Type Here to Get Search Results !

2 Chronicles 33-34 Bible Study | Message Notes | 2 நாளாகமம் 33-34 ஆராய்ச்சி கட்டுரை | Jesus Sam

[30/08, 08:23] (W) Arun Selva Kumar: 🌈 *It’s not just going through the Word that’s important, but it’s allowing the Word to go through us. It’s not simply marking our Bible, but letting our Bible mark us.* 
 ⛹️‍♂️ *Application* : II Chr. 34:20-21- *Josiah sent a committee to find someone who could explain not only information from the Word, but application of the Word. And that is still the need. It’s not just going through the Word that’s important, but it’s allowing the Word to go through us.* It’s not simply marking your Bible, but letting your Bible mark you. The question isn’t only theology. *The question is, how does the Word affect you personally?* 

💡II Chr. 34:1-2- We hear people today asking what is right and what is wrong. And we hear some strange answers given. Josiah did that which was right in the sight of the Lord. *It is what God says is right that is right and what God says is wrong that is wrong.* Remember that it was God who divided the light from the darkness. You and I cannot do that! We can go into a room and turn on the light switch, and the darkness disappears. We cannot divide it; we can’t run a line down the middle and say, “On this side I will put light and on this side I will put darkness.” God can do that, and God can say what is right and what is wrong.

💡II Chr. 34:20-21- *A return to the Word of God brings revival. Nothing else will bring revival.* Revival comes when people return to the Word of God and find out what God has to say.

 💪🏼II Chr. 34:6-8-“Let no man despise thy youth,” Paul wrote to Timothy, “but be thou an example of the believer” (1 Timothy 4:12). *Josiah was young when he began to reign. But he sought the Lord seriously when he was sixteen* . He brought reformation to the nation when he was twenty. At twenty-six, he’s rebuilding, and restoring the temple. *If you’re young, this is your time. The Lord is doing something wonderful. Be a part of it. Even as a young man, Josiah was engaged in the things of God and God would use him greatly.* 

Jaya Pradeep-Kodaikanal.
[30/08, 08:23] (W) Arun Selva Kumar: *MORNING DEW 💦*

*DAY 138, 30/08/2023 WEDNESDAY* 
 
*2 CHRONICLES : 33 - 34*

*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇‍♂️

*2 நாளாகமம் 33-34*

      *வேதம்..வாழ்வின் கீதம்*..

*கர்த்தருடைய நியாயப்பிரமாண* *புஸ்தகத்தை,ஆசாரியனாகிய* *இல்க்கியா, கண்டெடுத்தான்*. 
( 2 நாளா.34 : 14 )

கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகம் தொலைந்து போனதா..?

இதற்காக நாம் யூதா தேசத்தின் வரலாற்றை.. சற்றுத் திருப்பிப் பார்த்தால்.. அங்கே எசேக்கியா ராஜாவின் காலத்தில்..
தேசத்திலே மிகப் பெரிய எழுப்புதல் ஏற்பட்டது. 
அதற்கு நிச்சயமாக..
கர்த்தருடைய நியாயப்பிரமாணமும்.. எசேக்கியாவின்.. தேவபக்தி நிறைந்த தாய் அபியாவும்..
அவனது தாத்தா, சகரியாவும்தான் காரணமாக இருந்திருப்பார்கள். 
( 2 நாளா.29 : 1 )

அதற்குப் பின் இரு ராஜாக்கள், மனாசே 55 ஆண்டுகள்.. ஆமோன் இரண்டு ஆண்டுகள்…ஆட்சி செய்தார்கள்...
தேசத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால்..
57 ஆண்டுகளுக்குள்ளாக தேசத்தின் ஆவிக்குரிய நிலை தலைகீழாகப் போய்விட்டது. அங்கே ஆலய ஆராதனை இல்லை ..நியாயப்பிரமாண புஸ்தகமும் காணாமல் போய்விட்டது. 

தேசம், தேவனுடைய நியாயத்தீப்பை 
எதிர்நோக்கியிருந்தது. மனித கண்ணோட்டத்தில் பார்த்தால்.. யூதாவுக்கு இனி நம்பிக்கையே இல்லை என்ற நிலைதான் இருந்தது..
ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன்.. எப்படிப்பட்ட சூழ்நிலையையும் மாற்ற வல்லவர். 
யோசியா ராஜாவின் காலத்தில், ஆலயம் பழுதுபார்க்கப்பட்டது. அப்பொழுதுதான், நியாயப்பிரமாண புஸ்தகம் கண்டெடுக்கப்பட்டது. 

*நியாயப்பிரமாண புஸ்தகத்தை* *வாசிக்கக் கேட்ட யோசியாவும்*.. *ஜனங்களும் ..கர்த்தருடைய* *வார்த்தைக்கு நேராகத்* *திரும்பினார்கள்*. 
*அங்கே மாபெரும் எழுப்புதல்* *ஏற்பட்டது*. 
( 2 நாளா.34 : 18 -33)

இன்றும் மாபெரும் எழுப்புதல் ஏற்படாதா என்று நாமும் வாஞ்சிக்கிறோம்..
30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட..மக்களின் ஆவிக்குரிய நிலை , இன்று தாழ்ந்து வருகிறது..
காரணம் சில மாற்றங்கள்..
குறிப்பாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி…அதிலே மொபைல் போன்.. 
மக்களுக்கு வேதம் வாசிக்க.. ஜெபிக்க நேரமில்லை..

இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்,
வரும் சந்ததியினர்..
வேதத்தை நேசிப்பார்களா..?
அதை வாசிப்பார்களா..?
நமக்குள்ளே சந்தேகம்
வருகிறதல்லவா..?

பிறப்பிலே, மனிதன் ஒரு பாவிதான்..
இந்த உலகமும், பொல்லாங்கனுக்குள்தான் 
கிடக்கிறது..
*வேதம்தான்*, பாவங்களைச் சுட்டிக் காட்டும்,
*கண்ணாடி*..
பாவங்களை அறுத்தெறியும், 
*பட்டயம்*..
உடைத்து உருவாக்கும்,
*சம்மட்டி*..
நல்வழியில் நடத்தும், 
*தீபம்*..
ஆவிக்குரிய வாழ்வின், 
*மன்னா*.

*எங்கே வசனம் உண்டோ*.. 
*அங்கே ஆவியானவர் உண்டு*..
*எங்கே ஆவியானவர் உண்டோ*
*அங்கே பரிசுத்தம்* *உண்டு*..*புது வாழ்வும் உண்டு*..

*எனவே,வேதத்தின்* *முக்கியத்துவத்தைக்*
*கற்றுக்கொடுப்போம்*..

*எல்லாம் முடிந்தது என்ற*
*நிலையிலும்கூட*..
*கர்த்தரால் செயல்பட முடியும்*..
*தேவனால் செயல்படமுடியாது* *என்ற எந்த ஒரு வார்த்தையும்*
*கர்த்தருடைய வேதத்தில்* *இல்லை*..*விசுவாசிப்போம்*..
*நம்மிலுள்ள வேதத்தின்* 
*வெளிச்சம்*.. *தலைமுறைகளைக்*
*தாண்டிச் செல்லட்டும்*..
ஆமென்.🙏

மாலா டேவிட்

2 Chron 33,34
 *WHAT A GOD WE SERVE* ❗️ 

 *God seeks Godly generation who will seek the Lord* ‼️

Josiah

💥 While he was still young (15yrs), he began to seek the Lord ( 34:3)

💥 Did what was right in the sight of the Lord (34:2)

💥 He did not turn aside to the right hand or to the left (34:2)

💥 Cleansed Judah and Jerusalem (34:5)

💥 Repaired the house of the Lord his God (34:8)

💥 When the king heard the words of the Law, he tore his clothes (34:19)

💥Sent his servants to inquire of the Lord for him (34:21)

💥 Humbled himself before the Lord (34:27)

🙏🙏 *Lord, please raise up a generation who will seek You like this* 

Usha

[30/08, 08:23] (W) Arun Selva Kumar: *30.08.2023*

🌟 *அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமுக்கு வரப்பண்ணினார்* 🌟

☄️ *இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன்விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருக்கிற போது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.* (2 நாளாகமம் 33:12-13).

🔹 மனாசே யூதாவின் ராஜாவானபோது அவனுக்குப் பன்னிரண்டு வயது. அவன் எசேக்கியாவின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாக *எசேக்கியாவுக்கு தேவனருளிய கூடுதல் பதினைந்து ஆண்டுகளில்* (2 இராஜாக்கள் 20:6) பிறந்தான் என்பதை இது காட்டுகிறது. இந்தப் பதினைந்து ஆண்டுகள் கூடுதலாகக் கிடைத்ததால்தான் யூதாவின் மிக மோசமான ராஜாக்களில் ஒருவனான மனாசே தோன்றினான். மனாசே தன் தகப்பன் எசேக்கியாவின் சீர்திருத்தங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு, யூதாவை *பயங்கரமானதும், பாவமானதுமான உருவ வழிபாட்டில் பின்வாங்கச் செய்தான்.* எசேக்கியாவால் தனது மோசமான மகனின் பொல்லாங்கை முன்னதாகவே கணிக்க முடிந்திருந்தால், அவன் தன்னுடைய நோயிலிருந்து மீள விரும்பியிருக்கவே மாட்டான்.

🔹 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணினான். மனாசேயும் அவனுடைய ஜனங்களும் *கர்த்தருடைய எச்சரிக்கைகளையெல்லாம் அலட்சியப்படுத்தியதால்,* கர்த்தர் *அசீரியா ராஜாவின் சேனாபதிகளை* யூதாவுக்கு விரோதமாக வரப்பண்ணினார். அவர்கள் மனாசேயைக் கைதியாகப் பிடித்து, *பாபிலோனுக்குக் கொண்டுபோய் விட்டார்கள்.* 

🔹 அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, அவருக்கு முன்பாகத் *தன்னை மிகவும் தாழ்த்தினான்.* தாவீதின் வார்த்தைகள்: *"தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்."* (சங்கீதம் 51:17). எனவே, கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனை எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்குத் திரும்பக் கொண்டுவந்தார். *கர்த்தர்தான் உண்மையான தேவன்* என்பதை இப்போது மனாசே தெரிந்துகொண்டான்.

🔹 அவன் மனந்திரும்புவதற்கு முன்பு, மனாசே விக்கிரகங்களை ஆராதிப்பதை ஊக்குவித்தான். இப்போது, அவன் விக்கிரகங்களை அழித்து, *மெய்யான தேவனை* மட்டும் ஆராதிப்பதை ஊக்குவித்தான்; *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும்* என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். ஞானிகளின் வார்த்தைகள்: *"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்."* (நீதிமொழிகள் 22:6). மனாசே, தனது பக்தியுள்ள தகப்பன் எசேக்கியாவால் வளர்க்கப்பட்டவன். ஆனால் தனது தகப்பனின் நம்பிக்கைக்கு எதிராகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தான்; ஆயினும்கூட, அவனது பின்னாளில், அவன் *உண்மையாக கர்த்தரிடம் திரும்பி அவருக்கு சேவை செய்தான்.*

🔹 ஆனால் அவனது *தாமதமான மனமாற்றம்* ஜனங்களை மற்ற முடியவில்லை. அவனது *பின்மாற்றம் ஏற்படுத்திய பாதிப்பை அவனது மனமாற்றம் ஏற்படுத்தவில்லை.* அவன் ஜனங்களைத் தவறாக நடத்தியபோது அவர்கள் அதை விருப்பத்தோடு பின்பற்றினார்கள். ஆனால் அவன் மனந்திரும்பி ஜனங்களை சீர்படுத்தியபோது அவர்கள் அதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளவில்லை. *ஜனங்களின் வாழ்க்கை முறைகளைச் சிதைப்பது எளிது; ஆனால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.* 

🔹 மற்ற எந்த தனிநபரை விடவும், *யூதா ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு மனாசேதான் காரணமாக இருந்தான்.* அவனுடைய பேரன் யோசியா பல சீர்திருத்தங்களை செய்திருந்தாலும். *மனாசே தன் கோபத்தைத் தூண்டும்படி செய்த எல்லாவற்றினிமித்தமும் யூதாவுக்கு விரோதமாக எரிந்த அவருடைய உக்கிரமான கோபத்தின் உஷ்ணத்தை கர்த்தர் தணிக்கவில்லை* (2 இராஜாக்கள் 23:26). எரேமியா மூலம் கர்த்தர் சொன்னார்: *"எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்."* (எரேமியா 15:4).

🔹 *மனந்திரும்பிய மனாசே மன்னிக்கப்பட்டாலும், மனந்திரும்பாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்.* வேதம் கூறுகிறது: *"கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்."* (சங்கீதம் 145:17).

🔸 *நம்முடைய கர்த்தர் எவ்வளவு நீதியுள்ளவர், கிருபையுள்ளவர் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *உடைந்து மனந்திரும்பிய இருதயத்தை தேவன் ஒருபோதும் நிராகரிக்கமாட்டார்*.
2️⃣ *நமது பிள்ளைகளை சரியான பாதையில் நடத்தும்போது, அவர்கள் பெரியவர்களாகும்போது, அதை விட்டுவிட மாட்டார்கள்.*
3️⃣ *ஜனங்களின் வாழ்க்கை முறைகளைச் சிதைப்பது எளிது; ஆனால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.*
4️⃣ *மனந்திரும்பிய மனாசே மன்னிக்கப்பட்டாலும், மனந்திரும்பாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்*.

Dr. எஸ். செல்வன்
சென்னை

 2. நாளாகமம்.34.
 🌹🌹🌹🌹🌹🌹
 "யோசியாவும் சட்டப் புத்தகமும்."
 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 வழக்கத்திற்கு மாறாக , இந்த சிறுவன் எட்டு வயதில் அரியணைக்கு வந்தான்.
    நாளாகமங்களில் "தேடுதல்" என்பது ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடவுளைப் பார்க்கும் பழக்கத்தையும், ஜெபம் செய்பவர்களிடம் கடவுள் எதிர்பார்க்கும் அணுகுமுறையையும் விவரிக்கிறது.
    யோசியா இன்னும் இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைப் பார்க்கவில்லை என்றால், மக்களின் மனங்களிலும் நினைவுகளிலும் எஞ்சியிருக்கும் சட்டம் அதிகமாக இருக்காது.
   ஆலயத்தை பழுதுபார்த்து மீண்டும் கட்டும் பணிக்கு அமைப்பும் நிதியும் தேவை என்பதை யோசியா புரிந்துகொண்டார்.
    கடவுளுடைய மக்களின் வரலாறு முழுவதும், கடவுளுடைய வார்த்தை மீட்டெடுக்கப்பட்டு பரவும்போது, ​​ஆன்மீக மறுமலர்ச்சிகள் ஏற்படுகின்றன.
   உல்தா ஒரு தீர்க்கதரிசியாக அங்கீகரிக்கப்பட்டார் மற்றும் கடவுளின் இதயத்தையும் மனதையும் வெளிப்படுத்த அவளால் முடிந்தது.
 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 மேபி சுந்தர். சென்னை

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *திருப்புமுனை* 🍂

மனாசே மன்னனின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. *ஆண்டவரின் பார்வையில் பொல்லாததைச் செய்து தன் வாழ்க்கையைத் தொடங்கினான்*. முந்தைய தேசங்களை விட அதிகமான தீமைகளைச் செய்ய அவன் தனது ஜனங்களை வழிநடத்தினான். கர்த்தர் மனாசேயுடனும், ஜனங்களுடன் பேசினார், ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டார்கள் (2 நாளா 33:1-9).

மனாசேயை சிறைபிடிக்கப்பட்டு, வெண்கலச் சங்கிலிகளால் கட்டப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்ல தேவன் அனுமதித்தார். இக்கட்டான நிலையில், *மனாசே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய தயவை வேண்டிக்கொண்டான்*. அவன் * கர்த்தருக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தி ஜெபித்தான்*. தேவன் அவனுடைய ஜெபங்களைக் கேட்டு, அவனை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டு வந்தார் (2 நாளா 33:10-13).

அப்போது மனாசே தனிப்பட்ட முறையில் *கர்த்தரே தேவன் என்பதை அறிந்து கொண்டான்*. அவனது துயரமும், துன்பமும், அவனைக் கர்த்தரிடம் திருப்பியது. அதுவே அவனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. *துன்பத்தில் இருக்கும்போது, ​​நாம் என்ன செய்வோம்?* மனிதர்களையும், சூழ்நிலைகளையும் குறை சொல்லுகிறோமா? அல்லது *நம்மைத் தாழ்த்தி, ஜெபித்து, தேவனிடம்* திரும்புகிறோமா?

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻

*அப்பொழுது கர்த்தரே தேவன் என்று மனாசே அறிந்து கொண்டான்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 33: 2 - 13.

1. எசேக்கியாவின் மகன் மனாசே *புறஜாதிகளின் அருவருப்புகளின் படியே கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பானதை செய்தான். ஆலயத்தில் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடம் கட்டி பலி செலுத்தினான். கர்த்தருக்கு கோபமுண்டாக்க பொல்லாப்பானதெல்லாம் செய்தான். ஜனங்களை கர்த்தரை விட்டு வழி தப்பி போகப்பண்ணினான்.*

ஆம், இந்த மனாசேயை போல *நம்முடைய சரீரமாகிய பரிசுத்த ஆலயத்தில் கர்த்தர் அருவருக்கிற பொல்லாப்பான சிந்தனைகள், கிரியைகள் காணப்படுகிறதா? க ர்த்தரை விட அதிகமாய் நேசிக்கிற விக்கிரகங்கள் நம் இருதயத்தில் நாட்டப்பட்டிருக்கிறதா? பிறரை வழி தப்பி போக செய்கிறோமா?* சிந்திப்போம்.

2.*கர்த்தர் மனாசேயோடும், அவன் ஜனத்தோடும் பேசின போதும் அவர்கள் கவனிக்காமல் போனார்கள்*.

ஆம், *கர்த்தர் அவருடைய வேத வசனங்கள் மூலம், அவர் பிள்ளைகள் மூலம் நம்மோடு எவ்வளவோ பேசிக்கொண்டிருக்கிறாரே! அவற்றிற்கு நாம் கீழ்ப்படிகிறோமா?* இல்லாவிடில் நம்மை கர்த்தருடைய வார்த்தைக்கு சமர்ப்பிப்போம்.

3. *ஆகையால் கர்த்தர் மனாசேயை அசீரிய ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவன் மனாசேயை பிடித்து, இரண்டு வெண்கல சங்கிலியால் கட்டி, பாபிலோனுக்கு கொண்டு போய் விட்டான்.*

ஐயோ பரிதாபம்! என எண்ணுகிறோமா? *நாமும் கூட கர்த்தர் அருவருக்கிற பொல்லாப்பானதை நம் சரீரமாகிய ஆலயத்தில் செய்வோமானால், பிறரையும் கர்த்தரை விட்டு வழி தப்ப செய்வோமானால், சத்துருவாகிய பிசாசு நம்மை கட்டி, அவனுடைய அடிமை தனத்தில் நம்மை சிறை படுத்தி விடுகிறான்.*

4.இப்படி *நெருக்கப்படுகையில் மனாசே*

            1. *கர்த்தரை நோக்கி கெஞ்சினான்*.

            2. *கர்த்தருக்கு முன்பாக மிகவும் தாழ்த்தினான்.**

ஆம் இன்று நாமும் பலவிதமாக நம்முடைய வாழ்க்கையில் நெருக்கப்படுகிறோமா? *அப்படியானால் நம்மை தாழ்த்தி கர்த்தருடைய இரக்கத்திற்காக கெஞ்சுவோம்.*

5.*இரக்கமுள்ள கர்த்தரோ அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தை கேட்டு அவனை திரும்ப எருசலேமுக்கு வரப்பண்ணினார். அப்பொழுது மனாசே கர்த்தரே தேவன் என்று அறிந்து கொண்டான்*.

 *அப்படியானால் எவ்வளவு பாவியான மனிதனையும் அவன் மனந்திரும்பும் போது, தன்னை தாழ்த்தும் போது அவனை மன்னித்து தன்னோடு சேர்த்து கொள்ளுகிறார். எந்த பாவியானாலும் அவர் தள்ள மாட்டார். அவர் அன்பிற்கு, இரக்கத்திற்கு அளவேயில்லை.*

ஆம். *நம்முடைய வாழ்க்கையிலும் நம் பரம தகப்பனாம் இயேசு எவ்வளவு அன்புள்ளவர்.. நாம் நம்மை தாழ்த்தி, கெஞ்சி ஜெபிக்கும் போது நம்மையும் கட்டுகளிலிருந்து விடுவித்து திரும்பவும் அவருடைய பிள்ளைகளாக சேர்த்து கொள்ளுகிறார் அல்லவா?*

*எத்தனை நெருக்கங்கங்களிலிருந்து, மரண கட்டுகளிலிருந்து, வியாதிகளிலிருந்து நம்மை மீட்டு தன்னையே சிலுவையிலே பலியாக ஒப்புக்கொடுத்தரே! அவருடைய அன்பை அறிந்து அவரில் அன்பு கூருவோம். கர்த்தரே தேவன் என அறிந்து அவரை மகிமைப்படுத்துவோம்.* ஆம், இந்த வசனங்களின் படி கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா
*Dr.Padmini Seĺvyn*

Manasseh was born 3 years after Hezekiah, one of the good kings was healed and given 15 years more to his life span. But Manasseh turned out to be one of the most evil kings who turned the people away from God. Ch 33:10, the Lord spoke to Manasseh & his people, but they paid no attention!!
Then, Manasseh is taken prisoner by king of Assyria... and in his distress, he humbled himself & called out to God and He heard him. Verse 13: "Manasseh knew that the Lord is God." Manasseh did some reforms, removing the idol he had put in the temple, etc and told Judah to serve the Lord, but (verse 17) the people continued to sacrifice at the high places....

Some learning:-

1. We can pray to God and tell all our needs and desires. 
Like Jesus did at Gethsemane, can we pray, " yet, not as I will, but as You will" ?
2. We serve a God who is gracious, compassionate and merciful. When we humble ourselves and seek His face, He hears us and answers us...He forgives & accepts us however bad we are.
3. The bad influences our actions and life did on other people may linger on even after our conversion . May God help us to remain faithful to Him and not become spiritually arrogant.

[30/08, 08:23] (W) Arun Selva Kumar: *🤴JOSIAH THE FAITHFUL🤴*
*🤴உண்மையுள்ள யோசியா*🤴

 [நாள் - 138] 
2 நாளாகமம் - 34

 ☄️யோசியா ராஜா வேதாகமத்தில் மிகவும் மதிக்கப்படும் ராஜாக்களில் ஒருவர் மற்றும் அவரது ஆட்சி யூதா ராஜ்யத்தில் அவர் செய்த சீர்திருத்தங்களுக்காக நினைவுகூரப்படுகிறது.

 1️⃣ *தேவனுக்கு யோசியாவின் அர்ப்பணிப்பு*

 🔹ராஜாவாக முடிசூட்டப்பட்ட பிறகு, யோசியா ராஜா தேவாலயத்தைப் பழுதுபார்த்து பழைய மகிமைக்குத் திருப்பப் புறப்பட்டான்.
 🔹அவர் ஆலயத்தில் வைக்கப்பட்ட அனைத்து சிலைகளையும் அகற்றி சுத்தப்படுத்தினார் மற்றும் நகரத்திலிருந்து அந்நிய கடவுள்கள் மற்றும் கோவில்கள் அனைத்தையும் அகற்றினார்.
 🔹பின்னர் அவர் தேவனுடைய உடன்படிக்கையை மீண்டும் ஏற்படுத்தி, கர்த்தரை மட்டுமே ஆராதிக்கும் நடைமுறையை மீண்டும் நிறுவினார்.

 2️⃣ *நீதியின் மறுசீரமைப்பு*
 🔸யோசியா ராஜா குழந்தைகளை பலியிடும் வழக்கத்தை ஒழித்து, மக்களின் அடக்குமுறை வரிவிதிப்புக்கு முடிவுகட்டினார்.
 🔸அந்நிய தெய்வ வழிபாட்டையும் விக்கிரக வழிபாட்டையும் ஒழித்து, நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையிலான சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
 🔸அவர் பில்லிசூனியம், அஞ்சனம் பார்த்தல், குறிசொல்லுதல், ஜோசியம் மற்றும் அவற்றின் சிலைகளை ஒழித்தார்.
 🔸யோசியா வடக்கு ராஜ்யத்தில் தனது சீர்திருத்தங்களை மேற்கொண்டார், அவர் இஸ்ரவேலின் ராஜா உருவாக்கிய சமாரியா நகரத்தில் இருந்த மேடைகளையும் விக்ரகத் தோப்புகளையும் அகற்றினார்.

 3️⃣ *ஆன்மீக ஆரோக்கியத்தை மீட்டெடுத்தல்*
 ▫️யோசியா ராஜா நாட்டின் ஆன்மீக ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தார்.
 ▫️அவர் நியாயப்பிரமாண புத்தகத்தை சத்தமாக வாசித்து, அதை பின்பற்றும்படி மக்களுக்கு கட்டளையிட்டார்.
 ▫️கர்த்தருடைய பண்டிகைகளைக் கடைப்பிடிக்கவும், ஓய்வுநாளைக் கொண்டாடவும் மக்களை ஊக்குவித்தார்.
 ▫️ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஆலயத்தின் பொறுப்பாளராக நியமித்து, தேவனுடைய நியாயப்பிரமாணங்களை மக்களுக்குக் கற்பிக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

 ♥️ *வாழ்க்கை பாடங்கள்*

 💥 யோசியா ராஜாவின் சீர்திருத்தங்கள் நீதி, நியாயம் மற்றும் தேவனிடம் உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தன, மேலும் நாட்டின் ஆன்மீக, சமூக மற்றும் அரசியல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் கருவியாக இருந்தன.
 💥வேதாகமத்தில் மிகவும் மதிக்கப்படும் மன்னர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுகிறார்.
  💥அவரது மரபு அவரது உண்மை மற்றும் தேவனுடைய விருப்பத்திற்கு கீழ்ப்படிதல் ஆகியவற்றின் சக்தியை நினைவூட்டுகிறது.
 💥யோசியா மன்னன் தேவன்மீது கொண்டிருந்த அன்பு, தேவனுக்குப் பிரியமான அனைத்தையும் செய்ய வைத்தது!
 💥தேவனை நாம் எப்படி விரும்புகிறோமோ அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி அல்ல, அவருடைய வார்த்தை எப்படி கட்டளையிடுகிறதோ அதன்படி ஆராதிக்க வேண்டும்.
 💥ஞானமின்றி, யோசியா எகிப்தின் ராஜாவுக்கு -தேவனுடைய வேலையாய் வந்தவருக்கு - எதிராக நிற்க தனது படையை வழிநடத்தி, தன்னைக் கொல்லக் கொடுத்தார்.

 *‼️யோசியாவைப் போல நாமும் தேவனுக்கு உண்மையாக இருப்போம்‼️*

 பிரின்சஸ் ஹட்சன்

தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை

[30/08, 04:42] +91 99431 72360: *நாள் 138 / 365 *
*2 நாளாகமம் 33-34*

      *வேதம்..வாழ்வின் கீதம்*..

*கர்த்தருடைய நியாயப்பிரமாண* *புஸ்தகத்தை,ஆசாரியனாகிய* *இல்க்கியா, கண்டெடுத்தான்*. 
( 2 நாளா.34 : 14 )

கர்த்தருடைய நியாயப்பிரமாண புஸ்தகம் தொலைந்து போனதா..?

இதற்காக நாம் யூதா தேசத்தின் வரலாற்றை.. சற்றுத் திருப்பிப் பார்த்தால்.. அங்கே எசேக்கியா ராஜாவின் காலத்தில்..
தேசத்திலே மிகப் பெரிய எழுப்புதல் ஏற்பட்டது. 
அதற்கு நிச்சயமாக..
கர்த்தருடைய நியாயப்பிரமாணமும்.. எசேக்கியாவின்.. தேவபக்தி நிறைந்த தாய் அபியாவும்..
அவனது தாத்தா, சகரியாவும்தான் காரணமாக இருந்திருப்பார்கள். 
( 2 நாளா.29 : 1 )

அதற்குப் பின் இரு ராஜாக்கள், மனாசே 55 ஆண்டுகள்.. ஆமோன் இரண்டு ஆண்டுகள்…ஆட்சி செய்தார்கள்...
தேசத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால்..
57 ஆண்டுகளுக்குள்ளாக தேசத்தின் ஆவிக்குரிய நிலை தலைகீழாகப் போய்விட்டது. அங்கே ஆலய ஆராதனை இல்லை ..நியாயப்பிரமாண புஸ்தகமும் காணாமல் போய்விட்டது. 

தேசம், தேவனுடைய நியாயத்தீப்பை 
எதிர்நோக்கியிருந்தது. மனித கண்ணோட்டத்தில் பார்த்தால்.. யூதாவுக்கு இனி நம்பிக்கையே இல்லை என்ற நிலைதான் இருந்தது..
ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன்.. எப்படிப்பட்ட சூழ்நிலையையும் மாற்ற வல்லவர். 
யோசியா ராஜாவின் காலத்தில், ஆலயம் பழுதுபார்க்கப்பட்டது. அப்பொழுதுதான், நியாயப்பிரமாண புஸ்தகம் கண்டெடுக்கப்பட்டது. 

*நியாயப்பிரமாண புஸ்தகத்தை* *வாசிக்கக் கேட்ட யோசியாவும்*.. *ஜனங்களும் ..கர்த்தருடைய* *வார்த்தைக்கு நேராகத்* *திரும்பினார்கள்*. 
*அங்கே மாபெரும் எழுப்புதல்* *ஏற்பட்டது*. 
( 2 நாளா.34 : 18 -33)

இன்றும் மாபெரும் எழுப்புதல் ஏற்படாதா என்று நாமும் வாஞ்சிக்கிறோம்..
30 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட..மக்களின் ஆவிக்குரிய நிலை , இன்று தாழ்ந்து வருகிறது..
காரணம் சில மாற்றங்கள்..
குறிப்பாக விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி…அதிலே மொபைல் போன்.. 
மக்களுக்கு வேதம் வாசிக்க.. ஜெபிக்க நேரமில்லை..

இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின்,
வரும் சந்ததியினர்..
வேதத்தை நேசிப்பார்களா..?
அதை வாசிப்பார்களா..?
நமக்குள்ளே சந்தேகம்
வருகிறதல்லவா..?

பிறப்பிலே, மனிதன் ஒரு பாவிதான்..
இந்த உலகமும், பொல்லாங்கனுக்குள்தான் 
கிடக்கிறது..
*வேதம்தான்*, பாவங்களைச் சுட்டிக் காட்டும்,
*கண்ணாடி*..
பாவங்களை அறுத்தெறியும், 
*பட்டயம்*..
உடைத்து உருவாக்கும்,
*சம்மட்டி*..
நல்வழியில் நடத்தும், 
*தீபம்*..
ஆவிக்குரிய வாழ்வின், 
*மன்னா*.

*எங்கே வசனம் உண்டோ*.. 
*அங்கே ஆவியானவர் உண்டு*..
*எங்கே ஆவியானவர் உண்டோ*
*அங்கே பரிசுத்தம்* *உண்டு*..*புது வாழ்வும் உண்டு*..

*எனவே,வேதத்தின்* *முக்கியத்துவத்தைக்*
*கற்றுக்கொடுப்போம்*..

*எல்லாம் முடிந்தது என்ற*
*நிலையிலும்கூட*..
*கர்த்தரால் செயல்பட முடியும்*..
*தேவனால் செயல்படமுடியாது* *என்ற எந்த ஒரு வார்த்தையும்*
*கர்த்தருடைய வேதத்தில்* *இல்லை*..*விசுவாசிப்போம்*..
*நம்மிலுள்ள வேதத்தின்* 
*வெளிச்சம்*.. *தலைமுறைகளைக்*
*தாண்டிச் செல்லட்டும்*..
ஆமென்.🙏

மாலா டேவிட்

 *2நாளாகமம் 33 , 34*

🌟 *அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமுக்கு வரப்பண்ணினார்* 🌟

☄️ *இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன்விண்ணப்பம் பண்ணிக்கொண்டிருக்கிற போது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.* (2 நாளாகமம் 33:12-13).

🔹 மனாசே யூதாவின் ராஜாவானபோது அவனுக்குப் பன்னிரண்டு வயது. அவன் எசேக்கியாவின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாக *எசேக்கியாவுக்கு தேவனருளிய கூடுதல் பதினைந்து ஆண்டுகளில்* (2 இராஜாக்கள் 20:6) பிறந்தான் என்பதை இது காட்டுகிறது. இந்தப் பதினைந்து ஆண்டுகள் கூடுதலாகக் கிடைத்ததால்தான் யூதாவின் மிக மோசமான ராஜாக்களில் ஒருவனான மனாசே தோன்றினான். மனாசே தன் தகப்பன் எசேக்கியாவின் சீர்திருத்தங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு, யூதாவை *பயங்கரமானதும், பாவமானதுமான உருவ வழிபாட்டில் பின்வாங்கச் செய்தான்.* எசேக்கியாவால் தனது மோசமான மகனின் பொல்லாங்கை முன்னதாகவே கணிக்க முடிந்திருந்தால், அவன் தன்னுடைய நோயிலிருந்து மீள விரும்பியிருக்கவே மாட்டான்.

🔹 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப் பண்ணினான். மனாசேயும் அவனுடைய ஜனங்களும் *கர்த்தருடைய எச்சரிக்கைகளையெல்லாம் அலட்சியப்படுத்தியதால்,* கர்த்தர் *அசீரியா ராஜாவின் சேனாபதிகளை* யூதாவுக்கு விரோதமாக வரப்பண்ணினார். அவர்கள் மனாசேயைக் கைதியாகப் பிடித்து, *பாபிலோனுக்குக் கொண்டுபோய் விட்டார்கள்.* 

🔹 அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, அவருக்கு முன்பாகத் *தன்னை மிகவும் தாழ்த்தினான்.* தாவீதின் வார்த்தைகள்: *"தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்."* (சங்கீதம் 51:17). எனவே, கர்த்தர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனை எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்குத் திரும்பக் கொண்டுவந்தார். *கர்த்தர்தான் உண்மையான தேவன்* என்பதை இப்போது மனாசே தெரிந்துகொண்டான்.

🔹 அவன் மனந்திரும்புவதற்கு முன்பு, மனாசே விக்கிரகங்களை ஆராதிப்பதை ஊக்குவித்தான். இப்போது, அவன் விக்கிரகங்களை அழித்து, *மெய்யான தேவனை* மட்டும் ஆராதிப்பதை ஊக்குவித்தான்; *இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும்* என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். ஞானிகளின் வார்த்தைகள்: *"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்."* (நீதிமொழிகள் 22:6). மனாசே, தனது பக்தியுள்ள தகப்பன் எசேக்கியாவால் வளர்க்கப்பட்டவன். ஆனால் தனது தகப்பனின் நம்பிக்கைக்கு எதிராகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தான்; ஆயினும்கூட, அவனது பின்னாளில், அவன் *உண்மையாக கர்த்தரிடம் திரும்பி அவருக்கு சேவை செய்தான்.*

🔹 ஆனால் அவனது *தாமதமான மனமாற்றம்* ஜனங்களை மற்ற முடியவில்லை. அவனது *பின்மாற்றம் ஏற்படுத்திய பாதிப்பை அவனது மனமாற்றம் ஏற்படுத்தவில்லை.* அவன் ஜனங்களைத் தவறாக நடத்தியபோது அவர்கள் அதை விருப்பத்தோடு பின்பற்றினார்கள். ஆனால் அவன் மனந்திரும்பி ஜனங்களை சீர்படுத்தியபோது அவர்கள் அதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளவில்லை. *ஜனங்களின் வாழ்க்கை முறைகளைச் சிதைப்பது எளிது; ஆனால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.* 

🔹 மற்ற எந்த தனிநபரை விடவும், *யூதா ராஜ்யத்தின் இறுதி வீழ்ச்சிக்கு மனாசேதான் காரணமாக இருந்தான்.* அவனுடைய பேரன் யோசியா பல சீர்திருத்தங்களை செய்திருந்தாலும். *மனாசே தன் கோபத்தைத் தூண்டும்படி செய்த எல்லாவற்றினிமித்தமும் யூதாவுக்கு விரோதமாக எரிந்த அவருடைய உக்கிரமான கோபத்தின் உஷ்ணத்தை கர்த்தர் தணிக்கவில்லை* (2 இராஜாக்கள் 23:26). எரேமியா மூலம் கர்த்தர் சொன்னார்: *"எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்."* (எரேமியா 15:4).

🔹 *மனந்திரும்பிய மனாசே மன்னிக்கப்பட்டாலும், மனந்திரும்பாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்.* வேதம் கூறுகிறது: *"கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்."* (சங்கீதம் 145:17).

🔸 *நம்முடைய கர்த்தர் எவ்வளவு நீதியுள்ளவர், கிருபையுள்ளவர் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?*

✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:

1️⃣ *உடைந்து மனந்திரும்பிய இருதயத்தை தேவன் ஒருபோதும் நிராகரிக்கமாட்டார்*.
2️⃣ *நமது பிள்ளைகளை சரியான பாதையில் நடத்தும்போது, அவர்கள் பெரியவர்களாகும்போது, அதை விட்டுவிட மாட்டார்கள்.*
3️⃣ *ஜனங்களின் வாழ்க்கை முறைகளைச் சிதைப்பது எளிது; ஆனால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.*
4️⃣ *மனந்திரும்பிய மனாசே மன்னிக்கப்பட்டாலும், மனந்திரும்பாத ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர்*.

Dr. எஸ். செல்வன்
சென்னை

🙋‍♂️🙋‍♀️ நாம் *2 நாளாகமம் 34* இல் இருக்கிறோம்

*THE BOOK OF THE LAW WAS FOUND*

*நியாயப்பிரமாண புஸ்தகம் கிடைத்தது*

🙋‍♂️🙋‍♀️ தொலைந்து போன ( *நாம் மிகவும் விரும்புகின்ற / மதிக்கின்ற*) பொருட்களைக் கண்டுபிடிக்கும்போது எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்.
 
இன்றைய பத்தியில் *"நியாயப்பிரமாண புஸ்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது"* (வ. 14,15) என்று எழுதப்பட்டுள்ளது.

✅ *நிஜமாகவே அது தொலைந்துபோனதா*❓
 சரி, அது தொலைந்து போகவில்லை, ஆனால் அது *புறக்கணிக்கப்பட்டது*; *பயன்படுத்தப்படவில்லை* அல்லது *ஆலோசிக்கப்படவில்லை*, மேலும் தேவனுடைய ஆலயத்தில் ஒரு தூசி நிறைந்த அறையின் நான்கு மூலையில் எங்கோ வைக்கப்பட்டிருந்தது. 

 ✅ *எவ்வளவு காலமாக புஸ்தகம் தொலைந்து போனது*❓
*75 ஆண்டுகளுக்கு மேல்* (55 + 2 + 18 ) மனாசே, ஆமோனின் ஆட்சியின் போது மற்றும் யோசியாவின் 18ஆம் ஆண்டு வரை (33:1, 21; 34:8, 14)
📍மனாசேயின் ஆட்சியின் போது தேசம் விக்கிரக வழிபாடு மற்றும் ஒழுக்கக்கேடுகளால் நிரம்பி வழிந்தது. பாகாலின் வழிபாடு மீட்டெடுக்கப்பட்டது, ஆனால் *கர்த்தருடைய ஆலயம் புறக்கணிக்கப்பட்டது, நியாயப்பிரமாண புஸ்தகம் ஆலயத்தில் எங்கோ கிடந்தது*.

✅ *புஸ்தகம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது*❓
அதற்கான பாராட்டு *யோசியா ராஜாவுக்கு* போகிறது
🔖 16 வயதில் *தன் தகப்பன் தாவீதின் தேவனைத் தேட* தொடங்கினார்.
🔖 26 வயதில், *கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்க* ஒரு பிரதிநிதியை அனுப்பினார்.
பழுதுபார்க்கும் வேலை நடந்துகொண்டிருந்தபோது, ​​ஆசாரியனாகிய இல்க்கியா புஸ்தகத்தைக் கண்டுபிடித்தார்.

✅ *பதில் என்ன*❓
🔖யோசியா அதை வாசிக்கக் கேட்டான் (வ. 18)
🔖யோசியா மனந்திரும்புதலுடன் பதிலளித்தார் (வ. 19)
🔖யோசியா தேவனுடைய சித்தத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறார் (வ. 21)
🔖 யோசியா புத்தகத்தை மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார் (வ. 30)
🔖யோசியா கர்த்தரின் முன்னிலையில் உடன்படிக்கையைப் புதுப்பித்தார் (வ. 31)
🔖யோசியா எருசலேமில் கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடினார் (35:1)

💞 அன்பான திருச்சபையே, *"நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம், தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருக்கிறது"*(1கொரி 3:16) என்பதை பலமுறை மறந்து விடுகிறோம்.
📍 நம் இருதயத்தைத் ஆராய்ந்து, ஆலயத்தில் ஏதேனும் பழுது பார்த்தல் தேவையா என்பதை அறிவோம். 

தேவனுக்கே மகிமை 🙌
✍🏽 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳

தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[30/08, 11:20] +91 99431 72360: 30.08.2023

*🥕சிப்பிக்குள் முத்து🥕*

இன்றைய வேத
வாசிப்பு பகுதி -
*2 நாளா : 33, 34*

*🐛முத்துச்சிதறல் : 138*

🌽🍇🌽🍇🌽
கர்த்தரே தேவன் என்று *அப்பொழுது....* மனாசே *அறிந்தான்.*
(2நாளா - 33 : 13பி)
🍇🌽🍇🌽🍇

   *🌲"மனந்திருந்தி குணப்பட்ட மன்னன் மனாசே "🌲*

✅️✅️✅️
*கர்த்தரின் சிட்சையை அற்பமாய் எண்ணாமல்... அதன் மூலம் தனக்கான வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொண்ட ஓர் மன்னனாக இந்த மனாசே குறித்து நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.*
(எபி - 12 : 5 - 13)
✅️✅️✅️

எசேக்கியா அரசனின் குமாரன் மனாசே தன் தகப்பனின் மரணத்திற்கு பின் அரியணை ஏறியவர்.
யூதாவை அரசாண்ட அத்தனை இராஜாக்களில், இவர் ஒருவர் மாத்திரம் நீண்ட வருஷங்களாகிய 55 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.

இவன் அரசாள ஆரம்பித்ததில் இருந்தே யூதாவில் விக்கிரங்களும், சுருபங்களும், சிலைகளும் ஏராளம் பெருகி, மக்களிடையே *"இயற்கை வழிபாடுகளையும்"* இந்த மனாசே அரசன் கட்டவிழ்த்து விட்டு, எருசலேமில் மிகுதியும் பொல்லாப்பு செய்தது மாத்திரம் அல்ல...
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும், 'வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடம் கட்டியவன்.

அரசன் எசேக்கியாவின் ஆயுள் நீட்டிப்பு வருஷங்களில்
*(15 ஆண்டுகள்)* பிறந்த குமாரனாக மனாசே இருக்கிறார்.
ஒருவேளை இந்த குழந்தையின் ஆன்மீக வளர்ப்பு விஷயத்தில் தகப்பன் எசேக்கியா கோட்டை விட்டு விட்டாரோ❓️
வீட்டை, பிள்ளையை கவனியாமல், மக்கள் சேவையே மகேசன் சேவை என்னும் கோட்பாட்டில் வாழ்ந்தாரோ❓️

எப்படியோ,
இந்த மனாசே அரசன் தன் தகப்பன் எசேக்கியாவுக்கு அவகீர்த்தி கொண்டு வந்த தனயனாக இருந்துள்ளார்.

பக்தியுள்ள ஓர் தகப்பனுக்கு பிறந்து இருந்த பொழுதும், *"மாற்று நம்பிக்கை கொண்டு வளர்ந்து வந்திருக்கிறார், இந்த மனாசே. "*

இவருக்கு பின் புலமாக எவரோ ஓர் விக்கிரக ஆராதனைகாரர் மறைமுக ஆட்சி புரிந்தாரோ❓️ என்னும் சந்தேகம் எழுகிறது.
ஏன் என்றால் மனாசே ஆட்சி பீடத்தில் உட்காருகையில் அவருக்கு வயது வெறும் 12 மட்டுமே !
ஆனால்.....
எப்பொழுது என்று தெரியவில்லை, இவர் தான் பண்ணுவித்த *'விக்கிரகமாகிய சிலையை'* தேவனுடைய ஆலயத்தில் ஸ்தாபித்தானாம்.
(33 : 1 - 9)
*இவன் ஜனங்களை வழி தப்பி போக பண்ணியதாக இவரை குறித்து நாளாகம ஆசிரியர் மூலம் கர்த்தர் எழுத வைத்துள்ளார்.

*தகப்பன் எசேக்கியா மன்னன் ஓர் சீர்திருத்த வாதி...*
விக்கிரக வழிபாட்டை இஸ்ரவேல் என்னும் தேசத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறிவதிலும்.. சமூக சீர்திருத்தங்கள் தேசத்தில் உண்டாகவும் செயல்பட்டவர்.

ஆனால் அவர் மகனாகிய இந்த மனாசேயோ அதற்க்கு நேர் மாறாக...
*மறுசீர்திருத்தம்* என்னும் பெயரில்...
*தனது பொல்லா இதயத்தின் வழியில் தானும் நடந்து...* ஜனங்களையும் நடத்தி... மக்களை கர்த்தரை விட்டு வழிவிலக பண்ணியதில் கில்லாடியாக திகழ்ந்தான்.

*❓️தேசத்துமக்களா...*
இவர்கள் நிலை எப்படி இருந்தது என்றால்...
*தகப்பன் காலத்தில் தகப்பன் கற்றுக்கொடுத்த... கெடுபிடி செய்த வழியில் நடக்க வேண்டியது....*
தனயன் காலத்துல... தனயன் கற்றுக்கொடுத்த... அல்லது தனயன் செய்வதை தாங்களும் முட்டாள்தனமாக பின்பற்றிய...
*கர்த்தரையோ.... கர்த்தரின் வழிகளையோ.. கர்த்தரின் வேதம் காண்பித்த வழிகளையோ பின்பற்ற கற்றுக்கொள்ளாத /மனதற்ற.....*
*"மனுஷ பின்பற்றாளர்களாய்"*
(கர்த்தரை பின்பற்றுகிறவர்களாக உருவாகாது ) *திகழ்ந்த அவல நிலை.*

🌹🥒🌹🥒
*தான் நினைத்ததை சாதித்து விட துடித்து மன்னன் மனாசே.*
தனக்கு அருளப்பட்ட பொறுப்பு குறித்து யாதோறு கவலையுமின்றி... தன்னை கேட்பார் எவரும் இல்லை என்னும் பாணிப்பிலே மட்டுமல்ல...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் என்னும் மனநிலையில் அவரும்....தேசத்து ஜனங்களும் கூட மாறி இருந்தனர்.
*( 33: 10)*

*🌻அசட்டைக்காரராய் மனாசேயை பின்பற்றிய மக்களும் சேர்ந்து நடந்து... கர்த்தருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தினர்.* (2இராஜா - 21 : 14)

🦋🦋🦋
*மனாசே* என்ற பெயருக்கான அர்த்தம் : *மதோபதேசம் பெறாதவர்* என்றும் *மறதி* என்றும் சொல்லப்படுகிறது.

*ஒருவேளை இவரை வளர்த்த தாதி, அல்லது தாய்....இஸ்ரயேலர் அல்லாத வேற்று பின்னணியத்தில் இருந்து வந்தவராக இருக்கலாம்.*
அவர் அந்நிய தெய்வ வழிபாட்டினை குறித்த நம்பிக்கையை இவருக்கு சிறு வயதில் இருந்தே புகட்டி வளர்த்து இருக்கலாம். அல்லது...
தகப்பன் எசேக்கியா செய்த ஒவ்வொரு சீர்திருத்தங்களை குறித்து.....
*பின் புறணி பேசியோரின் வார்த்தைகளை கேட்டு கேட்டு....*
*அந்நிய தேவர்கள் / தேவிகள் குறித்து, அவைளும் தெய்வங்கள் தான்... அந்த நம்பிக்கை கொள்வதில் யாதோறு தவறும் இல்லை என்னும் மனப்பாங்கில் இவர் வளர்ந்து இருக்கலாம்.*

*🤗கர்த்தர் இந்த அரசனுக்கு கற்றுக்கொடுத்து... அவரை சீர்திருத்தவும் தம் வழிகளில் அவர் திரும்பி செயல்பட வைக்க சித்தங் கொண்டார்.*

*எவ்வளவு அன்புள்ள தெய்வம் அவர் !*

*🫛பாவி மனந்திரும்ப சூழ் நிலைகளை ஏற்படுத்தும் கனிவுள்ளம் கொண்டவர் எம் கடவுள்.🤗*

அதற்கு அவர் கையாண்ட வழிமுறை,
*ஆசீரிய சேனையின் கையில் இவரை ஒப்புக்கொடுத்தார்.* அவர்கள் முட் செடிகளில் ஒளித்து கொண்டு இருந்த இவரை பிடித்து.... இரண்டு வெண்கல விலங்குகள் மத்தியில் பாபிலோனுக்கு கொண்டு சென்றனர்.
ஆம்....
*மனதாழ்மையாய் தனக்கு முன் இந்த மன்னனை பணியவைக்க வேண்டி.... கர்த்தர் இப்பொழுது எடுத்து கொண்ட ஆயுதம் -* அவரை ஓர் *சிறையிருப்புக்குள்* மட்டுமல்ல... பல விதத்தில் *உபத்திரவம் அனுபவிக்க....* நிம்மதி இல்லா வாழ்வு மூலம் *தம்மை தேட வைக்கிறார்.*
(33 : 11 - 13)

அதன் விளைவு....
*🍒ஓர் மெய் மனஸ்தாபம்...*
*🍒தன் நிலை உணர்தல்....*
*🍒ஓர் மெய் மனந்திரும்புதல்...* *🍒ஓர் மெய் தெய்வ புரிதல்...*
*🍒ஓர் மெய் விண்ணப்பம்...*
*🍒ஓர் மாறுபட்ட மறுவாழ்வு முறை...*
இங்கு இந்த மன்னனில் உண்டாகியது.

🫐🪶🫐🪶🫐
*கர்த்தரே தேவன் என்று அப்பொழுது...மனாசே அறிந்து கொண்டாராம்.*

*எப்பொழுது ❓️🤔*

தன்னை தாழ்த்தி...
தன் விண்ணப்பத்தை தான் ஏற்கனவே அறிந்து இருந்த மெய் கடவுள் கேட்டு....
*அவனை திரும்ப அரியணை ஏற செய்த போது....* அறிந்து கொண்டான்.

ஆம்...

இஸ்ரவேலின் மெய் கடவுள்... உயிருள்ள / பேசும் கடவுள்...
*தான் பாவி என்று உணர்ந்து... அவரிடம் தன் பாவங்களை மன்னிக்க வேண்டிய போது...பாவங்களை மன்னித்து விட்டதற்க்கு அடையாளமாக....* சிறையிருப்பில் இருந்து தன்னை விடுவித்த கடவுள்...அவன் ஜெபம் / விண்ணப்பத்தை கேட்ட
*கடவுள் யார் என்பதை மனாசே அரசன் இப்பொழுது தான் சரியாக புரிந்து கொண்டார்.*

🦋🐟🦋🐟🦋
*தன்னை விடுவித்த அந்த மெய் கடவுளை அறிந்து கொண்டவுடன் மனாசே செய்தது....*
தன் மனமாறுதல் மெய் என்பதை வெளியுலகுக்கு தெரிய படுத்த வேண்டி....
இதற்கு முன் தான் அறிந்தோ இல்லை உண்மையாகவே அறியாமலோ தானும் நடந்து...மக்களையும் அவ்விதமே நடக்க பண்ணும்படி தவறாக அவர்களை வழி நடத்திய எல்லா வற்றையும்...
*தூர அகற்றினான்.*
அதாவது...
*தன் தவறுகள் அத்தனையையும் சீர்படுத்தினான்*

🐟தான் சீர்பட்டது மட்டுமல்ல...
ஜனங்களும் சீர்திருந்த வேண்டி.....
*தகப்பன் எசேக்கியாவின் நாட்களுக்கு நேரே...*
*🌿ஆதி நிலை ஏக தக்கதாக....*
அதை கட்டளையும் பிரமாணமுமாக ஆக்கினான்.
(33:16)

🌹🥦🌹

*தான் அநியாயமாக கொன்று போட்ட எவரையும் மனாசே திரும்ப உயிரோடு எழுப்ப இயலாது...* ஆனால்...
ஆண்டவரின் வழியை விட்டு தன்னால் தடம் மாறியோர்...
மீண்டும் கர்த்தரின் வழிக்கு வர அழைப்பு கொடுக்க இயலும் என்பதை உணர்ந்து...
*உண்மையான மறு சீரமைப்பு பணி* என்னும் உன்னத நிலைப்பாட்டை மனாசே கையாண்டார்.
*இருண்ட பாதை என்னும் வாழ்வில்*
'ஒரு சின்ன ஒளி கிரகணத்தை'
நாம் இங்கு, இவர் வாழ்வில் காணலாம்.
சவுல் அரசன், மற்றும் சாலமோன் இராஜா போன்றோர் தேவ பயமுள்ளோராக, மனதாழ்மை மிக்கோராக அரசாள ஆரம்பித்து, பின்மாற்றத்தில், கர்த்தருக்கு பிரியமில்லாத வழிகளில் நடந்து தங்கள் வாழ்வை முடிக்க நேர்ந்தது.
ஆனால் இந்த மனாசே மன்னன் ஆரம்பத்தில் சரியில்லாதவராக இருந்திடினும், பின் நாட்களிலோ, மனந்திருந்தி, ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களை தன்னிலும் தேசத்திலும் நிகழ்த்தியவராக இருக்கிறார்.

*🥦இவர் ஓர் கைதியாகவே பாபிலோனில் மரித்து விட கர்த்தர் இடம் கொடுக்க வில்லை.*
அவருக்கு ஓர் புதிய வாழ்வை கட்டளை இட்டார்.
*அதுவும் 55 ஆண்டு காலம் அரசாளும் ஓர் பாக்கியம் இவர் ஒருவருக்கே கிட்டியது.*

✍️அன்று அந்த நேபு மன்னனுக்கு நடந்தது போலவே இவருக்கும் நடந்தது.
*அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த அவராலே (தேவனாலே) ஆகும்* என்பதே...
அன்று நேபு மன்னன் கண்டுக்கொண்ட உண்மை.
(தானி - 4 : 34 - 37)

ஆம்...
*கர்த்தரே தேவன்*
இவரே என்னை இரட்சிக்க வல்லமை படைத்தவர்.
*வேறே எல்லாம் மாயை என்பதை பூமியில் உள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் புரிந்து கொள்ள வேண்டி தான் அவர்களை தமக்கு கீழ்படுத்தும்படி...* இறைவன் சில வேளைகளில் துன்பங்களை தாம் நேசிக்கும் பிள்ளைகள் வாழ்வில் அனுமதித்து.... அவர்களை நொறுக்கி..உடைத்து..உருவாக்கி... பக்குவ படுத்தி... மனந்திருந்த வைத்து... *அப்புறப்படுத்த வேண்டியவைகளை அப்புறப்படுத்த வைத்து...*
எடுத்து நிலை நிறுத்தி...
*தன்னை பாவி என்று ஒத்து கொண்டு கதறும் நிலையை அவர்களில் உண்டாக்கி.....*
தாம் விரும்புகிற எந்த ஆத்துமாவையும் மீட்டு...
மீண்டும் அவர்கள் சந்தோஷமும் களிப்பும் உடையோராக....
தன்னை விடுவித்த உயிருள்ள கடவுளை மாத்திரம் நேசிக்கவும் சேவிக்கவும் ஒப்புக்கொடுத்து வாழ வைத்து விடுகிறார் என்பதே இந்த *மனந்திருந்திய மன்னன் மனாசேயின் வாழ்வு சரிதை மூலம் நாம் கற்று கொள்ளுகிறோம்.*

*🦩முன்பு ஒரு காலத்தில் இவர் துன்மார்க்கனாக செயல்பட்டு தன் கைகளின் செயல்களாலே சிக்கிக்கொண்டவர்.* ஆனால்..
*கர்த்தரோ...*
இவர் வாழ்வில்.... இவர் இராஜ்யத்தில்.....
*தாம் செய்த நியாயத்தினால்.....* (மனாசேயை தண்டித்து)  
*தாம் மட்டுமே தெய்வம் என்பதை நிலைநாட்டி....* மனாசே மன்னன் முதல் அவரை பின்பற்றிய யாவருக்கும்
*மெய் தெய்வம் இவர் மட்டுமே என அறியப்பட்டவராய் இன்றளவும் சரித்திரத்திலே தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.*

*💯தன்னை பாவி என்று ஒத்துக்கொண்டு...*
எமது இரட்சகர் இயேசுவால் மட்டுமே கிடைக்க கூடிய விடுதலை வாழ்வை புரிந்துக்கொண்டு... *இயேசுவுக்கு முன் தன்னை தாழ்த்தி...*
பாவ விடுதலை வேண்டி
*கெஞ்சி விண்ணப்பிக்க படும் எந்த விதமான விண்ணப்பமும் பரலோகில் இருக்கும் அவரை* (இயேசு இரட்சகரை) *சென்றடையும்.*
விடுதலை வாழ்வு உண்டாகும் என்பது நிச்சயம்.
அவரால் உண்டாகும் நீதிகரிக்கப்பட்ட வாழ்வினை மகிழ்வுடன் அனுபவிக்கலாம், *சந்தேகமே இல்லை, பிரியமானோரே !*
(அப் - 13 : 38, 39)
கர்த்தருக்கு முன் மனத்தாழ்மை வாழ்வு மனிதர்கள் எல்லோருக்கும், அவர்கள் எந்த பதவிகளில் இருந்தாலும் தேவை.
*(மீகா - 5 : 8 :, யாக் - 4 : 6, 10)*

*Sis. Martha Lazar✍️*
   *NJC, Kodairoad*
[30/08, 17:07] +91 99431 72360: *அப்பொழுது கர்த்தரே தேவன் என்று மனாசே அறிந்து கொண்டான்*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 நாளாகமம் 33: 2 - 13.

1. எசேக்கியாவின் மகன் மனாசே *புறஜாதிகளின் அருவருப்புகளின் படியே கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பானதை செய்தான். ஆலயத்தில் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடம் கட்டி பலி செலுத்தினான். கர்த்தருக்கு கோபமுண்டாக்க பொல்லாப்பானதெல்லாம் செய்தான். ஜனங்களை கர்த்தரை விட்டு வழி தப்பி போகப்பண்ணினான்.*

ஆம், இந்த மனாசேயை போல *நம்முடைய சரீரமாகிய பரிசுத்த ஆலயத்தில் கர்த்தர் அருவருக்கிற பொல்லாப்பான சிந்தனைகள், கிரியைகள் காணப்படுகிறதா? க ர்த்தரை விட அதிகமாய் நேசிக்கிற விக்கிரகங்கள் நம் இருதயத்தில் நாட்டப்பட்டிருக்கிறதா? பிறரை வழி தப்பி போக செய்கிறோமா?* சிந்திப்போம்.

2.*கர்த்தர் மனாசேயோடும், அவன் ஜனத்தோடும் பேசின போதும் அவர்கள் கவனிக்காமல் போனார்கள்*.

ஆம், *கர்த்தர் அவருடைய வேத வசனங்கள் மூலம், அவர் பிள்ளைகள் மூலம் நம்மோடு எவ்வளவோ பேசிக்கொண்டிருக்கிறாரே! அவற்றிற்கு நாம் கீழ்ப்படிகிறோமா?* இல்லாவிடில் நம்மை கர்த்தருடைய வார்த்தைக்கு சமர்ப்பிப்போம்.

3. *ஆகையால் கர்த்தர் மனாசேயை அசீரிய ராஜாவிடம் ஒப்படைக்கிறார். அவன் மனாசேயை பிடித்து, இரண்டு வெண்கல சங்கிலியால் கட்டி, பாபிலோனுக்கு கொண்டு போய் விட்டான்.*

ஐயோ பரிதாபம்! என எண்ணுகிறோமா? *நாமும் கூட கர்த்தர் அருவருக்கிற பொல்லாப்பானதை நம் சரீரமாகிய ஆலயத்தில் செய்வோமானால், பிறரையும் கர்த்தரை விட்டு வழி தப்ப செய்வோமானால், சத்துருவாகிய பிசாசு நம்மை கட்டி, அவனுடைய அடிமை தனத்தில் நம்மை சிறை படுத்தி விடுகிறான்.*

4.இப்படி *நெருக்கப்படுகையில் மனாசே*

            1. *கர்த்தரை நோக்கி கெஞ்சினான்*.

            2. *கர்த்தருக்கு முன்பாக மிகவும் தாழ்த்தினான்.**

ஆம் இன்று நாமும் பலவிதமாக நம்முடைய வாழ்க்கையில் நெருக்கப்படுகிறோமா? *அப்படியானால் நம்மை தாழ்த்தி கர்த்தருடைய இரக்கத்திற்காக கெஞ்சுவோம்.*

5.*இரக்கமுள்ள கர்த்தரோ அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தை கேட்டு அவனை திரும்ப எருசலேமுக்கு வரப்பண்ணினார். அப்பொழுது மனாசே கர்த்தரே தேவன் என்று அறிந்து கொண்டான்*.

 *அப்படியானால் எவ்வளவு பாவியான மனிதனையும் அவன் மனந்திரும்பும் போது, தன்னை தாழ்த்தும் போது அவனை மன்னித்து தன்னோடு சேர்த்து கொள்ளுகிறார். எந்த பாவியானாலும் அவர் தள்ள மாட்டார். அவர் அன்பிற்கு, இரக்கத்திற்கு அளவேயில்லை.*

ஆம். *நம்முடைய வாழ்க்கையிலும் நம் பரம தகப்பனாம் இயேசு எவ்வளவு அன்புள்ளவர்.. நாம் நம்மை தாழ்த்தி, கெஞ்சி ஜெபிக்கும் போது நம்மையும் கட்டுகளிலிருந்து விடுவித்து திரும்பவும் அவருடைய பிள்ளைகளாக சேர்த்து கொள்ளுகிறார் அல்லவா?*

*எத்தனை நெருக்கங்கங்களிலிருந்து, மரண கட்டுகளிலிருந்து, வியாதிகளிலிருந்து நம்மை மீட்டு தன்னையே சிலுவையிலே பலியாக ஒப்புக்கொடுத்தரே! அவருடைய அன்பை அறிந்து அவரில் அன்பு கூருவோம். கர்த்தரே தேவன் என அறிந்து அவரை மகிமைப்படுத்துவோம்.* ஆம், இந்த வசனங்களின் படி கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா.

*Dr.Padmini Seĺvyn*
[30/08, 17:07] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖

📗 *சிறிய குறிப்பு* 📗

🍂 *திருப்புமுனை* 🍂

மனாசே மன்னனின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. *ஆண்டவரின் பார்வையில் பொல்லாததைச் செய்து தன் வாழ்க்கையைத் தொடங்கினான்*. முந்தைய தேசங்களை விட அதிகமான தீமைகளைச் செய்ய அவன் தனது ஜனங்களை வழிநடத்தினான். கர்த்தர் மனாசேயுடனும், ஜனங்களுடன் பேசினார், ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டார்கள் (2 நாளா 33:1-9).

மனாசேயை சிறைபிடிக்கப்பட்டு, வெண்கலச் சங்கிலிகளால் கட்டப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்ல தேவன் அனுமதித்தார். இக்கட்டான நிலையில், *மனாசே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய தயவை வேண்டிக்கொண்டான்*. அவன் * கர்த்தருக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தி ஜெபித்தான்*. தேவன் அவனுடைய ஜெபங்களைக் கேட்டு, அவனை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டு வந்தார் (2 நாளா 33:10-13).

அப்போது மனாசே தனிப்பட்ட முறையில் *கர்த்தரே தேவன் என்பதை அறிந்து கொண்டான்*. அவனது துயரமும், துன்பமும், அவனைக் கர்த்தரிடம் திருப்பியது. அதுவே அவனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. *துன்பத்தில் இருக்கும்போது, ​​நாம் என்ன செய்வோம்?* மனிதர்களையும், சூழ்நிலைகளையும் குறை சொல்லுகிறோமா? அல்லது *நம்மைத் தாழ்த்தி, ஜெபித்து, தேவனிடம்* திரும்புகிறோமா?

_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_ஆகஸ்ட் 30, 2023_
[30/08, 17:07] +91 99431 72360: Mrs. Merin Gnanaraj
Covai
Day :137
Date: 30.8.23

✍️இன்றைய வசனம்:
♦️அப்பொழுது மனாசே ,
"கர்த்தரே தேவன்"
என அறிந்தான்
2 நாளா 33: 13.

♦️எப்பொழுது அறிந்தான்❓
🔻மனாசே , தன் தகப்பானான எசேக்கியா போலி
ல்லாமல்
1️⃣கர்த்தருக்கு கோபமுண்டாக மிகவும் பொல்லாப்பானதை செய்தான்.
33:6.
2️⃣தேவனுடைய ஆலயத்திலே விக்கிரமமாகிய சிலையை வைத்தான்.
33:8.
3️⃣கர்த்தர் அவனோடும் அவர் ஜனங்களோடும் பேசிய போதிலும் கவனிக்கவில்லை.
33:10.

👉ஆதலால்,
♦️கர்த்தர்,
🔻அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவன் மேல் வரப் பண்ணினார்
🔺அவர்கள் அவனை,
முட்செடிகளில் பிடித்து
2 வெண்கல சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு கொண்டு போனார்கள்
33:11

👉இப்படியாக,
🩸அவன் நெருக்கப்படுகையில்
🔸கர்த்தரை நோக்கி
🔸கெஞ்சி
🔸தன்னை மிகவும் தாழ்த்தினான்
33:12.

♦️"அவன் விண்ணப்பம் பண்ணிக் கொண்டிருக்கிற போது, "
🔸அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி
🔸அவன் ஜெபத்தைக் கேட்டு
🔸அவனை திரும்ப எருசலேமுக்கு வரப் பண்ணினார்.

👉அப்பொழுது மனாசே ,
🎈"கர்த்தரே தேவன் "
என அறிந்தான்.

🎯சிந்தனைக்கு :

🔶யாராவது சிறையிலிருக்கும் போது
தன் தவறை உணர்ந்து
தன்னை தாழ்த்தி கெஞ்சினால்
🔸கர்த்தாவே நீர் மன்னிப்பீராக
👉என்று சாலொமோன் ஆலய பிரதிஷ்டையின் போது கர்த்தரிடம் ஒரு விண்ணப்பத்தை வைப்பார்.
2 நாளா 6:37 - 40

🎈அதே மாதிரியான சம்பவம்தான் இங்கும் நடக்கிறது.

🩸நெருக்கத்திலே, தன்னைத் தாழ்த்தி கெஞ்சி ஜெபித்த மனாசே,
👉"விண்ணப்பிக்கும் போதே"
🩸கர்த்தர் இரங்குகிறார்.

🎈ஆம், நம் கர்த்தர்
நாம் அவரிடம் கெஞ்சி கேட்க மாட்டோமா என நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

👉எனவே,
🔸நம் நெருக்கத்திலே
🔸நம்மைத் தாழ்த்தி
🔸கர்த்தரை நோக்கி கெஞ்சுவோம்.
🔸நமக்கும் இரங்குவார்.

ஆமென்🙏.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.