாங்கில் மாற்றங்கள் கண்டு, எமது மனம் புதிதாகி..... புதிதாகி உள்ளான நிலைப்பாட்டில் அது மறுரூபங் கண்டடையும்".* ஆமேன்.

*🍉என் சாமார்த்தியமும், என் கைபெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்கு சம்பாதித்தது என்று நீ உன் இருத்தயத்தில் சொல்லி கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக !..... அவரே ஐசு வரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்கு கொடுக்கிறவர்.*
(உபா - 8 : 17, 18)

சிலரிடத்தில் நல்ல ஆஸ்தி இருக்கும், ஆனால் இவர்கள் உழைக்காமலும், இவர்களுக்கு வருமானம் என்ற ஒன்று வராமலும் இருக்கையில்....
*கொடுக்கும் விஷயத்தில் பிசினித்தனம் செய்வார்கள்.*

இன்னும் சிலருக்கு ஆஸ்தி, ஐசுவரியம், எல்லாம் இருக்கும் ஆனால் *கொடுக்க மனமிராது.* காரணம் பிறரை குறித்த நல்ல எண்ணம் இல்லாமை.

பண விஷயத்தில் உண்மையாற்றோர் இறை பணியாளனாக இருக்க தகுதி அற்றோராகி விடுகின்றனர்.

யாருக்கு கொடுப்பது, எந்த காரியதிற்காக கொடுப்பது, யாரிடம் கொடுப்பது என்பதை குறித்த முடிவை குடும்பமாக எடுத்து செயல் படுகையில் குடும்பத்திற்கு அது ஆசீர்வாதம்.

சிலர் கொடுக்க மாட்டார்கள்.
மற்றொரையும் கொடுக்க விடாமல் தடை செய்யும் பேச்சு, போதனை, எழுத்துக்களை சரமாரியாக வீசி எரிந்து நிற்பார்கள்.

இங்கு நாட்டை ஆளும் அரசன், கொடுத்தல் விஷயத்தில் எல்லோருக்கும் ஓர் முன் மாதிரி வாழ்வு வாழ்ந்து, தன் சுய உழைப்பில் இருந்து கூட கர்த்தருக்கு கொடுத்ததை, *அவர் எனக்கு கொடுத்ததை தான், நான் அவருக்கு கொடுத்துள்ளேன், எல்லாம் (ஆண்டவராகிய) அவருடையது என்று நல்ல மனப்பான்மை, கிரியை, மற்றும் அறிக்கையிடுதலை இங்கு காண்கிறோம்.

*🍀இறை காரியமாக, ஏழைகளுக்கு கொடுத்தல் என்னும் அருளை இறைவனிடம் கேட்டு பெற்று கொள்வோம்.*

*✒️Sis. Martha Lazar*
NJC, KodaiRoad.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.