==============
PSALM : 133 - 138
===============
Many people would rather be big fish in little ponds than little fish in big ponds.*
⛹️♂️ *Application* : Ps.133:1 *-Believers are one in Christ. Let’s avoid being in a little exclusive clique.* Unfortunately, we have a lot of cliques in our churches today. *Many people would rather be big fish in little ponds than little fish in big ponds. How much better it is for all believers to “dwell together in unity!”*
⛹️♂️ *Application* : Ps.137:4- *The interesting thing is that the Christian is to sing in a strange land. The child of God today is a pilgrim and stranger in this world.* Centuries before this time the people of Israel were going through the wilderness, with slavery in Egypt behind them, on their way to the Promised Land. In the lead were the Levites carrying the ark, and they were singing. Immediately behind them came Judah, the tribe whose name means “praise.” They went through the wilderness with praise on their lips. Today this is the way in which the child of God is to go through the wilderness of this world. *Every Christian today should have a song in his heart. We are to sing in a strange land. God has given us a song, the song of redemption.
💡Ps.135:6-7- *It is God who makes the weather.* The weatherman does not make the weather, and the proof is that he does not always give us the correct report. He is not in touch with headquarters. He is in touch with a lot of scientific gadgets, and every now and then he comes up with an educated guess; but God makes the weather. He is the Creator. *Not only does He make the weather, but He runs the universe as it pleases Him. Let us become reconciled to it and accept the Creator because He is also the Redeemer of man today.* We have many questions that God has not answered. *And frankly, God does not have to answer our questions. He asks us to trust Him and live a life of faith. A Christian does not live by explanations, he lives by promises.*
📖Ps.138:8- *This is the Old Testament way of saying, “Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ”* (Phil. 1:6).
Jaya Pradeep-Kodaikanal.
*சங்கீதம்: 133-138*
💐💐💐💐💐💐💐
*இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமாய் இருக்கிறது* ?
(சங்கீதம் 133:1)
★ 133-ம் சங்கீதம் சகோதர சிநேகத்தைச் சுருக்கமாக விவரிக்கிறது.
★ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது நன்மையும் இன்பமுமானது.
★சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுமிடத்தில் கர்த்தர் தமது ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். (சங்: 133:3)
★ சகோதரர்கள் ஒருமித்து வாசம்பண்ண வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயிராமல் சற்று தூரத்திலும் இடைவெளி விட்டும் இருக்கவேண்டும். அதிக நெருக்கம் இருந்தால் மோதல்களும் உரசல்களும் ஏற்படும்.
★இடைவெளி விட்டு வாசம் பண்ணும்போது பொறாமைகளும் போட்டிகளும் தவிர்க்கப்படும். சகோதர்கள் சமாதானமாய் ஜீவிப்பதற்கு இதுவே சிறந்த வழி.
★ஆபிரகாமும் லோத்தும் ஒன்றாய் குடியிருக்க முடியாமல் போன சம்பவம் நமக்குத் தெரியும். அவர்களின் ஆஸ்தி பெருகியபோது, அந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாததாயிருந்தது.
★சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது என்பதற்கு ஒரே ஸ்தலத்தில் வாசம் பண்ண வேண்டும் என்று பொருள் கொள்ளாமல், *ஒரே இருதயத்தோடும் ஒரே ஆத்துமாவோடும் இசைந்து வாழ வேண்டும்* என்று பொருள் கொள்ள வேண்டும்.
★ தேவன் நம்மைத் தம்முடைய சாயலாக சிருஷ்டித்திருக்கிறார். நம்மில் தேவ சுவாபம் காணப்படவேண்டும்.
*தேவன் அன்பாகவே இருக்கிறார்*. எனவே நாம் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும்.
*நேசிக்கிற ஜனங்கள் ஆசீர்வாதமான ஜனங்கள்*.
தங்கள் சகோதரர்களை நேசித்து வாழ்கிற ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.
★நாம் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் *உண்மையான அன்பு இல்லாவிட்டால் பிரயோஜனம் ஒன்றுமில்லை* என்று (1கொரிந்தியர்:13)
பிரியமானவர்களே
சகோதர அன்பில் நிலைத்தவர்களாக வாழ்வோமாக.
*ஆமென்*
✍️பவானி ஜீஜா தேவராஜ், சென்னை.
சங்கீதம்.138.
☘️☘️☘️☘️☘️
"கர்த்தருடைய வழிகளில் பாடுவார்கள்".
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
இறைவனின் வழிகளில் நாம் பாடத் தொடங்கும் போது, முதலில் சிலுவையின் அடிவாரத்தில் நம் பாரத்தை இழக்கிறோம்.
இயேசு சொன்னார், "நித்திய அன்பினால் நான் உன்னை நேசிக்கிறேன்; நான் ஒரு மேகத்தைப் போல உன் மீறுதல்களை அழித்தேன், ஒரு மேகத்தைப் போல உன் பாவங்களைத் துடைத்தேன், அவை இனி என்றென்றும் உங்களுக்கு எதிராக குறிப்பிடப்படாது".
இயேசு பாவத்தின் வேதனையை நீக்கும் காலம் ஒரு இனிமையான காலம்.
கர்த்தர் நம்முடைய பாவத்தை மன்னித்தார்.
நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.
நமதுஆத்துமா முழு மகிழ்ச்சியுடன் இருந்தது.
பாவங்களைத் துடைத்த இயேசுவின் அற்புதமான அன்பைச் சொல்ல விரும்பினோம்.
பாடலுக்குக் காரணம் இருக்கிறது.
"நாம் எப்பொழுதும் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம். அவருடைய துதி எப்பொழுதும் நமது வாயில் இருக்கும்" என்று சொல்வோம்.
இறைவனை மகிமைப்படுத்துவோம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
மேபி சுந்தர். சென்னை. இந்தியா
Psalms 133 -138
*WHAT A GOD WE SERVE* ❗️
*Who remembered us in our lowly state* ‼️(Ps 136:23)
💥 God remembered Noah, God made a wind to pass over the earth, and the waters subsided (Gen8:1)
💥 God remembered Abraham, and sent Lot out of the midst of the overthrow, when He overthrew the cities in which Lot had dwelt (Gen 19:29)
💥 God remembered Rachel, and God listened to her and opened her womb (Gen 30:22)
💥 The Lord remembered Hannah, she conceived and bore a son(1 Sam 1:19,20)
*Though the Lord is on high, Yet He regards the lowly* ‼️ (Ps 138:6)
🌟 *ஜீவனுள்ள தேவன் பேசுகிறார், பார்க்கிறார், கேட்கிறார்🌟
☄️ *“அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போல் இருக்கிறார்கள்.”* (சங்கீதம் 135:15-18).
🔸 விக்கிரகங்கள் பயனற்றவை என்பதை சங்கீதக்காரன் புரிந்துகொள்கிறான். அவைகளால் பேச முடியாது. *உயிரற்ற பொருள் எப்படி அறிவுரை கூறவோ, அறிவைப் பகிர்ந்து கொள்ளவவோ, ஆறுதல் கூறவோ, ஊக்கப்படுத்தவோ அல்லது வேறு வழியில் பேசவோ முடியும்?* இதனாலேயே விக்கிரகங்களுக்கு மதிப்பு இல்லை.
🔸 விக்கிரகங்களால் பார்க்க முடியாது. *அவைகள் பார்வையற்றவைகளாக இருந்தால் அவைகளால் எப்படி நமது அவலத்தைப் பார்த்து நமக்கு எதையும் வழங்க முடியும்?* ஊமையாகவும் குருடாகவும் இருக்கும் விக்கிரகங்கள் பயனற்றவை.
🔸 விக்கிரகங்களால் கேட்க முடியாது. *அவைகள் காது கேளாதவைகளாக இருந்தால், அவைகளால் எவ்வாறு நமது விண்ணப்பங்களைக் கேட்டு நமக்கு எதையும் தர இயலும்?* ஊமையாகவும் குருடாகவும் செவிடாகவும் இருக்கும் விக்கிரகங்கள் பயனற்றவையும், மதிப்பற்றவையுமே.
🔸 மனிதனைப் படைத்த தேவனால் பேசவும், பார்க்கவும், கேட்கவும் முடியும். ஏனெனில் *"அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா."* (எரேமியா 10:10).
🔸 *“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.”* (2 நாளாகமம் 16:9) என்று வேதம் போதிக்கிறது. *கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு* கிறிஸ்து அவர்களில் உருவாக்கப்படுவதற்காக, தம்மைப்பற்றி உத்தம இருதயமுள்ளவர்களை கர்த்தர் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார். தேவன், *"அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைப்பேன்."* (எரேமியா 24:6) என்று எரேமியா மூலம் வெளிப்படுத்துகிறார். தம்முடைய மக்கள் உபவத்திரத்தில் இருக்கும்போது, தேவன் *அவர்களை ஒருபோதும் மறப்பதில்லை;* அவர்களை விடுவிக்கிறார்.
🔸 சங்கீதக்காரன் கூறுகிறான்: *"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்."* (சங்கீதம் 65:2). மக்கள் தங்கள் எல்லா தேவைகளுக்காகவும் கிறிஸ்துவிடம் வருவதற்கு, *கர்த்தர் ஒருவர் மட்டுமே மக்களின் ஜெபங்களைக் கேட்கிறார்* என்பதை அனைவருக்கும் நிரூபிப்பது நமது கடமையாகும்.
🔸 *"அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.”* (சங்கீதம் 33:9) என்று வேதம் போதிக்கிறது. பேசுகிற தேவன், வெற்று வார்த்தைகளை பேசுவதில்லை. அவருடைய வார்த்தைகள் அவற்றின் நிறைவேற்றத்தை உறுதிப்படுத்தும் ஆற்றல் நிறைந்தவை.
🔸 விக்கிரகங்களைப் பண்ணுகிறவர்கள் அவற்றைப் போலவே பயனற்றவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். இது அவர்களை தேவனிடமிருந்து விலக்குகிறது, மேலும் அவர்கள் கலகக்காரர்களாக மாறுகிறார்கள். அப்படிப்பட்ட மக்களைப் பற்றி வேதம் சொல்கிறது: *"காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்."* (எசேக்கியேல் 12:2). என்ன ஒரு பரிதாப நிலை!
🔸 *ஜீவனுள்ள தேவனாகிய சிருஷ்டிகரை ஆராதிக்கும் நாம், அவருடன் பேச வேண்டும்; அவருடைய எல்லா அற்புத செயல்களையும் கண்டு சாட்சியமளிக்க வேண்டும்; அவர் நமக்குச் சொல்வதைக் கேட்டு பின்பற்ற வேண்டும்.*
🔹 *நம் வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா ஏற்ற தாழ்வுகளையும் குறித்து ஆண்டவரிடம் பேசுகிறோமா?*
🔹 *நம் கண்கள் கர்த்தரின் அதிசயங்களைப் பார்க்கிறதா, அவர் சொல்வதை நம் காதுகள் கேட்கிறதா?*
✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:
1️⃣ *கிருபையினாலே விசுவாசத்தின் மூலம் அவர்களில் கிறிஸ்து உருவாகும்படி, தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களைக் கர்த்தருடைய கண்கள், தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கின்றன.*
2️⃣ *எல்லாரும் கிறிஸ்துவிடம் வருவதற்காக, கர்த்தர் ஒருவர் மட்டுமே மக்களின் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதை அனைவருக்கும் நிரூபிப்பது நமது கடமையாகும்.*
3️⃣ *ஜீவனுள்ள தேவனாகிய சிருஷ்டிகரை ஆராதிக்கும் நாம், அவருடன் பேச வேண்டும்; அவருடைய எல்லா அற்புத செயல்களையும் கண்டு சாட்சியமளிக்க வேண்டும்; அவர் நமக்குச் சொல்வதைக் கேட்டு பின்பற்ற வேண்டும்.*
Dr. எஸ். செல்வன். சென்னை
ஆத்துமாவிலே பெலன், தைரியம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சங்கீதம் 138: 3. *என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்.*
1. இங்கு தாவீது தன் ஆத்துமாவிலே கர்த்தர் செய்த நன்மையை நன்றியுடன் கூறுகிறார். *என் ஆத்துமாவிலே பெலனை, தைரியத்தை தந்தீர்* என நன்றியுள்ள இருதயத்தோடு கூறுகிறார். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் சோர்ந்து போன போதெல்லாம், ஆத்துமா தொய்ந்து போன போதெல்லாம் நம்மை தூக்கி நிறுத்தினாரே! அப்படியானால் நாம் நன்றியை கர்த்தருக்கு செலுத்துகிறோமா?
2. *ஆத்துமாவிலே பெலன் தந்தீர்.* அப்படியானால் இந்த பெலனை பெறுவது எப்படி?
1. *கர்த்தரே நம் பெலன்*. சங்கீதம் 18: 1.
2.*கர்த்தர் தம் ஜனத்திற்கு பெலன் கொடுப்பார்.* சங்கீதம் 29:11.
3. *கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் அடைவார்கள்*. ஏசாயா 40:31.
4. *அமரிக்கையும், நம்பிக்கையும் நமக்கு பெலன்*. ஏசாயா 30:15.
5.*கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமக்கு பெலன்*. நெகேமியா 8:10.
6. *இயேசுவின் நாமம் நம்மை பலப்படுத்தும்*. அப்போஸ்தலர் 3: 16.
7. *கிறிஸ்து நம்மை பெலப்படுத்துகிறவர்*. பிலிப்பியர் 4:13
8. *சிலுவையை பற்றிய உபதேசம், அதாவது சுவிசேஷம், அவருடைய வார்த்தை நமக்கு பெலன்*. 1கொரிந்தியர் 1:18.
9. *பரிசுத்த ஆவியானவர் நமக்கு பெலன் தருகிறார்*. அப்போஸ்தலர் 1:8.
3. *என்னை தைரியப்படுத்தினீர்.*
ஆம், நம் ஆத்துமாவில் பெலன் இருப்பது மட்டுமல்ல, தைரியமும் இருக்க வேண்டும். சத்துருவாகிய பிசாசை இந்த உலக வாழ்க்கையில் ஜெயிக்க தைரியம் வேண்டும். *இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது*. எபிரேயர் 10:20.*அவருடைய வருகையில் நாம் தைரியமுள்ளவர்களாயிருக்க கிறிஸ்துவில், அவர் வார்த்தைகளில் நாம் நிலைத்திருக்க வேண்டும்*. 1 யோவான்2: 28. *நியாயத்தீர்ப்பில் நமக்கு தைரியம் உண்டாக நாம் அன்பிலே நிலைத்திருந்து கிறிஸ்துவை போல வாழ வேண்டும்*. 1 யோவான் 4: 17.
ஆம், *கர்த்தர் நம் ஆத்துமாவிலே பெலன் தந்து, நம்மை தைரியப்படுத்துகிறார்*. அவருக்கு ஆத்துமாவிலிருந்து நன்றி கூறுவோம். இந்த விசுவாசத்தை அறிக்கை பண்ணுவோம்.வாக்குதத்த நாடாம் பரலோக இராஜ்யத்தை சுதந்தரிப்போம். ஆமென். அல்லேலூயா.
*Dr.Padmini Selvyn.*
✍️இன்றைய தியானம்:
👉சங்கீதம் 133.
🎯தியானம்:
சகோதரர்கள் (சுற்றமும் உற்றமும்) ஒருமித்து வாழ்வதால் கிடைக்கும் பலன் பற்றி இந்த சங்கீதத்தில் நமக்கு தாவீது விளக்குகிறார்.
1️⃣அளவிட முடியாத நன்மையும் இன்பமும் கிடைக்கும்.
133 : 1
2️⃣நல்லதைலத்திற்கு ஒப்பானது :
133:2
🎯நல்லதைலம்:
1. நறுமணமுள்ளது
2. தலையில் ஊற்றினால் உடல் முழுவதும் வழிந்தோடும்.
👉1. கர்த்தர் நம்மோடிருப்பவர்கள் மட்டுமில்லாமல்
நம்மை பார்ப்பவர்களும்
🔸முகம் சுளிக்காமல்
நம்மிலுள்ள நறுமணத்தால்
🔸முகம்மலரப் பண்ணுவார்
👉2. நம் தலையை பரிசுத்தஆவியால் அபிஷேகிப்பார்.
🔸அது வழிந்தோடி நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்கும்.
3️⃣இறங்கும் பனிக்கு ஒப்பானது:
133 : 3.
🎯இறங்கும் பனி :
👉1.இறங்கி வராத பனியால் பூமிக்கு பயனில்லை.
🔸பூமியின் புழுதி இறுக்கமாகி
🔸தாவரங்கள் வேர்விட வேண்டுமானால்
🔸 பூமி மேல் பனி இறங்கவேண்டும்.
அதே போல்
🎈நம் வாழ்க்கையிலும் ஆசீர்வாதமான பனியை இறங்க பண்ணுவார்
👉2. ஆவியானவர் பனியை போல் நம்மேல் இறங்கி
🎈 நம்மை இன்பமயமாக்குவார்.
🎯சிந்தனைக்கு,
🎈நாம் வாழும் வாழ்க்கையில் ஒருமித்து வாழ்வோம்.
👉அப்போது,
👉13:3bல் சொல்வதை போல்
🙋கர்த்தர் என்றென்றைக்கும்
🎈ஆசீர்வாதத்தையும் (நன்மை)
🎈ஜீவனையும் (இன்பம்)
தருவார்.
ஆமென்.🙏
*சங்கீதம் 133 - 138*
*கர்த்தரையே நம்புவோம்*..
சங்கீதம் 137, சிறையிருப்பின் போது பாடப்பட்ட
சங்கீதமாகும்.
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்
போன யூதர்கள், அங்குள்ள யூப்ரடீஸ், டைகிரிஸ்
நதிகளிலிருந்து.. கால்வாய் (அதுதான் கேபார் நதி) வெட்டும் வேலை செய்யும் அடிமைகளாயிருந்தார்கள்.
அவர்கள் அன்றாட வேலை முடிந்து.. மாலையில் அந்தக் கால்வாய்க்கு அருகில் உட்கார்ந்து..தங்கள் சொந்த தேசத்தையும், ஆலயத்தையும் நினைத்து அழுவார்களாம். உட்கார்ந்து அழுவது என்பது அந்தக் காலத்திலே மரித்தவர்களுக்காக அழும் முறையாகும். இது மிகுதியான துக்கத்தை வெளிப்படுத்தும் செயலாகும்.
உண்மையில் அவர்கள் ஒரு துக்க வீட்டில் வாழ்வதுபோல, நொறுங்கிப் போனவர்களாகவே அங்கே வாழ்ந்துவந்தார்கள். அதனால்,தங்களுடைய கின்னரங்களை..அலரிச் செடியின் மீது.. தூக்கி
வைத்துவிட்டார்கள்.
( சங். 137 : 1,2 )
பாபிலோனியர், அடிமைகளான யூதர்களிடம்..அவர்களின் சீயோனின் பாடல்களைப் பாடும்படி கேட்டார்கள்.
"சீயோனின் பாடல்கள்”எருசலேம் நகரத்தையும், ஆலயத்தையும்.. அங்கே வாசமாயிருந்த தேவனையும் மகிமைப்படுத்தும் பாடல்களாகவே இருந்தன. அவர்கள் யூதர்களைப் பாடல் பாடும்படி கேட்டது..உங்கள் தேவன் வல்லமை உள்ளவராக இருந்திருந்தால்.. உங்களுக்கு ஏன் இந்த அடிமைத்தனம் ? உங்கள் ஆலயம் ஏன் இடிக்கப்பட்டது என்று
கேலிசெய்தது போலிருந்தது.
அதனால் யூதர்கள்.. சீயோனின்
பாடல்களைப் பாடமுடியாது என்று கூறிவிட்டனர்.
அவர்கள் சீயோனின் பாடல்களைப் பாட மறுத்துவிட்டாலும், எருசலேம் நகரத்தையும்.. ஆலயத்தையும் மறக்கமாட்டோம் என்று.. தேவனோடு உடன்படிக்கை செய்தார்கள்.
( சங்.137 : 3-5 )
இந்த சங்கீதத்தின் முடிவு வசனங்கள்.. சாபமான வார்த்தைகளால் முடிவடைகிறது.
அதனால் இன்றைய விசுவாசிகளுக்கு அது ஏற்புடையதல்ல என்று அநேகர் கூறுவதுண்டு.
பாபிலோனியர்கள்,
இஸ்ரவேலரின் அடுத்தத் தலைமுறையினர் இருக்கக் கூடாது என்பதற்காக…
தாயின் மடியிலிருந்த சிறுபிள்ளைகளைப் பிடுங்கிக் கல்லால் அடித்துக் கொன்றார்கள்.
யூதர்கள் கண்முன் நின்ற காட்சி அது.
இங்கே யூதர்கள் பழிவாங்கும் விதத்தில் செயல்படாமல்.. தங்கள் உள்ளக் குமுறல்களை தேவனிடம் தெரியப்படுத்தினர். நம் உள்ளக் குமுறல்களையும்.. வெளிப்படுத்தும் ஒரே இடம் தேவனின் சமுகமே.
இன்று பாவங்களும், அக்கிரமங்களும் பெருகிவரும் சூழ்நிலைகளில்..
நாம் வாழ்ந்து வருகிறோம்.
அநேக வேளைகளில்.. அவற்றினால் நாமும்
பாதிக்கப்படுகிறோம். நமக்குள்ளே எழும்பும் கோபங்கள்.. தவறான வழிகளில் நாம் செயல்படுவதற்குக் காரணமாகிவிடுகிறது.
*பிரியமானவர்களே..நீங்கள்* *கோபங்கொண்டாலும்..பாவம்* *செய்யாதிருங்கள்..பிசாசுக்கு* *இடங்கொடாமலும் இருங்கள்* *என்று..வேதம் கூறுகிறது*.
( எபே.4 : 26,27 )
*நமது கோபம்,வெறுப்பு,கசப்பு* *அனைத்தையும்..தேவனுடைய* *சமுகத்தில்..நாம் ஊற்றிவிட* *வேண்டும்*.
*கர்த்தர்,தம்மை நம்பின* *பிள்ளைகளுக்கு நிச்சயம் நியாயம்* *செய்வார்..பதில்செய்வார் என்ற* *நம்பிக்கையில் இளைப்பாற* *வேண்டும்*
*கர்த்தரையே..தன்* *நம்பிக்கையாக வைக்கிற* *மனுஷன் பாக்கியவான்*..
( சங்.40 : 4 )
*நிச்சயமாகவே முடிவு உண்டு*..
*உன் நம்பிக்கை வீண்போகாது*..
( நீதி. 23 : 18 )
*என்று வேதமும் கூறுகிறது*..
*எனவே,கர்த்தரையே* *நம்புவோம்*..
*ஏற்றவேளையிலே*..
*அவருடைய ஆசீர்வாதத்தைச்*
*சுதந்தரிப்போம்*..
ஆமென். 🙏
மாலா டேவிட்
MY INSIGHTS
*P S A L M -- 136*
An exhortation to thank God... the Psalm consists of 26 verses . Each verse is a *REASON* as to why we should thank The Almighty ! Something remarkable is the fact that every verse ends on the same note : *" .... for His mercy ENDURETH for ever . "*
The Psalmist lists out the following reasons for his gratitude to God .....
The Lord is *GOOD* .. His goodness is incomparable ...
The Lord is *GOD over all gods* ! He is Supreme . There is none above Him ...
The Lord is the *Lord of lords* ! The lords of the earth must bow before Him ...
The Lord is the *ONLY ONE* who can do great wonders . Every aspect of His creation speaks of His Glory ...
The Lord by His *WISDOM* made the heavens ... having felt the need that there should be things beyond the reach of mortal man ....
The Lord *created the earth*, stretching it above .. and over.. and across the waters....
The Lord *created the lights* to light up the paths of man ....
The Lord *created the Sun* , to give man both light and warmth ....
The Lord *created the moon and the stars* , to guide man through the darkness and perils of night ...
The Lord *smote the first born of Egypt* to show her His wrath for the cruelty she showed to the children of God....
The Lord *brought out His very own* ... the Israelites.... from their land of bondage ...
The Lord has a hand that is *STRONG** to protect and an arm that is *STRETCHED OUT* to help ...
The Lord did the impossible . He *DIVIDED* the Red Sea ......
The Lord made Israel to pass through the *"PATH"* that He had created for them between the *divided parts* of the waters ....
The Lord *overthrew* the Pharaoh and his men by *bringing back the waters* to their original state ... and engulfing them ....
The Lord *led His children through the wilderness* not just for a day or two .. but for years ...
The Lord *smote great kings* , known for their strength and valour
The Lord *smote famous kings* , who were renowned .. and surrounded by more of their kind ...
The Lord *smote Sihon* , the king of the Amorites ...
The Lord *smote Og* , the king of Bashan ..
The Lord *took the lands* of the vanquished kings and *gave them for an heritage*
The Lord *gave this heritage to His Own* ... His faithful Israel ....
The Lord has *redeemed us* from our enemies
The Lord *feeds us* . We hunger no more ...
The Lord is the *God of Heaven* .... the mystery to mankind
The intention of the Psalmist is very clear . He wishes us to *join him in thanking God for His mercies*. Down the generations , it is this mercy that has *helped man to withstand* the challenge of the forces of nature , and of life's situations.. God looks at *mortal man* -- *His creation* -- with mixed feelings ! He looks at his *sinful nature* and his attempts to *rise above His Maker* , with a *heavy heart* ! He is hopeful that man will reform , and return to Him . .. and He *continues to give him many a chance* ..... .to do just this !
Abba Father , how great is Thy mercy ! If we have come this far , it is because of Thy mercy ... .If our sins have been forgiven , it is because of Thy mercy ... If we have a hope for our future , it is because of Thy mercy ... If we are able to face our todays , it is because of Thy mercy ... If we are able to bear our pains and our losses , it is because of Thy mercy ...
Father , there is nothing with us that is not of Thy mercy ! Father , our humble prayer , is that You will bless us .and make us WORTHY of this -- Thy mercy !
Praise the Lord ! Amen , 🙏and Amen !
Mary Mathew
California
Thanks for using my website. Post your comments on this