Type Here to Get Search Results !

2 Chronicles 27-29 Bible Study | Tamil Christian Message Notes | 2 நாளாகமம் 27-29 தியான குறிப்புகள் | Jesus Sam

[28/08, 08:28] (W) Arun Selva Kumar: 🌈 *When Hezekiah first ascended to the throne, he didn’t build a palace or consolidate his power. No, the first thing he did was open the doors of the temple.*

⛹️‍♂️ *Application* : II Chr. 29:3-In 2 Chronicles 28:24, we read that Hezekiah’s father, Ahaz, shut the doors of the house of the Lord. But now here comes his son, Hezekiah who—in the first month of his reign—opened the doors of the house of the Lord. *When Hezekiah first ascended to the throne, he didn’t build a palace or consolidate his power. No, the first thing he did was open the doors of the temple. “Those who seek Me early shall find Me,” the Lord declares (Proverbs 8:17). Hezekiah models this beautifully.*

⛹️‍♂️ *Application* : II Chr.29:4-5- Mice and rats actually spend the majority of their waking hours grooming themselves. They carry disease, but are actually surprisingly clean. *There seems to be innately built into creation a desire to be clean. And yet when it comes to the heart of man, we allow corruption and pollution to affect us internally. Cleansing needs to be carried out daily. How? If we confess our sin, He is faithful and just to forgive us our sin and to cleanse us from all unrighteousness (1 John 1:9).* This verse tells us that even if we feel defiled and desecrated, we can solve that problem right now simply by confessing.

⚠️II Chr. 29:9- There had been one time when the people had looked at the serpent in faith, trusting the promise of God, then the brazen serpent had been the basis of physical salvation for those who were bitten by the poisonous snakes. Now it had become an object of worship. It had become an idol. It was a stumbling block to the people. *There are those today who worship the symbol of the cross. They feel that there is some merit in having a cross in their possession. There would be no merit in it at all.* You can make an idol of anything—you can worship the spigot because it gives you water, you could worship the window because it brings you light, or you could worship the automobile because it transports you. A great many people today worship the television screen; they sit before it for hours each day. *May we be reminded that, there is no merit in objects.*

Jaya Pradeep-Kodaikanal.
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*

*DAY 136, 28/08/2023 MONDAY*

*2 CHRONICLES : 27 - 29*

*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇‍♂️

[28/08, 08:28] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣6️⃣
2 Chron 27-29
*WHAT A GOD WE SERVE* ❗️

*God brought His children down when they displeased Him* ‼️

💥 The Lord brought Judah low *BECAUSE* the king encouraged moral decline and had been continually unfaithful to the Lord.(28:19)

💥 He did not do what was right in the sight of the Lord. *THEREFORE* the Lord his God delivered him into the hand of the enemy (28:1,5)

💥 Killed one hundred and twenty thousand in Judah in one day, all valiant men, *BECAUSE* they had forsaken the Lord God of their fathers (28:6)

💥 But when he was strong his heart was lifted up, to his destruction, *FOR* he transgressed against the Lord his God (26:16)

💥 *BECAUSE* you have allied yourself with Ahaziah, the Lord has destroyed your works (20:37)

🙏🙏 *Teach me to do Your will [so that I may please You], For You are my God; Let Your good Spirit lead me on level ground* (Ps 143:10)

Usha
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: *நாள் 136 /365*
*2 நாளாகமம் 27 - 29*

“ *யோதாம்* “

யோதாம், யூதாவின் சிறந்த ராஜாக்களில் ஒருவன்.
( 2 நாளா .27 அதி.)
இவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்
என்று பார்க்கிறோம்..

இவன் தன் தகப்பனிடமிருந்து, ஒரு பாடத்தைக்
கற்றுக்கொண்டான்.
இவன் தகப்பனாகிய உசியா.. ஆலயத்திற்குள் துணிகரமாக நுழைந்து.. ஆசாரியருடைய பணிவிடைகளில் தலையிட்டு.. குஷ்டரோகியானான்.
அதனால் யோதாம்.. கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்.

*நம் வாழ்வில், ஒரு காரியத்தில்* *தோல்வி ஏற்படும்போது*..
*அந்தக் காரியத்திலிருந்து*..
*நாம் கற்றுக்கொள்ள வேண்டிய* *பாடம் ஒன்று உண்டு என்பதைப்* *புரிந்துகொள்ளவேண்டும்*. *அந்தத் தோல்வியிலிருந்து*.. *நாம் பாடம் கற்றுக்கொள்ளாத* *வரை*..
*நாம், நம் வாழ்வில் தோல்விகளைச்* *சந்தித்துக்* *கொண்டேதானிருப்போம்*.

யூதாவின் மனுஷர்..
மேடைகளின்மேல் தூபங்காட்டி
வருவதை.. இவனால் தடை செய்யமுடியவில்லை.
கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டி.. யூதாவின் மனுஷரை.. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு.. வரவழைக்க முயற்சி செய்தான்.
ஜனங்கள், தங்களைக் கெடுத்துக்கொண்டாலும், ஜனங்களால், ராஜாவின் மனதைக் கெடுக்க முடியவில்லை.
இவன் தேவனுடைய வழிகளிலேயே நடந்தான்.

யோதாம் ,தன் தகப்பனைப் போலவே.. யுத்தத்தில் ஜெயம் பெற்றான். அநேக கட்டிடங்களைக் கட்டினான்.

இது அவனுடைய சுய பலத்தினாலோ.. சுய பராக்கிரமத்தினாலோ அல்ல. யோதாம், தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதால் பலப்பட்டான்..என்று பார்க்கிறோம்..
( 2 நாளா. 27 : 6 )
அவன் வாழ்வு கர்த்தருக்கு முனபாகச் செம்மையாக
இருந்ததினால்..கர்த்தர்
அவனுக்கு அநுகூலம் செய்தார்.

*ஆவியானவர், நம்முடைய* *கோணலான வாழ்வை* .. *நமக்குச் சுட்டிக்காட்டும்* *பொழுது.. நாம் மனந்திரும்பி* *விட்டுவிடவேண்டிய* *காரியங்களை ..விட்டுவிட* *வேண்டும்*..
*கர்த்தருக்குப் பயந்து*.. *அவருக்குப் பிரியமானதை* *மாத்திரம் செய்ய.. நம்மை* *அர்ப்பணிக்கவேண்டும்*..
*இவ்விதம் நம் வாழ்வை கர்த்தருக்கு* *முன்பாக நாம் நேராக்கும்போது*.. *கர்த்தர் நம்மையும்* *பலப்படுத்துவார்*,
*நம்மையும் பயன்படுத்துவார்*.

இந்த உலகத்தில் பூரணமானவர்கள் யாரும் இல்லை.
இவன் தன் ராஜ அதிகாரத்தைக் கொண்டு..மேடைகளை அகற்றிப்போடவில்லை..
(2 இராஜா. 15:35).
அதனால், அவன் தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் நடந்தான் என்று.. அங்கே கூறப்படவில்லை.

*பிரியமானவர்களே*..
*கர்த்தருக்குள் நம் வாழ்வை* *நாம் நேராக்குவோம்*..
*தனித்து நிற்க வேண்டிய நிலை* *வந்தாலும்*..
*தீமைக்குத் துணை* *போகாதிருப்போம்* ..
*தேவனுடைய சித்தத்தையே* *நிறைவேற்றுவோம்*.
*தேவனுக்காக.. எரிந்து* *பிரகாசிக்கும்*
*தீபங்களாயிருப்போம்*..
ஆமென்.🙏

மாலா டேவிட்
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: *28.08.2023*

❎ *கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?* ❎

☄️ *“இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ? ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டு வந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.”* (2 நாளாகமம் 28:10-11).

💥 *ஆகாஸ் ராஜா இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து,* பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான். இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக கர்த்தர் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே பல பழக்கவழக்கங்களை அவன் பின்பற்றினான். ஆகையால், கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். சீரியர்கள் ஆகாசை தோற்கடித்து, அவனது ஜனங்களில் பலரை தமஸ்குவுக்குக் கொண்டு சென்றனர். *அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்.* அவன் போரில் யூதா ஜனங்களில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றான். இஸ்ரவேலர்கள் யூதாவின் இரண்டு இலட்சம் ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்துக் கொண்டு சென்றனர்.

💥 இஸ்ரவேலர்களும் கர்த்தருக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் யூதாவின் தவறுகளைத் திருத்துவதற்கான கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இஸ்ரவேலரைக் கண்டிக்க, தேவன் ஓதேத் என்னும் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர்கள் *வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம் பண்ணினதற்காகவும், யூதாவின் ஆண்களையும் பெண்களையும் தங்கள் அடிமைகளாக்க நினைத்ததற்காகவும் கண்டிக்கப்பட்டார்கள்.* அப்பொழுது போர்வீரர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், தலைவர்களுக்கு முன்பாகவும் அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.

💥 தேவனுடைய நீதியை வெறுப்புடனும் பழிவாங்கலுடனும் செயல்படுத்துபவர்கள் தங்களை அருவருப்பானவர்களாக ஆக்கி, தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றும் கண்ணியத்தை இழக்கிறார்கள். ஏனென்றால் *மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே* (யாக்கோபு 1:20).

💥 இயேசுவின் வார்த்தைகள்: *"மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.”* (லூக்கா 6:37). நம் விரோதிகளிடம் அன்பு செலுத்தவும் கருணை காட்டவும் வேண்டுமென்றால், பரிசேயர்கள் ஆயக்காரர்களையும் பாவிகளையும் குற்றப்பட்டுத்திக் கண்டனம் செய்ததுபோல் (லூக்கா 5:29-30), நாம் பிறரைக் குற்றப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, *அவர்களை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.*

💥 *"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”* (மத்தேயு 7:5) என்று இயேசு போதித்தார். பிறரை நியாயந்தீர்ப்பதற்கு முன் நம்மிடம் குற்றம் எதுவுமில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

💥 ரோமருக்கு எழுதும் போது, *தேவனுடைய குடும்பத்தில் தங்களுடைய இடத்தைக் குறித்து கர்வமும் பெருமையும் கொள்ள வேண்டாம்* என்று பவுல் புறஜாதிக் கிறிஸ்தவர்களை எச்சரித்தான். விசுவாசத்தின் மூலம் தேவனோடு ஒன்றுபட்டவர்களைக் குறிக்கும் உருவக ஒலிவ மரத்தில் அவர்கள் தங்கள் இடத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது. *"சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு."* (ரோமர் 11:21) என்று பவுல் அறிவித்தான்.

💥 கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம், மற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது அலட்சியமாக நடத்தவோ கூடாது. மற்றவர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதுபவர்களைப் பற்றி, பவுல், *"ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.”* (ரோமர் 2:1) என்று கூறுகிறான்.

💥 *"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது."* (1 பேதுரு 4:17). தண்டனையிலிருந்து தப்பிக்க தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம்.

🔹 *மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு முன் நம்மிடத்தில் எவ்வித குற்றமுமில்லை என்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *நம் விரோதிகளிடம் அன்பு செலுத்தவும் கருணை காட்டவும் வேண்டுமென்றால், நாம் பிறரைக் குற்றப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.*
2️⃣ *கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம், மற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது அலட்சியமாக நடத்தவோ கூடாது.*
3️⃣ *தண்டனையிலிருந்து தப்பிக்க தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *அதிகாலையில் எழும்பி* 🍂

எசேக்கியா, ராஜாவான உடன் செய்த முதல் காரியம், *தேவாலயத்தையும் அதன் சேவையையும்* மீட்டெடுப்பதாகும். பணிகளைத் தொடங்குவதற்கு, அவன் லேவியர்களை அழைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினான். ஆலயம் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு எசேக்கியா மேலும் நேரத்தை வீணாக்கவில்லை. அவன் *தன் கடமைகளை அலட்சியம் செய்யவில்லை*. அவன் தன் கடமைகளைத் தள்ளிப் போடவும் இல்லை.

📖 *“அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.” (‭‭2 நாளா‬ ‭29‬:‭20‬)*

எசேக்கியா ராஜா அதிகாலையில் எழுந்து, தன் அதிகாரிகளுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். தேவனால் பயன்படுத்தப்பட்ட ஐனங்கள் அதிகாலையில் எழுந்தவர்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. *மோசே* அதிகாலையில் எழுந்தார். *தாவீது* கர்த்தரைத் தேடுவதற்காக அதிகாலையில் எழுந்தான். *அதிகாலையில் இருட்டோடு இயேசு கிறிஸ்து எழுந்து* தனிமையான இடத்திற்கு ஜெபிக்கச் சென்றார். *இப்போதும் காலையில் எத்தனை மணிக்கு நாம் எழும்புகிறோம்? ஆவிக்குரிய கடமைகளை நாம் தள்ளிப் போடுகிறோமா?*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_ஆகஸ்ட் 28, 2023_
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👨‍👧‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் *2 நாளாகமம் 28* இல் இருக்கிறோம்

*AHAZ'S VISIT TO DAMASCUS*
*ஆகாஸின் தமஸ்கு வருகை*

📝 யூதாவின் மிகவும் பொல்லாத ராஜாக்களில் ஒருவரான *ஆகாஸ்*, தன் தந்தை *யோதாம்* மற்றும் அவனது தாத்தா *உசியா* மற்றும் கொள்ளு தாத்தா *அமத்சியா* மற்றும் *யோவாஸ்* ஆகியோரின் வழிகளை பின்பற்றவில்லை. மாறாக இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்.

1️⃣ *ஆகாஸின் பொல்லாப்பு* :
✔️ அவர் *பாகால்களின் விக்கிரக வழிபாட்டை* ஊக்குவிக்கிறார் (28:2)
✔️ அவர் தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டார் (28:3)
✔️ மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டு தூபங்காட்டி வந்தார். (28:4)

📍 *இந்த பொல்லாப்புகள் அனைத்தும் தேவனுக்கு கோபத்தை உண்டாக்கியது*
📍 இவ்வாறு, ஆண்டவர் ஆகாஸை சீரியாவின் ராஜாவாவிடமும், இஸ்ரவேலின் ராஜாவிடமும் ஒப்படைத்தார் (22:5-8).
📍 *எதோமியர்கள் மற்றும் பெலிஸ்தியர்களிடமிருந்து* (28:17-18) தொடர்ந்து ஆபத்து வந்தது.

🙋‍♂️ ஆகாஸ், கர்த்தரின் உதவியைத் தேடுவதற்குப் பதிலாக, அசீரியாவின் ராஜாவாகிய *திகிலாத் பிலேசரிடத்துக்கு* உதவிக்காக ஸ்தானாபதிகளை அனுப்பினார், அதோடு அவருக்கு விசேஷமான காணிக்கையாகக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் அனுப்பினார் (2ராஜாக்கள் 16) :7-9)
📍 இவ்வாறு, அசீரியாவின் ராஜா யூதாவின் எதிரிகளைத் தோற்கடித்து *தமஸ்குவை* கைப்பற்றினார் (2ராஜாக்கள் 16:9)

🙋‍♂️ அசீரியாவின் ராஜாவுக்கு நன்றி செலுத்துவதற்காக, *ஆகாஸ் தமஸ்குவுக்கு* திகிலாத்பிலேசரை சந்திக்கச் சென்றார் (2இராஜாக்கள் 16:10)

2️⃣ *தமஸ்குவில் ஆகாஸ்* ( 2இராஜாக்கள் 16:10-11 )
🙋‍♂️ அவர் ஒரு பலிபீடத்தைப் *பார்த்து* ஈர்க்கப்பட்டார்.
🙋‍♂️ அவர் *பலிபீடத்தின் சாயலை* ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினார்.
🙋‍♂️ அதன் மாதிரியை எருசலேமில் அமைக்க அவர் *உத்தரவிட்டார்*.

3️⃣ *ஆகாஸ் எருசலேமுக்குத் திரும்பினார்* ( 2இராஜாக்கள் 16:12 - 14 )
🔖 அவர் பலிபீடத்தைக் *கண்டு* மகிழ்ந்தார்.
🔖 அவர் தனது *காணிக்கைகளை* வழங்கினார்:
🔥 *சர்வாங்கதகன பலி*
🌾 *போஜனபலி*
🥂 *பான பலி*
🤝🏽 *சமாதானபலி*
❌ குற்றநிவாரண பலி இல்லை.
*4️⃣தமஸ்கு பயணத்தின் முடிவு* (வ 24 - 25)
➡️ ஆகாப் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றான்.
➡️ *கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டிப்போட்டான்*.
➡️ எருசலேமில் மூலைக்கு முலை பலிபீடங்களை உண்டுபண்ணினார்.
➡️ அந்நிய தெய்வங்களுக்கு தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணினான்.
➡️ வெண்கலப் பலிபீடத்தை சன்னதம் கேட்கிறதற்காக பயன்படுத்தினார் (2இராஜாக்கள் 16:15d)

🙋‍♂️ *ஆகாஸ் தனது ஆட்சியை வியக்க வைக்கும் விக்கிரக ஆராதனைகளுடன் தொடங்கி,* கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை அடைப்பதில் முடிந்தது (வ. 1-4, 24)

💕 அன்பான திருச்சபையே, இயேசு சொன்னார், "நாம் *உலகத்தில்* இருக்கிறோம், ஆனால் *உலகிற்குரியவர்* அல்ல. கவனமாக நடப்போம், இல்லையெனில் வரவிருக்கும் உலகத்தில் நமது மோசமான நடத்தையின் காரணமாக *கர்த்தருடைய ஆலயத்தின் கதவு பூட்டப்படும்/அடைக்கப்படும்*

தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: 💫 *RESTORATION OF DEVOTION*💫

[DAY - 137] 2 Chronicles chapter 29

☄️This chapter highlights Hezekiah’s efforts to restore worship, cleanse the temple, and lead the people of Judah back into a covenant relationship with the Almighty.

1️⃣ *REKINDLING WORSHIP*

🔹Hezekiah reopened the doors of the temple that had long been neglected under his father's reign.
🔹Hezekiah's love for God drove him to gather the priests and Levites and urge them to consecrate themselves once again for the service of the Lord. (3-7)
🔹Hezekiah’s dedication to restoring worship demonstrates his deep love and commitment to God.
🔹This is a call for PERSONAL PURITY!

2️⃣ *CLEANSING THE TEMPLE*

🔸The temple had become defiled due to years of neglect and the influence of false gods.
🔸With a heart burdened for holiness, he ordered the priests to cleanse the temple, remove all the impurities and restore the sacredness of God's dwelling place.
🔸Hezekiah’s actions reflect his genuine love for God and his desire to maintain a pure and holy space for worship.

3️⃣ *RENEWING THE COVENANT*

▪️Hezekiah recognized that true love for God required a return to the covenant relationship.
▪️He summoned the people of Judah and Israel, calling them to repentance and urging them to turn back to the Lord. ▪️Hezekiah’s love for God was evident through his commitment to obeying God's commands and teaching the people to do the same.
▪️He reinstated the observance of Passover, a significant act that symbolized the reestablishment of their covenantal relationship with God.

4️⃣ *WHOLEHEARTED DEVOTION*

🔺Hezekiah's love for God went beyond mere rituals and ceremonies.
🔺His devotion was marked by wholehearted commitment and sincerity.
🔺He sought the Lord with all his heart, and God responded by granting him success in all his endeavors.
🔺Hezekiah’s love for God was not just confined to the religious sphere but extended into all aspects of his life, as he trusted in God's guidance and depended on Him during times of adversity.

♥️ *LIFE LESSONS*

💥Hezekiah’s wholehearted commitment and sincerity in seeking after God's will make him an exemplary figure in the Bible.
💥It inspires us to rekindle our own love for God, seeking Him with all our hearts and committing ourselves to live in obedience to His word.

*‼️REVIVAL STARTS WITH RESTORATION OF DEVOTION AND COMMUNICATION WITH GOD‼️*
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: Day 136 2 chron 28:12-15

*Obey God's word*

God gives King Ahaz of Judah over to the forces of Aram and king Pekah of Israel.Ahaz army suffered devastating losses The leaders of Israel captured 2,00,000 women and children plus a large amount of plunder

When Obed ,a prophet confronted them with their sin of unmercifully killing and enslaving their fellow Israelites from Judah ,the leaders of the army repented and ordered the people to be released .

They were afraid of adding more sin on top of their existing sin.The lone voice of one godly person and then the voice of just four more men convinced an entire army to change course.They gave their captors new clothes,food,medicine and escorted them home.God wants His followers to exercise kindness and consideration when excercising justice.

When the time comes for you to stand up and call out wrong ,will you have the courage to do it

*your courage and reliance on God 's strength can do more than you could ever imagine*

Cynthia Sathiaraj
Chennai
[28/08, 08:28] (W) Arun Selva Kumar: Valsa Tharien

2 Chr 29:34. The priests were too few ... the Levites helped them until other priests had been consecrated, for the Levites had been more conscientious in consecrating themselves than the priests!!
In 2 Kings 16:10-16 we see how Uriah the priest was involved in building and making offerings in accordance with the orders of the wicked king Ahaz!! Probably many more priests were involved in all these. They were negligent about their own consecration.
The Levites were more zealous in keeping themselves consecrated for the Lord. Well, a little deviation from the rules, but with the help of the Levites, the service of the temple of the Lord was re-established. King Hezekiah and all the people rejoiced.

Romans 12:1-2 in view of God's mercy, offer your bodies as a living sacrifice, Holy and pleasing to God..... Do not conform to the patterns of this world, but be transformed by the renewing of your mind...
We are a royal priesthood, always to be ready and consecrated for the Lord .

*2நாளாகமம் 27 - 29*

*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️.
[28/08, 04:45] +91 99431 72360: *28.08.2023*

❎ *கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?* ❎

☄️ *“இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ? ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டு வந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.”* (2 நாளாகமம் 28:10-11).

💥 *ஆகாஸ் ராஜா இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து,* பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான். இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக கர்த்தர் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே பல பழக்கவழக்கங்களை அவன் பின்பற்றினான். ஆகையால், கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். சீரியர்கள் ஆகாசை தோற்கடித்து, அவனது ஜனங்களில் பலரை தமஸ்குவுக்குக் கொண்டு சென்றனர். *அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்.* அவன் போரில் யூதா ஜனங்களில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றான். இஸ்ரவேலர்கள் யூதாவின் இரண்டு இலட்சம் ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்துக் கொண்டு சென்றனர்.

💥 இஸ்ரவேலர்களும் கர்த்தருக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் யூதாவின் தவறுகளைத் திருத்துவதற்கான கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இஸ்ரவேலரைக் கண்டிக்க, தேவன் ஓதேத் என்னும் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர்கள் *வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம் பண்ணினதற்காகவும், யூதாவின் ஆண்களையும் பெண்களையும் தங்கள் அடிமைகளாக்க நினைத்ததற்காகவும் கண்டிக்கப்பட்டார்கள்.* அப்பொழுது போர்வீரர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், தலைவர்களுக்கு முன்பாகவும் அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.

💥 தேவனுடைய நீதியை வெறுப்புடனும் பழிவாங்கலுடனும் செயல்படுத்துபவர்கள் தங்களை அருவருப்பானவர்களாக ஆக்கி, தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றும் கண்ணியத்தை இழக்கிறார்கள். ஏனென்றால் *மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே* (யாக்கோபு 1:20).

💥 இயேசுவின் வார்த்தைகள்: *"மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.”* (லூக்கா 6:37). நம் விரோதிகளிடம் அன்பு செலுத்தவும் கருணை காட்டவும் வேண்டுமென்றால், பரிசேயர்கள் ஆயக்காரர்களையும் பாவிகளையும் குற்றப்பட்டுத்திக் கண்டனம் செய்ததுபோல் (லூக்கா 5:29-30), நாம் பிறரைக் குற்றப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, *அவர்களை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.*

💥 *"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.”* (மத்தேயு 7:5) என்று இயேசு போதித்தார். பிறரை நியாயந்தீர்ப்பதற்கு முன் நம்மிடம் குற்றம் எதுவுமில்லை என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

💥 ரோமருக்கு எழுதும் போது, *தேவனுடைய குடும்பத்தில் தங்களுடைய இடத்தைக் குறித்து கர்வமும் பெருமையும் கொள்ள வேண்டாம்* என்று பவுல் புறஜாதிக் கிறிஸ்தவர்களை எச்சரித்தான். விசுவாசத்தின் மூலம் தேவனோடு ஒன்றுபட்டவர்களைக் குறிக்கும் உருவக ஒலிவ மரத்தில் அவர்கள் தங்கள் இடத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது. *"சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு."* (ரோமர் 11:21) என்று பவுல் அறிவித்தான்.

💥 கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம், மற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது அலட்சியமாக நடத்தவோ கூடாது. மற்றவர்களை விட தங்களை மேலானவர்களாகக் கருதுபவர்களைப் பற்றி, பவுல், *"ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.”* (ரோமர் 2:1) என்று கூறுகிறான்.

💥 *"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது."* (1 பேதுரு 4:17). தண்டனையிலிருந்து தப்பிக்க தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம்.

🔹 *மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு முன் நம்மிடத்தில் எவ்வித குற்றமுமில்லை என்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *நம் விரோதிகளிடம் அன்பு செலுத்தவும் கருணை காட்டவும் வேண்டுமென்றால், நாம் பிறரைக் குற்றப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.*
2️⃣ *கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம், மற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது அலட்சியமாக நடத்தவோ கூடாது.*
3️⃣ *தண்டனையிலிருந்து தப்பிக்க தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டியது அவசியம்.*

Dr. எஸ். செல்வன்
சென்னை
[28/08, 04:45] +91 99431 72360: ஷாலோம் 🙏
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👨‍👧‍👦

🙋‍♂️🙋‍♀️ நாம் *2 நாளாகமம் 28* இல் இருக்கிறோம்

*AHAZ'S VISIT TO DAMASCUS*
*ஆகாஸின் தமஸ்கு வருகை*

📝 யூதாவின் மிகவும் பொல்லாத ராஜாக்களில் ஒருவரான *ஆகாஸ்*, தன் தந்தை *யோதாம்* மற்றும் அவனது தாத்தா *உசியா* மற்றும் கொள்ளு தாத்தா *அமத்சியா* மற்றும் *யோவாஸ்* ஆகியோரின் வழிகளை பின்பற்றவில்லை. மாறாக இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்.

1️⃣ *ஆகாஸின் பொல்லாப்பு* :
✔️ அவர் *பாகால்களின் விக்கிரக வழிபாட்டை* ஊக்குவிக்கிறார் (28:2)
✔️ அவர் தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டார் (28:3)
✔️ மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டு தூபங்காட்டி வந்தார். (28:4)

📍 *இந்த பொல்லாப்புகள் அனைத்தும் தேவனுக்கு கோபத்தை உண்டாக்கியது*
📍 இவ்வாறு, ஆண்டவர் ஆகாஸை சீரியாவின் ராஜாவாவிடமும், இஸ்ரவேலின் ராஜாவிடமும் ஒப்படைத்தார் (22:5-8).
📍 *எதோமியர்கள் மற்றும் பெலிஸ்தியர்களிடமிருந்து* (28:17-18) தொடர்ந்து ஆபத்து வந்தது.

🙋‍♂️ ஆகாஸ், கர்த்தரின் உதவியைத் தேடுவதற்குப் பதிலாக, அசீரியாவின் ராஜாவாகிய *திகிலாத் பிலேசரிடத்துக்கு* உதவிக்காக ஸ்தானாபதிகளை அனுப்பினார், அதோடு அவருக்கு விசேஷமான காணிக்கையாகக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் அனுப்பினார் (2ராஜாக்கள் 16) :7-9)
📍 இவ்வாறு, அசீரியாவின் ராஜா யூதாவின் எதிரிகளைத் தோற்கடித்து *தமஸ்குவை* கைப்பற்றினார் (2ராஜாக்கள் 16:9)

🙋‍♂️ அசீரியாவின் ராஜாவுக்கு நன்றி செலுத்துவதற்காக, *ஆகாஸ் தமஸ்குவுக்கு* திகிலாத்பிலேசரை சந்திக்கச் சென்றார் (2இராஜாக்கள் 16:10)

2️⃣ *தமஸ்குவில் ஆகாஸ்* ( 2இராஜாக்கள் 16:10-11 )
🙋‍♂️ அவர் ஒரு பலிபீடத்தைப் *பார்த்து* ஈர்க்கப்பட்டார்.
🙋‍♂️ அவர் *பலிபீடத்தின் சாயலை* ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினார்.
🙋‍♂️ அதன் மாதிரியை எருசலேமில் அமைக்க அவர் *உத்தரவிட்டார்*.

3️⃣ *ஆகாஸ் எருசலேமுக்குத் திரும்பினார்* ( 2இராஜாக்கள் 16:12 - 14 )
🔖 அவர் பலிபீடத்தைக் *கண்டு* மகிழ்ந்தார்.
🔖 அவர் தனது *காணிக்கைகளை* வழங்கினார்:
🔥 *சர்வாங்கதகன பலி*
🌾 *போஜனபலி*
🥂 *பான பலி*
🤝🏽 *சமாதானபலி*
❌ குற்றநிவாரண பலி இல்லை.
*4️⃣தமஸ்கு பயணத்தின் முடிவு* (வ 24 - 25)
➡️ ஆகாப் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றான்.
➡️ *கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை பூட்டிப்போட்டான்*.
➡️ எருசலேமில் மூலைக்கு முலை பலிபீடங்களை உண்டுபண்ணினார்.
➡️ அந்நிய தெய்வங்களுக்கு தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணினான்.
➡️ வெண்கலப் பலிபீடத்தை சன்னதம் கேட்கிறதற்காக பயன்படுத்தினார் (2இராஜாக்கள் 16:15d)

🙋‍♂️ *ஆகாஸ் தனது ஆட்சியை வியக்க வைக்கும் விக்கிரக ஆராதனைகளுடன் தொடங்கி,* கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை அடைப்பதில் முடிந்தது (வ. 1-4, 24)

💕 அன்பான திருச்சபையே, இயேசு சொன்னார், "நாம் *உலகத்தில்* இருக்கிறோம், ஆனால் *உலகிற்குரியவர்* அல்ல. கவனமாக நடப்போம், இல்லையெனில் வரவிருக்கும் உலகத்தில் நமது மோசமான நடத்தையின் காரணமாக *கர்த்தருடைய ஆலயத்தின் கதவு பூட்டப்படும்/அடைக்கப்படும்*

தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்

[28/08, 04:45] +91 99431 72360: *நாள் 136 /365 *
*2 நாளாகமம் 27 - 29*

“ *யோதாம்* “

யோதாம், யூதாவின் சிறந்த ராஜாக்களில் ஒருவன்.
( 2 நாளா .27 அதி.)
இவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்
என்று பார்க்கிறோம்..

இவன் தன் தகப்பனிடமிருந்து, ஒரு பாடத்தைக்
கற்றுக்கொண்டான்.
இவன் தகப்பனாகிய உசியா.. ஆலயத்திற்குள் துணிகரமாக நுழைந்து.. ஆசாரியருடைய பணிவிடைகளில் தலையிட்டு.. குஷ்டரோகியானான்.
அதனால் யோதாம்.. கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்.

*நம் வாழ்வில், ஒரு காரியத்தில்* *தோல்வி ஏற்படும்போது*..
*அந்தக் காரியத்திலிருந்து*..
*நாம் கற்றுக்கொள்ள வேண்டிய* *பாடம் ஒன்று உண்டு என்பதைப்* *புரிந்துகொள்ளவேண்டும்*. *அந்தத் தோல்வியிலிருந்து*.. *நாம் பாடம் கற்றுக்கொள்ளாத* *வரை*..
*நாம், நம் வாழ்வில் தோல்விகளைச்* *சந்தித்துக்* *கொண்டேதானிருப்போம்*.

யூதாவின் மனுஷர்..
மேடைகளின்மேல் தூபங்காட்டி
வருவதை.. இவனால் தடை செய்யமுடியவில்லை.
கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டி.. யூதாவின் மனுஷரை.. கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு.. வரவழைக்க முயற்சி செய்தான்.
ஜனங்கள், தங்களைக் கெடுத்துக்கொண்டாலும், ஜனங்களால், ராஜாவின் மனதைக் கெடுக்க முடியவில்லை.
இவன் தேவனுடைய வழிகளிலேயே நடந்தான்.

யோதாம் ,தன் தகப்பனைப் போலவே.. யுத்தத்தில் ஜெயம் பெற்றான். அநேக கட்டிடங்களைக் கட்டினான்.

இது அவனுடைய சுய பலத்தினாலோ.. சுய பராக்கிரமத்தினாலோ அல்ல. யோதாம், தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதால் பலப்பட்டான்..என்று பார்க்கிறோம்..
( 2 நாளா. 27 : 6 )
அவன் வாழ்வு கர்த்தருக்கு முனபாகச் செம்மையாக
இருந்ததினால்..கர்த்தர்
அவனுக்கு அநுகூலம் செய்தார்.

*ஆவியானவர், நம்முடைய* *கோணலான வாழ்வை* .. *நமக்குச் சுட்டிக்காட்டும்* *பொழுது.. நாம் மனந்திரும்பி* *விட்டுவிடவேண்டிய* *காரியங்களை ..விட்டுவிட* *வேண்டும்*..
*கர்த்தருக்குப் பயந்து*.. *அவருக்குப் பிரியமானதை* *மாத்திரம் செய்ய.. நம்மை* *அர்ப்பணிக்கவேண்டும்*..
*இவ்விதம் நம் வாழ்வை கர்த்தருக்கு* *முன்பாக நாம் நேராக்கும்போது*.. *கர்த்தர் நம்மையும்* *பலப்படுத்துவார்*,
*நம்மையும் பயன்படுத்துவார்*.

இந்த உலகத்தில் பூரணமானவர்கள் யாரும் இல்லை.
இவன் தன் ராஜ அதிகாரத்தைக் கொண்டு..மேடைகளை அகற்றிப்போடவில்லை..
(2 இராஜா. 15:35).
அதனால், அவன் தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் நடந்தான் என்று.. அங்கே கூறப்படவில்லை.

*பிரியமானவர்களே*..
*கர்த்தருக்குள் நம் வாழ்வை* *நாம் நேராக்குவோம்*..
*தனித்து நிற்க வேண்டிய நிலை* *வந்தாலும்*..
*தீமைக்குத் துணை* *போகாதிருப்போம்* ..
*தேவனுடைய சித்தத்தையே* *நிறைவேற்றுவோம்*.
*தேவனுக்காக.. எரிந்து* *பிரகாசிக்கும்*
*தீபங்களாயிருப்போம்*..
ஆமென்.🙏
மாலா டேவிட்

[28/08, 11:06] +91 99431 72360: 28.08.2023

*🦅சிப்பிக்குள் முத்து🦅*

இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*2 நாளா : 27 - 29*

*🐴முத்துச்சிதறல் : 136*

📌🌿📌🌿📌🌿
*உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ❓️* (28:10பி)
🌿📌🌿📌🌿📌

*💠எல்லோரும் குற்றம் செய்தவர்களே !💠*

🎊🛍️🎊🛍️

*யூதா அரசன் ஆகாஸ் நடப்பித்த சகல அக்கிரமங்களினிமித்தம், "ஆன்மீக வீழ்ச்சி நிலையின் உச்சத்தில் இருந்த யூதா புத்திரருக்கு" பாடம் கற்பிக்கும்படியாக அவர்களை, சீரியரின் இராஜா கையில் மாத்திரமல்லாமல், "இஸ்ரவேல் இராஜாவின் கையிலும்" கர்த்தர் ஒப்புக்கொடுத்ததினிமித்தம்,*
தங்கள் கைகளில் இறைவனால் ஒப்பு கொடுக்கப்பட்டிருந்த யூதா புத்திரரை இஸ்ரவேலர்
*( 10 கோத்திரத்தை சார்ந்தோர் )* கடுமையான உக்கிரகத்தோடே துவேஷம் செய்து, அவர்களது மனைவி மக்களை அடிமைகளாக்கிகொள்ளும்படி சமாரியாவுக்கு திரும்ப எத்தனித்து வரும் வழியில் தானே *ஒதேத் என்பவர் அவர்களை சந்தித்து சொன்ன வார்த்தைகள் :*
"உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ❓️" என்பதாம்.
*(28:10பி)*

*✍️குற்றங்கள், குறைகள் எல்லோரிடத்திலும் தான் உண்டு.*
ஆனால் தங்களை சீர் படுத்தி கொள்ளவும், பிறரை காட்டிலும் நாம் தான் சரியான பரிசுத்தவான்கள் என்று எவரும் தங்களை குறித்து உசத்தியாக, மேன்மையாக எண்ணி விட கூடாது என்பது இறைவனின் விருப்பம்.

*குற்றம் செய்த ஒருவரையோ, இல்லை ஒரு கூட்டதாரையோ கர்த்தர் எம் கையில் ஒப்புக்கொடுக்கும்போது*
எமது மனநிலை எம்மை எவ்வாறு நடத்துகிறது என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

கர்த்தரை பொறுத்த மட்டில் அவர் கண்ணோட்டத்தில் *யெரோபேயாம் மூலம் இஸ்ரவேல் என்னும் கர்த்தரின் நாட்டினுள் "பகிரங்கமான சுருப வழிபாடு" அரங்கேற்ற பட்டதில் இருந்தே அவர்களை கர்த்தர் "கை கழுவி விட்டார்", "தண்ணீர் தெளித்து அவர்கள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்", "தலை முழுகி விட்டார்", "என்னமோ செய்திட்டு போகட்டும்" என்பதே ஆண்டவரின் மனப்பான்மையாக இருந்தது.*

இஸ்ரவேலர் *(அதாவது வட இராஜ்யத்து மக்கள்)*
முற்றிலும் ஆண்டவரால் கைவிடப்படும் சூழல் உருவாகியிருந்த காலகட்டமது. அவர் தமது தீர்க்கர்கள் மூலம் திட்டமாக எச்சரித்து, மற்றும் சிட்சித்தும் பார்த்தார். ம்......ஹு...ஹூம்...
ஒருவரும் ஆண்டவருக்கு, அவரது வார்த்தைகளுக்கு இணங்கி மசியவேயில்லை, *(உடன்பட்டு திருந்தவே இல்லை)*
எனவே அவர்கள் மீது *ஆண்டவருக்கு கோபம் இருந்தது.*

*ஆனாலும் இவர்கள் தங்களை தாங்களே உசத்தியாக எண்ணிக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.* ஒரு சாராரை யுத்தத்தில் ஜெயித்தார்களானால்....
*அவர்கள் ஏதோ பெரிய பாவிகள் போலவும்.....இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் போலவுமான எண்ணத்தில் மூழ்கி நின்ற வேளையிலே தான்* இறைவனின் கேள்வி இவர்கள் முன் வைக்கப்பட்டது.

*✒️யூதா புத்திரர் தங்கள் பாவத்தினிமித்தம் தான் எதிரிகள் வசம் கர்த்தரால் ஒப்புவிக்கப்பட்டு இருந்தனர்.* ஆனாலும் அந்த *எதிரிகள் இவர்களை கொஞ்சமாகிலும் கருணையோடு நடத்த வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பாய் இருந்தது.*

ஆகையால் தான் நீ உன்னை யோக்கியன் என்று எண்ணி கொள்ளாதே ! *உன்னிடமும் தவறு இருக்கிறது.*
அப்படி இருக்க அதிக கேடான யாதொன்றயும் இந்த சிறை கைதிகளுக்கு செய்யாதே ! என்பதுதான்,
*ஓதேத் தீர்க்கதரிசி மூலம் அந்த வட இராஜ்ய யுத்த புருஷருக்கும், தலைவர்களுக்கும் ஆண்டவரின் மனுஷன் மூலம் செய்தி சொல்லப்பட்டது.*

🎈🫛🎈🫛🎈🫛

*எவரையும் அடிமைகளாக்கி, பின்பு ஆளுகை செய்ய எத்தனிக்காதீர்கள் என்பதே, "இரத்தின சுருக்கமாக" சொல்லப்பட்ட தேவ செய்தி.*
ஏன் என்றால் நீங்களும் கர்த்தர் முன் *"ஒழுங்கு முத்துக்களல்ல".* தேவன் முன் பல குறைபாடுடையோராக இருக்கிறீர்கள் என்றார் ஓதேத் தீர்க்கதரிசி.

*உடனடியாக இஸ்ரவேல் புத்திரரில் ஒரு மனமாற்றம் உண்டாகிறது.* தவறை சீர்திருத்தம் செய்ய வேண்டி, மாற்று முறைமையை கையாண்டு, *"சிறைப்பட்டோரை கண்ணியமாக நடத்தி"* அவர்களை பத்திரமாக, மதிப்பாக, கனம் செய்து, அவர்கள் பட்டிணங்கள் மட்டும் கொண்டு போய் விட்டு விட்டு, அவர்கள் அடிமைகளாக அல்லாமல் *"மானஸ்தராக வாழும்படி"* வழிவகுத்து கொடுத்தோம் என்னும் திருப்தியோடு, தங்கள் எல்லைக்கு திரும்பினார்கள்.
*(28 : 10 - 15 வாசிக்கவும்)*

*🍏நமது மேல் கர்த்தரின் உக்கிரம் பெரிதாக எப்பொழுது இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றால்....*
எம் கண்ணில் உத்திரம் இருக்க, நாம் பிறர் கண்ணில் இருக்கும் துரும்பை கண்ணோக்கும்போதும், அதை தூற்றி திரியும் போதும், அதை எடுத்துப்போட வகைதேடும் போதும் தான்.

*அப்பொழுதுதான் ஆண்டவரும் எம்மை பார்த்து மாயக்காரனே ! முதலில் உன் ஜோலியை பார், பின்பு அடுத்தவர் காரியத்தில் மூக்கை நுழைப்பதா❓️ வேண்டாமா❓️ என்பதை குறித்து யோசி என்கிறார்.*
(மத் - 7 : 3 :, 6 : 41)
ஆம் கர்த்தருக்கு விரோதமான காரியங்கள் எம்மிடத்தில் இருக்கும் பட்சத்தில் நாம் எவரையும் குறித்து, *"அந்த பாவத்தினால் தான் அப்படி நடந்துள்ளது, இந்த பாவத்தினால் தான் இப்படி நடந்துள்ளது " என்று வம்பளக்காமல் இருப்பது தான் கிறிஸ்தவ ஒழுங்கு.*

ஒவ்வொரு நீதிமானும் தன்னை பாவி என்னும் ஸ்தானத்தில் வைத்து பார்த்து, எமது சுயநீதி அல்ல, மாறாக கிறிஸ்துவின் நீதியினால் மாத்திரமே நாம் நீதியுள்ளோராக திகழும் பாக்கியம் உண்டாகிறது என்கிற அறிவுடையோராக இருக்க வேண்டியுள்ளது
*(1கொரி - 1 : 31 :, பிலி - 3 : 9)*
என்பதை புரிந்தும், உணர்ந்தும் கொண்டோராக, பிறரை..... *🌻"தப்பிப்போன மார்க்கதினின்று"* திருப்புகிறவர்களாக,

🌻நன்மை செய்வோராக,

🌻கண்ணியில் அகப்பட்டு, சிறை கைதிகள் போல் இருப்போரை

🌻கருணை உள்ளதோடு அணுகி விடுவிக்க வகைதேடி

🌻ஆன்மீக கண்ணோட்டத்தில் செயல்பட இந்த தியான பகுதி எமக்கு பாடம் கற்று தருகிறது.

*இறை வார்த்தையை கேட்டவுடன் இஸ்ரவேல் புத்திரரின் இதயம் தங்களை குறித்தே குத்துண்டதினால்.....*
அவர்கள்.....

🥏சிறை பிடிக்க பட்டவர்களை சேர்த்து கொண்டு,

🥏அவர்களில் வஸ்திரம் இல்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களை கொடுத்து,

🥏உடுப்பையும் பாதராட்சகளையும் போடு வித்து,

🥏அவர்களுக்கு சாப்பிடவும், குடிக்கவும் கொடுத்து,

🥏அவர்களுக்கு எண்ணெய் வார்த்து,

🥏அவர்களில் பலட்சியமான வர்களையெல்லாம் கழுதைகள் மேல் ஏற்றி,

🥏பேரிச்சமரங்களின் பட்டிணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்திற்கு கொண்டு வந்து விட்டு,

🥏சமாரியாவுக்கு திரும்பினார்கள்.
(28 : 15)

தங்கள் பாவமும் குற்றமும் கர்த்தர் முன் அதிகமாகதபடி இஸ்ரவேலரின் இந்த கீழ்படிதலை நாம் போற்றியே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கால கட்டத்திலும்.....
மெய்யான இறை மனிதர்கள் கொடுக்கும் எச்சரிக்கைகளை நாம் கவனித்து நடந்து கொண்டு பிறருக்கு நன்மை செய்தாலே போதும் ஆண்டவரின் கோபத்தினின்று தப்புவிக்க பட வாய்ப்புகள் அதிகம். ஏன் என்றால்....
*கர்த்தர் முன் நாம் அனைவரும் குற்றவாளிகளே !*
நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, எல்லோரும் பாவம் செய்து ஏகமாக கெட்டு போனோர் தான் நாம் என்ற உணர்வோடு வாழ்வோம்.

*🌹Sis. Martha Lazar*
*NJC, KodaiRoad*
[28/08, 14:17] +91 99431 72360: Mrs.Merin Gnanaraj
Covai
Day : 136
Date: 28.8.23

🎯இன்றைய வசனம்:
கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள்
உங்களிடத்திலும்❗
இல்லையோ❓
2 நாளா 28:10.

🎯தியானம்:

🔸பாவத்தில் வீழ்ந்தனர் யூதர்கள்
🔸யூதர்கள் மேல் கர்த்தர் கோபங்கொண்டார்
🔸இஸ்ரவேலர் கையில் ஒப்புக் கொடுத்தார்.

👉இஸ்ரவேலர்,
🔸யூதரில் 1, 20,000 பேரை கொன்றனர்.
🔸மேலும் 2,00,000 பேரை சிறை பிடித்தனர்.

👉அப்பொழுது,
♦️தீர்க்கதரிசி ஓதேத் இஸ்ரவேலரை இப்படியாக கண்டிக்கிறார்.

🩸"உங்களிடத்திலும் கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் இல்லையோ❓"

👉"உங்களிடத்திலும் "
என்று குறிப்பிடுகிறார்
👉அப்படியென்றால்,
🩸யூதரைப் போல இஸ்ரவேலரும் குற்றவாளிகளே

🎯ஆனால் யூதர் மேல் மட்டும் ஏன் கர்த்தருடைய கோபம் வந்தது❓
🩸ஏன் இஸ்ரவேலிடம் ஒப்புக் கொடுத்தார்❓

👉இஸ்ரவேல்
🔸யூதரை விட நல்லவர்கள் என்பதாலா❗

👉இல்லவே இல்லை,

🔸 பல முறை கண்டித்தும், சிட்சித்தும் அவர்கள் திருத்தாததால்
🔸கர்த்தர் அவர்களை கைவிட்டு விட்டார்.

👉ஆனால்,
🔸யூதா சிட்சிக்கப்பட்டால் மனத்திரும்பும் என்ற நம்பிக்கையில் தான் இஸ்ரவேலர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

🎯சிந்தனைக்கு,

🔸நாம் தவறும்போது,
கர்த்தரால் சிட்சிக்கப்படுகிறோமா❗
அல்லது
🔸கைவிடப் படப்பட்டுள்ளோமா❗

தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்,
🩸ஆகையால் தேவனுடைய சிட்சையை அற்பமாய் எண்ணாதிருப்போம்.
யோபு 5:17.

🩸போதக சிட்சையே ஜீவ வழி
நீதி 6:23.

🩸சிட்சையை நாம் சகிக்கிறவர்களாயிருந்தால்
தேவன் நம்மை புத்திரராக எண்ணி நடத்துகிறார்.
தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ❓
எபி 12:7.

👉ஆகையால்
🔸கர்த்தருடைய சிட்சையை அற்பமாயெண்ணாதிருப்போம்.

ஆமென்.🙏
[28/08, 14:17] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *அதிகாலையில் எழும்பி* 🍂

எசேக்கியா, ராஜாவான உடன் செய்த முதல் காரியம், *தேவாலயத்தையும் அதன் சேவையையும்* மீட்டெடுப்பதாகும். பணிகளைத் தொடங்குவதற்கு, அவன் லேவியர்களை அழைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினான். ஆலயம் சுத்தப்படுத்தப்பட்ட பிறகு எசேக்கியா மேலும் நேரத்தை வீணாக்கவில்லை. அவன் *தன் கடமைகளை அலட்சியம் செய்யவில்லை*. அவன் தன் கடமைகளைத் தள்ளிப் போடவும் இல்லை.

📖 *“அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.” (‭‭2 நாளா‬ ‭29‬:‭20‬)*

எசேக்கியா ராஜா அதிகாலையில் எழுந்து, தன் அதிகாரிகளுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். தேவனால் பயன்படுத்தப்பட்ட ஐனங்கள் அதிகாலையில் எழுந்தவர்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. *மோசே* அதிகாலையில் எழுந்தார். *தாவீது* கர்த்தரைத் தேடுவதற்காக அதிகாலையில் எழுந்தான். *அதிகாலையில் இருட்டோடு இயேசு கிறிஸ்து எழுந்து* தனிமையான இடத்திற்கு ஜெபிக்கச் சென்றார். *இப்போதும் காலையில் எத்தனை மணிக்கு நாம் எழும்புகிறோம்? ஆவிக்குரிய கடமைகளை நாம் தள்ளிப் போடுகிறோமா?*

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_ஆகஸ்ட் 28, 2023_
[28/08, 14:17] +91 99431 72360: *முதலாம் வருஷம், முதலாம் மாதம்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 29: 3.

1. எசேக்கியா ராஜா தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம், முதலாவது மாதம், அதாவது முதலாவது செய்தது என்னவென்றால் , *ஆலயத்தின் கதவுகளை திறந்து வைத்தார்*. ஏனெனில் அவன் தகப்பன் ஆகாஸ் ஆலயத்தின் கதவுகளை பூட்டிப்போட்டான். 28: 24.

*ஆலயத்தின் கதவுகளை பூட்டினால் ஆலயத்திற்குள் ஒருவரும் உள்ளே செல்ல முடியாது. அப்படியானால் கர்த்தருக்கு பலி செலுத்த முடியாது. கர்த்தரை பாடி ஆராதிக்க முடியாது. தொழுது கொள்ள முடியாது.*

2. இன்று *நம்முடைய சரீரமாகிய ஆலயத்தின் கதவுகள் அடைக்கப் பட்டிருக்கிறதா ?* அப்படியானால் நாம் கர்த்தரை ஆராதிக்க, தொழுது கொள்ள, பலி செலுத்த முடியாத படி நம் ஆலயம் பூட்டப்பட்டிருக்கிறதா? நம்மை நாமே ஆராய்வோம்.

3.*எசேக்கியா ஆலயத்தின் கதவை திறந்து, பழுது பார்த்து, ஆலயத்தை சுத்திகரித்து, லேவியரையும், ஆசாரியரையும் ஏற்படுத்தி, அவர்கள் பலி செலுத்த ஏற்பாடு பண்ணினான்*.

இன்று, நம்முடைய வாசல்களை பார்த்து, *வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்* என தாவீது கூறினார். *அநாதி கதவுகளே உயருங்கள். அதாவது நம் ஆலயத்தின் கதவுகளை திறவுங்கள். அப்பொழுது தான் மகிமையின் ராஜாவாகிய நம் தேவாதி தேவன், சேனைகளின் கர்த்தர் , அவருடைய பிரசன்னம், அவருடைய மகிமை நம் வாழ்க்கையிலே பிரவேசிக்கும்*. சங்கீதம் 24: 7-9.

4. இந்த அடைக்கப்பட்ட அநாதி கதவுகள் எவை? *நம்மால் விட முடியாதபடி, நமக்குள்ளே காணப்படுகிற கோபம், எரிச்சல் , கசப்பு, பெருமை, பொறாமை, மன்னியாமை, நன்றியில்லாமை, இச்சைகள், பொருளாசை, முறுமுறுப்பு என எத்தனையோ விட முடியாத பாவங்கள், அநாதி கதவுகளாய் பரிசுத்த தேவனை பரிசுத்தமாய் ஆராதித்து, பலி செலுத்த முடியாத படி, தேவ பிரசன்னத்தை உணர முடியாதபடி பூட்டப்பட்ட அநாதி கதவுகளாய் காணப்படுகின்றன.* ஆம் இந்த அநாதி கதவுகள் திறக்கப்பட வேண்டும்.

4. ஆம், *நம் இதய கதவுகளை திறக்க, மகிமையின் தேவன் உட்பிரவேசித்து, மகிமையின் ராஜாவாய் நமக்குள்ளே வாசம் பண்ண ஆவியானவர் நம்மை சுத்திகரிக்க, நம்மை சமர்ப்பிப்போம்*. அப்பொழுது நம் பரிசுத்த ஆலயத்திலிருந்து மகிமையின் ராஜாவாம் இயேசுவை பாடி புகழ்ந்து, ஆராதித்து மகிமைப்படுத்த முடியும்.

5. இதோ, *வாசல்படியிலிருந்து நம் இதய கதவை தட்டிக்கொண்டிருக்கிற நம் மகிமையின் ராஜாவுக்கு நம் இதய கதவுகளை திறப்போம்.* வெளிப்படுத்தல் 3: 20. ஆம், எசேக்கியா முதலாம் வருடம், முதலாம் மாதம் பூட்டிக்கிடந்த ஆலயத்தின் கதவுகளை திறந்தது போல இன்று நம் அநாதி கதவுகளை, விட முடியாத பாவங்களை நம்மை விட்டு அகற்ற கதவுகளை திறப்போம். ஆலயத்தை திறந்து, பழுது பார்ப்போம். சுத்திகரித்து, அவரை பாடி ஆராதிப்போம். ஆமென், அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.