எஸ்றா: 1-
*நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டு வந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக் கொடுத்தான்*.
(எஸ்றா: 1:7)
★ போரிடாமல் புரட்சி செய்யாமல் பணம் கொடுக்காமல் பாபிலோன் நாட்டிலிருந்த இஸ்ரவேலர் விடுதலையானார்கள்.
★ அவர்களுக்கு தன் ஆட்சியின் கீழிருக்கும் மக்கள் பொருட்களைக் கொடுக்கும்படி செய்த *கோரேஸ்* கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் கொள்ளையிட்டுக் கொண்டு சென்ற ஆலயப்பொருட்களையும் திருப்பிக் கொடுத்தார்.
★ இவ்விதமாகத் தாங்கள் திரும்பி வருவோம் என்று யூதர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் பொதுவாக இவ்வாறு உலகில் நடைபெறுவது இல்லை. ஆனால் *சூழ்நிலைகளை அற்புதமாக மாற்ற வல்லவரான கர்த்தரோ* இவ்வாறு நடைபெறச் செய்தார்.
★ நம் வாழ்க்கையிலும் இவ்வாறு அற்புதங்கள் செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார்.
★ கோரேஸ் ராஜா, எருசலேமிலிருந்து நேபுகாத்நேச்சார் கொள்ளையிட்டுக் கொண்டு வந்து வைத்திருந்த பொருட்களை திருப்பிக் கொடுத்ததை கவனியுங்கள்.
★ நமக்கு சொந்தமல்லாத பிறரின் பொருட்களை நமது வீட்டில் வைத்திராமல் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும். பிறரின் பொருட்கள் நம்மிடம் தங்கியிருப்பது சாபமே. பிறருக்கு சொந்தமான உடமைகளை கொள்ளையிட்டு வசப்படுத்துவது ஒருபோதும் ஆசீர்வாதம் அல்ல.
★ நம்முடைய தவறான வழிநடத்துதலினால் மற்றவர்களுக்கு நஷ்டம் வந்தாலும், நமக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாம் துணை போனாலும் அது கர்த்தருக்கு முன்பாக பாவம் என்பதை அறிய வேண்டும்.
*கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்*.
(நீதி: 10:22
*ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai.
*EZRA : 01 - 04*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: 🌈 *Those who have tried to whip up revivals by organization, by methods, and by gimmicks have failed. Revival will come only as people come back to the Word of God.*
💡Ezra: *Let us pay tribute to Ezra who was the first to begin a revival of Bible study.* Dwight L. Moody made this statement (and he saw a revival), “The next revival will be a revival of Bible study.” *Those who have tried to whip up revivals by organization, by methods, and by gimmicks have failed. Revival will come only as people come back to the Word of God. The theme of the Book of Ezra is The Word of the Lord.* There are ten direct references to God’s Word in this little book: Ezr. 1:1; 3:2; 6:14, 18; 7:6, 10, 14; 9:4; 10:3, 5. The place of the Word of God is seen in the total lives of these people: religious, social, business, and political. The key to this book is found in Ezr. 9:4 and 10:3: they “trembled at the words of the God of Israel.”
⛹️♂️ *Application* : Ez.1:5-6- *There was actually a very small percentage of the people who went up. This has an application and is quite interesting. We should support those who are doing a good job and back them up with our prayers and our encouragement.* This goes for those who are out on the front lines, giving out the Word of God. In warfare it is estimated that for every soldier out on the fighting front there have to be ten people behind him getting supplies to him—food, clothing, medical care, and ammunition. This is true in God’s army today.
⛹️♂️ *Application* :Ez. 3:2- The thing that most interests us is that they searched the Scriptures and they found what was written in the Law of Moses. *When they found what was written, there was no controversy or difference of opinion.* They not only returned to the land, they also returned to the Law of Moses. The Bible was their authority; therefore, neither the ideas nor the opinions of individuals entered into their decision. Things were not done for the sake of expediency.
*There is an application here for us. What men say and think is not important. The Scriptures are all-sufficient and contain all of the instruction that is needed for the guidance of those who would be faithful to God in any particular period of church history.*
Jaya Pradeep-Kodaikanal.
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣0️⃣
Ezra 1-4
*WHAT A GOD WE SERVE* ❗️
*God stirred up the spirit of king Cyrus to fulfill His purpose* ‼️
💥 In the first year of Cyrus king of Persia, that the word of the Lord by the mouth of Jeremiah might be fulfilled, *the Lord stirred up the spirit of Cyrus king of Persia* , so that he made a proclamation throughout all his kingdom (Ezra 1:1)
💥 Who says of Cyrus, ‘He is My shepherd, And *he shall perform all My pleasure* ,
Saying to Jerusalem, “You shall be built,”
And to the temple, “Your foundation shall be laid.” ’(Is 44 :28)
If God can stir up the spirit of a Persian king to fulfill His plan for His children, *How much more the Lord will stir up our hearts to fulfill His purpose in these end times* ‼️
Usha
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: *01.09.2023*
⚡ *ஜனங்கள் எல்லாரும் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்* ⚡
☄️ *கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள். முந்தின ஆலயத்தைக்கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்* (எஸ்றா 3:11-12).
🔸 *ஏழாவது மாதத்திலே,* இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் குடியேறிய பிறகு, அனைத்து ஜனங்களும் *எருசலேமில் ஒன்றுகூடினர்.* இந்த ஏழாவது மாதம்தான் இஸ்ரவேலர் *பாவநிவிர்த்தி நாள், எக்காளப் பண்டிகை, மற்றும் கூடாரப் பண்டிகை* போன்ற முக்கியமானப் பண்டிகைகளை ஆசாரிக்கும் மாதம்.
🔸 சாலொமோனின் பிரமாண்டமான ஆலயம் அழிக்கப்பட்டு சுமார் *ஐம்பது வருடங்கள்* ஆகியிருந்தன. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைவரும் அந்த ஆலயம் எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக நினைவில் வைத்திருந்திருப்பார்கள்.
🔸 *யெசுவா, செருபாபேல்* மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் *இஸ்ரவேலின் தேவனுடையப் பலிபீடத்தை* அது முன்னே இருந்த இடத்திலேயே கட்டினார்கள். அவர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சர்வாங்க தகனபலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைக் கட்டினார்கள். இது ஒரு மிகச்சரியான துவக்கம். ஏனென்றால், ஒரு ஆலயத்தை *உடனே கட்ட முடியாது,* அதுவரை *பலிபீடம் இல்லாமல் இருக்க முடியாதே.* ஆபிரகாம் தான் சென்ற இடமெல்லாம் ஒரு பலிபீடத்தைக் கட்டினான் (ஆதியாகமம் 12:7; 13:18). பாவத்திலிருந்து பிராயச்சித்தம் பெற வேண்டிய அவசியம் அவர்களுக்கிருந்ததால், *பலிபீடத்தின் அவசியத்தை* அவர்கள் புரிந்து கொண்டனர். *நமக்கு ஒரு பலிபீடம் உண்டு* (எபிரெயர் 13:10); நம்முடைய பலிபீடம் *இயேசு கிறிஸ்துவின் சிலுவையே.*
🔸 ஏறக்குறைய ஆறு மாதங்களில் நிலத்தையும் பொருட்களையும் ஆயத்தம் பண்ணினபின், செருபாபேலும், யெசுவாவும், அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், மற்றவர்களும் *மீண்டும் கட்டும் வேலையைத் தொடங்கினார்கள்.* ஆலயத்திற்கான அஸ்திபாரம் போடுகிறபோது, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரும் *கர்த்தரைத் துதித்தார்கள். ஜனங்களெல்லாரும் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.* அஸ்திபாரத்தின்போதே மிகவும் களிகூர்ந்தார்கள். *நாம் இரக்கம் பெறும்போது,* அது முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், அதன் *தொடக்கத்திற்கே நாம் நன்றியுள்ளவர்களாக* இருக்க வேண்டும்.
🔸 ஆனால் *பழைய ஆலயத்தை* ஏற்கெனவே பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், தலைவரிலும் அநேகர், *மகா சத்தமிட்டு அழுதார்கள்.* இஸ்ரவேலின் இந்த பரிதாபமான நிலைமைக்குக் காரணம் அவர்களின் பாவமே என்று உணர்ந்து அவர்கள் அழுதிருக்கவேண்டும். தேவனை விட்டு விலகியதால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை நாம் நன்கு அறிவோம். *பாவம் சபையின் நற்பெயரையும் தனிமனிதனின் நற்பெயரையும் கறைபடுத்தும். இந்த நேரத்தில் மனந்திரும்பி துக்கித்து அழவேண்டும்* (யாக்கோபு 4:8-10). அப்போது *கர்த்தர் இரங்குவார்.*
🔸 கடந்த காலத்தில் நாம் செய்த அல்லது பேசிய விஷயங்களை மாற்ற முடியாது; ஆனால், நாம் சேவிக்கும் தேவன் *மனந்திரும்புவதற்கு நமக்கு இரண்டாவது வாய்ப்புகளை வழங்குகிறார்.* சில சமயங்களில், நாம் முன்பு இருந்ததைப் போல *மறுபடியும் ஒருபோதும் மாறமுடியாது* என்பதைப்போன்ற சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். இதன் மூலம் *இன்னும் பெரிய ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்வதற்காக* தேவன் அதை அனுமதித்திருக்கலாம். தம்முடைய வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றும் *அற்புதமான, அதிசயமான ஆண்டவரை* நாம் ஆராதிக்கிறோம்.
🔹 *நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாத போதெல்லாம் மனந்திரும்பி நம் இருதயங்களைக் கிழித்து அழுகிறோமா?*
🔹 *நம் இரட்சிப்பின் மகிழ்ச்சி நமக்குத் திரும்பும்போது நாம் உற்சாகத்துடன் ஆனந்த சத்தமிடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *பலிபீடத்தில்தான் பாவநிவிர்த்தி செய்யப்பட்ட வேண்டும்; நம்முடைய பலிபீடம் இயேசு கிறிஸ்துவின் சிலுவையே.*
2️⃣ *பாவத்தால் கறைபட்டிருந்தால், மனந்திரும்பி துக்கித்து அழவேண்டும்; அப்போது கர்த்தர் இரங்குவார்.*
3️⃣ *கடந்த காலத்தில் நாம் செய்ததையோ அல்லது சொன்னதையோ மாற்ற முடியாது; ஆனால் தேவன் நமக்கு இரண்டாவது வாய்ப்புகளை வழங்குகிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: *பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை கர்த்தர் ஏவினார்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்றா 1: 1- 11.
1. *இந்த கோரேஸ் ஒரு யூதன் அல்ல. பெர்சியாவின் ராஜா. இவனுடைய ஆவியை கர்த்தர் ஏவுகிறார்.* ஆச்சரியமாயிருக்கிறது அல்லவா? ஆம் நம்முடைய தேவன் பட்சபாதம் உடையவர் அல்ல. அவர் சர்வ உலகத்திற்கும் தேவன்.
இயேசு கிறிஸ்து ஜாதி, மதம், தேசம், நிறம் ஆகிய பேதமின்றி, சர்வ உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்த்தவர் . சர்வ உலகத்தின் மக்களையும் நேசிக்கிறவர். பாவத்தை வெறுத்தாலும், பாவிகளை நேசிக்கிறவர். எல்லாரோடும் பேசுகிறவர்.
2. கோரேஸ் *பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்யங்களையெல்லாம் எனக்கு தந்தருளினார்* என்றான். இந்த பெர்சியாவின் ராஜா கர்த்தரை *பரலோகத்தின் தேவன் என அறிக்கையிடுகிறான். அவர் தான் எனக்கு இந்த இராஜ்யபாரத்தை தந்து அருளினார் என நன்றியோடு கூறுகிறான்*.
ஆனால் கர்த்தரை அறிந்த, அவருடைய பிள்ளைகளாகிய நாம், நான் படித்தேன், வேலை செய்தேன், சம்பாதித்தேன் என நம்முடைய சிந்தனையில், வார்த்தையில் அறிக்கையிடுகிறோம் அல்லவா? ஆனால் கோரேசோ, பரலோகத்தின் தேவன் இந்த இராஜ்யங்களை எனக்கு தந்தார் என நன்றியோடு கூறுகிறான். ஆம், நம்முடைய ஜீவன், சுகம், பெலன், படிப்பு, குடும்பம், ஆஸ்தி, ஐசுவரியங்கள் யாவும் *கர்த்தர் இலவசமாக தந்த ஈவு* என்பதை அறிக்கையிட்டு கோரேசை போல கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.
3. கோரேசுக்கு கர்த்தர் ஒரு கட்டளை கொடுக்கிறார். அது என்ன?
*யூதாவிலுள்ள எருசலேமில் கர்த்தருக்கு ஆலயத்தை கட்டும் படி கட்டளையிட்டார்.* நாமும் கூட கோரேசை போல புறஜாதிகளாக இருந்தோம். நம்மை அவருடைய சொந்த பிள்ளைகளாக மாற்றி, நம்மையே அவர் வசிக்கும், உலாவும் ஆலயமாக கட்டி எழுப்ப நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். இன்று நம் சரீரத்தை கர்த்தர் வாசம் பண்ணும் பரிசுத்த ஆலயமாக கட்டி எழுப்பி கொண்டிருக்கிறோமா? நம்மை நாமே ஆராய்வோம்.
அதுமட்டுமா? *நம்மை சுற்றிலும் அழிந்து போகிற ஆத்துமாக்களை ஆலயங்களாக கட்டி எழுப்ப நமக்கு கட்டளையிட்டிருக்கிறாரே!* நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அவர்களுக்காக ஜெபிக்கலாமே! இயேசுவின் அன்பை கூறலாமே! அவருடைய வசனத்தை நம்மோடு போனில் பேசுகிறவர்களுக்கு கூறலாமே.
4. நேபுகாத்நேச்சரால் சிறையாக்கப்பட்ட யூதர்களை *எருசலேமில் ஆலயத்தை கட்டும் படி எருசலேமில் வாசம் பண்ணுகிற தேவனே தேவன். இந்த தேவன் ஆலயம் கட்ட போகிறவனோடு இருப்பாராக என ஆசீர்வதித்து அனுப்புகிறான்*. தன்னுடைய தேசத்தில் சிறை களாக கொண்டு வந்தவர்களை விடுவித்து, அவர்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட யாராவது அனுப்புவார்களா? இது கர்த்தர் கோரேசின் ஆவியை ஏவியதால் அல்லவா?
கர்த்தாவே, என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய ஆலயத்தை, ஆலயங்களை கட்டி எழுப்ப என்னுடைய ஆவியையும் ஏவ வேண்டுமே என ஜெபிப்போம்.
5. அது மட்டுமா? ஜனங்களுக்கு ஒரு அறிக்கையை எழுதி அனுப்புகிறான். அது என்ன? *எருசலேமில் ஆலயம் கட்ட உற்சாகமாய் காணிக்கை கொடுங்கள்* என்பதாகும். ஆகவே ஜனங்கள் வெள்ளி, பொன், உச்சிதமான பொருட்கள், மிருக ஜீவன்கள் யாவற்றையும் காணிக்கையாக கொடுத்தார்கள்.
அது மட்டுமல்ல, நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து எடுத்து, தன் கோவிலிலே வைத்திருந்த பணிமுட்டுகளையெல்லாம் கோரேஸ் எடுத்து அவர்களிடம் கொடுத்தான். இது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!
ஆம், கோரேசை ஏவிய கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய ஆவியையும் ஏவுவாராக. நம்மை, நம் குடும்பத்தை, நண்பர்களை, நம்மை சுற்றியுள்ளோரை ஆலயங்களாக கட்டி எழுப்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
"எதாவது, எதாவது செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும்,
என் இயேசு ராஜாவுக்கே" என பாடுவோம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்*📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *தடைகள்* 🍂
நாடுகடத்தப்பட்டுத் திரும்பிய இஸ்ரவேலர்கள் முதலில் *கர்த்தருக்காகப் பலிபீடத்தைக்* கட்டினார்கள். பிறகு காலையிலும் மாலையிலும் *சார்வாங்கதகன பலி* கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் *கூடார பண்டிகையை ஆசரித்தார்கள்.* அவர்கள் ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடுவதற்கு முன்பு மோசே கொடுத்த சர்வாங்க தகனபலியைத் தொடங்கினர் (எஸ்றா 3:1-4).
இஸ்ரவேலர்கள் பலி செலுத்த ஆரம்பித்தபோது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் தேவாலய கட்டுமான பணியை ஆரம்பித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. *தேவாலயத்தின் மறுசீரமைப்பு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பை விளைவித்தது*. கர்த்தருடைய வேலையைத் தடுக்க எதிரிகள் எல்லா வழிகளிலும் முயன்றனர். அவர்கள் ஜனங்களுக்கு மனச்சோர்வை கொடுத்தனர். அவர்களுக்கு நிறைய சிரமங்களைக் கொடுத்தார்கள்.
*அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றி ராஜாவிடம் பொய்யான குற்றச்சாட்டுகளை எழுதினர்.* மேலும் ஆலயத்தின் திருப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது (எஸ்றா 4). எப்பொழுது, எங்கு கர்த்தருடைய பணி உண்மையாக செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் *தடைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.* ஆனால் அவைகள் *தற்காலிக கட்டத்திற்கு மட்டுமே* என்பதை நினைவில் வையுங்கள். அதனால் சோர்வடையாமல், அவருடைய திராட்சைத் தோட்டத்தில் சேவை செய்வதை நிறுத்தி விடாதீர்கள்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_✍🏻
_செப்டம்பர் 01, 2023_
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: *🤩GOD’S MYSTERIOUS MOVES🤩*
[DAY - 140] Ezra Chapters 1-4
☄️The book of Ezra provides a fascinating account of how God works in mysterious ways to accomplish His divine purposes.
1️⃣ *GOD’S SOVEREIGN CHOICE OF CYRUS*
🔹The prophet Isaiah foretold the rise of Cyrus as the one who would allow the Jewish exiles to return to Jerusalem and rebuild the temple. (Isaiah 44:28-45:1)
🔹Cyrus' decree, not only permits the Jews to return but also encourages them to rebuild the temple and provides resources for the endeavor.
🔹God influenced his heart to make this decision.
🔹Cyrus returns the temple vessels that were previously taken from Jerusalem, displaying his benevolence towards their religious practices.
2️⃣ *THE RESTORATION OF THE TEMPLE*
🔸The return of the Jewish exiles, the number of people and their diverse backgrounds are chronicled in Ezra 2:64-65.
🔸The returnees brought offerings for the purpose of rebuilding the temple, indicating their commitment and devotion to God's house.
(Ezra 2:68-70)
🔸The returning exiles organized the priests and Levites and also the collection of resources. (Ezra 3:1-7)
🔸There was a joyous celebration and worship that took place when the foundation of the temple was laid, highlighting the people's gratitude and hope for the restoration of God's presence.
3️⃣ *THE GROWTH OF OPPOSITION*
🔺The Samaritans offered to help in the temple construction, but, Zerubbabel and Jeshua declined their offer, which led to strained relations.
🔺The Samaritans started undermining the authority and credibility of Zerubbabel and Jeshua, potentially sowing division among the Jewish community.
🔺They also wrote false accusations against the Jews to the Persian king. (Ezra 4:6-16)
🔺The opposition's strategies ultimately succeeded in halting the construction of the temple, resulting in a period of stagnation and discouragement.
♥️ *LIFE LESSONS*
💥We are amazed at the mysterious way in which God speaks in the heart of Cyrus to permit Zerubbabel and Joshua to allow the Jews to go to Jerusalem to rebuild the temple.
💥 God helps His children to overcome the various obstacles thrown by the enemies by strengthening their faith.
💥Ultimately we witness the triumph of God's plan.
*‼️LET US HOLD OUR FAITH IN THE FACE OF DISCOURAGEMENT AND DO THE WORK GOD HAS CALLED US TO DO‼️*
Princess Hudson
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: *Day 140 (Friday) 1-9-23*
*Ezra Chapters 1-4*
*Introduction*
Ezra begins by exiles returning to the ruined city.Psalm 126 captures the feelings beautifully.The book introduces a new period in Israel's history.The focus here is revolt against sin and spiritual compromises.
*Chapter 1*
Here is how God inspires King Cyrus of Persia to release the captives and their possessions and plundered wealth from the temple of Jerusalem.He also encouraged voluntary donations for re-building the temple.
1.God has a plan for our lives.He is always making a way in the darkness.God is in control and He is accomplishing His purpose.
2.When God moved Cyrus to give the decree that the people could return to Jerusalem to build a temple,God was stirring up the hearts of the people.
3.Powerful rulers do not intimidate God.They are transformed by divine grace to do His will.We serve a soverign Lord who will never fail us nor forsake us.
*Chapter 2*
This Chapter explains who was among those who returned from exile and how they made their home.The returned exiles make their home in the promised land.After 70 years of exile,their number was substantial.It shows God's providence and care for them in a foreign land.
1.God used KingNebuchadnezzar,King of Babylon to deport the Israelites as prophecied by Prophet Jeremiah in (Jeremiah Chapter 25:Verses 11-12).God used Cyrus to release them because there was a Daniel to intercede for them.God restored the nation in order,well structured and ready for worship.
2.God's faithfulness to His chosen people is revealed here.The Babylonian captivity was God's faithful discipline of His erring people..
3.God is faithful to restore His people but He did not wipe out the consequences of the nation's sins even when He restored them.Our response to His faithfulness should be to live faithfully to His covenant.God does'nt call us to be successful.He calls us simply to be faithful.
*Chapter 3*
An encouraging sign in this Chapter is the restarting of regular worship.This was an indication of the spirit of obedience.After the Israelites had settled down,there was a great Assembly in Jerusalem.Joshua,son of Jazadak and his fellow Priests built an altar for God.Building the altar first shows that they were convinced of their need to have atonement from sins and acts of dedication to God.Then the second temple's foundation was relaid during Ezra's time.There was mixed feelings once the temple was restored The young men shouted in joy when the older ones wept.
1.We can become trapped in past glory and totally miss what God is doing today.
2.We need to imbibe the qualities of the exiles who worshipped God inspite of the odds.They also had the courage to speak up for the Lord.
3.God has placed us in the great ministry of salvation.
*Chapter 4*
Here we see stiff opposition and resistance faced by the descendants of the captives when they set on with the task of rebuilding the temple.Initially,their enemies tried to topple their plans by pretending to be a part of this mission.This was resisted by Zerubbabel,Joshua and the forefathers of the house of Israel.It was an important step in faith to refuse partnership point blank with the gentiles.Then they tried to coax King Cyrus by leveling false allegations and charges and even warring against his kingdom.There was opposition under Xerxes and Artaxerxes.Finally under their reign the work of the house of God came to a standstill until the second year of the reign of Darius,king of Persia .
1.Satan is our adversary and he will approach us deceptively and stop us from building the temple of God in our soul.
2.Here we see the construction delayed but not dropped.They could not succeed against God and His people.They could only delay the work but could not defeat God's plan.Delays are not denials.
*Prof.Ramani George*
*Thiruvalla Kerala*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
[01/09, 07:42] (W) Arun Selva Kumar: ✝️ *THEOLOGY OF ELIMINATION* ✝️ Ezra 1-4✝️
🔹Of the many who came up from the captivity of the exiles, some could not show that their families were descended from Israel. Their family records were searched but they could not find them and *so were excluded from the priesthood as unclean*. Ezra 2:59- 62. The family record or church record may be important to many to get included or excluded by man or the society or the community they belong to. But if our name is not there in the Lamb’s Book of life, we are doomed forever!
🔹The king of Assyria had brought in the people from other places to Samaria to replace the Israelites. (Ezra 4:9,10, 2 Kings 17: 24-41). They offered to help the Jews to build the temple. The gentiles were not allowed to take part in rebuilding the temple by the Jews. Ezra 4:3. There was much opposition from the gentiles to discourage, terrify and frustrate after the Jews refused their plans to help. This only revealed their genuine intentions to offer ‘help’. For the Jews, it was easy to identify one of their own or exclude the gentiles. But *for Christians, it is very difficult to spot the wolves that come in sheep’s clothing*.
🔹Can we separate the wicked from the righteous in a fellowship now? Where do we draw the line? The disciples once wanted Jesus to stop a man who was casting out demons in His name though ‘he was not one of them’. Jesus said, whoever is not against us is for us. Mark 9:39-40. May we not eliminate people who fulfil the last commission of the Lord. Jesus has told us the kingdom of God is like a net that caught both good fish and the bad fish. The *angels will separate the wicked from the righteous*. Both the wheat and the weeds will be there in His field. *Only the wheat will be gathered* into His barn. Matt 13:30,49. Much emphasis is given by many in their teachings *to be set apart and be holy* but we cannot leave this world. 1 Cor 5:10. Jesus ate and drank with sinners and tax collectors who were *willing to follow Him*. Everyone had a past before they knew Jesus. What about us?
🔹 We have been called to be as innocent as doves and as shrewd as snakes to *discern the people we have fellowship with. 1 Cor 5:11*. I have had multiple damaging experiences from born again Christians. Looks or appearances can be deceptive. We need to be more careful if we judge only as we see with our eyes.
🔷May we ask for the gift of discernment from the Lord or else we may fear when there is no need to fear and we may not have any caution when there is a need to be cautious or eliminate.
🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
*God bless!*😊
Dr. Sangeeta Thomas
[01/09, 04:38] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 140* *1/09/2023*
*வெள்ளிக்கிழமை*
*எஸ்றா 1 - 4*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[01/09, 04:38] +91 99431 72360: நாள்: 140
01.09.2023
வெள்ளிக்கிழமை
*எஸ்றா: 1-4*
💐💐💐💐💐💐💐
*நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டு வந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக் கொடுத்தான்*.
(எஸ்றா: 1:7)
★ போரிடாமல் புரட்சி செய்யாமல் பணம் கொடுக்காமல் பாபிலோன் நாட்டிலிருந்த இஸ்ரவேலர் விடுதலையானார்கள்.
★ அவர்களுக்கு தன் ஆட்சியின் கீழிருக்கும் மக்கள் பொருட்களைக் கொடுக்கும்படி செய்த *கோரேஸ்* கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் கொள்ளையிட்டுக் கொண்டு சென்ற ஆலயப்பொருட்களையும் திருப்பிக் கொடுத்தார்.
★ இவ்விதமாகத் தாங்கள் திரும்பி வருவோம் என்று யூதர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில் பொதுவாக இவ்வாறு உலகில் நடைபெறுவது இல்லை. ஆனால் *சூழ்நிலைகளை அற்புதமாக மாற்ற வல்லவரான கர்த்தரோ* இவ்வாறு நடைபெறச் செய்தார்.
★ நம் வாழ்க்கையிலும் இவ்வாறு அற்புதங்கள் செய்ய அவர் ஆயத்தமாயிருக்கிறார்.
★ கோரேஸ் ராஜா, எருசலேமிலிருந்து நேபுகாத்நேச்சார் கொள்ளையிட்டுக் கொண்டு வந்து வைத்திருந்த பொருட்களை திருப்பிக் கொடுத்ததை கவனியுங்கள்.
★ நமக்கு சொந்தமல்லாத பிறரின் பொருட்களை நமது வீட்டில் வைத்திராமல் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும். பிறரின் பொருட்கள் நம்மிடம் தங்கியிருப்பது சாபமே. பிறருக்கு சொந்தமான உடமைகளை கொள்ளையிட்டு வசப்படுத்துவது ஒருபோதும் ஆசீர்வாதம் அல்ல.
★ நம்முடைய தவறான வழிநடத்துதலினால் மற்றவர்களுக்கு நஷ்டம் வந்தாலும், நமக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாம் துணை போனாலும் அது கர்த்தருக்கு முன்பாக பாவம் என்பதை அறிய வேண்டும்.
*கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்*.
(நீதி: 10:22
*ஆமென்*
✍️ Mrs. Bhavani Jeeja Devaraj, Chennai.
(Admin: Group No. 2068)
[01/09, 04:38] +91 99431 72360: *01.09.2023*
⚡ *ஜனங்கள் எல்லாரும் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்* ⚡
☄️ *கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள். முந்தின ஆலயத்தைக்கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்* (எஸ்றா 3:11-12).
🔸 *ஏழாவது மாதத்திலே,* இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களுக்குப் போய் குடியேறிய பிறகு, அனைத்து ஜனங்களும் *எருசலேமில் ஒன்றுகூடினர்.* இந்த ஏழாவது மாதம்தான் இஸ்ரவேலர் *பாவநிவிர்த்தி நாள், எக்காளப் பண்டிகை, மற்றும் கூடாரப் பண்டிகை* போன்ற முக்கியமானப் பண்டிகைகளை ஆசாரிக்கும் மாதம்.
🔸 சாலொமோனின் பிரமாண்டமான ஆலயம் அழிக்கப்பட்டு சுமார் *ஐம்பது வருடங்கள்* ஆகியிருந்தன. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைவரும் அந்த ஆலயம் எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக நினைவில் வைத்திருந்திருப்பார்கள்.
🔸 *யெசுவா, செருபாபேல்* மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் *இஸ்ரவேலின் தேவனுடையப் பலிபீடத்தை* அது முன்னே இருந்த இடத்திலேயே கட்டினார்கள். அவர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சர்வாங்க தகனபலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்துவதற்காகப் பலிபீடத்தைக் கட்டினார்கள். இது ஒரு மிகச்சரியான துவக்கம். ஏனென்றால், ஒரு ஆலயத்தை *உடனே கட்ட முடியாது,* அதுவரை *பலிபீடம் இல்லாமல் இருக்க முடியாதே.* ஆபிரகாம் தான் சென்ற இடமெல்லாம் ஒரு பலிபீடத்தைக் கட்டினான் (ஆதியாகமம் 12:7; 13:18). பாவத்திலிருந்து பிராயச்சித்தம் பெற வேண்டிய அவசியம் அவர்களுக்கிருந்ததால், *பலிபீடத்தின் அவசியத்தை* அவர்கள் புரிந்து கொண்டனர். *நமக்கு ஒரு பலிபீடம் உண்டு* (எபிரெயர் 13:10); நம்முடைய பலிபீடம் *இயேசு கிறிஸ்துவின் சிலுவையே.*
🔸 ஏறக்குறைய ஆறு மாதங்களில் நிலத்தையும் பொருட்களையும் ஆயத்தம் பண்ணினபின், செருபாபேலும், யெசுவாவும், அவர்களின் சகோதரர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், மற்றவர்களும் *மீண்டும் கட்டும் வேலையைத் தொடங்கினார்கள்.* ஆலயத்திற்கான அஸ்திபாரம் போடுகிறபோது, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரும் *கர்த்தரைத் துதித்தார்கள். ஜனங்களெல்லாரும் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.* அஸ்திபாரத்தின்போதே மிகவும் களிகூர்ந்தார்கள். *நாம் இரக்கம் பெறும்போது,* அது முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், அதன் *தொடக்கத்திற்கே நாம் நன்றியுள்ளவர்களாக* இருக்க வேண்டும்.
🔸 ஆனால் *பழைய ஆலயத்தை* ஏற்கெனவே பார்த்திருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், தலைவரிலும் அநேகர், *மகா சத்தமிட்டு அழுதார்கள்.* இஸ்ரவேலின் இந்த பரிதாபமான நிலைமைக்குக் காரணம் அவர்களின் பாவமே என்று உணர்ந்து அவர்கள் அழுதிருக்கவேண்டும். தேவனை விட்டு விலகியதால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை நாம் நன்கு அறிவோம். *பாவம் சபையின் நற்பெயரையும் தனிமனிதனின் நற்பெயரையும் கறைபடுத்தும். இந்த நேரத்தில் மனந்திரும்பி துக்கித்து அழவேண்டும்* (யாக்கோபு 4:8-10). அப்போது *கர்த்தர் இரங்குவார்.*
🔸 கடந்த காலத்தில் நாம் செய்த அல்லது பேசிய விஷயங்களை மாற்ற முடியாது; ஆனால், நாம் சேவிக்கும் தேவன் *மனந்திரும்புவதற்கு நமக்கு இரண்டாவது வாய்ப்புகளை வழங்குகிறார்.* சில சமயங்களில், நாம் முன்பு இருந்ததைப் போல *மறுபடியும் ஒருபோதும் மாறமுடியாது* என்பதைப்போன்ற சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். இதன் மூலம் *இன்னும் பெரிய ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்வதற்காக* தேவன் அதை அனுமதித்திருக்கலாம். தம்முடைய வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றும் *அற்புதமான, அதிசயமான ஆண்டவரை* நாம் ஆராதிக்கிறோம்.
🔹 *நாம் தேவனுக்குக் கீழ்ப்படியாத போதெல்லாம் மனந்திரும்பி நம் இருதயங்களைக் கிழித்து அழுகிறோமா?*
🔹 *நம் இரட்சிப்பின் மகிழ்ச்சி நமக்குத் திரும்பும்போது நாம் உற்சாகத்துடன் ஆனந்த சத்தமிடுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *பலிபீடத்தில்தான் பாவநிவிர்த்தி செய்யப்பட்ட வேண்டும்; நம்முடைய பலிபீடம் இயேசு கிறிஸ்துவின் சிலுவையே.*
2️⃣ *பாவத்தால் கறைபட்டிருந்தால், மனந்திரும்பி துக்கித்து அழவேண்டும்; அப்போது கர்த்தர் இரங்குவார்.*
3️⃣ *கடந்த காலத்தில் நாம் செய்ததையோ அல்லது சொன்னதையோ மாற்ற முடியாது; ஆனால் தேவன் நமக்கு இரண்டாவது வாய்ப்புகளை வழங்குகிறார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[01/09, 04:38] +91 99431 72360: *நாள் 140 /365*
*எஸ்றா 1 -4 *
*கர்த்தருடைய வார்த்தைகள்*
*நிச்சயம் நிறைவேறும்*..
யூதா மக்கள்,பாபிலோனிய
சிறையிருப்பில் இருந்தார்கள்.
அவர்கள் தேவனை விட்டு விக்கிரகங்களைச் சேவித்தார்கள். இஸ்ரவேலர், கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடாவிட்டால்..
அவர்களை பூமியின் ஒரு முனைதுவக்கி் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜாதிகளுக்குள்ளும் சிதறடிப்பேன் என்று…*ஏறக்குறைய* *ஆயிரம்* *ஆண்டுகளுக்கு முன்*.. தேவன் மோசேயிடம் சொன்ன வார்த்தைகள்.. அங்கே நிறைவேறியது.
( உபா.28 : 64-68 )
கர்த்தர், அவர்களை *70ஆண்டு* *காலச்* *சிறையிருப்பிற்குப் பின்*, தங்களது சொந்த தேசத்திற்குத் திருப்பிக் கொண்டு வருவேன் என்று.. எரேமியா மூலம் அவர்களுக்குச் சொல்லியிருந்தார்..
(எரே .29 :10- 14).
பாபிலோனை,
*நேபுகாத்நேச்சார்*,
*45 வருஷங்கள்*..
*அவன் குமாரன்*
*ஏவில் மெரொதாக்*,
*23 வருஷங்கள்*..
*அவன் பேரன் பெல்ஷாத்சார்*,
*3 வருஷங்கள்*..
(*மொத்தம் 70* *வருஷங்கள்*)
ஆட்சிசெய்தனர்.
தானியேல் இதைத்தான்
கணக்கிட்டு அறிந்துகொண்டான்.(தானி.9:2)
.
இப்பொழுது, எரேமியா மூலம் சொல்லப்பட்ட வார்த்தை நிறைவேறும்படி.. தேவ ஆவியானவர், அங்கே செயல்பட ஆரம்பித்தார்.
இராஜாக்களைத்
தள்ளி..இராஜாக்களை ஏற்படுத்துகிறவர்..
பாபிலோனியரை..மேதிய பெர்சியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்..
அங்கே,பெர்சியனாகிய கோரேஸ் ஆளுகைசெய்தான்..
இந்தக் கோரேசைக் குறித்தும்.. அவன் செய்யப் போகிற காரியங்களைக் குறித்தும்.. *அதற்கு 150 ஆண்டுகளுக்கு* *முன்பே*.. ஏசாயா தீர்க்கன் மூலம் கர்த்தர் சொல்லியிருந்தார்.
(ஏசா .44: 28- 45 :1 -7).
*தேவன் ஒருவாக்கைக்* *கொடுப்பாரானால்*.. *அந்த* *வாக்கு நிச்சயம் நிறைவேறும்*... *அந்த வாக்கை நிறைவேற்ற* *அவரே செயல்படுவார்*
*என்பதையே*..
*இது காட்டுகிறது*..
கர்த்தர்,பெர்சிய மன்னனாகிய
கோரேஸின் ஆவியை ஏவினார்..
கோரேஸை, இஸ்ரவேலின் கர்த்தரே..பரலோகத்தின் தேவனென்று..ஜனங்களுக்குச் சாட்சி கொடுக்கச் செய்தார்..
( எஸ்றா 1 அதி. )
யூதா மக்களை, எருசலேமுக்குத் திரும்பிப் போகும்படி.. கட்டளை பிறப்பிக்கச் செய்தார்.
சிறையிருப்பிலிருந்த யூதர்களின் ஆவியையும் ஏவினார்..
ஆலயத்தைக் கட்ட அவரே
வழி நடத்தினார்..
இஸ்ரவேலர், எகிப்தை விட்டு வெளியேறினபோது.. அவர்களுக்கு ..எகிப்தியர்
வெள்ளியுடைமைகளையும்.. பொன்னுடைமைகளையும் கொடுத்ததுபோல..
யூதர்களைச் சுற்றியிருந்த யாவரும்.. மன உற்சாகமாக அவர்களுக்குக் காணிக்கைக் கொடுக்கவும் செய்தார்..
( எஸ்றா 1 : 6 )
இந்தக் காரியங்கள் யாவும்..
யூதா மக்களுக்குத் தேவன் தம்முடைய வார்த்தைகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைக்
கொடுத்திருக்கும்.
*யோசுவாவும்..கர்த்தர்* *இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச்* *சொல்லியிருந்த* *நல் வார்த்தைகளிலெல்லாம்*, *ஒரு வார்த்தையும் தவறிப்* *போகவில்லை என்று* *கூறியிருக்கிறான்*..
(யோசு.21 :45)
பிரியமானவர்களே..இன்று நாமும் வேதத்திலே கடைசி காலச் சம்பவங்கள் குறித்தும்.. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் பார்க்கிறோம்.
இவையெல்லாம் நிச்சயமாக நடக்குமா என்ற சந்தேகம்..நம்மில் அநேகருக்கு ஏற்படவும் செய்யலாம்..
*அவையெல்லாம் நிச்சயம்* *நிறைவேறும் என்பதையே* *இந்தச் சம்பவங்கள் நமக்குச்* *சுட்டிக்காட்டுகிறது*..
*நியாயத்தீர்ப்பு நாளிலே*.. *இயேசுகிறிஸ்துவின்* *நியாயாசனத்திற்கு வலது* *பக்கத்தில் ஒரு கூட்டம்* *மக்கள்*..*இடது பக்கத்தில்* *இன்னொரு கூட்டம் மக்கள்* *நிற்பார்கள் என்று* ..
*பார்க்கிறோம்*..
*(மத்.25 : 31 -46* )
*நாம் எந்தப் பக்கத்தில்* *நிற்கப்போகிறோம்*…?
*ஆண்டவருடைய வலது* *பக்கத்தில் நிற்கவும்*..
*அவருடைய நித்திய* *ராஜ்ஜியத்தைச்* *சுதந்தரிக்கவும்*..
*இப்பொழுதே* *ஆயத்தமாவோமா*..?
ஆமென்.🙏
மாலா டேவிட்
[01/09, 04:38] +91 99431 72360: *பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை கர்த்தர் ஏவினார்.*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எஸ்றா 1: 1- 11.
1. *இந்த கோரேஸ் ஒரு யூதன் அல்ல. பெர்சியாவின் ராஜா. இவனுடைய ஆவியை கர்த்தர் ஏவுகிறார்.* ஆச்சரியமாயிருக்கிறது அல்லவா? ஆம் நம்முடைய தேவன் பட்சபாதம் உடையவர் அல்ல. அவர் சர்வ உலகத்திற்கும் தேவன்.
இயேசு கிறிஸ்து ஜாதி, மதம், தேசம், நிறம் ஆகிய பேதமின்றி, சர்வ உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்த்தவர் . சர்வ உலகத்தின் மக்களையும் நேசிக்கிறவர். பாவத்தை வெறுத்தாலும், பாவிகளை நேசிக்கிறவர். எல்லாரோடும் பேசுகிறவர்.
2. கோரேஸ் *பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் இராஜ்யங்களையெல்லாம் எனக்கு தந்தருளினார்* என்றான். இந்த பெர்சியாவின் ராஜா கர்த்தரை *பரலோகத்தின் தேவன் என அறிக்கையிடுகிறான். அவர் தான் எனக்கு இந்த இராஜ்யபாரத்தை தந்து அருளினார் என நன்றியோடு கூறுகிறான்*.
ஆனால் கர்த்தரை அறிந்த, அவருடைய பிள்ளைகளாகிய நாம், நான் படித்தேன், வேலை செய்தேன், சம்பாதித்தேன் என நம்முடைய சிந்தனையில், வார்த்தையில் அறிக்கையிடுகிறோம் அல்லவா? ஆனால் கோரேசோ, பரலோகத்தின் தேவன் இந்த இராஜ்யங்களை எனக்கு தந்தார் என நன்றியோடு கூறுகிறான். ஆம், நம்முடைய ஜீவன், சுகம், பெலன், படிப்பு, குடும்பம், ஆஸ்தி, ஐசுவரியங்கள் யாவும் *கர்த்தர் இலவசமாக தந்த ஈவு* என்பதை அறிக்கையிட்டு கோரேசை போல கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.
3. கோரேசுக்கு கர்த்தர் ஒரு கட்டளை கொடுக்கிறார். அது என்ன?
*யூதாவிலுள்ள எருசலேமில் கர்த்தருக்கு ஆலயத்தை கட்டும் படி கட்டளையிட்டார்.* நாமும் கூட கோரேசை போல புறஜாதிகளாக இருந்தோம். நம்மை அவருடைய சொந்த பிள்ளைகளாக மாற்றி, நம்மையே அவர் வசிக்கும், உலாவும் ஆலயமாக கட்டி எழுப்ப நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். இன்று நம் சரீரத்தை கர்த்தர் வாசம் பண்ணும் பரிசுத்த ஆலயமாக கட்டி எழுப்பி கொண்டிருக்கிறோமா? நம்மை நாமே ஆராய்வோம்.
அதுமட்டுமா? *நம்மை சுற்றிலும் அழிந்து போகிற ஆத்துமாக்களை ஆலயங்களாக கட்டி எழுப்ப நமக்கு கட்டளையிட்டிருக்கிறாரே!* நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அவர்களுக்காக ஜெபிக்கலாமே! இயேசுவின் அன்பை கூறலாமே! அவருடைய வசனத்தை நம்மோடு போனில் பேசுகிறவர்களுக்கு கூறலாமே.
4. நேபுகாத்நேச்சரால் சிறையாக்கப்பட்ட யூதர்களை *எருசலேமில் ஆலயத்தை கட்டும் படி எருசலேமில் வாசம் பண்ணுகிற தேவனே தேவன். இந்த தேவன் ஆலயம் கட்ட போகிறவனோடு இருப்பாராக என ஆசீர்வதித்து அனுப்புகிறான்*. தன்னுடைய தேசத்தில் சிறை களாக கொண்டு வந்தவர்களை விடுவித்து, அவர்கள் தேவனுக்கு ஆலயம் கட்ட யாராவது அனுப்புவார்களா? இது கர்த்தர் கோரேசின் ஆவியை ஏவியதால் அல்லவா?
கர்த்தாவே, என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய ஆலயத்தை, ஆலயங்களை கட்டி எழுப்ப என்னுடைய ஆவியையும் ஏவ வேண்டுமே என ஜெபிப்போம்.
5. அது மட்டுமா? ஜனங்களுக்கு ஒரு அறிக்கையை எழுதி அனுப்புகிறான். அது என்ன? *எருசலேமில் ஆலயம் கட்ட உற்சாகமாய் காணிக்கை கொடுங்கள்* என்பதாகும். ஆகவே ஜனங்கள் வெள்ளி, பொன், உச்சிதமான பொருட்கள், மிருக ஜீவன்கள் யாவற்றையும் காணிக்கையாக கொடுத்தார்கள்.
அது மட்டுமல்ல, நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து எடுத்து, தன் கோவிலிலே வைத்திருந்த பணிமுட்டுகளையெல்லாம் கோரேஸ் எடுத்து அவர்களிடம் கொடுத்தான். இது எவ்வளவு பெரிய ஆச்சரியம்!
ஆம், கோரேசை ஏவிய கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய ஆவியையும் ஏவுவாராக. நம்மை, நம் குடும்பத்தை, நண்பர்களை, நம்மை சுற்றியுள்ளோரை ஆலயங்களாக கட்டி எழுப்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
"எதாவது, எதாவது செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும்,
என் இயேசு ராஜாவுக்கே" என பாடுவோம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[01/09, 04:38] +91 99431 72360: 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*365 நாட்கள் வேதவாசிப்புத் திட்டம்*
*நாள் 140*
*01.09.2023*
*வெள்ளிக் கிழமை*
*எஸ்ரா 1 - 4*
*எஸ்ரா நூல் பற்றிய ஒரு எளிய விளக்கம்*
*நோக்கம் :-* தேவன் தனது வாக்குத்தத்தங்களைக் குறித்தக் காலத்தில் நிறைவேற்றுபவர் என்பதை நிரூபிப்பதற்காக.
*எழுதியர் :-* எஸ்ரா என்று கருதப்படுகிறது. அல்லது நெகேமியாவாக இருக்கலாம்.
*பின்னணி :-* நாடு கடத்தப்பட்ட யூதர்கள் மீண்டும் தங்கள் தேசத்திற்கு வந்து , தங்கள் தேவனைத் தேடுவதும் , ஆலயம் கட்டுவதும்.
*திறவுகோல் வசனம் :-*
*அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும் , கோரேஸ் , தரியு , பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் , அதைக் கட்டி முடித்தார்கள். எஸ்ரா 6 : 14*
*இந்நூலின் சிறப்பம்சங்கள்*
🌷 எஸ்ரா நூலும் , நெகேமியா நூலும் ஒரே நூலாக இருந்தது ; பின்பு தான் பிரிக்கப்பட்டுள்ளது.
🌷 தேவன் இரக்கமுள்ளவர் ; எந்த சிறையிருப்பையும் , போராட்டத்தையும் மாற்றுபவர்.
🌷 உண்மையான ஊழியத்திற்கு எதிர்ப்புக்கள் வரும் ; ஆயினும் கர்த்தரை சார்ந்து கொண்டால் அவர் நடத்துவார்.
🌷 ஆலயம் கட்டுவதற்கு தங்களைச் சேர்த்துக் கொள்ளாததால் , கர்த்தரை விசுவாசிக்காதவர்கள் ஆலயம் கட்டுவதை தடை செய்கிறார்கள் ; அப்படிச் செய்வது தவறான செயல் ஆகும்.
🌷எஸ்ராவைப் போன்று வேதத்தை ஆராயவும் , அதின்படி செய்யவும் , மற்றவர்களுக்கு அறிவிக்கவும் , நம்முடைய இருதயத்தைப் பக்குவப்படுத்துவோமாக.(எஸ்ரா 7 : 10)
🌷 எஸ்ராவைப் போன்ற விசுவாசமும் , விசுவாசத்தை வெளிப்படையாய்க் கூறும் தைரியமும் , உபவாசித்து ஜெபிக்கும் பழக்கமும் , இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டாவதாக .(எஸ்ரா 8 : 24 -29)
🌷 நாம் வாழும் தேசத்திற்காக , தேசத்தில் வாழும் ஜனங்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்களாயிருப்போமாக. (எஸ் 9 : 1 - 10 : 1)
*ஆமென் ! அல்லேலூயா ! !*
Rajam Theogaraj , Palayamkottai.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன்
👨👩👦🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்வோம்
*எஸ்றா 2:68-69*
*THE JOY OF GIVING*
*கொடுப்பதின் மகிழ்ச்சி*
🙋♂️ *எஸ்றா* புத்தகம் பெர்சியாவின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலின் வரலாற்றை *கோரேசின்* ஆட்சியின் முதல் ஆண்டு முதல் *அர்தசஷ்டா ராஜாவின்* முப்பத்தி இரண்டாம் ஆண்டு வரை உள்ளடக்கியது.
📍 இந்த சகாப்தம் *நெகேமியா, ஆகாய், சகரியா, மல்கியா மற்றும் எஸ்தர்* ஆகியோராலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
📝 இன்றைய வாசகம் கூறுகிறது, "அவர்கள் எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தபோது, கோத்திர தலைவர்களில் சிலர் *மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக்* கொடுத்து தேவனுடைய ஆலயத்தை அதன் இடத்தில் மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.
"அவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப இந்த திருப்பணி பொக்கிஷத்திற்கு கொடுத்தார்கள்.."
📍எகிப்திலிருந்து புறப்பாட்டின்போது வாசஸ்தலமும் அதன் அலங்காரமும் செய்யப்படுவதை உறுதிசெய்ய தங்கள் முன்னோர்கள் தாராளமாகக் கொடுத்ததை அவர்கள் நினைவில் வைத்திருக்கலாம் ( *யாத்திராகமம் 25:1-7* )
🙋♂️🙋♀️ கொடுப்பதில் சில அடிப்படை குறிப்புகளை நாம் காணலாம்:
📌 *இலவசமாக கொடுத்தார்கள்* .
📌 *அவர்கள் மகிழ்ச்சியுடன்* கொடுத்தார்கள்.
📌 *அவர்கள் பயபக்தியுடன்* கொடுத்தார்கள்.
📌 *அவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப கொடுத்தார்கள்* .
🙋♂️🙋♀️ *அவர்களின் பரிசுகள் எருசலேமுக்குத் திரும்பும் மக்களின் மகிழ்ச்சியையும் ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கான அவர்களின் ஆர்வத்தையும் தெரிவிக்கின்றன*.
🙋♂️🙋♀️ கொடுக்கும் முறை குறித்த சில வேத வசனங்களை சிந்தித்துப் பார்ப்போம்:
அ) *கூடாரத்தை அமைத்தல்* :
📍"... விருப்பமுள்ளவர்களும் இருதயத்தில் ஏவினவர்களும் கர்த்தருக்கு காணிக்கையை கொண்டு வந்தார்கள்.." ( *யாத்திராகமம் 35:21-28*)
📍 ".. தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்கு காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டு வந்தார்கள்" ( *யாத். 35:29*)
ஆ) *ஆலயத்தை பழுது பார்த்தல்*
📍 "எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து, பெட்டி நிறைய அதிலே போட்டார்கள்." ( *2 நாளா 24:10* )
📍 "... எனவே சபையார் தகன பலிகளையும், ஸ்தோத்திர பலிகளையும் இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்" ( *2நாளா 29:31* )
💞 அன்பான திருச்சபையே, புதிய ஏற்பாடில் நமது திறனுக்கு ஏற்றவாறு கொடுக்கும் கொள்கையை ஊக்குவிக்கிறது.
📍 பவுல் கிறிஸ்தவர்கள் தங்கள் வரவுக்குத் தக்கதாக கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார் ( *1கொரி 16:2* ); மக்கெதோனியர்களைப் போல ( *2கொரி 8:3*) தங்கள் திராணிக்கு மிஞ்சி கொடுக்கும் படியாகவும் மேலும் மற்றெல்லா காரியங்களிலும் நீங்கள் பெருகியிருக்கிறது போல, இந்த தர்ம காரியத்திலும் நீங்களும் பெருகவேண்டும் என்று கொரிந்தியர்களை அறிவுறுத்தினார். ( *2கொரி 8:7* )
*கர்த்தரின் ஊழியத்தை நாம் சொந்தமாக வைத்திருக்கும் போது, கொடுப்பதிலும், சேவை செய்வதிலும், சாட்சி கொடுப்பதிலும் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்*.
வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் ( *அப்போஸ்தலர் 20:35* )
தேவனுக்கே மகிமை 🙏
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
[01/09, 07:53] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்*📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *தடைகள்* 🍂
நாடுகடத்தப்பட்டுத் திரும்பிய இஸ்ரவேலர்கள் முதலில் *கர்த்தருக்காகப் பலிபீடத்தைக்* கட்டினார்கள். பிறகு காலையிலும் மாலையிலும் * சார்வாங்கதகன பலி* கொடுக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் *கூடார பண்டிகையை ஆசரித்தார்கள்.* அவர்கள் ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடுவதற்கு முன்பு மோசே கொடுத்த சர்வாங்க தகனபலியைத் தொடங்கினர் (எஸ்றா 3:1-4).
இஸ்ரவேலர்கள் பலி செலுத்த ஆரம்பித்தபோது எதுவும் நடக்கவில்லை. அவர்கள் தேவாலய கட்டுமான பணியை ஆரம்பித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. *தேவாலயத்தின் மறுசீரமைப்பு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பை விளைவித்தது*. கர்த்தருடைய வேலையைத் தடுக்க எதிரிகள் எல்லா வழிகளிலும் முயன்றனர். அவர்கள் ஜனங்களுக்கு மனச்சோர்வை கொடுத்தனர். அவர்களுக்கு நிறைய சிரமங்களைக் கொடுத்தார்கள்.
*அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றி ராஜாவிடம் பொய்யான குற்றச்சாட்டுகளை எழுதினர்.* மேலும் ஆலயத்தின் திருப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது (எஸ்றா 4). எப்பொழுது, எங்கு கர்த்தருடைய பணி உண்மையாக செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் *தடைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.* ஆனால் அவைகள் *தற்காலிக கட்டத்திற்கு மட்டுமே* என்பதை நினைவில் வையுங்கள். அதனால் சோர்வடையாமல், அவருடைய திராட்சைத் தோட்டத்தில் சேவை செய்வதை நிறுத்தி விடாதீர்கள்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_✍🏻
_செப்டம்பர் 01, 2023_
[01/09, 07:53] +91 99431 72360: 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Mrs.Jasmine Samuel
Chennai
வேத பகுதி
எஸ்றா 1-4
💧 *தியான துளிகள்*
🤴🏼 *கர்த்தரின் உன்னத பணிக்கு முன்குறிக்கப்பட்ட கோரேஸ்*
🤴🏼 *கோரேஸ் = சூரியன்*
🤴🏼 பெர்சியராஜா
👑 எரேமியாவால் கர்த்தர் கூறிய வார்த்தைகள் நிறைவேறும்படிக்கு........
👑 *கர்த்தர் கோரேஸ் ராஜாவின் ஆவியை ஏவினார்* (எஸ்றா1:1)
👑 பரலோகத்தின் தேவனை விசுவாசித்தான்.
👑 கர்த்தர் சொன்ன வார்த்தைக்கு கீழ்ப்படிந்தான்.
👑 இடிக்கப்பட்ட ஆலயத்தை கட்டி எழுப்ப முழு முயற்சி செய்தார்.
👑 (1) எருசலேமுக்குச் சென்று ஆலயம் கட்ட வேண்டும்
👑(2)
இல்லையெனில் காணிக்கைகள் கொடுத்து அனுப்ப வேண்டும்.
( *பொன், வெள்ளி, திரவியங்கள்,மிருக ஜீவன்கள்*).
.
👑 *எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லோரும் எழுப்பினார்கள்*
🧏🏻 சிந்தனைக்கு.
கர்த்தர் கோரேஸை முன்குறித்தபடியே .......அவன் வேலையை சரியாக செய்து முடித்தான்.
🧏🏻 *நாம் எப்படி இருக்கிறோம்??*
🧏🏻 கோரேஸை குறித்து:
அவன் எனக்கு பிரியமானதெல்லாம் நிறைவேற்றுவான் என்று சாட்சி கூறுகிறார்
ஏசாயா 44:28.
🧏🏻 கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்டிருந்தான்
ஏசாயா 45:1.
🧏🏻நம்மை கர்த்தர் அபிஷேகித்த நோக்கத்தை நாம் நிறைவேற்றுவோம் .
🧏🏻 நம் பெயர் சொல்லி அழைத்து,முன்குறித்திருக்கிறார்.
.
🧏🏻👑 *கர்த்தரின் உன்னத பணியை செய்வோம்*
(அல்லது)
🧏🏻 *கர்த்தரின் உன்னத பணியை நம் பொருட்களால் தாங்குவோம்*
ஆமென்
Covai
Day: 140
Date: 1.9.23
🎯தலைப்பு:
💪வேலை தடைபட்டது
மறுபடியும் கட்டுகிறோம்
எஸ்றா 4, 5.
🎯தடைபட்ட வேலையை எப்படி மறுபடியும் தொடங்கினார்கள்❓
👍1 .திடன் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகள் (ஆகாய், சகரியா) உடனிருந்தார்கள்
5:2
👍2. வேலையை தடுக்காதபடி தேவனின் கண் அவர்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது.
5:5
எனவே,👇
👉 பரலோகத்துக்கும்
பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு
அடிமையாயிருந்து
👉பலவந்தத்தோடும்
கட்டாயத்தோடும்
விரோதிகளாகளால்
நிறுத்தப்பட்ட
ஆலய கட்டுமானத்தை
👉மறுபடியும் தொடர்ந்தார்கள்.
🎯சிந்தனைக்கு,
🤝அவரை தடைப் பண்ணுகிறவன் யார்?
யோபு 1:10
🤝கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது
யோபு 42:2
💪நம் வாழ்க்கையிலும்
தடைபட்டவைகளை
மறுபடியும் தொடங்குவோம்.
💪கர்த்தரின் கண்
நம்மேல் வைக்கப்பட்டிருக்கிறது
ஆமென்🙏
*🍬சிப்பிக்குள் முத்து🍬*
இன்றைய வேத வாசிப்பு பகுதி -
*எஸ்றா : 1 - 4*
*🌽முத்துச்சிதறல் : 140*
*🍒"எஸ்றா"* என்னும் வரலாற்று ஆசிரியர்🍒
(ஓர் அறிமுகம்)
*✍️சரித்திரத்தை பின்னிட்டு திரும்பி பார்க்க உதவிகரமாக இருக்கும் எழுத்துக்களை தான் நாம் வரலாறு என்கிறோம்.*
*இன்றைய நிகழ்வுகள் சரியான முறையில் எமது கையேடுகளில் (Diary) பதியப்படுமாகில், அவைகளே பின்னாட்களில் "வரலாறு" என்னும் நாமத்தில் உறுதியாக்கப்படுகின்றது என்பதை நாமனைவரும் அறிவோம்.*
புதிய ஏற்பாட்டில் அப்படியொரு வரலாற்று ஆசிரியராக திகழ்பவர் *"பிரியமான வைத்தியனாகிய லூக்கா"* என்பவர்.
*(லூக்கா - 1 : 1 - 4)*
இந்த வரலாறுகளை எழுதுபவர்கள் செய்வது என்னவென்றால்..... ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக, தாங்கள் கண்டவைகள் பல, மற்றும் கேள்விப்பட்டிருக்கும் பலவற்றை , பிறர் வேறு விதமாக நம்பி வாழ்ந்திடினும், இவர்கள் இன்னும் திட்டமாக அதை உறுதியாக்கும் படிக்கு, விசாரிக்க வேண்டியவர்களிடம் விசாரிப்பார்கள். *(பேட்டி காண்பார்கள்)* அதனோடே தான் உறுதியாக்கி கொண்டவைகளையும் ஒருங்கிணைத்து, ஒரு முழுமைக்குள்ளாக்கி முடிவானதை பதிவிடுவார்கள்.
அதை தான் லூக்கா செய்தார்.
தாம் எழுதிய சுவிசேஷத்தை *"தனது முதலாம் பிரபந்தம்"* என்கிறார்.
*(அப். - 1 : 1, 2)*
*✍️இங்கு இன்னொரு "வேதாகம எழுத்தாளராக", அதே வேளை யூத "சரித்திர ஆசிரியராக" நாம் எஸ்றா என்னும் வேதபாரகனை குறித்து சிலவற்றை கண்ணோக்கலாம்.* இவர் தான் *எஸ்றா* என்னும் புஸ்தகத்தின் *படைப்பாளி.* மோசேயின் நியாயபிரமாணத்தில் தேறி இருந்தவர். கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும், தன் இருதயத்தை பக்குவபடுத்தியிருந்தவர் இந்த
*எஸ்றா என்னும் சரித்திர எழுத்தாளன்.*
(எஸ்றா- 7: 6, 10)
*🍀சிறையிருப்பில் இருந்து திரும்பவும் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிய இரண்டாவது குழு மக்களை இவர் முன்னின்று அழைத்து வந்தவர்.*
🍀ஜனங்களின் சீர்கெட்ட வாழ்வினின்று அவர்களை விடுவிக்கவேண்டி செயல்பட்ட *ஒழுக்கநெறியாளன், இந்த எஸ்றா.*
*🍀இவர் 1, மற்றும் 2 நாளாகமங்கள், எஸ்றா, நெகேமியா ஆகிய நூல்களை படைத்த படைப்பாளன் என்று முற்காலத்து யூதர்களும், பல கிறிஸ்தவ அமைப்புகளும், தற்காலத்து வேத அறிஞர்களும், மற்றும் எம்மை போன்றொரும் நம்பிக்கைக்கொண்டுள்ளோம்.*
*🍀இவர் பல்வேறு அதிகார பூர்வமான கடிதங்கள், உண்மை ஆவணங்கள் (4:11-22), வம்ச வரலாறுகள் (2:1-70), தன் சொந்த ஞாபகங்கள் (7:27-9:15), ஆகியவற்றின் மூலம், பல தகவல்களை திரட்டி, ஒரு வரலாற்றினை தொகுத்துள்ள மிக சிறந்த வரலாற்று ஆசிரியராக திகழ்கிறார்.*
*🥙நாளாகம நூல்களில் இவர் சில புஸ்தகங்களை குறித்து பதிவு செய்துள்ளார். அவை யாவும் தகுதியற்ற நூல்களாக பலரால் எண்ணப்படுவதற்கு காரணம், அவைகள் காலத்தால் களைந்து போன, மற்றும் காணப்படாமற் இன்றைய நாட்கள் வரை கண்டுபிடிக்க இயலாமல் போன நூல்களாகும்.* ஆனால் அவற்றின் பெயர்கள் வேதாகமத்தில் இருப்பினும், வேதாகமத்தின் பகுதியாகும் தகுதியினை அவை இழந்து போன நூல்களாகும்.
*அவையாவன :*
*1.*
காத்தின் பிரபந்தம். (1நாளா - 29 : 30)
*2.*
நாத்தானின் புஸ்தகம்.
(2 நாளா - 9 : 29)
*3.* சீலோனியனாகிய அகியா எழுதிய தீர்க்கதரிசனம். (2நாளா - 9 : 29)
*4.*
இத்தோ எழுதின தரிசனங்கள்.
(2நாளா - 9:29)
*5.*
செமாயாவின் புஸ்தகம்.
(2நாளா - 12 : 15)
*6.*
உசியாவின் நடபடிகள்.
(2நாளா - 26:22)
*7.*
ஒசாவின் பிரபந்தம். (2நாளா - 33:19)
*மேற்கண்ட👆 இவையாவும் களைந்துப்போன நூல்களாகும்.* ஆனால் இவ்வற்றில் எல்லாம் தான் எழுதிய தகவல்களும், மற்றும் கூடுதல் தகவல்களும் இருப்பதாக எஸ்றா குறிப்பிடுகிறார்.
🍀தேவன் தாம் வாக்குரைத்த காரியங்களை வரலாற்றில் எவ்வாறு நிகழ செய்து,
*"தமது உடன்படிக்கையின் உண்மை தன்மையினின்று மாறாதவராக இருப்பவர்"* என்பதை பின் சந்ததியினர் அறிந்துக்கொள்ளுவதற்காக....
எஸ்றா,
*🎈யூதர்களின் அரசாட்சி,*
*🎈வீழ்ச்சி,*
*🎈சிறையிருப்பு,* *🎈விடுதலை வாழ்வு,*
*🎈தேவாலய மறுநிர்மான செப்பனிடல் பணி,* *🎈ஆசாரிய முறைமை நிலை நாட்டப்பட்ட விதம்,* *🎈பெர்சிய அரசர் கோரேசின் இதயத்தினை எவ்வாறு தேவன் ஏவி எழுப்பி தமக்கு சித்தமானப்படி தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காக திருப்பினார் என்பதையும்,*
*🎈இறை வாக்கியங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கனத்தினை தங்களது உண்மையான கீழ்படிதல் வாயிலாக வெளிப்படுத்தியதையும்,*
*🎈ஒரு நல்ல திறமையுள்ள,*
*🎈கர்த்தரின் வழிநடத்துதலால் செயல்பட்ட ஆன்மீக தலைவர் மூலம் தேவன் தமது ஜனத்தை எவ்வாறு கடாட்சித்து,*
*🎈இரக்கம் பாராட்டினார் என்பதையும் காண்பிக்கும் வண்ணம்*
இவரது *எழுத்துக்கள் அமைந்துள்ளது.*
*🌹70 ஆண்டுகள் பாபிலோன் சிறையிருப்பில் இருந்து* (அந்நியர்களின் அடிமைத்தனத்தில் இருந்து)
தங்களது சொந்த பூமிக்கு திரும்பிய இஸ்ரவேலரின் பயணம்,
*எஸ்றா புஸ்தகத்தில் ஒருவாறு "இரண்டாம் யாத்திரையாகம சம்பவம் போல" எழுதப்பட்டுள்ளது.*
*🍃கர்த்தரின் தேவாலயம் பாழாய் கிடந்த போது, அதை திரும்ப எடுபித்து கட்டும்படி திரும்பி வந்த இஸ்ரவேலர், முதலாவது செருபாபேல் தலைமையில் திரும்பினார்கள் என்றும்,*
(எஸ்றா : 1 - 6 அதிகாரங்கள்) *இரண்டாவது, இந்த எஸ்றா தலைமையில் திரும்பினார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்.*
*🌿தான் ஆரோனின் மரபில், அவரது வம்சா வழியில் வந்த ஒரு ஆசாரியன் என்று தனது பூர்வோத்தரத்தையும் குறிப்பிட இந்த வரலாற்று ஆசிரியர் மறக்கவில்லை.* (7:1-5)
அதன் வாயிலாக ஓர் ஆன்மீக தொழுகை முறை ஸ்தாபிக்கப்பட வழி செய்து கொடுத்துள்ளார். பாழாக்கப்பட்ட தேவாலயம் இரண்டாம் முறை எடுபித்து கட்டப்பட்ட சமயத்தில், அசிரியா வம்சா வழியினர் செய்த இடையூறுகளையும், அவர்கள் இந்த ஆலய பணியில் பங்கெடுக்க விடாதபடி இவரால் கட்டுப்படுத்த பட்டதையும் பதிவு செய்துள்ளார்.
*(4:2)*
தவறான திருமண காரியங்களை அவர் எவ்விதம் கையாண்டார் போன்ற காரியங்களையும், *(9,10 அதிகாரங்கள்)*
மிக முக்கியமாக, *"எவ்விதம் தேவன் ஈலோக ஆளுநர்களையும் தாண்டி சர்வ லோகையும் ஆளுகை புரிகிறார்"* என்பதை, யூத மக்களுக்கு தெரியப்படுத்தி, இஸ்ரவேலுக்கான கிருபையின் உடன்படிக்கையில் இறைவன் எவ்வாறு தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டே இருக்கிறார் என்பதை வரலாற்றின் வாயிலாக வாசகராகிய எமக்கு அறிய தந்துதவியுள்ளார் இந்த வேதபாரகனாகிய எஸ்றா என்னும் *"மாபெரும் வரலாற்று ஆசிரியர்".*
*இவருக்காக,....*
*இவர் ஆற்றிய பணிகளுக்காக* *ஆண்டவரை துதித்து,*
நாமும் இவரை போல,
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும்,
அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தை பக்குவ படுத்தி இருந்தது போல, எம் இதயத்தை பக்குவ படுத்தி கொள்ளுவோம்.
*🔥Sis. Martha Lazar*
NJC, KodaiRoad
Thanks for using my website. Post your comments on this