Type Here to Get Search Results !

ஆசிரியர் தினம் | Teachers Day Quotes | Jesus Sam

=====
Quotes
======
ஒரு கிறிஸ்தவன் எந்த ஆடையை அணியலாம்?



சிறுசா பெருசா என்பதல்ல

டைட்டா லூசா

என்பதல்ல




பழைய மாடலா

புதிய மாடலா

என்பதல்ல




விலை கூடியதா

குறைந்ததா

என்பதல்ல




கண்ணியமாய் இருக்கிறதா

என்பதே முக்கியம்




அடுத்த விசுவாசிக்கு

இடறலாய் இருக்கிறதா

என்பதே காரியம்




பரிசுத்த குலைச்சலை

உண்டாக்குகிறதா

என்பதே கேள்வி




அங்கங்களை மூடுவதே

ஆடையின் அவசியம்

திறந்து காட்டுவதல்ல.




ஆபரணமாய் இருப்பதே

ஆடையின் அழகு

ஆயுதமாய் தாக்குவதல்ல.




இச்சையூட்டுவது நோக்கமானால்

இடி விழும்

வாழ்வில் நிச்சயமாய்.




தகுதியுள்ள ஆடை அணிவது

வாழ்க்கைக்கு அழகு.




கண்ணியமான ஆடை அணிவது

ஜீவனுக்கு அலங்காரம்




எளிமையும் நேர்த்தியும்

பரிசுத்தத்தின் படிகள்




இது

பட்டிமன்ற விவாதமல்ல

பரலோகமன்ற ஆலோசனை.




By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814




======
Quotes
=======
கிறிஸ்தவ வாழ்க்கை எனப்படுவது,




உன்னதமானவரின் மறைவில் வாழ்வதாகும்...




உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் என சங்கீதம் 91: 1.ல் வாசிக்கிறோம்.




சங்கீதம் 91: 1 .ம் வசனத்தின் அனுபவம் மீதியுள்ள 15 வசனங்களின் ஆசீர்வாதங்களையும், அனுபவங்களையும் நமக்கு கொடுக்கிறது.




உன்னதமானவரின் மறைவு, சர்வ வல்லவரின் நிழல் எனப்படுவது, நாம் நேரடியாக தேவனுடைய கட்டுப்பாட்டில் வாழும் ஒரு வாழ்க்கையாகும்.




நிழல் என்று சொல்லப்படுவதால், அங்கே நிஜம் இருக்கிறது என்பது தெளிவாகிறது.




அந்த நிஜம் தான் நானே சத்தியம் (நிஜம்) என்று சொன்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.




பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார் இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய் பார்க்கிறோம் அப்பொழுது முகமுகமாய் காண்போம் என கூறுகிறார்.




அந்த நிழலில் தான் நாம் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.




உலக தோற்றம் முதலே கிறிஸ்துவுக்குள் முன்குறிக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிற நாம், அந்த நிழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.




எனவே உன்னதமானவரின் மறைவில் அதாவது கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு 15 வசனத்தின் ஆசீர்வாதங்களும் அனுபவங்களும் நிச்சயம். ஆமென்.




கர்த்தர் நல்லவர்...

To Get Daily Quotes Contact +917904957814


=======
Quotes
========

ஆசிரியர் தினம்


🧠அறிவுக்கு 👩🏻‍🎓👨🏻‍🎓உரமிட்டு

📖அறத்தினைப் 🥬பயிர் செய்யும்

அளப்பரிய🥳 பணி ஆசிரியப் பணி👩🏻‍🏫

✨ஆண்டவரால் 🙌🏻ஆசீர்வதிக்கப்பட்ட பணி




நடுவைக்கு 🌱முந்தைய

நாற்றங்கால் 🎋பயிர்களாய் குழந்தைகளை👼🏻

நல்ல👌🏻 நிலத்தில் விளையச் 🌳செய்து

நாளைய🔮 சமுதாயத்தின்👉🏻 நல்குடிமகனாய்👌🏻




வசப்படாத📃 வார்த்தைகளை📜 வசப்படுத்தி

அகப்படாத📝 எழுதுகோலை அகப்படுத்தி🖊

புலப்படாத🧮 கணிதத்தைப் புரியவைத்து📋

புது 🤵🏻தலைவர்களை👩🏻‍⚖ உருவாக்கும் 🧱பணியிது




கரையில்லா 🧼கல்வி📚 தனை

புரையின்றிக் 🤲🏻கற்பித்து

பிறைநிலவெனத்🌝 தண்ணொளி 🌟வீசி

பிழையற ✍🏻உழைக்கும்💪🏻 உள்ளங்களின் ❤நாளிது👈🏻




அன்பும் 😍அறனும்🤩 உடைத்தாயின்😎 இல்வாழ்க்கை🥳

அறிவும் 🧠அறமும்📃 வளர்ந்து நற்👌🏻

சமுதாயத்தை 🧱உருவாக்கும் 👩🏻‍🏫பணியிது

வருங்காலத் 👉🏻தூண்களை👏🏻 உருவாக்கும் 👨🏻‍🏫பணியிது

🎊வாழ்க ஆசிரியர்👩🏻‍🏫 பணி🎈

🎉வளர்க அவர்கள்👨🏻‍🏫 பணி🎈

To Get Daily Quotes Contact+917904957814



======
Quotes
=====
ஆராதனை மகிழ்ச்சிக்குரியதுதான்




ஆனால்

பொழுதுபோக்குக்குரியது அல்ல




ஆராதனையில்

நாம் பெறுவதை விட

நாம் கொடுப்பதே முக்கியம்




நம் உள்ளம்

எவ்வளவு மகிழ்கிறது என்பதைவிட

தேவனின் உள்ளம் எவ்வளவு மகிழ்கிறது என்பதே

ரொம்ப முக்கியம்.




ஆசீர்வாதங்கள் அல்ல

ஆசீர்வாதத்துக்குரியவரே முக்கியம்.




இசை அற்புதம்

குரல் அற்புதம்

மேடையும்

ஒளி ஒளி அமைப்புகளும் அற்புதம்

பாடியோர் அற்புதம்

நடத்தியோர் அற்புதம்

ஆடைகள் அழகு

அலங்காரம் அழகு

என்றெல்லாம் வார்த்தைகள் வருவதல்ல

ஆராதனை




தேவன் அற்புதம்

அபிஷேகம் அற்புதம்

குணமாற்றம் அற்புதம்

பரிசுத்தமாகுதல் அற்புதம்

எழுப்புதல் அதிசயம்

சாட்சிகள் அதிசயம்

என்பதே ஆராதனை.

By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814



======
Quotes
======
கிறிஸ்தவ வாழ்க்கை எனப்படுவது,

பிரகாசிக்கப்பட்ட வாழ்க்கையாகும்..
நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களிலே, என பவுல் அப்போஸ்தலன் எபிரெயருக்கு எழுதுகிறார்.(எபி .10:32)




தேவன் மனிதனை படைக்கும் போது அவனுடைய உள்ளத்துக்குள் (ஆத்துமாவுக்குள்) எந்த வித இருளும் இருந்தது இல்லை, முதல் மனிதன் ஏதேன் தோட்டத்தில் சாத்தானுடைய வஞ்சகத்துக்கு இடங்கொடுத்த அன்று முதல் மனிதனுடைய உள்ளம் இருளடைந்து விட்டது.




அந்த இருளடைந்த உள்ளத்தை (ஆத்துமாவை) பிரகாசிப்பிக்கவே, பிதா தம்முடைய குமாரனை இவ்வுலகத்திற்க்கு ஜீவ ஒளியாக அனுப்பினார்.




எனவே தான் பவுல் அப்போஸ்தலன் (2.கொரி. 4:5.ல்) இருளிலிருந்து வெளிச்சத்தை பிரகாசிக்க சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை தோன்றப்பண்ணும் பொருட்டு எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் என கூறுகிறார்.




சூரியன் உதிக்காமல் நாம் சூரியனை காண முடியாது, சூரியனைக்கொண்டு தான் நாம் சூரியனை பார்க்கிறோம்.




அது போலவே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வுலகத்தில் பிரசன்னமாகிய நீதியின் சூரியனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,




நம்முடைய வாழ்க்கையில் (இருதயத்துக்குள்) பிரசன்னமாதினாலேயே, இயேசுவையே காண்கிறோம், பிதாவின் இரக்கங்களை காண்கிறோம், பரலோக இராஜ்யத்துக்கடுத்தவைகளை காண்கிறோம், மனக்கண்களில் பிரகாசிக்கப்படுகிறோம், அதினாலுன்டான ஆசீர்வாதங்களையும், அனுபவங்களையும் பெற்றுக் கொள்கிறோம்.. ஆமென்.




கர்த்தர் நம்மை பிரகாசிக்க பண்ணுகிறவராயிருக்கிறார்.

கர்த்தர் நல்லவர்...

To Get Daily Quotes Contact +917904957814



=======
Quotes
=======
கிறிஸ்தவ வாழ்க்கை எனப்படுவது,

ஜெயங்கொள்ளும் வாழ்க்கையாகும்..

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என (1.கொரி. 15:57.ல் ) பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.




சாத்தானுடைய வஞ்சனையினால் அடிமையாக போன மனிதன் ஜெயங்கொள்ள முடியாமல், தோல்வியிலேயே வாழும் சூழ்நிலை அவனுக்கு உண்டாகி விட்டது.




பாவ பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து சாதாரணமாக வெளி வர முடியாத அளவுக்கு பாவம் வலிமையாகவும் பாவம் செய்கிறவன் அடிமையாகவும் காணப்படுகிறான்.




தன்னை போலவே இருக்கும் படியாக, தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன், கீழானவனாய், அடிமையாய், நிர்பந்தமானவனாய் இருப்பதில் தேவனுக்கு எந்தவித விருப்பமும் இல்லை.




அவனை மறுபடியும் ஜெயாளியாய் மாற்ற வேண்டும் என்பதற்காக தம்முடைய குமாரனை இவ்வுலகத்திற்க்கு அனுப்பி, அவர் மூலமாக மனிதனால் இயலாத காரியங்களை எல்லாம் சிலுவை மரணத்திற்க்குட்படுத்தி,




அவர் மரிக்கும் போது, மனிதனுடைய பெலவீனங்களையும், இழிவானவைகளையும் மரணத்திற்க்குட்படுத்தி, தம்முடைய உயிர்த்தெழுதலின் மூலமாக அவைகளின் மேல் வெற்றியை சம்பாதித்து,




அந்த வெற்றியை அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்ட பிள்ளைகள் யாவருக்கும் அந்த வெற்றியை இலவசமாக கொடுத்து அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறார்.




எனவே தான் பவுல் அப்போஸ்தலன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் என கூறுகிறார்.

ஜெயம் நாம் உருவாக்கி கொள்வதல்ல, அது நமக்கு இயேசு கிறிஸ்து மூலமாக அருளப்படுகிறது. ஆமென்.
கர்த்தர் நல்லவர்...

To Get Daily Quotes Contact +917904957814




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.