[05/09, 07:47] (W) Arun Selva Kumar: 🌈 *The man with a brick in one hand, the Word of God in the other, and a mind to work is the man God uses.*
⛹️♂️ *Application* : Neh.4:16-17- *Each builder had a trowel in one hand with which to build, and in the other hand he carried a sword with which to defend himself. These two weapons or instruments should be in the hands of believers today.* The picture here suggests two aspects of the Christian’s life on earth-work and spiritual warfare. (I Cor. 3:10; 15:58; Eph. 6:10-12; I Tim. 6:12; II Tim. 4:7.) These go simultaneously. The sword of the Spirit is the Word of God with which we defend ourselves. We need the trowel in one hand and the sword in the other. *The man with a brick in one hand, the Word of God in the other, and a mind to work is the man God uses.*
❓Neh. 5:9- *Christ is a reproach today in the world. Is He a reproach because of the conduct of the church?* Because of the conduct of believers? Because of the conduct of you and me? This is a question we need to ask ourselves. Nehemiah said, “Look, you are causing the enemy to blaspheme because of what you are doing!”
💪🏼Neh. 5:19- People have short memories. But Nehemiah asked God to remember him. He said, “Think upon me, my God.” *How wonderful to know that, while God does not remember our sins, He will always remember our good works. And He even records them in a book!*
⚠️Neh. 6:2-3- Since they could not stop the work, they now propose to get together with Nehemiah and work out a compromise. *This is the old satanic method of “When you can’t fight them, join them.” There are those in the church today who want to compromise. They feel that you are bigoted and dogmatic if you do not meet with them and try to work out a compromise. Nehemiah was doing a good work, and he did not have time to come down and waste his time with the enemy. God’s people do not need to compromise.* Nehemiah had an uncompromising attitude, and we admire him for it.
Jaya Pradeep-Kodaikanal.
*DAY 144, 05/09/2023 TUESDAY*
*NEHEMIAH : 04 - 06*
*PRAY READ STUDY SHARE*
🙏 📖 ✍️ 🙇♂️
[05/09, 07:47] (W) Arun Selva Kumar: நாள் : 144
05.09.2023
செவ்வாய்கிழமை.
(நெகேமியா : 4-6)
💐💐💐💐💐💐💐
*நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை*.
(நெகேமியா :5:14)
★ஆளுநருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தரவேண்டிய உணவுப்பொருட்கள், பணம் முதலானவற்றை *நெகேமியா* வாங்கவில்லை.
எத்தனை சிறந்த பண்பு பார்த்தீர்களா..?
★கர்த்தருடைய பணியை இலவசமாகச் செய்ததுடன் மக்களின் ஏழ்மையைக் குறித்து மிகவும் கரிசனையுடையவராக நெகேமியா நடந்து கொண்டார்
★ பெரிய பொறுப்பிலிருந்த போதிலும் தானும் வேலை செய்தார்.
★ தான் செய்த யாவற்றிற்கும் நெகேமியா எதிர்பார்த்த பலன் கர்த்தரால் நினைக்கப்படுதல் மட்டுமே; நெகேமியாவைப் போல *கர்த்தருடைய பாராட்டை மட்டும் எதிர்நோக்கி பணி செய்வோமாக*.
★ உலகப் பொருளை, புகழை, மரியாதையை எதிர்பார்த்து பணி, ஊழியம் செய்வது சிறந்ததல்ல.
★உலகப்பிரகாரமாக இறைவன் நமக்குத் தந்துள்ள பணிகளிலும் நாம் உண்மையுடனும் உத்தரவாதத்துடனும் செயல்பட வேண்டும்.
*நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி*
என மத்தேயு :25:21ல் கூறப்பட்டபடி, நாம் பணி புரிவோமாக.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai
Admin: Group No.2068
[05/09, 07:47] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣4️⃣4️⃣
Nehemiah 4-6
*WHAT A GOD WE SERVE* ❗️
*This work was done by our God* ‼️
💥 The wall was finished in fifty-two days. When all our enemies heard of it, they were very disheartened ; for they perceived that this work was done by our God (Nehe 6:15,16)
Nehemiah's - a different leader⁉️
💥 *Prayed for everything*
▪️Hear, O our God, for we are despised (4:4)
▪️We made our prayer to our God (4:9)
▪️Remember me, my God, for good (5:19)
▪️O God, strengthen my hands (6:9)
▪️My God, remember Tobiah and Sanballat, according to these their works (6;14)
💥 *Encouraged others in the Lord*
▪️Do not be afraid of them. Remember the Lord, great and awesome (4:14)
▪️Our God will fight for us (4:20)
💥 *Vigilant day and night without rest*
▪️Neither I, my brethren, my servants, nor the men of the guard who followed me took off our clothes, except that everyone took them off for washing. (4:23)
💥 *Was different from others*
▪️But I did not do so, because of the fear of God (5:15)
▪️Yet in spite of this I did not demand the governor’s provisions (5:18)
💥 *Did not take his work lightly*
▪️I am doing a great work, so that I cannot come down (6:3)
The work was done in just 52 days inspite of all opposition❗The Lord did it‼️
‼️ Don't give up the work which Lord has assigned you. Enemy will try his level best to stop you. But if God is for us, who can be against us❓️(Rom 8:31)
🙏🙏 *All that we have accomplished you have done for us* (Is 26:12)
Usha
[05/09, 07:47] (W) Arun Selva Kumar: நெகேமியா.6.
🌹🌹🌹🌹🌹
"சுவர்கள் கட்டி முடிந்தது."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சுவர் கட்டுவது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது - இடைவெளிகள் மூடப்பட்டன, ஆனால் வாயில்கள் இன்னும் தொங்கவிடப்படவில்லை.
நாம் ஒரு போதகராக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி, சுவிசேஷகராக இருந்தாலும் சரி, ஞாயிறு வகுப்புத் தலைவராக இருந்தாலும் சரி, நெகேமியா எதிர்கொண்டது போல நம் வீழ்ச்சியைத் திட்டமிடுபவர்கள் எப்போதும் இருப்பார்கள்.
நெகேமியா பகுத்தறிவுடன் இருந்தான்.
ஏனெனில் மனிதன் பார்ப்பது போல் இறைவன் பார்ப்பதில்லை; ஏனென்றால், மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறான்; ஆனால் கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார்.
இன்று விசுவாசிகளுக்கு பகுத்தறிவு இல்லை.
அவர்கள் நல்ல தோற்றம் கொண்ட ஆனால் இயேசுவின் இயல்பில் நடக்காத ஆசிரியர்களையும் தலைவர்களையும் பின்பற்றுகிறார்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196
[05/09, 07:47] (W) Arun Selva Kumar: *05.09.2023*
✅ *ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்* ✅
☄️ *நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.* (நெகேமியா 5:13).
🔹 தேவனுடைய ஜனங்களிடையே ஏற்பட்ட மோதலால் தேவைனுடைய வேலை தடைப்பட்டது. தேவனுடைய வேலை எதிரிகளால் நேரடியாக தடுக்கப்படவில்லை, ஆனால் தேவனுடைய ஜனங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைக்கத் தவறியபோது அது தடைப்பட்டது. *ஏழையான யூதஜனங்கள்* நெகேமியாவிடம் வந்து, *ஐஸ்வரியவான்களாகிய யூதஜனங்கள்* தங்கள் மீது சுமத்திய *அநியாயமான சுமைகள்* குறித்து குற்றம் சுமத்தினர். அவர்கள் *வட்டியாக அதிகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.* அவர்கள் ஏற்கனவே *தங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அடமானமாக* வைத்துவிட்டார்கள். எனவே *தங்கள் மகன்களையும் மகள்களையும் அடிமையாக* விற்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் புகார்களைக் கேட்ட நெகேமியா மிகவும் கோபமடைந்தான். வேதம் தெளிவாகக் கூறுகிறது: *"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது."* (1 தீமோத்தேயு 6:10).
🔹 இந்த நிதிப்பிரச்சனைகள் மற்றவர்களின் நிதி நெருக்கடியின்போது பயனடைய விரும்பும் *ஜனங்களின் பேராசையால்* ஏற்பட்டன. இந்த செயல் குறிப்பாக மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. *“உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.”* (யாத்திராகமம் 22:25). சங்கீதக்காரன் கூறும் அறிவுரை: *“ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.”* (சங்கீதம் 82:3-4).
🔹 நெகேமியா குற்றம் புரிந்தவர்களிடம் *தாங்கள் அபகரித்த வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும், வீடுகளையும் திரும்பக் கொடுக்கவும், தாங்கள் வசூலித்த கூடுதல் தொகையையும் திரும்பக் கொடுக்கவும்* கோரினான். நெகேமியாவின் வார்த்தைகளின்படி செய்ய *தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.* பின்னர் அவன் ஆசாரியர்களை வரவழைத்து, பிரபுக்களையும் அதிகாரிகளையும் *தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தான்.* தாவீதின் வார்த்தைகள்: *"தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது."* (சங்கீதம் 56:12).
🔹 நெறிமுறையுடன் செயல்பட நம்மை ஊக்குவிக்க அர்ப்பணிப்பு அவசியம். நம் ஆவி விரும்பினாலும் நம் மாம்சம் பலவீனமாக உள்ளது. நெகேமியா *தன் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி தனது வாக்குறுதியை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர் என்றும், அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக* என்றும் பிரகடனப்படுத்தினான். அதற்குச் சபையார் எல்லாரும் *ஆமென்* என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்.
🔹 எரேமியா ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளான். எபிரேய அடிமைகள் அனைவரையும் விடுவிக்க எருசலேமில் உள்ள அனைத்து மக்களுடனும் சிதேக்கியா ராஜா ஒப்பந்தம் செய்திருந்தான். ஆனால், தேவன் எரேமியா மூலம் வெளிப்படுத்தினார்: *"ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்."* (எரேமியா 34:10-11). என்ன ஒரு *துரோகம்!*
🔹 ஆனால், இப்போது ஜனங்கள் *அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர்.* இது *நெகேமியாவின் விசுவாசத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும்* கிடைத்த பலன். வேதம் கூறுகிறது: *"ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.”* (எண்ணாகமம் 30:2). தேவனும் *அவர்களின் பணியை நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவதன் மூலம்* அவர்களை ஆசீர்வதித்தார்.
💥 *தேவனுடைய வேலையைச் செய்யும்போது நமக்குள் ஒருமைப்பாட்டை உறுதிசெய்கிறோமா?*
💥 *தேவனுக்கும் மனிதர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவனுடைய ஜனங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைக்கத் தவறும்போது, அவருடைய பணி தடைப்படும்.*
2️⃣ *பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.*
3️⃣ முடிந்த போதெல்லாம், *பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும் நியாயம் செய்து அவர்களை விடுவிக்க வேண்டும்.*
4️⃣ *நாம் தேவனுக்குப் பண்ணினபொருத்தனைகள் நம்மேல் இருக்கிறது* என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5️⃣ *நாம் அவருக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால், தேவன் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை ஆசீர்வதிப்பார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[05/09, 07:48] (W) Arun Selva Kumar: *கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசினார்களே*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெகேமியா 4: 5.
1. ஆலயத்தின் அலங்கத்தை கட்டிக்கொண்டிருக்கிற நெகேமியாவையும், யூதரையும் பார்த்து, சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், *எரிச்சலடைந்தார்கள். அவர்களை நிந்தித்தார்கள். கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசினார்கள்.*
ஆம், இன்று அழிந்து போகிற ஆத்துமாக்களை கர்த்தருடைய ஆலயங்களாக கட்டும் போது, அவர்கள் அரண்களை கட்டும் போது சத்துருவாகிய பிசாசு மனிதர்கள் மூலம் தடை பண்ணுவான். கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசுவார்கள். நிந்திப்பார்கள். 4: 1-3.
2. நெகேமியா இவர்களை எப்படி மேற்கொண்டார்?
1. அவர்கள் *தேவனை நோக்கி ஜெபித்தார்கள். இரவும், பகலும் ஜாமக்காரரை வைத்தார்கள்*. ஆம், இரவும், பகலும் ஜாமக்காரரை போல நாமும் தடைகள் நீங்க ஜெபிக்க வேண்டும். 4: 9
2. பயப்படாதிருங்கள் என நெகேமியா அவர்களை திடப்படுத்தி, குடும்பம், குடும்பமாய் பட்டயம், ஈட்டி, வில் ஆகிய *ஆயுதங்களை பிடித்து யுத்தம் பண்ண கட்டளையிட்டார்.* ஆம், நாமும் கூட சர்வாயுதங்களை பிடித்து கொண்டு, தடை பண்ணுகிற பிசாசோடு யுத்தம் பண்ண வேண்டும். 4: 14.
3. வேலை செய்கிறவர்கள் தங்கள் ப ட்டயத்தை இடுப்பிலே கட்டி, ஒரு கையினால் வேலை செய்தார்கள். ஆம், வசனம், அதாவது சத்தியம் என்னும் கச்சையை நம் அரையில் கட்ட வேண்டும். எக்காளம் ஊதுகிறவன் அவர்கள் அண்டையில் இருந்தான். அதாவது கர்த்தரை துதிக்கிறவர்கள் அவர்களோடிருந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் யுத்தம் பண்ணினார்கள்.
4: 17, 18
4. அவர்கள் வஸ்திரங்களை களைந்து போடவில்லை. அப்படியானால் தடைகள் நீங்க, நம் இரட்சிப்பின் வஸ்திரம், நீதியின் சால்வை, துதியின் ஆடை ஆகிய ஆவிக்குரிய வஸ்திரங்களை நாம் அணிந்து யுத்தம் பண்ண வேண்டும். மட்டுமல்ல , சர்வாயுத வர்க்கமாகிய ஆயுதங்களையும், தண்ணீர் ஆகிய வசனத்தையும் நம்மோடு வைத்துக்கொண்டு நாம் யுத்தம் பண்ண வேண்டும். நம் அலங்கத்தை, கட்டி எழுப்ப வேண்டும். 4: 23.
ஆம், இவ்விதமாக நம் அலங்கத்தை கட்டி எழுப்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[05/09, 07:48] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖
📗 *சிறிய குறிப்பு* 📗
🍂 *வேலை செய்ய மனம்* 🍂
📖 *“நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.” (நெகே 4:6)*
இஸ்ரவேல் ஜனங்களின் *ஒத்துழைப்பு* காரணமாகத்தான் அவர்களால் சுவர் கட்ட முடிந்தது. நெகேமியா ஒரு *சில ஆட்களைக் கொண்டு* ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சுவரைக் கட்டி முடிக்க முடியாது. ஒத்த எண்ணம் கொண்டவர்கள் சேர்ந்து கட்டினார்கள்.
ஜனங்களுக்கு *உழைக்கும் இருதயமும், மனமும்* இருந்தது. ஆசரிப்பு கூடாரத்தை கட்டும் போது மோசேயின் காலத்தைப் போலவே, * இருதயம் தூண்டப்பட்ட அனைவரும் வேலை செய்ய வந்தார்கள்.* எந்த நிர்ப்பந்தமும் இல்லை. * ஆண்டவர் யாரையும் வற்புறுத்துவதில்லை.* இது ஒரு சுதந்திரமான விருப்பம். அதே கொள்கை இன்றும் பொருந்தும்.
அறுவடை பெரிது ஆனால் வேலையாட்கள் குறைவு. *ஆண்டவர் தமக்காக வேலை செய்ய ஆட்களைத் தேடுகிறார்*. அவருடைய ராஜ்யத்தில் பணிபுரிய நாம் தயாரா? இது ஒரு தனி மனிதன் வேலை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு *குழு முயற்சி மற்றும் குழுப்பணி.* கர்த்தருக்கு சேவை செய்ய நாம் மற்றவர்களுடன் இணைய வேண்டும்.
_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏻
_செப்டம்பர் 05, 2023_
[05/09, 07:48] (W) Arun Selva Kumar: *💪STRENGTHEN MY HANDS💪*
[DAY - 144] Nehemiah- Ch. 4-6
☄️Chapters 4-6 describe the challenges Nehemiah faced, both external opposition and internal struggles.
1️⃣ *THE EFFORTS TAKEN TO REBUILD* (Nehemiah 4:1-6):
🔹Nehemiah is determined to rebuild the walls of Jerusalem despite facing opposition.
🔹As the project progresses, Sanballat and Tobiah, regional officials, mock and ridicule the Jews, attempting to discourage them from continuing their work.
🔹Nehemiah responds by turning to prayer and encouraging the people to persevere.
2️⃣ *OVERCOMING EXTERNAL OPPOSITION* (Nehemiah 4:7-23):
🔸Nehemiah's adversaries intensify their opposition, and threatens the Jews of physical harm.
🔸Nehemiah devises a strategic plan to combat their enemies by stationing guards and assigning half of them to focus on rebuilding, and the other half to remain armed and ready to defend.
🔸This unity, combined with Nehemiah's leadership and trust in God, helps the people overcome their external opposition.
3️⃣ *INTERNAL STRUGGLES OF DECEPTION* (Nehemiah 5):
◾️The Jewish people are burdened with heavy debts, leading to conflicts and oppression within their community.
◾️Nehemiah addresses this issue by rebuking the nobles and officials, urging them to restore fairness and compassion.
◾️His firm leadership ensures that the rebuilding project remains a collective effort, fostering unity among the Jews.
4️⃣ *CRAFTY SCHEMES OF THE ADVERSARIES* (Nehemiah 6):
🔺Sanballat and Tobiah send letters to Nehemiah, urging him to meet with them under false pretenses.
🔺Recognizing their ulterior motives, Nehemiah wisely refuses to be distracted or manipulated. He prayed to God to strengthen his hands!
🔺He remains steadfast in his commitment to completing the wall, refusing to be swayed by deceitful schemes.
♥️ *LIFE LESSONS*
💥Nehemiah's life serves as an inspiring example of perseverance, leadership, and reliance on God.
💥His ability to unite the Jewish community, address internal conflicts, and discern deceitful intentions ultimately leads to the successful completion of the wall.
*‼️FAITH IN GOD HELPS US OVERCOME OBSTACLES AND ACHIEVE GREAT THINGS‼️*
Princess Hudson
[05/09, 07:48] (W) Arun Selva Kumar: BRB (Nehemiah 4) *"If we fear God, we need fear nothing else” (Isaiah 8:12, 13). If we really believe that God Almighty is supporting us in what we do, it is ridiculous and foolish to fear anyone.*
In Chapter 4, we see Sanballat the enemy becoming furious as he saw the wall coming up. The wall didn't cause any problems for Sanballat personally. Why then was he bothered? He was instigated by Satan.
We see the same thing today too. When as Christians, we do a work for the Lord in some area, we don't harm anyone in any way. Yet many of the people there oppose us vigorously! We wonder why!
We are doing good to all of them and being a blessing to society. Then why are the people angry? The only way we can explain the opposition and danger of such people is that they are being instigated by Satan.
Why are people in India angry with Christians who are improving the lot of the poor people? We are not harming them in any way. They are angry because Satan hates anyone who glorifies the Name of Christ in any way.
We find this principle throughout Scripture. In Nehemiah's time, the enemies of the Jews became furious and tried to bring governmental pressure on the Jews. We see the same thing in India today.
Sanballat then tried to influence the rich people to oppose the work of the Jews and Tobiah made fun of the work. What did Nehemiah do? He did not get into an argument or discussion with them. He prayed saying "O God, we are despised. These people are against us. We are only building the wall and these people are against us" (verse 4).
And the wall continued to be built, because "the people had a mind to work” (4:6). Sanballat and Tobiah then conspired to fight against Jerusalem and to cause a disturbance in it (verses 7, 8).
Nehemiah, however, continued to pray and set up a guard against their enemies day and night (verse 9). In other words, they both watched and prayed. They were alert and watched for the enemy, and they also prayed. This is how we must work in our day too.
One of the biggest problems we face in Christian work is that in addition to the enemies who attack us from without, we also face those who murmur and discourage us from within.
In the Acts of the Apostles, we read that when the disciples multiplied, there was a murmuring among the Greek widows saying, "We are not getting as much food as the Hebrew widows. There is some partiality here (Acts 6:1).
Murmuring coming from within the camp was something that Nehemiah had to deal with too. People in Judah began to murmur saying, "There is a lot of rubbish here and we can't deal with all this” (verse 10). And Nehemiah had to handle all that murmuring and discouragement.
The Jews who lived near them were terribly frightened and shared their fear with others ten times saying, "They will come against you from every side. Be careful” (verse 12). In the church too, we will find many who seek to put fear and discouragement into our hearts.
But Nehemiah was not frightened. He told the people, "Don’t be afraid. Remember the Lord who is great and awesome, and fight for your brothers and your sons and your daughters (verse 14).
"If we fear God, we need fear nothing else” (Isaiah 8:12, 13). If we really believe that God Almighty is supporting us in what we do, it is ridiculous and foolish to fear anyone.
Posted by Rambabu
(நெகேமியா : 4-6)
💐💐💐💐💐💐💐
*நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை*.
(நெகேமியா :5:14)
★ஆளுநருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தரவேண்டிய உணவுப்பொருட்கள், பணம் முதலானவற்றை *நெகேமியா* வாங்கவில்லை.
எத்தனை சிறந்த பண்பு பார்த்தீர்களா..?
★கர்த்தருடைய பணியை இலவசமாகச் செய்ததுடன் மக்களின் ஏழ்மையைக் குறித்து மிகவும் கரிசனையுடையவராக நெகேமியா நடந்து கொண்டார்
★ பெரிய பொறுப்பிலிருந்த போதிலும் தானும் வேலை செய்தார்.
★ தான் செய்த யாவற்றிற்கும் நெகேமியா எதிர்பார்த்த பலன் கர்த்தரால் நினைக்கப்படுதல் மட்டுமே; நெகேமியாவைப் போல *கர்த்தருடைய பாராட்டை மட்டும் எதிர்நோக்கி பணி செய்வோமாக*.
★ உலகப் பொருளை, புகழை, மரியாதையை எதிர்பார்த்து பணி, ஊழியம் செய்வது சிறந்ததல்ல.
★உலகப்பிரகாரமாக இறைவன் நமக்குத் தந்துள்ள பணிகளிலும் நாம் உண்மையுடனும் உத்தரவாதத்துடனும் செயல்பட வேண்டும்.
*நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி*
என மத்தேயு :25:21ல் கூறப்பட்டபடி, நாம் பணி புரிவோமாக.
*ஆமென்*
💐💐💐💐💐💐💐
✍️ Bhavani Jeeja Devaraj, Chennai
Admin: Group No.2068
[05/09, 04:56] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇♂️🙇♀️✝️
*365 நாட்களில் வேதவாசிப்பு*
*நாள்: 144* *05/09/2023*
*செவ்வாய்க்கிழமை*
*நெகேமியா 4- 6*
*ஜெபிக்க,படிக்க*,
*தியானிக்க,பகிர*.
✝️🛐🙇♀️📖🙇♂️🌍🛐✝️.
[05/09, 04:56] +91 99431 72360: *கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசினார்களே*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெகேமியா 4: 5.
1. ஆலயத்தின் அலங்கத்தை கட்டிக்கொண்டிருக்கிற நெகேமியாவையும், யூதரையும் பார்த்து, சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், *எரிச்சலடைந்தார்கள். அவர்களை நிந்தித்தார்கள். கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசினார்கள்.*
ஆம், இன்று அழிந்து போகிற ஆத்துமாக்களை கர்த்தருடைய ஆலயங்களாக கட்டும் போது, அவர்கள் அரண்களை கட்டும் போது சத்துருவாகிய பிசாசு மனிதர்கள் மூலம் தடை பண்ணுவான். கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாக பேசுவார்கள். நிந்திப்பார்கள். 4: 1-3.
2. நெகேமியா இவர்களை எப்படி மேற்கொண்டார்?
1. அவர்கள் *தேவனை நோக்கி ஜெபித்தார்கள். இரவும், பகலும் ஜாமக்காரரை வைத்தார்கள்*. ஆம், இரவும், பகலும் ஜாமக்காரரை போல நாமும் தடைகள் நீங்க ஜெபிக்க வேண்டும். 4: 9
2. பயப்படாதிருங்கள் என நெகேமியா அவர்களை திடப்படுத்தி, குடும்பம், குடும்பமாய் பட்டயம், ஈட்டி, வில் ஆகிய *ஆயுதங்களை பிடித்து யுத்தம் பண்ண கட்டளையிட்டார்.* ஆம், நாமும் கூட சர்வாயுதங்களை பிடித்து கொண்டு, தடை பண்ணுகிற பிசாசோடு யுத்தம் பண்ண வேண்டும். 4: 14.
3. வேலை செய்கிறவர்கள் தங்கள் ப ட்டயத்தை இடுப்பிலே கட்டி, ஒரு கையினால் வேலை செய்தார்கள். ஆம், வசனம், அதாவது சத்தியம் என்னும் கச்சையை நம் அரையில் கட்ட வேண்டும். எக்காளம் ஊதுகிறவன் அவர்கள் அண்டையில் இருந்தான். அதாவது கர்த்தரை துதிக்கிறவர்கள் அவர்களோடிருந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் யுத்தம் பண்ணினார்கள்.
4: 17, 18
4. அவர்கள் வஸ்திரங்களை களைந்து போடவில்லை. அப்படியானால் தடைகள் நீங்க, நம் இரட்சிப்பின் வஸ்திரம், நீதியின் சால்வை, துதியின் ஆடை ஆகிய ஆவிக்குரிய வஸ்திரங்களை நாம் அணிந்து யுத்தம் பண்ண வேண்டும். மட்டுமல்ல , சர்வாயுத வர்க்கமாகிய ஆயுதங்களையும், தண்ணீர் ஆகிய வசனத்தையும் நம்மோடு வைத்துக்கொண்டு நாம் யுத்தம் பண்ண வேண்டும். நம் அலங்கத்தை, கட்டி எழுப்ப வேண்டும். 4: 23.
ஆம், இவ்விதமாக நம் அலங்கத்தை கட்டி எழுப்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Seĺvyn*
[05/09, 04:56] +91 99431 72360: *05.09.2023*
✅ *ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்* ✅
☄️ *நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.* (நெகேமியா 5:13).
🔹 தேவனுடைய ஜனங்களிடையே ஏற்பட்ட மோதலால் தேவைனுடைய வேலை தடைப்பட்டது. தேவனுடைய வேலை எதிரிகளால் நேரடியாக தடுக்கப்படவில்லை, ஆனால் தேவனுடைய ஜனங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைக்கத் தவறியபோது அது தடைப்பட்டது. *ஏழையான யூதஜனங்கள்* நெகேமியாவிடம் வந்து, *ஐஸ்வரியவான்களாகிய யூதஜனங்கள்* தங்கள் மீது சுமத்திய *அநியாயமான சுமைகள்* குறித்து குற்றம் சுமத்தினர். அவர்கள் *வட்டியாக அதிகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது.* அவர்கள் ஏற்கனவே *தங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அடமானமாக* வைத்துவிட்டார்கள். எனவே *தங்கள் மகன்களையும் மகள்களையும் அடிமையாக* விற்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தப் புகார்களைக் கேட்ட நெகேமியா மிகவும் கோபமடைந்தான். வேதம் தெளிவாகக் கூறுகிறது: *"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது."* (1 தீமோத்தேயு 6:10).
🔹 இந்த நிதிப்பிரச்சனைகள் மற்றவர்களின் நிதி நெருக்கடியின்போது பயனடைய விரும்பும் *ஜனங்களின் பேராசையால்* ஏற்பட்டன. இந்த செயல் குறிப்பாக மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. *“உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.”* (யாத்திராகமம் 22:25). சங்கீதக்காரன் கூறும் அறிவுரை: *“ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.”* (சங்கீதம் 82:3-4).
🔹 நெகேமியா குற்றம் புரிந்தவர்களிடம் *தாங்கள் அபகரித்த வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும், வீடுகளையும் திரும்பக் கொடுக்கவும், தாங்கள் வசூலித்த கூடுதல் தொகையையும் திரும்பக் கொடுக்கவும்* கோரினான். நெகேமியாவின் வார்த்தைகளின்படி செய்ய *தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.* பின்னர் அவன் ஆசாரியர்களை வரவழைத்து, பிரபுக்களையும் அதிகாரிகளையும் *தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தான்.* தாவீதின் வார்த்தைகள்: *"தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது."* (சங்கீதம் 56:12).
🔹 நெறிமுறையுடன் செயல்பட நம்மை ஊக்குவிக்க அர்ப்பணிப்பு அவசியம். நம் ஆவி விரும்பினாலும் நம் மாம்சம் பலவீனமாக உள்ளது. நெகேமியா *தன் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி தனது வாக்குறுதியை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர் என்றும், அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக* என்றும் பிரகடனப்படுத்தினான். அதற்குச் சபையார் எல்லாரும் *ஆமென்* என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்.
🔹 எரேமியா ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளான். எபிரேய அடிமைகள் அனைவரையும் விடுவிக்க எருசலேமில் உள்ள அனைத்து மக்களுடனும் சிதேக்கியா ராஜா ஒப்பந்தம் செய்திருந்தான். ஆனால், தேவன் எரேமியா மூலம் வெளிப்படுத்தினார்: *"ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள். ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்."* (எரேமியா 34:10-11). என்ன ஒரு *துரோகம்!*
🔹 ஆனால், இப்போது ஜனங்கள் *அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர்.* இது *நெகேமியாவின் விசுவாசத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும்* கிடைத்த பலன். வேதம் கூறுகிறது: *"ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்.”* (எண்ணாகமம் 30:2). தேவனும் *அவர்களின் பணியை நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவதன் மூலம்* அவர்களை ஆசீர்வதித்தார்.
💥 *தேவனுடைய வேலையைச் செய்யும்போது நமக்குள் ஒருமைப்பாட்டை உறுதிசெய்கிறோமா?*
💥 *தேவனுக்கும் மனிதர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றுகிறோமா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *தேவனுடைய ஜனங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைக்கத் தவறும்போது, அவருடைய பணி தடைப்படும்.*
2️⃣ *பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.*
3️⃣ முடிந்த போதெல்லாம், *பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும் நியாயம் செய்து அவர்களை விடுவிக்க வேண்டும்.*
4️⃣ *நாம் தேவனுக்குப் பண்ணினபொருத்தனைகள் நம்மேல் இருக்கிறது* என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5️⃣ *நாம் அவருக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால், தேவன் சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை ஆசீர்வதிப்பார்.*
Dr. எஸ். செல்வன்
சென்னை
[05/09, 09:49] +91 99431 72360: *நாள் 144 / 365*
*நெகேமியா 4 - 6*
*நாம் பெரிய வேலையைச் செய்ய* *அழைக்கப்பட்டவர்கள்*..
எருசலேம் அலங்கத்தின் பணி, எதிர்ப்புகள்.. போராட்டங்களுக்கு மத்தியில் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது.
இனி எதிரிகளால் எதுவும் செய்யமுடியாது..
ஒருவனை மேற்கொள்ள முடியவில்லையென்றால்.. அவனோடு இணைந்துகொள் என்பதுதான் சாத்தானின் வழிமுறை..
இப்பொழுது நெகேமியாவின் பகைவர்கள்.. அவனிடம் நண்பர்கள் போல தந்திரமாக செயல்பட ஆரம்பித்தனர்.
முதலாவது அவனை, ஓனோ பள்ளத்தாக்கிற்கு..
ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று.. அநேகமுறை அழைத்தனர்.
*நெகேமியாவோ நான் பெரிய* *வேலையைச் செய்கிறேன்*..
*நான் வரக்கூடாது என்று* *கூறிவிட்டான்*.
( நெகே.6 : 1- 4 )
மீண்டும் நெகேமியாவைக் குறித்த பொய்யான வதந்திகள் நிறைந்த முத்திரை இல்லாத (மொட்டைக் கடிதம்) கடிதத்தை நெகேமியாவுக்கு அனுப்பினார்கள்.
நெகேமியா இதைக் குறித்துக் கவலைப்படாமல்.. *தேவனே நீர்* *என் கைகளைத்* *திடப்படுத்தியருளும் என்று* *சொல்லி ஜெபித்தான்*.
( நெகே.6 : 5-9 )
தொடர்ந்து செமாயா என்ற கள்ளத்தீர்க்கதரிசி..
இரவிலே அவர்கள் உம்மைக் பொன்றுபோட வருவார்கள்..
எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள.. தேவாலயத்திற்குள் போய் நாம் இருவரும் ஒழித்துக்கொள்வோம் என்று நெகேமியாவிற்குப் பயம் உண்டாக்க முயற்சி செய்தான்.
நெகேமியா, ஆசாரியனாக இல்லாததினால்..
தேவனுடைய ஆலயத்திற்குள் அவன் செல்வது தவறு..
அதனால் நெகேமியா, என்னைப் போன்றவன் தேவாலயத்திற்குள் போய் பதுங்குவானோ..?
நான் போவதில்லை என்று கூறிவிட்டான்.
( நெகே. 6 : 10,11 )
நெகேமியாவை அழிக்க, அவனை விழச்செய்ய.. பல்வேறு காரியங்கள் அங்கே நிறைவேற்றப்பட்டபோதும்.. நெகேமியா தேவனைச் சார்ந்து கொண்டதினால்.. ஒன்றிலும் அவன் விழுந்து போகவில்லை.
ஜனங்கள் ,சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவிடம்,
சிலுவையை விட்டு இறங்கி வா என்று சொன்னபோது,
நான் இந்த உலகம் இரட்சிப்படைய ..பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது என்றுதான் இயேசு நினைத்திருப்பார்...
இயேசு கிறிஸ்துவைக் குறித்தும்.. கேலியாகப் பேசினார்கள், பொய்யாகக் குற்றம்சாட்டினார்கள்..
ஆனால், அவர் பிதாவை நோக்கி ஜெபித்தார்.
நெகேமியாவே..நீ துன்பப்பட வேண்டாம். ஆலயத்திற்குள் போய் ஒழித்துக் கொள்வோம் என்று செமாயா கூறினது, இயேசுவே உமக்குச் சிலுவை வேண்டாம்,
என்னைப் பணிந்து கொள்ளும், உலகத்தின் எல்லா மகிமையையும் உமக்குத் தருவேன் என்று சாத்தான் கூறியது போல் இருக்கிறதல்லவா?
ஆனால், இயேசு சாத்தானை
ஜெயித்தார்..
*பிரியமானவர்களே*..
*கிறிஸ்துவுக்காக*,
*உண்மையோடும்*..
*உத்தமத்தோடும் வாழ* *நினைக்கும் நம் ஒவ்வொருவருடைய*
*வாழ்விலும் இத்தகைய* *சோதனைகள் நிச்சயம் வரும்*..
*நாம் பெரிய வேலையைச் செய்ய* *அழைக்கப்பட்டவர்கள்* *என்பதை எப்பொழுதும்* *நினைவில் கொள்வோம்*..
*அந்தப் பெரிய தேவனையே*
*சார்ந்துகொள்வோம்*..
*வழுவாதபடி நம்மைக் காக்க* *வல்லமையுள்ள தேவன்*..
*நாம் விழுந்துவிடாதபடி*
*பாதுகாப்பார்*..
*மகிழ்ச்சியோடே* *மாசற்றவர்களாய்த் தமது*
*சந்நிதியிலே நம்மை* *நிலைநிறுத்துவார்*..
ஆமென்.
மாலா டேவிட்
*🫑சிப்பிக்குள் முத்து🫑*
இன்றைய வேத வாசிப்பு பகுதி - *நெகேமியா : 4 - 6*
*🍿முத்துச்சிதறல் : 144*
🍒🍒💠🍒🍒
*🌱.... வாசல்களுக்கு இன்னும் கதவு போடாது இருக்கையில்......* ஒருவரையோருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்.
*(6:2)*
💠💠🍒💠💠
*🪔பரிகாசம் செய்யப்பட்ட நெகேமியாவின் பணி.....நிறைவு பெறப் போகிறப்போது.......சத்துருக்களினால் அடுத்த ஒரு மிரட்டலை அவர் சந்திக்க வேண்டி இருந்தது.*
*"ஒருவரை ஒருவர் கண்டு, உட்கார்ந்து பேசுவோம் வாரும்" என்னும் அழைப்பை எதிரிகள் (கர்த்தரின் சத்துருக்கள்) விடுத்தனர்.* அலங்க கட்டுமான பணிக்கு இடையூரு செய்தோர் இவர்கள். *ஒன்று*
நெகேமியாவை எப்படியாவது குற்றவாளி கூண்டில் ஏற்றிவிடவேண்டும், *(இவன் தன்னை இராஜாவாக நிலைநிறுத்த எத்தனிக்கிறான் என்னும் குற்றச்சாட்டு)* இல்லையென்றால், *அவரை இல்லாமலேயே ஆக்கி விட வேண்டும் என்னும் மனப்பாங்கோடு, தங்களது சுய மனோராஜ்யத்தின் அடிப்படையில் /.... "உள்நோக்ககோடு அவருக்கு தூது விட்டனுப்பினர்" எதிர்ப்பாளர்கள்.*
ஆனால்,
தேவனது பலத்த கரத்தினால் , அதாவது, *"பகுத்தறியும் கிருபை"* பெற்றிருந்த நெகேமியாவால், அவர்களது அழைப்புக்கு இணங்கி செல்லும் ஒரு விருப்பம் இல்லாமல் போகதக்கதாக ஒரு நடத்திப்பை கர்த்தரால் பெற்றுக் கொண்ட நிலையில் நெகேமியா திகழ்ந்தவர்.
*சத்துருக்களின் சூழ்ச்சிகளை இனங்கண்டுக் கொள்ளும் கிருபை*
இவரது இந்த பணிக்கு மிக அத்தியாவசியமாக இருந்தது.
*🍒சன்பல்லாத், தொபியா, கேஷேம், மற்றும் அவர்களுக்கு கைக்கூலிகளாக செயல்பட்டோர் அனைவரும், எப்படியாவது நெகேமியாவை அலங்கத்தின் வாசல்களுக்கு கதவு போட விடாமலாகிலும் தடுக்க எத்தனித்தனர்.* ஆனால்,
தான் ஆரம்பித்த பணியினை வெற்றியாய், செம்மையாய் *"முடித்துவிடுவதில் மாத்திரமே"* நெகேமியா மிக கவனமாக இருந்தார்.
ஏன் என்றால்.....
*ஒரு காரியத்தின் துவக்கத்தை பார்க்கிலும்... அதன் முடிவே நல்லது என்பதினை... நெகேமியா அறிந்திருந்தாராக்கும்.*
(பிர - 7 : 8)
எவரோடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது நேரத்தை வீணடிக்க நெகேமியா விரும்பவில்லை. *சிறப்பான முறையில் முடிக்கப்பட இருப்பனவற்றுக்கு முட்டுக்கட்டை போட சத்துருக்கள் முனைந்திருந்ததை இனங்கண்டுக் கொண்டு,* அவர்களிடம் இருந்து தன்னை பிரித்துக்கொண்டு, *நடைபெறவேண்டிய வேலையில் மாத்திரம் தனது முழு கவனத்தையும் நெகேமியா செலுத்த வேண்டி இருந்தது.* அப்படியே அவர் செயல்பட்டு வெற்றிக்கண்டார்.
🍧🍧🥏🍧🍧
எருசலேமில் அலங்கம் கட்டும் பணிக்காகவே நெகேமியா பாரசீக தேசத்தில் இருந்து அரசனிடம் விடுப்பு வாங்கி கொண்டு இங்கு வந்திருக்கிறார். *அலங்க வேலையில் முடிவாக செய்ய பட வேண்டிய பணி, அலங்க வாசல்கள் அத்தனைக்கும் கதவுகள் போட பட வேண்டிய பணியாகும்.*
இப்படி கதவுகள் *(கூடவே தாள்பாள்களும்)* போட பட வேண்டிய நேரத்தில் கர்த்தரின் பணியை நிறுத்த பார்த்தனர் சன்பல்லாத், தொபியா, கேஷேம், மற்றும் வேறே பகைஞர்கள்.
(4 : 1 - 3)
*இந்த தொபியா என்பவர்*
தனது ஆசாரிய முறைமை வம்சா வழி பட்டியலை காண்பிக்க இயலாமல் போன படியால் யூத சமூகத்தினரால் விலக்கி வைக்கப்பட்டு இருந்த ஓர் நபர் என்றும்,
(எஸ்றா - 2 : 60)
இவரை, பாபிலோன் அரசன், கி. மு. 586 ல் எருசலேமை சூறையாடிய பின், சமாரியாவில் இவரை *(இந்த தொபியாவை)* ஆளுநராக நியமித்து இருந்தார் என்றும், ஆகையால் இந்த தொபியா என்பவர் திரும்ப திரும்ப நெகேமியாவின் உன்னத பணியில் எருசலேமின் நன்மைக்காக பாடுப்பட்டு கொண்டு இருந்த நெகேமியாவுக்கு நெருக்கடிகளை கொடுப்பதும், அலங்க பணியை நிறுத்தி போட எத்தனிப்பதுமாகவே இருந்த ஒரு மனிதன் என்றும் *ஓர் கருத்து உள்ளது.*
எருசலேமின் நன்மையை விசாரிக்க நெகேமியா வந்தது இந்த *அம்மோனியனான தொபியாவுக்கு*
என்ற வார்த்தைகள் மூலம் இவர் ஆசாரிய வம்சத்தில் பிறந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு, அவனுக்கு அது
*விசனமாக இருந்ததாம்.*
(2 : 10)
*🦀அவன் அம்மோனியன்.* ஆகையால் யூதர்களின் நன்மையை அவன் நாடாதவனாக இருந்துள்ளான்.
🍏🍏🫧🍏🍏
*✍️எமக்கு "ஆண்டவர் அருளியுள்ள தனிப்பட்ட விதமான ஊழியத்தினை" தகர்க்கும்படி செயல்படும் சத்துருவின் தந்திரங்களை நாம் அறிந்து வைத்திருந்தாலொழிய வெற்றி வாகை சூட இயலாது.* வஞ்சனையும், ஏமாற்று வித்தைகளும் வண்டி வண்டியாய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், *சரியான பகுத்தறிவாளர்களாக, தெளிந்த மன ஒட்ட மாந்தர்களாக நாம் அந்த நெகேமியாவைப்போலவே இருக்க விளைதலே சால சிறந்த நிலையாகும்.* எம்மை திசை மாற்றும்படி எவரேனும் முயன்றால், அவர்களே தோல்வியினை தழுவிக் கொள்ள ஏதுவுண்டாக தக்க *நாம் எமது கையில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணியினை முடிக்கவே இந்த நெகேமியாவை போல நாம் தீவிரங்கொள்ள வேண்டும்.*
*🔥நான் பெரிய வேலையை செய்கிறேன். நான் அந்த வேலையை விட்டு வர இயலாது / வர கூடாது என்ற நெகேமியாவின் ஆணித்தரமான வார்த்தைகள், தனக்கு தெளிவாக கொடுக்க பட்டிருந்த "கர்த்தரின் வேலையில்" அவரது அர்ப்பணிப்பின் மாண்பினை எடுத்து காட்டுகிறது.*
*✅இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரித்து, அதை ஒழுங்குப்படுத்தும் பணி தான் நெகேமியாவின் பணியாக இருந்தது.*
*✅அலங்கம் கட்டப்படுவதும், வாசல்களில் எங்கும் திறப்புகள் இராமல் அவைகளுக்கு கதவுகளும், தாழ்ப்பாள்களும் போடப்பட்டு பலப்படுத்தும் வேலையை தான் நெகேமியா மேற்கொண்டிருந்தார்.*
*❌ஆனால் சன்பல்லாத் என்பவன் சமாரியாவை ஆளுகை செய்து வந்த ஒரு ஆளுநராக இருந்தமையால், எருசலேம் நகரத்தையும் தன் கைவசமே வைத்துக்கொள்ள விரும்பித்தான், எருசலேமின் நன்மையை நாடின நெகேமியாவுக்கு விரோதமாக, "கோஷ்டி அரசியல்" நடத்திய பேர்வழியாக இருக்கிறான்.*
*❌இவனது இந்த தேவ சித்தத்திற்கு மாறான எதிர்ப்பு அரசியல் ,*
பெர்சிய அரசனுக்கு தான் உதவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இஸ்ரவேலரை அற்பமாய் என்ணுவது தான் இப்படிப்பட்டோருக்கு கைவந்த கலையாக இருப்பினும், அதற்கு நேர் மாறாக....
*👍"தொலை தூர பார்வையும்,*
*👍ஆய்வு செய்யும் திறனும்,* *👍ஒருங்கிணைக்கும் உத்தியும்,*
*👍ஜெப வாழ்வும்,* *👍தன்னை கொண்டு கர்த்தர் ஆரம்பித்த காரியத்தை முடிவுக்கு நேரே நகர்த்தி சென்று முற்று பெற வைப்பதும்,*
*👍தெளிந்த பார்வையும்,*
*👍சமயோசிதமான புத்தி கூர்மை மிக்க சிந்தனையும் தான்", நெகேமியாவின் வெற்றிக்கு காரணமாகி நின்றன.*
🎊🎊🎈🎊🎊
*✒️எருசலேம் நகரத்தின் வாசல்களுக்கு கதவுகளும், தாழ்ப்பாள்களும் போடப்படுவதற்கு முன் நெகேமியாவுக்கு இத்தனை பாடுகள்.*
ஆனாலும் அவற்றை அவர் செவ்வனே முடித்த பின்..... *எதிரிகளின் சூழ்ச்சிகள் திவாலாகி போய்விட்டதை தான் இப்பகுதி மூலம் தெரிந்துக் கொள்ளுகிறோம்.*
எதிரிகளின் *(சாத்தானின் கைக்கூலிகளின்)* சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட, *"தெளிந்த புத்தி"* மற்றும் *"தெய்வ ஒத்தாசை"* தான் ஊழிய பாதையில்
இன்றியமையாத ஒன்றாகும்.
*எமது ஆன்மீக பயணத்திலும் இத்தகைய "தெளிந்த புத்திக்காக மன்றாடி",*
அதனை பெற்றுக் கொண்டோராக , எமக்கு அருளாப்ட்டிருக்கும் பணியில் வெற்றி காண்போம்.
நாம் நமது இதயம் என்னும் அலங்கத்தில் தாள்பாள்கள் போட்டு அதை பத்திரமாக காத்து கொள்வோமாக !
வஞ்சனை என்னும் சத்துரு எமக்குள் தனது வேலையை காண்பித்து.... எம்மை தவறான பாதையில் அழைத்து சென்று விடாதபடி.....
எல்லா காவலோடும் எம் இதயத்தை காத்து கொள்வோமாக !
நெகமியா - 6ம் அதிகாரம் முழுவதும் வாசித்து பார்த்தோமானால்.....
*நெகேமியாவும் அவரது குழுவினரும் ஒரு மித்த மனதோடு வெறும் 52 நாட்களில் எருசலேமின் நிறைவேற்றி முடிக்க பட்ட அலங்க வேலை "தேவனால் கைகூடி வந்ததென்று" அறிந்து கொண்டனர்.*
நெகேமியாவுக்கு பொல்லாப்பு செய்ய நினைத்து..... சத்துருக்கள் அவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள், கடிதங்கள் வாயிலாக கூட பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் கர்த்தர் நெkகேமியாவின் மனதில் வைத்த காரியம் வெற்றி கரமாக நிறைவேற்ற பெற்று முடிந்தது. ஹாலேலுயா !
அப்படியே,
நம் ஒவ்வொருவரின் மனதிலும் கர்த்தர் வைத்த காரியத்தை அவரே நிறைவேற்றி முடிக்க வல்லவர். அவர் வேலையை நாம் செய்யும் உன்னத பணியாளர்களாக காரியத்தில் மாத்திரம் கவனம் செலுத்தி, நம்மை திசை திருப்ப நினைத்து செயல்படும் அத்தனை சூழ்ச்சிகளினின்றும் கர்த்தரால் தெய்வீக பாதுகாப்பை பெறுவோம் என்று நம்பி.... கர்த்தரை சார்ந்து அவர் பணி *(கர்த்தரின் கிரியைகளை)* செய்வோம் / நிறைவேற்றுவோம். ஆமென்.
Sis. Martha Lazar✍️*
NJC, KodaiRoad*
💪STRENGTHEN MY HANDS💪
*💪என் கைகளைத் திடப்படுத்தியருளும்💪*
[நாள் - 144]
நெகேமியா - 4-6
☄️அத்தியாயங்கள் 4-6 நெகேமியா எதிர்கொண்ட சவால்களை - வெளிப்புற எதிர்ப்புகளும் உள் போராட்டங்களும் - விவரிக்கிறது.
1️⃣ *புனரமைப்புக்கான முயற்சிகள்* (நெகேமியா 4:1-6):
🔹எதிர்ப்பை எதிர்கொண்டாலும், எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுவதில் நெகேமியா உறுதியாக இருக்கிறார்.
🔹திட்டம் முன்னேறும் போது, பிராந்திய அதிகாரிகளாகிய சன்பல்லாத்தும் தொபியாவும், யூதர்களை கேலி செய்தும், பரிகசித்தும் அவர்களின் வேலையைத் தொடரவிடாமல் அவர்களை ஊக்கமிழக்க செய்ய முயற்சிக்கின்றனர்.
🔹நெகேமியா ஜெபத்திற்குத் திரும்புவதன் மூலமும், மக்களை விடாமுயற்சியுடன் இருக்க ஊக்குவிப்பதன் மூலமும் பதிலளிக்கிறார்.
2️⃣ *வெளிப்புற எதிர்ப்பை மேற்கொள்ளுதல்* (நெகேமியா 4:7-23):
🔸நெகேமியாவின் எதிரிகள் தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துகிறார்கள், மேலும் யூதர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துகிறார்கள்.
🔸பாதுகாவலர்களை நிறுத்தி, அவர்களில் பாதி பேரை மறுகட்டமைப்பிலும், மற்ற பாதியை ஆயுதம் ஏந்தியவர்களாகவும், தற்காத்துக் கொள்ளத் தயாராகவும் இருப்பதன் மூலம் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தை நெகேமியா உருவாக்குகிறார்.
🔸இந்த ஒற்றுமை, நெகேமியாவின் தலைமைத்துவம் மற்றும் தெய்வ நம்பிக்கையுடன் இணைந்து, மக்கள் தங்கள் வெளிப்புற எதிர்ப்பை சமாளிக்க உதவுகிறது.
3️⃣ *வஞ்சகத்தின் உள் போராட்டங்கள்* (நெகேமியா 5):
◾️யூத மக்கள் பெரும் கடன்களால் பாரப்பட்டு உள்ளனர், இது அவர்களின் சமூகத்திற்குள் மோதல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கிறது.
◾️பிரபுக்கள் மற்றும் அதிகாரிகளை கண்டிப்பதன் மூலம், நியாயத்தையும் இரக்கத்தையும் மீட்டெடுக்க வலியுறுத்தி நெகேமியா இந்த சிக்கலுக்குத் தீர்வளிக்கிறார்.
◾️யூதர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் வகையில், இந்த மறுகட்டமைப்புத் திட்டம் ஒரு கூட்டு முயற்சியாக இருப்பதை, அவரது உறுதியான தலைமைத்துவம், உறுதி செய்கிறது.
4️⃣ *எதிரிகளின் தந்திரமான சூழ்ச்சிகள்* (நெகேமியா 6):
🔺சன்பல்லாத்தும் தொபியாவும், பொய்யான சாக்குப்போக்கின் கீழ் அவர்களை சந்திக்கும்படி நெகேமியாவை வற்புறுத்தி, நெகேமியாவுக்கு கடிதங்களை அனுப்புகிறார்கள்.
🔺அவர்களின் உள்நோக்கங்களை உணர்ந்து, நெகேமியா புத்திசாலித்தனமாக திசைதிருப்பப்படவோ அல்லது கையாளப்படவோ மறுக்கிறார். அவர் தன் கைகளை திடப்படுத்தக் கோரி தேவனிடம் வேண்டினார்!
🔺அவர் வஞ்சகத் திட்டங்களில் மயங்காமல், அலங்கத்தை கட்டி முடிப்பதில் உறுதியாக இருக்கிறார்.
♥️ *வாழ்க்கை பாடங்கள்*
💥நெகேமியாவின் வாழ்க்கை விடாமுயற்சி, தலைமைத்துவம் மற்றும் தேவனை சார்ந்திருத்தல் ஆகியவற்றின் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
💥யூத சமூகத்தை ஒருங்கிணைக்கவும், உள் மோதல்களைத் தீர்ப்பதற்கும், வஞ்சக நோக்கங்களைக் பகுத்தறிவதற்குமான அவரது திறன் இறுதியில் அலங்கத்தை வெற்றிகரமாக கட்டி முடிக்க வழிவகுக்கிறது.
*‼️கர்த்தரில் நம்பிக்கை தடைகளைத் தாண்டவும், பெரிய காரியங்களை சாதிக்கவும் உதவுகிறது‼️*
பிரின்சஸ் ஹட்சன்
தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை
ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨👩👦👦
🙋♂️🙋♀️ படித்து தியானம் செய்யலாம்
*நெகேமியா 5:1-13*
*நெகேமியாவும் பொருளாதார நெருக்கடியும்*
📝 எருசலேமின் அலங்கத்தை நெகேமியா திரும்ப கட்டும் போது, நெகேமியாவின் உடனடி கவனம் தேவைபட்ட ஒரு *பொருளாதார நெருக்கடி* உண்டானது .
📍 இந்தப் பிரச்சனையில் *நான்கு காரணிகள்* ஈடுபட்டுள்ளன:
1️⃣ *பெரிய குடும்பங்கள்*- புனரமைப்பு திட்டத்திநிமித்தம் விவசாயம் பின்தங்கியதால் அவர்களால் உணவளிக்க முடியவில்லை (வ 2 )
2️⃣ *பஞ்சம்* - ஏழைக் குடும்பங்கள்/விவசாயிகள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்தனர் (வ 3 )
3️⃣ ராஜாவின் வரியைச் செலுத்த *பணத்தை கடனாக வாங்கினார்கள்* (வ 4)
4️⃣ *யூத கடனாளிகள்* - அவர்கள் சொத்துக்களை கைப்பற்றி, கடனாளிகளின் குழந்தைகளை அடிமைகளாக வைத்திருந்தனர் ( *ஏழை விவசாயிகள்* வ 5 )
🙋♂️🙋♀️ *நெகேமியா என்ன செய்தார்*❓
1️⃣ அலங்கத்தில் *தன் வேலையை நிறுத்தினார்* (வ. 6-13)
2️⃣ சமூகத்தில் நடக்கும் அநீதியைக் கண்டு அவர் கோபமடைந்தார் (வ. 6)
3️⃣ *அவர் பிரபுக்களையும் அதிகாரிகளையும்* கண்டித்து
🙋♂️ *தங்களுக்கு உணவளிப்பதற்கும் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களை போஷிப்பதற்காக ஆற்றலையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தும் கிறிஸ்தவ அதிகாரிகள் இருக்கிறார்களா* ?
🙋♂️ *பணக்காரனாகவும் செல்வந்தனாகவும் இருக்க விரும்புகிறானா அல்லது சட்டவிரோதமான வழிகளில் நில உரிமையாளராக ஆக விரும்புகிறானா* ?
🙋♂️ *ஏழைகள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக நிற்க / போராட விரும்பும் ஒருவர் இருக்கிறார்களா* ?
💞 அன்பான திருச்சபையே பொருளாதார நெருக்கடி காலங்களில், ஏழைகளும் ஆதரவற்றவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏழை மற்றும் எளிய மக்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் ( *சங்கீதம் 140:12*)
🔖 நாம் அநீதியை ஒப்புக்கொண்டாலும் இரக்கத்துடன் பதிலளிக்கவில்லை என்றால், *நாம் பிரச்சனையின் பகுதியாக மாறுவோம்*.
🔖 *கர்த்தருடைய பார்வையில் ஏழைகளை பார்த்து, நெகேமியா பதிலளித்தது போல் பதிலளிப்பதே நமது பொறுப்பு* :
1️⃣ *அநீதியைக் கண்டு கோபப்படுதல்* .
2️⃣ *ஏழைகளின் நலனை காக்க வேண்டும்*.
3️⃣ *சமூகத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை வெளிப்படையாக குற்றம் சாட்டுதல்*.
4️⃣ *தாராள மனப்பான்மையின் தனிப்பட்ட மாதிரியாக இருக்க வேண்டும்*.
🙋♂️🙋♀️ *நம்முடைய ஆதரவையும் தயவையும் தேவைப்படுபவர்களிடம் கருணை காட்டுவதன் மகிழ்ச்சியை அனுபவிக்க கர்த்தர் நம்மை அழைக்கிறார்*.
தேவனுக்கே மகிமை 🙌
✍🏻 *மார்க் போஜே*
அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳
தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்
நெகேமியா.6.
🌹🌹🌹🌹🌹
"சுவர்கள் கட்டி முடிந்தது."
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சுவர் கட்டுவது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது - இடைவெளிகள் மூடப்பட்டன, ஆனால் வாயில்கள் இன்னும் தொங்கவிடப்படவில்லை.
நாம் ஒரு போதகராக இருந்தாலும் சரி, ஆசிரியராக இருந்தாலும் சரி, சுவிசேஷகராக இருந்தாலும் சரி, ஞாயிறு வகுப்புத் தலைவராக இருந்தாலும் சரி, நெகேமியா எதிர்கொண்டது போல நம் வீழ்ச்சியைத் திட்டமிடுபவர்கள் எப்போதும் இருப்பார்கள்.
நெகேமியா பகுத்தறிவுடன் இருந்தான்.
ஏனெனில் மனிதன் பார்ப்பது போல் இறைவன் பார்ப்பதில்லை; ஏனென்றால், மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறான்; ஆனால் கர்த்தர் இருதயத்தைப் பார்க்கிறார்.
இன்று விசுவாசிகளுக்கு பகுத்தறிவு இல்லை.
அவர்கள் நல்ல தோற்றம் கொண்ட ஆனால் இயேசுவின் இயல்பில் நடக்காத ஆசிரியர்களையும் தலைவர்களையும் பின்பற்றுகிறார்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.
Thanks for using my website. Post your comments on this